Sunday, 28 December 2014

 தொடர்ச்சி  2 -தமிழ் உயிர் எழுத்துக்கள் பொருந்தக் கூடிய அக்கு பங்சர் புள்ளிகள் 

 'எ '  Lu 8 - நுரை வலு 

குறிப்பு : மணிக்கட்டு வெளி ஓரம் நுரை மண்  Lu 9 உள்ளது.
 Lu 8: நுரை மண்         மேலே 
                    ஒருசுன்   தொலைவில் 
           நுரைவலு       இருக்கும் 
                      நுரையீரல்    காக்கும்..........52 (ஏழு ஓட்டங்கள் ) 
 நுரையீரல், பெருங்குடல்,  சார்ந்த  அனைத்து  நோய்களும் தீரும்.

'ஏ ' L I 1 - குடல் வலு 

 L I 1: சுட்டும் விரல்      வெளி நகத்து க் 
                     கீழ் முனையில்       குடல் வலுவாம் 
           பட்டு விடும்        வயிற்றோட்டம் 
                      பாங்காய்    மயக்கமும் ............60 (ஏழு ஓட்டங்கள் ) 

'ஒ ' K 10 - நீர் வலு 

K 10 : முழங்கால்    மடிப்போரம் 
                       முத்தான      நீர் வலுவாம் 
           முடி உதிரல்       தடுக்கும் 
                       முழு ஆண்மை       கொடுக்கும்...........286 (ஏழு ஓட்டங்கள் ) 
சிறு நீரகம் , சிறுநீர்ப் பை, காது சார்ந்த நோய்கள் தீர்வு , கழுத்து முதல் முதுகு 
தொடை, கால் பாதம் வரை உள்ள வலிகள் தீர்வு , பய உணர்வு தீர்வு  இப்புள்ளியில் 
 கிடைக்கும். (சம்மணம்  இடு ) 

'ஓ ' UB 66 - நீர்ப்பை வலு 

UB 66: சுண்டு விரல்     கால் எலும்பில் 
                    ஒண்டு ஓரம்        நீர்ப்பை வலு 
             மண்டி விடும்       பாத வலி 
                     சர்க்கரை       தீர்க்கும் ...........292 (ஏழு ஓட்டங்கள் )
 சிறுநீரகத் திற்கும் , உடல் மன உயிர் இணைப்பிற்கும்  முதன்மையான புள்ளி ஓ .
     ஓ > ஒ 

'ஐ ' P 4 - மன வலு - தவப் புள்ளி 

குறிப்பு : மன மண் P 7 என்பது மணிக்கட்டு மையம்.
P 4: மன மண்      தொடங்கி 
               ஐஞ் சுன்      தொலைவில் 
          மன வலு        இருக்கும் 
                மனித நாள்    கூட்டும்...........104 (ஏழு ஓட்டங்கள் )
மனம் சார்ந்த அனைத்து  நோய்களுக்கும் தீர்வு.

'^ஒள ' நாபி 

இது கூட்டொலி . தனி ஓட்டம் என்றால் முண்டத்தில்  உள்ள Du - Ren சுழற்சி கூறலாம்.
நாபியில் வகர மெய் உள்ளது. ^ஒள  அதிர்வும் அங்கேதான்.
 இப்புள்ளியை நடு விரலால்  லேசாகத் தொட்டு இடம் வலமாக மூன்று முறை சுற்றலாம்.
பிற குறிப்புகள் : ஆயுத எழுத்து  என்பது காற்றொலிகள் சேர்க்கப் பயன் படுவது.
'ம் ' எனும் மெய் ஒலி  மூலாதார் அதிர்வு.

முடிவுரை 

தமிழ் உச்சரியுங்கள். அது உடல் தொட்டு அதிரும். உயிர் தந்து அதிரும்.
தமிழ் உயிர் எழுத்துக்கள் வலுவாக அதிரும் புள்ளிகளைக் கண்டோம்.இவற்றை தொட்டோ, தூண்டியோ பயன் பெறுங்கள்.
2015 - புத்தாண்டு வாழ்த்துக்கள்.அன்புடன், ஆ. மதி  யழகன்..

No comments:

Post a Comment