Saturday, 20 September 2014

உடலின் ஐம் பூதங்களும்  வெளி உறுப்புகளும் .(இருபது வரிப் பாடல் )
        ஒன்று , இரண்டு , மூன்று, நான்கு, ஐந்து 
         உலகில் உள்ள  பூதங்களும்  ஐந்து 
          ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து 
          உடம்பில் உள்ள  பூதங்களும் ஐந்து ..............4
         ஆகாயம் , தீ,  மண், காற்று, நீரு 
          ஐந்தும் , ஐம்  பூதங்கள் ப்  பேரு 
          ஆகாயம்  மரம்  என்பார்  சீனர் 
           அழகான  காற்றை  உலோகம்  என்பார்.........8
           கல்லீரல் என்பதுவே  ஆகாயம் 
            கண்களே அதன்  வெளிப்பாகம் 
            தீ ஈரல்  இதயம்தான்  நெருப்பு 
            தான்  சொல்லும்  நாக்குதான் உறுப்பு ..........12
            மண்ணீரல் என்பதுவே மண்பகுதி 
          ம  சொல்லும்  உதடே வெளிப் பகுதி 
           நுரையீரல்  என்பது காற்று , நீர் கலப்பு 
           நுதல் கீழ்  மூக்கே அதன் வெளி உறுப்பு ........16
           பலகாலம் தொடரும் ஜீன் தொகுதி 
           பக்குவமாய் பெற்றோ ரின் பாதிப் பாதி 
          ஆதிசெல் மீளாக்கும் நீர் ஈரல் சிறுநீரகமே 
          அதற்கு வெளி உறுப்பு அவ்வடிவக் காதுகளே ....20
                    பாடலைப், பல முறை  சொல்லிப் பார்க்கவும் .
          இதன் விரிவான பொருள் அடுத்த நாளில் .
             படித்தமைக்கு  நன்றி .அன்புடன்  ஆ.மதி யழகன் .

No comments:

Post a Comment