Wednesday, 31 December 2014

ஆசிரியர் உரை தொடர்ச்சி.
 நூலடக்கம் : 
             எனவே, ஐந்து பூதங்களையும், ஏழு ஓட்டங்களையும்  தமிழோடு கலந்து பாடலாகவும் ,
பொருள் விரிவாகவும் , புள்ளிகள் பெயராகவும் , அடிப்படை அணுகு முறையை  விளக்கி 
உள்ளேன். இன்னும் ஏராளமானவை விட்டுப் போயுள்ளன. வரும் பதிப்பில் வரும்.
வேண்டுகோள் : 
              விடாப் பிடியாய் படியுங்கள் ; வீட்டிற்க்கொரு மருத்துவர் உருவாகுங்கள் .
நன்றியுரை :
                 இந்நூல் சிறப்புற வெளிவரத் துணை புரிந்து ஆக்கமும், ஊக்கமும் தந்து துணை நின்ற 
மனைவி வளர்மதிக்கும் , வரைகலைப்  படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளைய நிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர 
உதவி புரிந்த மறைந்த திருவாரூர்  த . ச . தமிழனார் அய்யா அவர்கட்கும் , இயற்றமிழ்ப் 
பயிற்றக நண்பர்களுக்கும், நட்பில் ஊக்குவித்த பாரத ஸ்டேட் வங்கி நண்பர்கள், குடவாசல் 
அன்பர்களுக்கும் , நட்பில் உள்ள அக்கு மருத்துவர்களுக்கும்  என் நன்றி.
          மேலும் , பிளாக் ஹோல் நிறுவனம் தான் எனக் கை காட்டிய த. ச. குறள் ஏந்திக்கும் 
மனங் கவர வெளியிடும் பிளாக் ஹோல் உரிமையாளர் , நண்பர், யாணனுக்கும்  என் நன்றி.
    அன்புடன், ஆ. மதி யழகன்.
21, கொடிக்கால் தெரு,
விசயபுரம்,
திருவாரூர்-610001
 செல்: 9042190951
E -mail : 6 mathi@ gmail. Com 
                                 நூல்  ஆசிரியர் உரை       
     ஆர்வம் :
                     அக்கு பங் சர்  எனும் சொல்லை 1975-1980-ல் கேட்டி ருக்கிறேன் . சீனப் படங்களில் 
சில காட்சிகள் வரும். துணுக்குகளிலும் ' காது குத்தல் , மூக்கு குத்தல் ' இவை எல்லாம்  அக்கு 
பங் சர் படி கண் பார்வைக்கு, கர்ப்பப் பைக்கு  என்றெல்லாம் படித்து , அதன் நுட்பம் அறிய ஆவல் 
கொண்டிருந்தேன் .
   கற்றல் நிலை :
                       என் வாழ்வில் அக்கு பங் சர் கற்கும் வாய்ப்பு , நான் குடவாசல் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் போது கிடைத்தது. சனி , ஞாயிறுகளில் குடந்தை சென்று திரு ஜி.
சத்திய மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்த அடிப்படை மற்றும் பட்டயப் படிப்பு அக்கு பங் சரில் 
படித்து , அட்டாமா வில் பதிவு (மாற்று முறை மருத்துவர்கள் சங்கம் ) செய்து கொண்டேன்.
பிறகு , M .D. ஆக்கும் படித்து, அக்கு பங் சரின் மற்ற பிரிவுகள் , வர்ம மருத்துவம் , காந்த 
மருத்துவம், விதை மருத்துவம், சுஜோக்  முறை என பல பிரிவுகள் கற்றுக் கொண்டேன்.
தமிழ்த் தொடர்பு :
                         தமிழகத்தின் சித்தர்கள் கண்ட வர்மக் கலை , சீனர்களால் செழுமை ஆக்கப் பட்டு ,
 உலகம் முழுக்கப் பரவி, மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டு, மாற்று மருத்துவத்தில் ஒன்று 
 என  வலம்  வருகிறது. தமிழகத்திற்கு  என்றே தனி வரலாறும் , வளர்ச்சியும் கண்டு, பல 
மருத்துவர்கள் , பல நூல்கள் , பல கோணங்களில் கருத்துக்கள்  என வெளியிடப் பட்டாலும் ,
தமிழ் மொழியின் தாக்கம் , தமிழ் முறைப் படுத்தல் , தமிழின் நுண்மை  குறைவாகவே இருந்தது.
 சொல்லாய்வு :
                தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்துப் பார்த்து , வேர்ச் சொல் கண்டு , பொருள் பார்த்த போதும் , உயிர், மெய், ஆய்தம்  ஒலி அமைப்பை  ஆராய்ந்த போதும் , ஒவ்வொரு எழுத்தும்  (வரி வடிவங்கள் ), வேர்ச் சொல்லும்  என்னை வியப்பின் உச்சிக்கே 
 அழைத்துச் சென்றன.
      எடுத்துக் காட்டுக்கள்: (1) மண்ணில் எடுத்து கல்லாக மாறுகிறது. கல் உடைந்து  மண் ஆக 
மாறுகிறது. மண்ணீரல் --> கல்லீரல். கல்லீரல் --> மண்ணீரல் 
                                          (2) மண்ணீரல் நீர்ச் சத்து , காற்றால் கலக்கப் பட்டு , நீர் வடிவாகும்  இடம்   நுரை + ஈரல் 
        (3) ஒவ்வொரு மூட்டிலும் தேங்கும், பயன் படுத்தப் பட்ட நீரின் பகுதியே , வலிக்கு க் 
 காரணம்.-சிறு நீர் -- அதை சேர்த்து வடிகட்டி, சத்து பிரிப்பது சிறுநீர் + அகம் .
 ( மாற்றுப் பெயர்  'நீர் ஈரல்' என வைத்தேன், வேர்ச் சொல் வேண்டி.)
  (4) தீ உறுப்பு இதயம், இதய உறை என இரண்டாக வருவதில், இதய உறை ' மனம் ' என்றபோது மலைத்தேன் . தமிழர்களிடம் இதயம் என்ற சொல்லாடல்  எண்ணங்களோடு தொடர்பு படுத்தி  பல காலமாகவே வழங்குகிறது.
     மேலும் தொடர்ச்சி.

Monday, 29 December 2014

மாதிரிப் படம். நூல் முகப்பு அட்டை. 

அன்புடன், ஆ. மதி  யழகன்..

Sunday, 28 December 2014

 தொடர்ச்சி  2 -தமிழ் உயிர் எழுத்துக்கள் பொருந்தக் கூடிய அக்கு பங்சர் புள்ளிகள் 

 'எ '  Lu 8 - நுரை வலு 

குறிப்பு : மணிக்கட்டு வெளி ஓரம் நுரை மண்  Lu 9 உள்ளது.
 Lu 8: நுரை மண்         மேலே 
                    ஒருசுன்   தொலைவில் 
           நுரைவலு       இருக்கும் 
                      நுரையீரல்    காக்கும்..........52 (ஏழு ஓட்டங்கள் ) 
 நுரையீரல், பெருங்குடல்,  சார்ந்த  அனைத்து  நோய்களும் தீரும்.

'ஏ ' L I 1 - குடல் வலு 

 L I 1: சுட்டும் விரல்      வெளி நகத்து க் 
                     கீழ் முனையில்       குடல் வலுவாம் 
           பட்டு விடும்        வயிற்றோட்டம் 
                      பாங்காய்    மயக்கமும் ............60 (ஏழு ஓட்டங்கள் ) 

'ஒ ' K 10 - நீர் வலு 

K 10 : முழங்கால்    மடிப்போரம் 
                       முத்தான      நீர் வலுவாம் 
           முடி உதிரல்       தடுக்கும் 
                       முழு ஆண்மை       கொடுக்கும்...........286 (ஏழு ஓட்டங்கள் ) 
சிறு நீரகம் , சிறுநீர்ப் பை, காது சார்ந்த நோய்கள் தீர்வு , கழுத்து முதல் முதுகு 
தொடை, கால் பாதம் வரை உள்ள வலிகள் தீர்வு , பய உணர்வு தீர்வு  இப்புள்ளியில் 
 கிடைக்கும். (சம்மணம்  இடு ) 

'ஓ ' UB 66 - நீர்ப்பை வலு 

UB 66: சுண்டு விரல்     கால் எலும்பில் 
                    ஒண்டு ஓரம்        நீர்ப்பை வலு 
             மண்டி விடும்       பாத வலி 
                     சர்க்கரை       தீர்க்கும் ...........292 (ஏழு ஓட்டங்கள் )
 சிறுநீரகத் திற்கும் , உடல் மன உயிர் இணைப்பிற்கும்  முதன்மையான புள்ளி ஓ .
     ஓ > ஒ 

'ஐ ' P 4 - மன வலு - தவப் புள்ளி 

குறிப்பு : மன மண் P 7 என்பது மணிக்கட்டு மையம்.
P 4: மன மண்      தொடங்கி 
               ஐஞ் சுன்      தொலைவில் 
          மன வலு        இருக்கும் 
                மனித நாள்    கூட்டும்...........104 (ஏழு ஓட்டங்கள் )
மனம் சார்ந்த அனைத்து  நோய்களுக்கும் தீர்வு.

'^ஒள ' நாபி 

இது கூட்டொலி . தனி ஓட்டம் என்றால் முண்டத்தில்  உள்ள Du - Ren சுழற்சி கூறலாம்.
நாபியில் வகர மெய் உள்ளது. ^ஒள  அதிர்வும் அங்கேதான்.
 இப்புள்ளியை நடு விரலால்  லேசாகத் தொட்டு இடம் வலமாக மூன்று முறை சுற்றலாம்.
பிற குறிப்புகள் : ஆயுத எழுத்து  என்பது காற்றொலிகள் சேர்க்கப் பயன் படுவது.
'ம் ' எனும் மெய் ஒலி  மூலாதார் அதிர்வு.

முடிவுரை 

தமிழ் உச்சரியுங்கள். அது உடல் தொட்டு அதிரும். உயிர் தந்து அதிரும்.
தமிழ் உயிர் எழுத்துக்கள் வலுவாக அதிரும் புள்ளிகளைக் கண்டோம்.இவற்றை தொட்டோ, தூண்டியோ பயன் பெறுங்கள்.
2015 - புத்தாண்டு வாழ்த்துக்கள்.அன்புடன், ஆ. மதி  யழகன்..

Saturday, 27 December 2014

 தொடர்ச்சி -தமிழ் உயிர் எழுத்துக்கள் பொருந்தக் கூடிய அக்கு பஞ்சர் புள்ளிகள் . 

     'தீ ' = மனம் + இதயம் , மன வலு P 8, இதய வலு H 8.

'இ ' P 8, H 8

  P 8 : இதய ரேகை    நடு விரல் 
                    இணைவிடம்    மனத் தீ 
          உதயமாம்      வெப்பம் 
                    ஒழி படும்       சோம்பல் ...........88 ( ஏழு ஓட்டங்கள் ) 
H 8: இதய ரேகை     சுண்டு விரல் 
                   இணையுமிடம்     இதயத் தீ 
        உதயமாம்       வலிமை நிலை 
                   ஒழி யுமாம்    வேர்வை நிலை ......, 136 (ஏழு ஓட்டங்கள் )
  மனம், இதயம், மூ வெப்ப மண்டலம், சிறுகுடல்  சார்ந்த அனைத்து  நோய்களும்  தீரும்.
 ' THUMPS UP ' செய்க ; இதய ரேகையில் உள்ள P 8, H 8 தூண்டப் படும்.  

''ஈ ' Tw 6, S I 5 -மூ வெப்பத் தீ , சிறுகுடல் தீ 

Tw 6: மணிக்கட்டு      புறக் கோட்டில் 
                    மூட்டை ஒட்டி      மூன்று சுன் 
          இருக்கட்டும்     மூ வெப்பத் தீ 
                     நொறுக்கட்டும்       தோளின் வலி ...........124 (ஏழு ஓட்டங்கள் )
S I 5: மணிக்கட்டு          தொடக்கத்தில் 
                   கை சாய்க்க        வரும் பள்ளம் 
          கணிக்கட்டும்      சிறுகுடல் தீ 
                   களையட்டும்       தோளின் வலி ..............168 (ஏழு ஓட்டங்கள் )
  முன் கை அசையும் விளையாட்டுக்கள்  இதயம் காக்கும் .
                  Tw 6, S I 5 > P 8, H 8    
                       ஈ > இ           

'உ ' S p 3 - மண் வலு 

முதலில் Sp 2- மண் தீ  பாடல்.
               காற் பெருவிரல்          கை மடக்க 
                        கூர் மடிப்பில்     மண் தீயாம் 
                சர்க்கரை நோய்     வந்ததென 
                        சாற்றி விடும்     இவ்விடத்தே ........224 (ஏழு ஓட்டங்கள் ) 
 இப்போது Sp 3: மண் வலு  பாடல் 
                மண் தீ     முகடு தாண்டி 
                         முதற் பள்ளம்      மண் வலுவாம் 
                 முன்னுரைக்கும்    சோகை நோயை 
                           முதலாக்கும்    செவ்வணுக்கள் .........228 ( ஏழு ஓட்டங்கள் ) 
மண்ணீரல், கணையம், இரைப்பை, உதடுகள், மாத விலக்கு  சார்ந்த அனைத்து நோய்களும்.
மேலும் குறைந்த மற்றும் அதிக இரத்த அழுத்தம் சரி செய்யும்..

'ஊ ' St 36 இரைப்பை வலு  

St 36: முழங்காலின்      முச்சுன் கீழ் 
                   முன்னல்ல     பின்னோருசுன் 
           இலங்கும்              இரைப்பை வலு 
                   எடுக்கும்       நோயின்வலு .........260 ( ஏழு ஓட்டங்கள் )
    ஊ > உ      St 36 > Sp 3
 மேலும், அடுத்த நாள், அன்புடன்  ஆ. மதி  யழகன்..

Friday, 26 December 2014

தமிழ் உயிர் எழுத்துக்கள்  பொருந்தக் கூடிய  அக்கு பங்சர்  புள்ளிகள் . 
       முகவுரை : 
                          உடலில் ஐந்து தனிமங்கள் (பூதங்கள் ) 1, 2, 3, 4, 5 முறையே  கல், தீ , மண் , 
 நுரை, நீர்  எனப் பார்த்தோம் . உயிர்த் தன்மை போற்றும்  இவ்வுறுப்பு களுக்கு ஈடான ,
 இணையான, ஒத்துப் போகும் உயிரின் அதிர்வொலிகள் , வலுவாக ஒலிக்கப் படும் இடங்கள் 
 காண்போம்.
 தனிமங்கள் - உறுப்பு - அதிர்வு - ஆங்கிலப் பெயர் .
 1. ஆகாயம் - கல்லீரல் - அதிர்வு 'அ ' -LIVER 
 1. ஆகாயம் - பித்தப்பை - 'ஆ ' - GALL BLADDER 
 2. தீ - மனம், இதயம் - 'இ ' - PERI KARDIUM , HEART 
 2. தீ - மூ வெப்ப மண்டலம், சிறுகுடல் - 'ஈ ' - TRIPLE WARMER , SMALL INDUSTINE 
 3. மண் - மண்ணீரல் ( +கணையம் ) -'உ ' - SPLEEN  (+ PANCREAS )
 3.மண் - இரைப்பை  - ' ஊ ' -  STOMACH 
4.காற்று - நுரையீரல் - 'எ ' - LUNGS 
4. காற்று - பெருங்குடல் - 'ஏ ' - LARGE INDUSTINE 
 5. நீர் - சிறுநீரகம் - 'ஒ ' - KIDNEY 
 5. நீர் - சிறுநீர்ப்பை - 'ஓ ' - URINAL BLADDER 
 விட்டுப் போன  'ஐ ' அதிர்வு   
 இதயத்திற்கும் , வலப் பக்க நுரையீரலுக்கும்  இடையில் உள்ள  இதய உறை  ( பெரி கார்டியம் )
 பகுதியை  'ஐ ' எனல் பொருந்தும்.. நான் என்பதை  அங்குதான் கை வைத்து கூறுகிறோம்.
    மெய் எழுத்தில் யகரம் (இடையின முதல் ஒலி ) அங்குதான் தொடக்கம். (பார்க்க :  ஐந்து 
தனிமங்கள் - ஐம்பூதத்தில் தமிழ் - 32 வரி  பாடல்  மேலும் 24 வரி  பாடல்கள்.)
    ஐ  என்பது  கூட்டு  ( அ +ய் ) ஒலி  ஆனாலும் உயிர் எனவேக் கருதப் படுகிறது.
  இதுவே மனம் 
 கை நடு விரல் முனை வரை ஓடி  நான்காம் விரல் மோதிரவிரல் வழி திரும்பும் ஓட்டம் 
 மனதின் ஓட்டமே !
   6. மனம் - 'ஐ ' - பெரி கார்டியத்தில் ஒரே ஒரு சிறப்புப் புள்ளி ,  மன ஓட்டத்தில் மனம் சந்திக்கும் 
 புள்ளி  இருக்க வேண்டும் 
 விட்டுப் போன '^ஒள ' அதிர்வு  
 இடையின  வகர ஒலி , மெய்யில் வரும் இடம் நாபி - ^ஒள  - NAVEL 
 நாபி மேல் ^ஒள  அதிர்வு உண்டு.
 12 உயிர் எழுத்துக்களின் வலு மிக்க இடங்கள்.
       'அ '      LIV 1
 பாடல் : காற்பெரு விரல்  வெளி நகத்து க் 
                      கீழ் முனையில்      கல்வலுவாம் 
               தீர்க்கும து      கால் வலிகள் 
                       தீர்த்து விடும்     தலை வலியும் ........176 (ஏழு ஓட்டங்கள் )
 கல்லீரல், பித்தப்பை, கண் தொடர்பான அனைத்துக் கோளாறுகள் தீர்வும், நச்சுத் தன்மை நீக்கலும்  இப்புள்ளியால்  ஆகும்.
'ஆ '    GB 41 
 பாடல் : நான்காம்     ஐந்தாம் 
                       விரல் எலும்பு      சந்திப்பில் 
              பார் பித்தப்     பை வலு 
                      தீர் இடுப்பு      பாத வலிகள் ...........204 (ஏழு ஓட்டங்கள் )
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Friday, 5 December 2014

 கட்டுரை தொடர்ச்சி - உடல் நலம் காக்க அறிய வேண்டிய உண்மைகள் ..
   [3] உயிர் விளக்கம் : ஐம்பூதம் ஒன்று சேர்ந்தால் உயிர். ஏழு வண்ணம் சேர்ந்தால் வெள்ளை.
    அதனால், வெள்ளை நிறத் தன்மை கொண்ட நுரையீரல் காற்று - அதாவது மூசுக் காற்று 
 - உயிரோடு   நெருக்கம் உடையது. உயிர் காக்கும் நிறம். பிரபஞ்சத்தின்  ஞானத்தை  உச்சந்தலை  வழியே  பிறந்தவுடன் கொண்டு வந்தது - எனக் கூறுவர் .
          ஐம்பூதம் உள்ளே இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது. எனவே உயிர் உள்ளேயும்  இல்லை ; வெளியேயும்  இல்லை - அதாவது உள் - வெளித் தொடர்பில் உடம்பைத் தொட்டவாறு   ஆவி வடிவில் ( செல்கள் ஒவ்வொன்றும் வெளியிடும் வெப்ப மற்றும் கதிர் 
 வீச்சுத் தன்மையால் ) உள்ளது.
         ஒரு பிணத்தையும், மயக்கம் அடைந்த ஓர்  ஆளையும் எட்டி நின்று கிரிலியன் படம் எடுத்தால் , அல்லது அகச் சிவப்பு படம் எடுத்தால் -
         உயிர் அற்ற உடலில் ஒளி  இருக்காது. உயிர் உடலில்  ஒளி  இருக்கும்.
    எனவே, ஒளித் துளியே உயிர். ஒளி வெள்ளமே பேருயிர். ( துவைதம் ? அத்வைதம் !)
  அத்வைதம் = இரண்டல்ல - என்பது  மிகவும் நுணுக்கமான சொல் அமைப்பு.
 [4] நோய் விளக்கம் : 
  இரண்டே பிரிவுதான். (1) மரபு சார்ந்து வருவது. (2) சூழல் சார்ந்து வருவது.
 மரபு நோய்கள் : மரபு நோய்களை கட்டுப் படுத்தலாம் . பாதிப்பு குறைக்கலாம். நீக்கும் வழி 
 ஜீன்களை மாற்றுவதே.
 சூழல் நோய்கள் : சூழல் நோய்கள் என்பது முதலில் 'நீங்கள் ' பின் உங்கள் அடி மன 
 உணர்வுகள் , உங்கள்  இனம் (சுற்றி உள்ளவர்கள் ) வழி பொங்கி வரும் உணர்வுகள் .
            இதில் ஏற்படும்  தளர்வு , மற்றும் வேகம்  உடலைத் தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி 
 குறைகிறது. ஒவ்வொரு நோயாக வந்து ( நெஞ்சில் சளி, வயிற்றில் அஜீரணம் ) உட்கார்ந்து 
 விடுகிறது.
    மனம் பாதித்த பின் நோய் வளர்ச்சி - சிறுநீரகம் முதல் சிறுநீரகம் வரை. 
   முதலில் உறக்கம் கெடும். சிறுநீரகம் - கல்லீரல் தொடர்பு  இரவு 11- 3 மணி வரை .
  உண்டியல் கெடும். ( கல்லீரல் )
  இரண்டாவது அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப வருவதால் பித்தப் பை கெடும்.
 மூன்றாவது , பெரி கார்டியம் நினைத்து , நினைத்து  முட்டுவதால்  இதயம் தாறு 
 மாறாகும். 
 நான்காவது, இதய ஆற்றல் தர வேண்டிய கல்லீரல் சரியில்லை. இதய ஆற்றல்  பெற 
 வேண்டிய மண்ணீரல் (வயிறு ) செரிமானம்  இன்றி , சிறிது சிறிதாகக் கெடும்.
  உடலுக்கான அல்லோபதி மருத்துவர்  இதய நோய்க்கான மருந்துகளோடு முடித்துக் 
 கொள்வார். நாம் பணத்தைத் தேடி, புகழைத் தேடி , இன்பத்தைத் தேடி ...தேடித் தேடி 
 பரபரப்பாவோம். தீர்வு என்னவோ, தியானமும், அமைதி வாழ்வுமே ! 
 வயிறு கெட்ட பின் , அதன் ஆற்றல்  பெறும்  நுரையீரல் வறட்சி, அல்லது சளியால் கெடும்.
 நுரையீரல் ஆற்றல் பெற வேண்டிய சிறுநீரகம் கெடும்..சூழல் கெட்டாலும் நுரையீரல் 
கெடும். சத்து   கிட்டாமலும் மண்ணீரல்  கெடும். சிறு நீரகம் தாக்கப் பட்டது , நடையில் 
 தெரியும்.
 தீர்வுரை :  உடல் நலக் கேடு என்பது உங்கள் மனம் -50%,  வாழும் தன்மை -25% , 
 பணித்தன்மை மற்றும் சூழல் பாதிப்பு 25% . எனப் பல படிகள் தாண்டி ஏற்படுகிறது.
     நல்ல மனம், நல்ல மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள் , பணி  ஒழுங்கு, சூழல் தன்மை ,
 நோய் தடுப்புக்கான ஆசனங்கள் , மூச்சு பயிற்சி  இவையே  மனிதனை  நூறாண்டுக்கு 
 அழைத்துச் செல்லும்.
     கார்த்திகை, கிரிஷ்துமசு, புத்தாண்டு -2015 வாழ்த்துக்கள் . அன்புடன் , ஆ . மதி  யழகன்.
  கட்டுரை - உடல்நலம் காக்க அறிய வேண்டிய உண்மைகள் . 
           [1]  கல்லீரல் எனும் இவ்வுயிர் அமைதல்   
              கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி - என்பது வழக்கு.
இது உடல் தோன்றும் நிலையிலும் உண்மை. கல்லீரல்  தான்  மண்ணீரல் தோன்றி இயங்கும் 
 முன் அமைக்கப் படுகிறது.
              குழந்தை வயிற்றில் உள்ளபோது, தாயின் உதிரம் நாபிக்கொடி வழியே உள்ளே வந்து 
 சிறுநீரகம் வழியே சுத்திகரிக்கப்பட்டு உடற் கட்டுமானம் நடைபெறும்.
              ஐந்தாவது மாதத்தில் 'கல் ' எனும் கல்லீரல் (உண்டியல் = சேமிப்பு = கல்லா ) உருவாகும். அப்போதுதான்  தாய்க்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
              சிசுவுக்கு சிறுநீரகம், கல்லீரல் , தீ ஈரல் (இதயம் + மனம் எனும் பெரி கார்டியம் ) உள்ளது.
 'மண் ' எனும் மண்ணீரல் , 'நுரை ' எனும் நுரையீரலும்  வெறும் பலூன் போன்ற பைகள்.
  நுரையீரல் தூண்டல் :
               ஆயா இவ்வுலகத்திற்கு வந்த புது உயிரைக் (குழந்தையை ) முதுகில் தட்ட , நுரையீரல் 
 தூண்டப் பட்டு , அழுகை இடும்.
 மண்ணீரல்  தூண்டல் : 
            தாயின் பால் வயிற்றில் இறங்கும்போது மண்ணீரல் வேலை செய்யும்.
   ஆக, மண்ணும், நுரையும் மண்ணில் வாழ, முன்னம் வந்த கல்லீரல் எனும் சேமிப்பு உண்டியல் 
 வளமாய் இருக்க வேண்டும்.
          சிறுநீரகம் - தொந்தரவு  இல்லை என்றால் 120 ஆண்டுகளுக்கு மேல் வரும். இது நிலையான  மின்கலம் (Permanent  battery  ) 
       கல்லீரல் - என்பது மின்னூட்ட மின்கலம் (Rechargable  Battery ) 
    இதயம் - நீடித்து உழைக்கும் .- மனம் வழித் தொல்லைகள் இன்றேல் , இடம் மாற்றி, உடல் 
 மாற்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம்.
   மண்ணீரல் - பராமரிப்பு  சத்துணவு 
  நுரையீரல்  - பராமரிப்பு  மூச்சு பயிற்சி.
  மண்ணும், நுரையுமே  நோயை முதலில் வெளிக் காட்டும்.
 [2] மன விளக்கம் :  பெரி கார்டியம் = மேல் மனம் 
                                 கல்லீரல் = அடிமனம் 
                               சிறுநீரகம் = ஆழ் மனம் 
  'மனம்' என்பது புத்தகங்களில் விளக்கப் படுவது இல்லை . மனம் என்பது கல்லீரல் முதல் 
 பெரி கார்டியம் வரை  இடைப் பட்ட பகுதி.- conscious mind 
 கல்லீரல் -  sub conscious mind , சிறுநீரகம் - super conscious mind 
     பூமி விளிம்பு தெரியும் ; பூமி சுற்றி உள்ள காற்று மண்டலம் தெரியாது.
    சூரிய விளிம்பு தெரியும் ; சூரியனை சுற்றி உள்ள அனல் பகுதி அத்தனையும் தெரியாது.
     அது போல - பெரி கார்டியம் சுற்றி உள்ள கதிர் வீச்சும் ( உடலுக்கு வெளியேயும் உணரலாம்)
  மனமே ! மனமே !- அக்கு பங்சர்  பாட வழி பெறப் பட்ட கருத்து - ஆசிரியர்  ஆ. மதி  யழகன்..
    தொடரும்.

Thursday, 4 December 2014

 நோய் மற்றும் தீர்வு  - 11. கழுத்து வலி 12. கை வலி  
   11. Kazhuthu vali  - கழுத்து வலி 
 தீர்வுப் புள்ளிகள் : Tw 3, GB 20, DU 14 
 (1) Tw 3 - மூவெப்ப கல் - மோதிர விரலும், நான்காவது விரல் எலும்பும்  (கைப் பகுதி ) சேரும் 
 மூட்டின்  பின்புறம் (மோதிர விரலின் சுண்டு விரல் பக்கமாக ) 
   அக்கு பிரசர்  நாள்தோறும்..அக்கு ஊசி ஒருமுறை.  தேவையானால்  அடுத்த ஏழு நாளில்.
             கழுத்து வலியோடு, திடீர்த் தலை வலியும்  சரி செய்யும்.
        பார்க்க வரிசை எண்  18/60 
 (2) GB 20 - பித்தநீர்ப் பை ஓட் 20 - தலையின் பின்பக்க எலும்பின் கீழ் முடிக் கோட்டிற்கு சற்று 
 மேலே துருத்திக் கொண்டிருக்கும் எலும்பிற்குக் கீழே அமைந்துள்ளது . (இருபுறமும் )
      தலையை சாய்க்கும் போது இரு எலும்புகளையும் உணரலாம்.
அக்கு பிரசர் : தானோ, இன்னொருவரோ தலையைத் தாங்கியவாறு இரண்டு கட்டை விரலாலும் 
 60 முறை அழுத்தம் தரலாம் .
    பிறகு கட்டை விரலை முடிக்கோட்டில்  இருந்து அழுத்தியவாறு ஆறு விரற்கிடை  இணையாக மேலே (இரண்டு கட்டை விரல் ) தூக்கிக் கொண்டு சென்று காதோரம் பாதி 
 தொலைவு  வளைத்து விடவும்.
   பயன் : பின்பக்க (புறடி ) த் தலை வலியும்  போகும்; கழுத்துப் பிடிப்பு நீங்கும்.
   கழுத்து தேய்மானம் போகும் ; மன நலக் கோளாறும்  தீரும்.
 (3) DU 14 - Or Gv 14 - ஆளுமை ஒட் 14 - தலையை முன்புறம் குனியும்போது முதுகுக் கோட்டில் ஓர் எலும்பு துருத்திக் கொண்டு இருக்கும் . அந்த எலும்பை ஒட்டி கீழே உள்ள 
 பள்ளம். இறங்கு ஓட்டங்களின் தலைமை இடம். மற்றவர் பார்வைத் தாக்குதலை முதுகில் 
 உணரும் இடம்.
    நடு விரலால் ( 2, 4 விரல்கள் சேர்த்தவாறு ) நடுவிரல் பட அக்கு பிரசர்  பயன்.
  கழுத்து வலி, கழுத்து பிடிப்பு நீங்கும்.
    12. கை வலி (மற்றும் முழங்கை வலி ) 
 தீர்வுப் புள்ளிகள் : P 5, H 4 -P 3, H 3  and L I 4 
 (1) P 5 - மன நுரை  - மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து  3 சுன்  (நான்கு விரல் 
 குறுக்கம் ) மேலே  - இது கை நரம்பு இயக்க முக்கியப் புள்ளி.
   அக்கு பிரசர், அக்கு ஊசி  பயன்  படுத்த உடனடியாக  வலி குறையும்.
   கை வலி  மற்றும் கைவாதம்  நீங்கும்..
    பார்க்க வரிசை எண் 14/60 
(2) H 4 - இதய நுரை  - H 7 லிருநது  1. 5 சுன்  மேலே.
      கை வலி முழுவதும் .
   பார்க்க வரிசை எண் 23/60, 24/60  
 முழங்கை வலிக்கு : P 3, H 3  
  P 3 - மன நீர் - முழங்கை இருதலைத் தசை நார் ஒட்டி முன் பள்ளம்.
            பார்க்க வரிசை எண் 15/60
 H 3 - இதய நீர் - முழங்கையை 90 பாகை மடக்கும் போது , முழங்கை மடிப்பு ரேகையின் 
 உட்புற ஓரக் கடைசியில் அமைந்து உள்ளது 
          பார்க்க வரிசை எண்  25/60 
 (5) LI 4- குடல் மனம் - கைக் கவுளி - இதை இடுப்புக்கு மேல் உள்ள எந்த ஒரு வலிக்கும் 
   பயன் ஆகும்.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Wednesday, 3 December 2014

 நோய் மற்றும் தீர்வு - 9 இடுப்பு வலி  10 இருதயப் படபடப்பு . 
       9. IDUPPU  VALI - இடுப்பு வலி  (Back pain )
 தீர்வுப் புள்ளிகள் : UB 40, GB 41, Sp 5, Lu 9, H 9, S I 1
    (1) UB 40 - நீர்ப் பை மண்  - முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் .
                 பார்க்க வரிசை எண் 60/60 
   (2) GB 41- பித்தப்பை வலு - காலின் 4 வது 5 வது கால் விரல் எலும்புகள் (கவை போல ) 
 சேரும்  இடத்தில் உள்ள பள்ளம் .
                 பார்க்க வரிசை எண்  38/60 
           இவை  இரண்டில் நாள்தோறும் அக்கு பிரசர் செய்தாலே, வலி பெருமளவு குறையும்.
 (3) Sp 5 - மண் நுரை - உட்புறக் கணுக்கால் மூட்டின் முன்புறம் உள்ள பள்ளம் .
                 பார்க்க வரிசை எண் 44/60 
 அல்லது (4)  Lu 9 - நுரை மண் - மணிக்கட்டு ரேகையின் வெளி ஓரக் கடைசியில் உள்ளது .
                 பார்க்க வரிசை  எண் 3/60 
  இவை இரண்டில் ஒன்று போதும் . Sp 5- வெள்ளைப் புள்ளி. Lu 9 - கேட்பு வெள்ளை.
 (5) H 9 - இதயம் கல் - (இடது ) கை சுண்டு விரல் நக முனை -4-ம் விரல் ஒட்டி  
                பார்க்க வரிசை எண் 21/60 
 (6) S I 1- சிறுகுடல் நுரை - (இடது ) கை சுண்டு விரல் மறு நக முனை 
               பார்க்க வரிசை எண்  26/60 
  இடது கை சுண்டு விரலின் நகங் கீழ்  இரு முனையிலும் 60 முறை  அழுத்தம் .
    10. Irudayap Padapadappu - இருதயப்  படபடப்பு  அல்லது நெஞ்சு வலி 
   தீர்வுப் புள்ளிகள் : H 7,H4 , H 3, P 3, Lu 9 
 (1) H 7 - இதய மண் - மணிக்கட்டு ரேகையின் உட்பக்க ஓரத்தில் அல்னா  எலும்பின் வெளிப் 
 பக்கத்தில்  அமைந்து உள்ளது.
            பார்க்க வரிசை எண் 23/60 
 (2) H 4 -இதய நுரை - H 7- ல் இருந்து 1. 5 சுன்  மேலே 
           பார்க்க வரிசை எ ண் 24/60 
 (3) H 3- இதய நீர் - H 3 - முழங்கையை 90 பாகை மடக்கும் போது , முழங்கை மடிப்பு 
 ரேகையின் உட்புற ஓரக் கடைசியில் உள்ளது.
          பார்க்க வரிசை எ ண் 25/60 
 (4) P 3 - மன நீர் - முழங்கையின்  இருதலைத் தசை நார் ஒட்டி உட்பக்கம் அமைந்துள்ளது .
          பார்க்க வரிசை  எண் 15/60 
 (5) Lu 9 - நுரை மண் - மேலே நான்கில் கூறப்பட்டுள்ளது 
   மணிக்கட்டில் கட்டப் படும்  கயிறு, காப்பு உதவும்.
 மேலும் , அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி  யழகன்..

Tuesday, 2 December 2014

 நோய் மற்றும் தீர்வு - 6B. P , 7. எலும்பு வலி 8. இருமல் .   
6.  B . P - இரத்த அழுத்தம் : தீர்வுப் புள்ளிகள் H 9, DU 20, Liv 3  
        (1) H 9 - இதயம் கல் - இடது கை சுண்டு விரல் நக முனை (4- ம் விரல் ஒட்டி ) 
                      பாடல் மற்றும் விளக்கம் , பார்க்க வரிசை எண் 11/60 
      (2) Du 20 (or GV 20) -ஆளுமை ஓட்டம் 20 - உச்சந் தலைப் புள்ளி - காதுகள்  இணைக்கும் 
 கோடும் மூக்கு முனை, பிடரி இணைக்கும் கோடும்  வெட்டும் புள்ளி.
         இவை இரண்டும் நாள்தோறும் அக்கு பிரசர் செய்ய வேண்டும்.
    (3) Liv 3 - கல் மண்  - கால் கவுளி  - 2 நி அக்கு ஊசி  அல்லது 10 முறை அழுத்தம் 
               பாடல் மற்றும் விளக்கம் , பார்க்க வரிசை எண்  33/60 
 குறைந்த இரத்த அழுத்தம் : தீர்வுப் புள்ளிகள் : H 9 உடன் Ren 17 
    H 9 மேலே கூறப்பட்டுள்ளது . Ren 17 (or C V 17)-மார்புக் காம்புக் கோட்டின் மத்தி .
     நாள் தோறும்  அக்கு பிரசர் மற்றும் தேவையானபோது .
7. எலும்பு வலி : எல்லா எலும்பு வலியும் -
   தீர்வுப் புள்ளி UB 62 - நீர்ப்பை மனம்  - வெளிப்புறக் கணுக்கால் மூட்டு நேர் கீழே .
             பாடல் மற்றும் விளக்கம் பார்க்க வரிசை எண் 58 A /60
             கை எலும்பு வலி -
   தீர்வுப் புள்ளி LI 2 - குடல் நீர்  - 2- ம் விரல் , அதன் கை எலும்பு சேரும் மூட்டின்  கீழ் .
         பாடல் மற்றும் விளக்கம் பார்க்க வரிசை எண் 7/60 
 8. இருமல் : தீர்வுப் புள்ளிகள் Lu 10, Lu 5, Lu 8 .
  (1) Lu 10 - நுரைத் தீ  - கையில் உள்ள கட்டை விரல் தாங்கும் எலும்பின் மத்தி .
                பார்க்க வரிசை எண் 2/60
 (2) Lu 5 - நுரை நீர் - முழங்கை மடிப்பு ரேகையின் இருதலைத் தசைநார் வெளிப் பள்ளம்.
    ( இருமல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு.) பார்க்க வரிசை எண் 5/60
 (3Lu 8 - நுரை வலு  - மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் இருந்து 1 சுன் 
 மேலே . ( இருமல், ஆஸ்துமா , தொண்டை கரகரப்பு , காரை எலும்பு வலி ) வரிசை எண் 4/60 
       மேலும், அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி  யழகன் .

Monday, 1 December 2014

 நோய் மற்றும் தீர்வு 4. ஆண்மைக்குறைவு, 5. ஆறாத புண் .
           4. Aanmaik  kuraivu - ஆண்மைக் குறைவு  
 ஆண் மலட்டுத் தன்மை எனவும் கூறலாம் .
  தீர்வுப் புள்ளி : கல் நீர் - Liv 8 - முழங்கால் மடிப்பு ரேகை   முனை  மேல் 
 0. 5 சுன்  மேலே.
    பாலுணர்வுக்கு ப்  பொறுப்பான  சிறுநீரகத்தின் ஆற்றலை, கல்லீரல் தானே  
 கேட்டுப் பெறும்  இடம். கல்லீரலுக்கும் தாய் வலு கிடைக்கிறது. ஆண்மலடு 
 நீங்கும்.
 பாடல் : முழங்கால்       முதல் மடிப்பில் 
                          முனைமேல்       அரை சுன்னில் 
                இலங்குமே      கல் நீர் 
                            இயக்கமே      ஆண்மை..... ( வரிகள் 189 - 192, ஏழுஒட் .)  
  பார்க்க வரிசை எண்  35/60 .
  மேலும்  (2)  விந்தணுக்கள் எண்ணிக்கை கூட்ட  Li 2 - குடல் நீர் - வரிசை எண்  7/60 
   (3) ஓட்டம் , நடை  மூலம்  K 1 - நீர் கல்  தூண்டலாம். வரிசை எண் 51/60 
      சுருக்கமாக , சிறுநீரகம் (K ) , மற்றும்  கல்லீரலின் (Liv ) கூட்டு வலு  பாலுணர்வு த் 
 தன்மையை (ஆண்மை )  தீர்மானிக் கின்றன 
 வண்ணத்தில்  நீலமும் பச்சையும் ( சுற்றுப் புறமும் , உணவு நிறங்களும் )
 சுவையில்  உப்பும், புளிப்பும், ( அளவாக  இரண்டும் ) சேர வேண்டும். (படிக்க 5 தனிமங்கள் )
    5 . Aaraatha pun - ஆறாத புண் .  
   தீர்வுப் புள்ளி  (1) GB 14 - பித்தப் பை ஓட்டம் 14 
    முகத்தில், புருவத்தின் மத்தியில்  இருந்து 1 சுன்  (கட்டை விரல் குறுக்கம் )  இருபுறமும் 
 நெற்றியில் அமைந்து உள்ளது. திருநீறு  பட்டை அடிக்கும்  இடம்.
     அக்கு பிரசர் : 21 முறை கடிகார சுற்றும், 60 முறை அழுத்தமும்  - கட்டை விரல் அல்லது 
 நடு  விரலால் .
   ஆறாத புண் தீர்வதோடு  வேறு பயன்கள் :
     (1) சைனஸ் (ஒற்றைத் ) தலை வலி தீரும்.
   (2) பார்வைக் கோளாறு சரியாகும் 
  (3) ஞாபக சக்தி  கிடைக்கும்.
  (4) அனைத்து கட்டிகளையும்  கரைக்கும்.
 60 - ல்  வராத புள்ளி , ஆனால் அறிய வேண்டிய புள்ளி .
 மேலும் அடுத்த நாள் , அன்புடன்  , ஆ . மதி  யழகன்.

Saturday, 29 November 2014

 நோய் மற்றும் தீர்வு  - 3. ADAIPPU - அடைப்பு      
 தீர்வுப் புள்ளிகள் : (1) மண் நுரை - Sp 5- உட்புறக் கணுக்கால் மூட்டின்  முன்புறம் உள்ளது.
 அனைத்து அடைப்பும் நீக்க வல்லது.
 பாடல் : முன் உள்   கணுக்காலின் 
                        மூட்டினது   முன்புறம் 
                உள்ளது     மண் நுரை 
                         உடைக்கும்    அடைப்பை ... (வரிகள் 229-232, ஏழுஒட் .)
 பார்க்க : வரிசை  எண் 44/60 -Sp 5 , மேலும் பயன் தரும் ,
                வரிசை எண் 3/60 - Lu 9 - நுரை மண் ,
                வரிசை  எண்  49/60 - St 41 - இரப்பைத்தீ .
                            (2) நுரை மண் - Lu 9 - மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் 
 அமைந்துள்ளது . 
  மூக்கடைப்பும் நீக்கும்,  இரத்தக் குழாய் அடைப்பும் நீக்கும்.
 பாடல் : மணிக்கட்டு     வெளி ஓரம் 
                       மண் புள்ளி      நுரை மண் 
               இருக்கட்டும்     காப்பொன்று 
                        இரத்தக் குழாய்    அடைக்காது ... ( வரிகள் 45 - 48, ஏழுஒட் .)
 பார்க்க : வரிசை எண் 3/60.
                         (3) இரைப்பைக் கல் - St 43 - இரண்டாவது , மூன்றாவது விரல் எலும்புகள் 
 சேரும் மூட்டின்  முன்புறம் அமைந்துள்ளது.
  நெஞ்சு சளி கரைக்கும். சளி நீக்க சரி புள்ளி .
 பாடல் : இரண்டாம்    மூன்றாம் 
                       விரல் எலும்பு     சந்திப்பில் 
               பார் இரைப்     பை கல் 
                      சேர் சளி     நீக்கல் ..... ( வரிகள் 249 -252, ஏழுஓட் .)
 பார்க்க : வரிசை எண்  48/60 
                  (4) 60 - ல்  அடங்காத  புள்ளி  St 40 - இடம் : St 36 - க்கு  கீழ், 5 சுன் , பிறகு  1 சுன் 
 வெளிப்பக்கம் .
      அதிக சளி வெளியேற்றும் .
              (5) நீர்க் கோர்வை  மற்றும்  வீக்கத்திற்கு  - Sp 9 - மண் நீர்  - முழங்கால்  முன் எலும்பு 
 டிபியா  முட்டித் தடங்கலில்  முடியும்  பள்ளம் .
  பாடல் : முழங்கால்    முன் எலும்பில் 
                          முன்னேற     முட்டி தட்டும் 
                இடம் காணின்         மண் நீராம் 
                          இது தீர்க்கும்       மூட்டு வலி..... ( வரிகள் 237 -240, ஏழுஓட் )
 பார்க்க : வரிசை எண் 45/60  
 மீண்டும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Friday, 28 November 2014

       நோய் மற்றும் தீர்வு - 2. ARIPPU - அரிப்பு         
தீர்வுப் புள்ளிகள் : (1) நீர்த் தீ - K 2 - பாதத்தின் உட்புற பக்கவாட்டு வளைவு மத்தியில் .
    பார்க்க : வரிசை எண் 52/60 
 பொதுவான  அரிப்பு கேட்கும்.
                பாடல் : வளைவாகும்    பாதநடு 
                                             உச்சியிலே       நீர்த் தீ 
                               களை எடுக்கும்    பாதவலி 
                                              களைந்திடும்     தோல் அரிப்பு (வரிகள் 267 -270, ஏழு ஒட் )
                             (2) நுரை நீர் - Lu 5 - கை மடிப்பில்  இருதலைத் தசை நாரின் வெளிப்பள்ளம் .
 பார்க்க : வரிசை எண் 5/60
 அரிப்பு, அலர்ஜியால் வரும் தோல் நோய்கள் கேட்கும்.
                பாடல் : இருதலைத்       தசைநார் 
                                         வெளிப் பள்ளம்      கைமடிப்பில் 
                               இருக்கும்      நுரைநீர் 
                                          ஒடுக்கும்      தோல் நோய் (வரிகள் 53-56, ஏழு ஒட் )
                        (3) மண் மனம் - Sp 6 - உட்புறக் கணுக்கால் எலும்பு மூட்டில் இருந்து 3 சுன் 
 மேலே ( நான்கு விரல் குறுக்கம் ) - முழங்கால் முன் எலும்பு 'டிபியா ' ஓரமாக  
 பார்க்க : வரிசை எண் 44A /60
 பிறப்பு உறுப்பில் அரிப்பு, அலர்ஜி  கேட்கும்.
                  பாடல் : முன் உள்      கணுக்காலின் 
                                            மூட்டின் மேல்       முச்சுன்னில் 
                                 உள்ளது        மண் மனம் 
                                              உணர்த்தும்    பெண் மனம் ( வரிகள் 233-236, ஏழு ஒட் )
        பொது விளக்கம் :
                 அரிப்பு என்பது சிறுநீரகத் துணை உறுப்பு , சிறுநீர்ப் பை  ஓட்டம்  UB  தடை  அல்லது 
 வலுவின்றி ஒடுதலே .
        வழி 1. குளியலறையில்  துணையாள்  உதவி கொண்டு  முதுகுப் புறம் , புட்டம், தொடை 
 பின் பகுதி , முழங்கால் பின்பகுதி , பாதத்தின் சுண்டுவிரல் பக்கமும் , சுண்டுவிரல் நுனி வரை 
 கீழாக இழுத்து தேய்த்து விட்டால் உடனே குறையும் .
       வழி 2. சம்மணம் இடும்போது , கால் மடிப்பு இறுகுவதால் K 10- நீர் வலு  - அடர் நீலம்  -
  தூண்டப் படுகிறது . மேலும், சுண்டு விரல் மற்றும் அதன் அடிப்பகுதி  UB 66 -( நீர்ப்பை வலு -
  -அடர் நீலம் ) உட்பட மண் தரையில் அழுத்தப் பட்டு தூண்டப் படுகிறது.
      பழக்க முறையால் அரிப்பு தடுக்கப் படுகிறது.
        சிறுநீரகத் தன் வலு முறை 
    வழி 3. முழங்கை மடிப்பு பணிகள்  செய்வதால் - Lu 5 -நுரை நீர் - தூண்டல் , தாய் வலு.
 நீலப் புள்ளி. ஆட்காட்டி விரல் Li 2 -குடல் நீர்  தொடும்படியான  மோதிரம் உதவும்.
     மேலும், அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி யழகன்..

Thursday, 27 November 2014

 நோய்களும் , தீர்வுப் புள்ளிகளும் .    1. அஜீரணம்         
  பொது வடிவம் :      ஆங்கிலப் பெயர் உச்சரிப்பில் - தமிழ்ப் பெயர் 
        தீர்வுப் புள்ளிகள் : (1) தமிழ்ப் பெயர் - குறியீடு  - இருப்பிடம் 
         பாடல் வரிகள்.... (2) .....இதுபோல.
                          1. AJIRANAM - அஜீரணம் - செரியாமை 
  தீர்வுப் புள்ளிகள் :  (1) மன மண் - P 7 - மணிக்கட்டு மத்தியில் . பார்க்க  வ . எண் 13/60
  பாடல் வரிகள் : மணிக்கட்டு    ரேகையின் 
                                       மத்தியில்     மன மண் 
                             மணிக்கட்டு      வலி போம் 
                                       மணி வயிறும்     நலமாம் . (89-92- ஏழு ஓட்டங்கள் ) 
                                (2) இரைப்பை  வலு - St 36 -முழங்கால் பக்கவாட்டில் 3 சுன் கீழே 
 (3சுன் = நான்கு விரல் குறுக்கம் ) இது செரிமானச் செம்புள்ளி . பார்க்க  வ . எண் 50/60 
  பாடல் வரிகள் :  முழங்காலின்    முச்சுன் கீழ் 
                                         முன்னல்ல      பின்னொரு சுன் 
                               இலங்கும்        இரைப்பை வலு 
                                           எடுக்கும்     நோயின் வலு. ( 257-260 -  ஏ . ஓ ) 
                         (3) ரென் 6 - Ren 6  - கொப்பூழில் (தொப்புள் ) 1 . 5 சுன் கீழே 
   (1 . 5 சுன் = இரு விரல் குறுக்கம் ) இதிலும் அக்கு பிரசர் தரலாம்.
        அக்கு பிரசர்  என்பது அந்தக் குறிப்பிட்ட புள்ளியின் மேல் கட்டை விரல் 
 அல்லது  நடுவிரல் அல்லது அதற்குரிய probe  என்னும் இரும்புக் குச்சி கொண்டு ,
 (1) அதிக வலியின்றி அழுத்தியவாறு 21 முறை கடிகார சுழற்சி செய்து , 
 பிறகு (2) அதே விரலால் 60 முறை ' பானையில் புளி அமுக்குவதுபோல் ' விட்டு, விட்டு 
 அழுத்த வேண்டும்.
       நோயின் தன்மை பொறுத்து , உடனடியாகவோ , ஒரு மணியிலோ , ஒரு நாளிலோ 
 தீர்வு கிடைக்கும்.
    அக்கு ஊசி  15 நி  முதல் 20 நி வரை வைத்து எடுக்கலாம்.    
  மேலும், அடுத்த நாள் , அன்புடன் , ஆ . மதி யழகன்..

Sunday, 23 November 2014




படம் -1 பாத வளைவின் மேல் புள்ளியில் இருந்து  K 2 - நீர்த் தீ , K 3 - நீர் மண்
              K 7 - நீர் நுரை , K 9 - நீர் மனம் , K 10 - நீர் வலு .
படம் 2 - K 1 - நீர் கல்
படம் 3 - சுண்டு விரல் முனையில் இருந்து 5 புள்ளிகள் : UB 67 - நீர்ப் பை நுரை
           UB 66 - நீர்ப்பை வலு , UB 65 - நீர்ப்பை கல் , UB 62 - நீர்ப்பை மனம் ,
        UB 60 - நீர்ப்பைத் தீ
படம் 4 - முழங்கால் மடிப்பு மத்தி  - UB 40 - நீர்ப்பை மண் .
  மேலும், அடுத்த நாள் , அன்புடன் ஆ . மதி யழகன்..
 59/60 - நீர்ப்பை தீ  - UB 60      
 ● அமைவிடம் : குதிகால் நரம்பிற்கும் , வெளிப்புறக் கணுக்கால் மூட்டிற்கும் இடையில் உள்ளது UB 60.
 ■ பயன் விளக்கம் : நீர்ப் பை தன்  ஓட்டத்தில்  'கல் ' தாண்டி 'தீ ' உறுப்பின்  இதயம் அடைந்து 
(தனையன் மகன் - பேரன் ) இரத்த ஓட்ட ஆற்றலுக்கு உதவுகிறது . குறைவை ஈடு செய்வது 
 இதன் நோக்கம் . இது தடங்கினால்    ------
  (1) இரத்த ஓட்டம் கெட்டு  கணுக்கால் வலி.
 (2) உடலின் பின் பக்கம் -முதுகு , தொடை பின் பக்கம், கால்  பின் புறம்,.. போன்றவற்றில் 
 இரத்த ஓட்டம் தடைப் படும் . விளைவு, பின்பக்க வலிகள் .
 (3) சிறுநீரக ஓட்டம் தேங்குவதால் - சிறுநீரகக் கல்.
 ♥ நடைமுறை விளக்கம் : திரும்பவும் கூறுகிறேன் ; திரும்பத் திரும்பக் கூறுகிறேன் .
 சம்மணம் இட்டு அமர்ந்து பாருங்கள். இந்தப் புள்ளி UB 60 நன்கு தரையில் அமுக்கப் 
 படுவதை . ஒரு சின்னப் பழக்கம் தருவது எவ்வளவு பெரிய பயன்கள்! 
 ⊙ புதுமை விளக்கம் : K 3 - முன்புறம் ; UB 60 - பின் புறம். ( இரண்டும் அழுத்த குதிகால் 
 வலி தீரும்.) 
 பாடல் : குதிகாலின்     நரம்பு 
                    புறக் கணுக்கால்     மூட்டு 
                கோட்டிடை    நீர்ப்பைத் தீ 
                     குறைக்கும் பின்      பக்கவலி ...............304..
 60/60 - நீர்ப்பை மண்  - UB 40  
 ● அமைவிடம்  : முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் உள்ளது UB 40.
 ■ பயன் விளக்கம் : நீர்ப் பை  தன் ஓட்டத்தை மண்ணில் முடிக்கும் இடம் UB 40.
 'நுரை ' தாண்டி வர வேண்டிய 'மண் '  அவசர நிலையில் 'நீரக ' ஓட்டத்துக்கு உதவும் 
 இடம் .   இது தேங்கினால் , ------(1) மூட்டுகள் வலிக்கும்  (2) மூட்டு வீங்கும் 
  (3) முதுகு வலி உண்டாகும் .  UB 40 தூண்ட ( அக்கு பிரசர், அக்கு ஊசி ) நீங்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் :இந்த முழங்கால் உள் மடிப்பு அழுத்தமும், கால் மடக்கும் பணியில்தான் கிடைக்கும். சம்மணம் ? 
       மூட்டு வலிக்கிறது ; முதுகு வலிக்கிறது , என்று கூறிக் கொண்டிருந்தால் முழங்கால் 
 மடிப்பு மத்தியில் அழுத்தம், ஒய்வு  - ..... மாறி மாறி வருமாறு என்ன செய்தீர்கள் ?
 பஸ்கி , ஜாக்கிங் , மிதிவண்டி ஒட்டுதல்  ..... செய்ய வேண்டும்.
        சம்மணம் போட்டு  எழு . வஜ்ராசனம் போட்டு  எழு . காலை மடித்து எடை தூக்கு.
 குப்பறப் படுத்து  கால்களால் புட்டம் தொடு  (மாறி, மாறி பின் இரண்டு கால் பாதத்தாலும் 
...60 முறை ) கால் மடக்கி வேலை செய்க . முதுகு, மூட்டு வலிகள் தீரும்.
 ⊙ புதுமை விளக்கம் : சுவற்றில் / சாய்மானத்தில் முதுகு பட நன்கு சாய்ந்து அமர்ந்து 
 வேலை செய்யுங்கள். தேவையானால் படிமானத்திற்கு ,இடையே சிறு தலையணை 
 வைத்துக் கொள்ளுங்கள் . நடு நடுவில்  காலை மடக்கி நீட்டுங்கள் . சம்மணம் இட்டு 
 அமர்ந்திருந்தால் , காலை நீட்டி மடக்குங்கள்.
 பாடல் : முழங்கால்    மடிப்பு ரேகை 
                     மத்தி நீர்ப்     பை மண் 
               தடங்கல்       களைந்தால் 
                      அடங்கும்    முதுகு வலி.............308..
 மேலும், படங்கள் அடுத்து, அன்புடன், ஆ . மதி  யழகன்..

Saturday, 22 November 2014

 58/60 - நீர்ப் பை கல் - UB 65         
 ●அமைவிடம் : காலின் 5 -வது விரலும் , 5- வது விரல் எலும்பும் சேரும் மூட்டின் பின்புறம் 
 உள்ளது. (இரு நிறங்களும் சேரும் இடம்.)
 ■ பயன் விளக்கம் : சிறுநீர்ப் பை , கல்லீரல் - தனயன்  தொட்டு ஆற்றல் அளிக்கும் இடம்.
  ---ஆற்றல் வராவிடில்,  (1) நீர்க் கடுப்பு  (2) சிறுநீர் அலர்ஜி .
 ♥ நடைமுறை விளக்கம் : சிறுநீரகம் (5) - கல்லீரல் (1) ஆற்றல் அளித்தல் கீழ் வருமாறு.
 (1) நல்ல உறக்கத்தால் நிகழும். (11PM  - 3 AM ) - கல்லீரல் எழுச்சி நேரம் - முறையான வாழ்வு. (2) கால் பந்து போன்ற கால் ஊன்றும் விளையாட்டுகளால் நிகழும். ( 3 PM -7PM )
 மாலை விளையாட்டு - திட்டமிட்ட வாழ்வு.
 (3) K 1 ஊன்றிய எண்ணத்தோடு கூடிய நடைப் பயிற்சி , மாடிப்படி இறங்குதல் - கிடைத்த 
 நேரம் எல்லாம் பயிற்சி .
 (4) சம்மணம் இட்டு அமர்தல் (UB 65) - பழக்கம் ! அவ்வளவுதான்.
   நான்கும் தவற விட்டால், நீர் கடுப்பு, சிறுநீர் அலர்ஜி .
  ஒன்று நன்றாயினும் தொல்லை இல்லை . 1, 3, 4 எளிது.
 ⊙ புதுமை விளக்கம் : பரிமாறும் ஆற்றல் பெற பயிற்சி மற்றும் பழக்கம்  பெற வேண்டிய 
  தாய் - மகன் உறவுப் புள்ளி (யின், யாங் ) இணைகள் - வண்ணங்கள் - ஐம்பூத உறுப்பு 
 வளம்  பெறுதல் கீழ்வருமாறு.
 (1) பச்சைப் புள்ளி  - கல் வளம்  - K 1/UB 65
 (2) சிவப்புப் புள்ளி  - தீ வளம்  - Liv 2/GB 41
 (3) மஞ்சள் புள்ளி  - மண் வளம் - P 7/Tw 10, H 7/S I 8
 (4) வெள்ளைப் புள்ளி - நுரை வளம் - Sp 5/ St 45
 (5) நீலப் புள்ளி - நீர் வளம்  - Lu 5/Li 2
    இந்தப் புள்ளிகளின் நடைமுறை  விளக்கம் ஏற்கனவே கூறப் பட்டுள்ளன .
 பாடல் : சுண்டு விரல்  ஐந்தாம் 
                      விரல் எலும்பு    சந்திப்பில் 
              உண்டாம் நீர்ப்    பை கல் 
                  ஒட்டுமே     நீர்க் கடுப்பு....,............296.
 58A /60  - நீர்ப் பை மனம்  - UB 62     
 ● அமைவிடம் : புறக் கணுக்கால் மூட்டு எலும்பிற்கு நேர் கீழே உள்ளது.
 ■ பயன் விளக்கம் : நீர்ப்பை தன் ஓட்டத்தில் 'கல் ' தொட்டு எழும்போது தீயின் பெரி கார்டியம் 
 (மனம் ) - தமிழ் 'ஐ 'ப்  புள்ளி  தொடுகிறது.- நீர்ப்பை மனம். - இவ்விடம்  தேங்கினால் , -----
  --(1) தலை கிறுகிறுப்பு (2) தூக்கமின்மை (3) கவலை (4) மன அழுத்தம் (5) மன நோய் 
 (6) வலிப்பு  (7) கால், கணுக்கால், முதுகு  வலிகள்.
 ♥ நடைமுறை விளக்கம் : உள் கணுக்கால் மூட்டசைவில்  Sp 5 இயங்கும். நுரை வளம் 
 கிடைக்கும் . அதோடு சேர்ந்து புறக் கணுக்கால் மூட்டும்  அசையும்.மனம் சார்ந்த தொல்லை 
 இல்லை .  நுரையீரல் நோய்களின்போது , மனக் கவலை , துக்கம்  சேர்ந்து வருவது  இதன் 
 காரணமே.
 ⊙ புதுமை விளக்கம் : மிதி வண்டி  மிதி. காற்றும் கிடைக்கும்; மனமும் லேசாகும்.
 பாடல் : பின் உள்      கணுக்காலின் 
                           மூட்டினது    கீழ்ப் புறம் 
               உள்ளது     நீர்ப்பை மனம் 
                           ஒழிக்கும்   மன அழுத்தம்...........300. 
 மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன் ..

Friday, 21 November 2014

 56/60 - நீர்ப்பை நுரை -UB 67         
 ● அமைவிடம் : கால் சுண்டு விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில் 0. 1 சுன் தூரத்தில் 
 அமைந்துள்ளது . ( இரு நிறங்களும் சேரும் இடம். ) 
 ■ பயன் விளக்கம் : சிறுநீரகத் துணை உறுப்பு சிறுநீர்ப் பை தன் இறங்கு ஓட்ட இறுதியில்  நுரை 
 ( தன் தாய் ) சந்தித்து சக்தி பெறும் நிலை. கழிவுகள் அனைத்தும்  மண்ணில் ஐந்தாம் விரல் அழுந்த , வெளியேறும் . தடங்கினால்  ---
        ---(1) கழிவுகள் வெளியேற்றம் தடையாவதால் ஓட்டப் பாதையில் நோய், வலி .
     ---(2) ஒழுங்கற்ற மாத விடாய் . 
 ♥ நடைமுறை விளக்கம் : கழிவுகள் வெளியேற்றம்  என்றால் இதன் முதன்மை ( உடல் நல 
 அடிப்படை ) புரியும். சம்மணம் போட்டு அமருங்கள். இரண்டு சுண்டு விரலும் தரையில் 
 அமுக்கப் படும். வேறு தனி முயற்சி தேவை இல்லை.
    பாத பக்க வாட்டு நடையும் உதவும்.
 ⊙ புதுமை விளக்கம் : 'தீ ' காப்பாற்ற கை சுண்டு விரல் நக முனை.
              'நீர் ' காப்பாற்ற  கால் சுண்டு விரல் நக முனை.
 பாடல் : ஐந்தாம் விரல்      வெளி நகத்துக் 
                         கீழாம்        நீர்ப் பை நுரை 
               அடங்காக்         கழிவு நீக்கும் 
                           அளவாக்கும்        மாதவிடாய் ...............288..
 57/60 - நீர்ப் பை வலு  - UB 66    
 ● அமைவிடம் : காலின் ஐந்தாவது எலும்பு, ஐந்தாவது விரல் எலும்பும்  சேரும்  இடத்தில் 
 ( சுண்டு விரல் முடியும் வெளிப்புறம் ) உள்ளது.
 ■ பயன் விளக்கம் : சிறுநீர்ப் பை தன் வலுப் (நீர் ) பெறும்  இடம். நீர் உச்ச வலுவான இடம்.
 K 10 - ம், UB 66 - ம்  நீரின் ஏற்ற இறக்க  தன் வலு நிலைகள். UB 66 பயன்பாடு இலாது 
 போனால்    -----(1) பாத வலி உண்டாகும்.
           (2) சர்க்கரை நோய்க்குக் காரணம்.
        (3) சிறுநீர் போதல் அளவு ( குறைவோ, கூடுதலோ ) கெடும்..
      (4) கழுத்தில் இறுக்கம் உண்டாகும். 
 ♥ நடைமுறை விளக்கம் : சம்மணம்  இட்டு அமர, இப்புள்ளியும் இயல்பான தூண்டல் 
 பெறும் . மேற் கண்ட நோய்கள் நீங்கும்.. UB 67, UB 66 தூண்டி வரல் சுகப் பிரசவத்திற்கு 
 வழி கோலும் .
 ⊙ புதுமை விளக்கம் : பிரபஞ்ச ஆற்றல் பெற  அமுக்க வேண்டிய  தன் வலுப் புள்ளி 
 இணைகள் . --அடர் வண்ணங்கள்.    
 (5) அடர் நீலம் - நீர் வளம் - K 10 /UB 66.     
 (1) அடர் பச்சை  - கல் வளம்  - Liv 1/ GB 41.
 (2) அடர் சிவப்பு  - தீ வளம்  - P 8/ Tw 6 , H 8/ S I 5 . 
 (3) அடர் மஞ்சள் - மண் வளம்  - Sp 3 / St 36.        
 (4) அடர் வெள்ளை  - நுரை வளம்  - Lu 8/ LI  1. 
 பாடல் : சுண்டு விரல்   கால் எலும்பில் 
                         ஒண்டு ஓரம்      நீர்ப் பை வலு 
                மண்டி விடும்       பாதவலி    
                          சர்க்கரை     தீர்க்கும்......................292......
மேலும், அடுத்தநாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Thursday, 20 November 2014

 54/60 - நீர் நுரை  - K 7        
 ● அமைவிடம் : K 3 - நீர் மண்ணில் இருந்து (குதிகால் நரம்பு - முன் கணுக்கால் எலும்பு - கோட்டின் மையம் ) 2 சுன்  மேலே.
 ■ பயன் விளக்கம் : இது Lu 5- நுரை நீரின்  எதிர்ப்புள்ளி 
 நுரை நீரில்  இருந்து  இயல்பான ஆற்றல் கிடைக்காத போது , தானே நுரை ஆற்றல் கேட்டுப் 
 பெறும் இடம்  நீர் நுரை - K 7 - இது தூண்ட, ----
     (1) சிறுநீரகக் கல் கரையும். ( காற்றோட்டம் இல்லாத இடத்தில் படுப்பதால் நுரையீரலின் 
 ஆக்சிஜன் எடுப்பு வேலையை K  செய்யும். தன்  வேலை கெட்டதால்  சிறுநீரகக் கல் . அதை 
 கரைக்க நுரையிடம் ஆற்றல் கேட்கும் இடம். )
 (2) நுரையீரல் திணறலான ஆஸ்துமாவின்  போது  K 7, நுரையீரல் இடம் வந்த நீர்ச் சத்து 
 கேட்டுப் பெறுவதால் --ஆஸ்துமா குறையும்.
 ( நுரையீரலின் வரவு Lu 9 குறைப்பதன் மூலமும் ஆஸ்துமா குறையும்.)
 (3) அதிக ஓட்டத்தின்போது மூச்சு இரைத்து  வியர்வை அதிகமாக வரும். நுரையீரலுக்கு 
 துணை புரியும் புள்ளி ஆதலால் ---- அதிக வியர்வை குறைக்கும்.
 (4) நீருக்கு வளம் கிடைப்பதால், முடி வளர, தலை வழுக்கை தீர உதவும்.
 ♥ நடைமுறை விளக்கம் : கணுக்காலுக்கு மேல் முழங்கால் பிடித்து அமுக்கினால்  இப்புள்ளி 
 மற்றும்  Sp 6 - மண் மனம் , அழுத்தப் பட்டு பயன் கிடைக்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : கேட்கப்பட்ட நீர் வளம் , K 7 - நீர் நுரை - கேட்பு நீலம் .
  பிற.        Liv 8 - கல் நீர்  - கேட்பு பச்சை , P 9, H 9 - மனம் கல் , இதயம் கல்  - கேட்பு சிவப்பு .
 Sp 2 - மண் தீ - கேட்பு மஞ்சள் , Lu 9 - நுரை மண் - கேட்பு வெள்ளை.
 பாடல் : நீர் மண்    இரு சுன்னில் 
                        நீர் நுரை        இருக்குமே 
                 நீரின் கல்       நீக்குமே 
                          நீர் வளம்      ஆக்குமே ..............276.
 54A /60 - நீர் மனம்  - K 9              
 ● அமைவிடம் : K 3- ல்  இருந்து 5 சுன்  மேலே . ( K 7-ல்  இருந்து  3 சுன்  மேலே.) 
 ■ பயன் விளக்கம் : நீர் தன்  ஓட்டத்தில் நுரை தொட்டு, 'ஐ ' தமிழ்ப் புள்ளி  மனத்தை 
 (பெரி கார்டியம் ) K 9 -ல்  தொடுகிறது. இது தேங்கினால், ---
  ---மனக் கோளாறு, மாதவிடாய்க் கோளாறு , கால் வலி உண்டாகும்.
♥ நடை முறை விளக்கம் : காலின் உட்புறப் பகுதியில்  மேலே ஏற்றி  எண்ணெய் தேய்த்தல் ,
 அமுக்கி விடல் , கல், மண், நீரக ஓட்டப் புள்ளிகளைத் தூண்டி நன்மை செய்யும் .
 காலின் வலி, பிற கோளாறுகள் நீங்கும். 
⊙ புதுமை விளக்கம் : மரபு வழியின் மேல் - மனச் செயல்பாடு.
 (மரபுக் கோளாறுகள் நீங்குகின்றன என்பது ஆய்வு முடிவு.) 
 பாடல் : நீர் மண்        ஐஞ் சுன்னில் 
                      நீர் மனம்        இருக்குமே 
           சீர் செயும்         மாத விடாய் 
                     சீராக்கும்   மன நிலை.......................280.
55/60 - நீர் வலு  - K 10         
 ● அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம்.
 ■ பயன் விளக்கம் : நீரின் தன்  வலுப் புள்ளி - K 10 - தேங்கினால்,---
       --(1) சிறுநீரக ஆற்றல் கெடும்.
        (2) தலை முடி உதிரும் ( K 10 + Lu 5 தீர்வு )
       (3) பாத எரிச்சல் ( பாத ஓட்டம் தடை படுவதால் )
      (4) ஆண்மைக் குறைவு ( K 10 + Liv 8 தீர்வு )      ஏற்படும் .
 ♥ நடைமுறை விளக்கம் : முழங்கால் மடக்கும் வேலை இன்றேல் , நீர் வலு  வேலை செய்யாது.  நோய்தான்  மடக்கிப் போடும். சம்மணம்   இடு . ஆண்மை பெறு . 
 ⊙ புதுமை விளக்கம் : ஒவ்வொரு தன்வலுப் புள்ளியும் தூண்டப் படும் போது  ( அமுக்கல் ,
 ஊசி, அசைதல் ) பிரபஞ்ச ஆற்றல் பெறுகின்றன. அளவற்ற  கட்டித் தங்கம் வெட்டி எடு.
 பாடல் : முழங்கால்    மடிப்போரம் 
                          முத்தான      நீர் வலுவாம் 
               முடி உதிரல்    தடுக்கும் 
                            முழு ஆண்மை     கொடுக்கும்..............284.
  மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..