Monday, 29 September 2014

             உடலுறுப்பு களின்  நாடி  நேரங்கள்,  ஓட்டங்கள்.  பாடல்.   
     விடிகாலை    மூன்றில்     விரிவாகும்     நுரையீரல் .
      வேகம்            எடுக்குமே     வெளிக்காற்றை   ஏழுவரை .
      விடிகாலைத்   தாண்டி     விழிக்கும்   மண்ணீரல் ,
       அடுத்து      எடுக்கும்        நான்கு மணி    அதற்கு .............84
       இதயம்      முழுவீச்சில்    இயங்கும்    பதினொன்றில் .
        எடுத்த      எச்செயலும்     எளிதாகும்   மூன்றுவரை.
        இதயம்     முடித்தபின்     உதயம்      சிறுநீரகம்.
        எல்லா      செல்கள் நீரும்     ஏழுவரை     தூயதாக்கும் .....88 
        மாலை     ஏழில்           மாந்தமனம்    முன்னேறும்.
        மயக்கம்    இன்றி         நான்குமணி    செயல்படும்.
        காலைமுதல்   இரவுவரை   கணக்கெடுக்கும்   கல்லீரல் ,
        ஓய்வு, உறக்கம்   பெறவே   ஒதுக்கும்நேரம்   ஒருநான்கு....92
                      நாடி ஓட்டங்கள் நான்கு வகை  எனும் பாடல்.     
        ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து         
        என்று  சக்தி  ஓட இயல்பாகும்  ஆக்கம்.       
         நன்று   செயும்  இதுமாற   நாடுவது   சிறுநோய்கள் .
        ஒன்று  விட்டுத்  தாவவே  உட்காரும்   பெருநோய்கள்.........96
        தாவலும்   தடுமாறி    தாவலெதிர்     ஓடினால் ,
         தீவாய்    மாறுவீர்      தீவிர     நோயால்.          
         ஆதலால்   உண்பீர்    அதற்கது     உணவுகளை.
          ஆவலால்   செய்வீர்   அதற்கது   பயிற்சிகளை...................100
                        பாடல் பொருள்  அடுத்த நாள்.               
                                அன்புடன்,  ஆ.  மதி யழகன் .

No comments:

Post a Comment