Friday, 26 September 2014

உடலின்  ஐம் பூதங்கள் - திசுக்கள் -குரல் பண்பு - வெளிப்பாடு.
                            வாழும்    திசுப்  பாடல்.                                   
  கல்லீரல்    நலம்வாழ    வாழும்திசு    தசை நாண்                 
  தீ ஈரல்       நலம்வாழ    வாழும்திசு     இரத்தக் குழாய் .
  மண்ணீரல்  நலம்வாழ   வாழும்திசு     தசைகள்.         
  நுரையீரல்   நலம்வாழ   வாழும்திசு    தோல், முடி .........64
  சிறுநீரகம்    நலம்வாழ    வாழும்திசு     எலும்புகள் .
   ஒருபொருள்  நலம்கெட  திசுநலம்       கெடுமே.
  திசுநலம்      சீர்கெட         மறுபொருள்   கெடுமே.
  மறுபொருள்  சீர்கெட       தொடர்பொருள்  கெடுமே............68
                          குரல் பண்புப்  பாடல்                                
  கல்லீரல்       கத்தலாலும்   தீ ஈரல்        சிரிப்பதாலும் ,
   மண்ணீரல்   பாடுவதாலும்   நுரையீரல்  அழுவதாலும் 
   நீர் ஈரல்       முனகலாலும்   நோய் நிலை     காட்டுமே.
   நோய் நிலை   அறிந்திட்டால் , நோய் தீர்வு    எளிதாமே.....72
                       ஈர வெளிப் பாட்டின்  பாடல்.                        
   கல்லீரல்     துடிக்குது       கண்ணீரே       வெளிப்பாடு   
   தீ ஈரல்        துடிக்குது       வேர்வையே     வெளிப்பாடு 
   மண்ணீரல்  துடிக்குது       உமிழ்நீரே        வெளிப்பாடு   
  நுரையீரல்   துடிக்குது       தும்மல், சளி    கோழைஎல்லாம் ...76
  சிறுநீரகம்     துடிக்குது       சிறுநீர்            மட்டுமா ?
  சிறுநீரகம்     துடிப்பது         விந்து, மாதப்    போக்கும்.
  சிறுநீரகம்     வேலைப்பளு    முதுகுவலி     வெளிப்பாடு.
  சிறுநீரகம்    பேருயிர்          கல்லீரல்            இவ்வுயிர் ............80
           படித்தமைக்கு    நன்றி.   பாடல்    பொருள்   அடுத்த    நாள் ,
                   அன்புடன்,  ஆ .மதி யழகன் .

No comments:

Post a Comment