Thursday, 4 December 2014

 நோய் மற்றும் தீர்வு  - 11. கழுத்து வலி 12. கை வலி  
   11. Kazhuthu vali  - கழுத்து வலி 
 தீர்வுப் புள்ளிகள் : Tw 3, GB 20, DU 14 
 (1) Tw 3 - மூவெப்ப கல் - மோதிர விரலும், நான்காவது விரல் எலும்பும்  (கைப் பகுதி ) சேரும் 
 மூட்டின்  பின்புறம் (மோதிர விரலின் சுண்டு விரல் பக்கமாக ) 
   அக்கு பிரசர்  நாள்தோறும்..அக்கு ஊசி ஒருமுறை.  தேவையானால்  அடுத்த ஏழு நாளில்.
             கழுத்து வலியோடு, திடீர்த் தலை வலியும்  சரி செய்யும்.
        பார்க்க வரிசை எண்  18/60 
 (2) GB 20 - பித்தநீர்ப் பை ஓட் 20 - தலையின் பின்பக்க எலும்பின் கீழ் முடிக் கோட்டிற்கு சற்று 
 மேலே துருத்திக் கொண்டிருக்கும் எலும்பிற்குக் கீழே அமைந்துள்ளது . (இருபுறமும் )
      தலையை சாய்க்கும் போது இரு எலும்புகளையும் உணரலாம்.
அக்கு பிரசர் : தானோ, இன்னொருவரோ தலையைத் தாங்கியவாறு இரண்டு கட்டை விரலாலும் 
 60 முறை அழுத்தம் தரலாம் .
    பிறகு கட்டை விரலை முடிக்கோட்டில்  இருந்து அழுத்தியவாறு ஆறு விரற்கிடை  இணையாக மேலே (இரண்டு கட்டை விரல் ) தூக்கிக் கொண்டு சென்று காதோரம் பாதி 
 தொலைவு  வளைத்து விடவும்.
   பயன் : பின்பக்க (புறடி ) த் தலை வலியும்  போகும்; கழுத்துப் பிடிப்பு நீங்கும்.
   கழுத்து தேய்மானம் போகும் ; மன நலக் கோளாறும்  தீரும்.
 (3) DU 14 - Or Gv 14 - ஆளுமை ஒட் 14 - தலையை முன்புறம் குனியும்போது முதுகுக் கோட்டில் ஓர் எலும்பு துருத்திக் கொண்டு இருக்கும் . அந்த எலும்பை ஒட்டி கீழே உள்ள 
 பள்ளம். இறங்கு ஓட்டங்களின் தலைமை இடம். மற்றவர் பார்வைத் தாக்குதலை முதுகில் 
 உணரும் இடம்.
    நடு விரலால் ( 2, 4 விரல்கள் சேர்த்தவாறு ) நடுவிரல் பட அக்கு பிரசர்  பயன்.
  கழுத்து வலி, கழுத்து பிடிப்பு நீங்கும்.
    12. கை வலி (மற்றும் முழங்கை வலி ) 
 தீர்வுப் புள்ளிகள் : P 5, H 4 -P 3, H 3  and L I 4 
 (1) P 5 - மன நுரை  - மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து  3 சுன்  (நான்கு விரல் 
 குறுக்கம் ) மேலே  - இது கை நரம்பு இயக்க முக்கியப் புள்ளி.
   அக்கு பிரசர், அக்கு ஊசி  பயன்  படுத்த உடனடியாக  வலி குறையும்.
   கை வலி  மற்றும் கைவாதம்  நீங்கும்..
    பார்க்க வரிசை எண் 14/60 
(2) H 4 - இதய நுரை  - H 7 லிருநது  1. 5 சுன்  மேலே.
      கை வலி முழுவதும் .
   பார்க்க வரிசை எண் 23/60, 24/60  
 முழங்கை வலிக்கு : P 3, H 3  
  P 3 - மன நீர் - முழங்கை இருதலைத் தசை நார் ஒட்டி முன் பள்ளம்.
            பார்க்க வரிசை எண் 15/60
 H 3 - இதய நீர் - முழங்கையை 90 பாகை மடக்கும் போது , முழங்கை மடிப்பு ரேகையின் 
 உட்புற ஓரக் கடைசியில் அமைந்து உள்ளது 
          பார்க்க வரிசை எண்  25/60 
 (5) LI 4- குடல் மனம் - கைக் கவுளி - இதை இடுப்புக்கு மேல் உள்ள எந்த ஒரு வலிக்கும் 
   பயன் ஆகும்.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

No comments:

Post a Comment