Saturday, 27 September 2014

உடலில் வாழும் திசுக்கள்  பாடல் .61 முதல் 68 வரி வரைப் பொருள் .
          1. ஒன்று என்பது ஐம் பூதத்தில்  கல்லீரலைக்   குறிக்கும். கல்லீரலின்  வளமோ, நலமோ  
தசை நாரில் தெரியும். மனிதனின்  வலிமைக் குறைவு  என்பது  கல்லீரல் நலம் கெடுதலே. அங்குதான்  ஆற்றல்  சேமிப்பே . அதன் வரவும் செலவும்  போக  மீதம் வேண்டும்  சேமிப்பிற்கு.
ஓய்வு, உறக்கம்  தேவை கண்டிப்பாக  இரவு 11 மணி  முதல் விடியல்  3  மணி வரை .
             தசை நார்  செயல் பட்டால்தான் அசைய முடியும்.  பல  நாள்  வினை  ஒருநாளில்  தெரியும்.  சோர்வுக்கு  ஓய்வையும்  தூக்கம்  வரலையும்  தள்ளிப் போடாதீர்கள்.  சிக்கல்களை 
உடனுக்குடன்  தீருங்கள்  அல்லது  முற்றிலும் விலகி  இருங்கள்.
        2. இரண்டாவது  தீ  ஈரல் .இதில்  பெரி கார்டியம்  எனும்  மனமே  இதயத்தின்  ஆற்றல்  வாய்ந்தது. மன அழுத்தம்  இதயத்தின்  மீது  விரைவாகப்  பாய , நிகழ்வை  இரத்த  அழுத்தம் 
என்கிறோம். அதனை  மாத்திரையால்  அடக்குகிறோம்.  வேலை ப்  பளுவால்  இரத்தக்  குழாய்கள்   சத்தின்றி  சுருங்கும்.  அல்லது மாரடைப்பில்   முடியும்.  மனம்  வீறு   கொண்டதை  
அறியாததால்   இதய நோய்கள்  ,  இரத்தக் குழாய்  நோய்கள்  வருகின்றன.  மனம்   முதல்  காரணம் .  அக்கு பங்க சரில் , மன அமைதிக்கு P 6  என்ற புள்ளி உண்டு. தூக்கமின்மையும் 
உடனே  தீரும்.  மனதால் வரும் நோய்களுக்கு எளிய  தீர்வுகள்  உண்டு.
        இரத்த அழுத்தம்  தூண்டும்  உப்பும்,  கொழுப்பும்  இரண்டாவது  காரணம்.
      3. மூன்றாவது  மண்ணீரல் . மண்ணீரல் சுரப்பு நீர்கள் சுரக்க வேண்டும். கணையமும்  அதன் 
 சுரப்பு நீர்  இன்சுலினும்  மண்  பூதமாகவேக் கருதப்  படுகிறது. செரிமானம்  இல்லாவிடில்  தசை 
 சுருங்கி  ஆள்  இளைத்து ப்  போவான் . மனம்  தாய்  ஆவதால் , மன உணர்வும்  பிறகு  உணவும் 
  கவனிக்கப் பட வேண்டும்.
    4. நுரையீரல்  நான்காவது.  காற்று  சக்தி  (ஆக்சிஜன் ) போதாமையால்  தோலில்  வேர்க்குரு, பரு, தேமல், சொரியாசிஸ், கருப்பு நிறம்  படரல், வெண்மைத்  திட்டு  எனப் பல நோய் களும் 
 முடி  உதிரல், நரை  உண்டதால்  போன்றவையும்  நிகழும். சத்துணவோடு  நல்ல  காற்றுச் 
 சூழலும் , மூச்சுப் பயிற்சியும்  வேண்டும். வெண்மை நிறப் பொருட்கள்  பூண்டு, வெங்காயம் ,
  தேங்காய்  போன்றவை அளவறிந்து  சேர்க்கவும்.
  5. சிறுநீரகம்  ஐந்தாவது . சிறுநீரகம்  கெடுவது  முதலில்  இடுப்புவலி, மூட்டுவலி,...பின்  எலும்புத்  தேய்மானத்தில்  தெரியும். முதலில்  பற்கள்  கடிக்க முடியாமல்  திணறும். பல் நோய் 
வந்தவுடன்  விழித்துக்  கொண்டு  இரும்பு  சத்து  அளவு  குறையாமல் பார்த்தால் , முதலில் 
 செரிமானம் , பின்  நுரையீரல்  வளம்  கிடைக்கும். Lu  5  எனும் புள்ளியில்  சிறுநீரகத்தின்  தாய் 
 உள்ளது. இதில்  அக்கு பிரசரும்  செய்யலாம்.
        ஐம் பூதங்களின்  ஓட்டம் , 1, 2, 3, 4, 5, 1, 2, 3,..... கொடுப்பது   தாய் , பெறுவது சேய் . அது 
அடுத்  ததின்  தாய்.  குணமும், நோயும்  இந்த  ஓட்டத்தில்   தான்.
       இந்த  ஓட்டத்தில்  வரிசையாக  ஐந்து ஊக்கப் புள்ளிகள் K  1 , Liv  2,P 7, H  7, ..Sp  5, Lu  5
      பொருள்  தொடரும். நன்றி.  அன்புடன், ஆ. மதி யழகன் 

No comments:

Post a Comment