Tuesday, 30 September 2014

    நாடி நேரங்கள்  பாடல் , பொருள்.                             
 நுரையீரல்  நேரம் : விடி  காலை 3  மணி  முதல்  ஏழு வரை.
உங்கள்  வலக்கையை   வல  மேற்புற  நுரையீரலில்  வைக்கவும். 
நுரையீரல்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  உடற்பயிற்சிகள்  முழுப் பயன்.
மண்ணீரல்  நேரம் : காலை ஏழு  முதல்  பதினொன்று  வரை.   
 பின்  வலக் கையை  இடப்புற  இதயம் கீழே   உள்ள  மண்ணீரல்  மேல்  வைக்கவும் .
 மண்ணீரல்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  7 முதல் 9 வரை   உணவு  நன்கு  செரிமானம் .
 இதயம்  நேரம் :  மதியம்  11 முதல்  3 மணி  வரை .
 பின்  வலக்  கையை  இதயத்தின்  மேல்  வைக்கவும்.
 இதயம்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  கடினமான  வேலைகள்  எளிதாகும் .
 சிறுநீரகம்  நேரம் : மாலை  3 முதல்  7 வரை.
 பின் வலக் கையை  முதுகு நோக்கி காட்டவும். ( முதுகின் பின்புறம்  இரு புறங்கை களும் சரி.)
 சிறுநீரகம்  சிறப்பாக இயங்கும்  நேரத்தில் மாலை நேர விளையாட்டு , உடற்பயிற்சிகள் நன்று.
 மனம்  நேரம் : இரவு  ஏழு  மணி  முதல்  பதினொன்று  வரை .
 பின் வலக் கையை சிறுநீரகம் , மார்பு , பெரிகர்டியம் (மனம்) வழியாகக் கல்லீரல் தொடுக .
 மனம்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  அன்பு , நட்பு , படிப்பு ......... செய்க .
கல்லீரல்  நேரம் : இரவு  11 முதல்  3 மணி வரை .
பின் வலக் கையை  கல்லீரல்  மேல்  வைக்கவும் . இதுவே  24 மணி   நேர   நாடி  சுழற்சி .
 கல்லீரல்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  உறக்கம்  தவறக்  கூடாது . உடல் நலம் கெடும் .
                     மெய்யாக  மேலும் இரண்டு , இரண்டு  என  மணிக்கணக்கு  உறுப்புகள்  துணை 
 உறுப்புகளோடு  பகிரப்  படுகிறது .உறுப்பு , துணை உறுப்பு  யின் , யாங்  எனப்  படுகிறது .
 துணை உறுப்பு  முடிவது  துணை உறுப்போடும் , உறுப்பு அடுத்த  உறுப்போடும்  கை  கோர்க்கிறது             அட்டவணை             
 நுரையீரல்  3 am -5 am                          பெருங்குடல் 5 am -7 am    
 இரைப்பை  7 am -9 am                    மண்ணீரல்    9 am -11 am 
 இதயம்     11 am - 1 p m              சிறுகுடல்         1 p m - 3 p m 
 சிறுநீர்ப் பை  3 p m -5 p m        சிறுநீரகம்           5 p m -7 p m 
 மனம் (பெரிகார்தியம் ) 7 p m -9 p m   மூவெப்ப மண்டலம்  9 p m -11 p m 
 பித்தப்பை  11 p m -1 a m        கல்லீரல்  1 a m -3 a m 
இதன்படி, காலை உணவு 8 மணி .நண்பகல்  உணவு 2 மணி. இரவு  8 மணி.
நன்றி. நாளை ஐம்பூத ஓட்டங்கள்  . ஆ . மதி யழகன் .

No comments:

Post a Comment