Wednesday, 31 December 2014

                                 நூல்  ஆசிரியர் உரை       
     ஆர்வம் :
                     அக்கு பங் சர்  எனும் சொல்லை 1975-1980-ல் கேட்டி ருக்கிறேன் . சீனப் படங்களில் 
சில காட்சிகள் வரும். துணுக்குகளிலும் ' காது குத்தல் , மூக்கு குத்தல் ' இவை எல்லாம்  அக்கு 
பங் சர் படி கண் பார்வைக்கு, கர்ப்பப் பைக்கு  என்றெல்லாம் படித்து , அதன் நுட்பம் அறிய ஆவல் 
கொண்டிருந்தேன் .
   கற்றல் நிலை :
                       என் வாழ்வில் அக்கு பங் சர் கற்கும் வாய்ப்பு , நான் குடவாசல் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் போது கிடைத்தது. சனி , ஞாயிறுகளில் குடந்தை சென்று திரு ஜி.
சத்திய மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்த அடிப்படை மற்றும் பட்டயப் படிப்பு அக்கு பங் சரில் 
படித்து , அட்டாமா வில் பதிவு (மாற்று முறை மருத்துவர்கள் சங்கம் ) செய்து கொண்டேன்.
பிறகு , M .D. ஆக்கும் படித்து, அக்கு பங் சரின் மற்ற பிரிவுகள் , வர்ம மருத்துவம் , காந்த 
மருத்துவம், விதை மருத்துவம், சுஜோக்  முறை என பல பிரிவுகள் கற்றுக் கொண்டேன்.
தமிழ்த் தொடர்பு :
                         தமிழகத்தின் சித்தர்கள் கண்ட வர்மக் கலை , சீனர்களால் செழுமை ஆக்கப் பட்டு ,
 உலகம் முழுக்கப் பரவி, மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டு, மாற்று மருத்துவத்தில் ஒன்று 
 என  வலம்  வருகிறது. தமிழகத்திற்கு  என்றே தனி வரலாறும் , வளர்ச்சியும் கண்டு, பல 
மருத்துவர்கள் , பல நூல்கள் , பல கோணங்களில் கருத்துக்கள்  என வெளியிடப் பட்டாலும் ,
தமிழ் மொழியின் தாக்கம் , தமிழ் முறைப் படுத்தல் , தமிழின் நுண்மை  குறைவாகவே இருந்தது.
 சொல்லாய்வு :
                தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்துப் பார்த்து , வேர்ச் சொல் கண்டு , பொருள் பார்த்த போதும் , உயிர், மெய், ஆய்தம்  ஒலி அமைப்பை  ஆராய்ந்த போதும் , ஒவ்வொரு எழுத்தும்  (வரி வடிவங்கள் ), வேர்ச் சொல்லும்  என்னை வியப்பின் உச்சிக்கே 
 அழைத்துச் சென்றன.
      எடுத்துக் காட்டுக்கள்: (1) மண்ணில் எடுத்து கல்லாக மாறுகிறது. கல் உடைந்து  மண் ஆக 
மாறுகிறது. மண்ணீரல் --> கல்லீரல். கல்லீரல் --> மண்ணீரல் 
                                          (2) மண்ணீரல் நீர்ச் சத்து , காற்றால் கலக்கப் பட்டு , நீர் வடிவாகும்  இடம்   நுரை + ஈரல் 
        (3) ஒவ்வொரு மூட்டிலும் தேங்கும், பயன் படுத்தப் பட்ட நீரின் பகுதியே , வலிக்கு க் 
 காரணம்.-சிறு நீர் -- அதை சேர்த்து வடிகட்டி, சத்து பிரிப்பது சிறுநீர் + அகம் .
 ( மாற்றுப் பெயர்  'நீர் ஈரல்' என வைத்தேன், வேர்ச் சொல் வேண்டி.)
  (4) தீ உறுப்பு இதயம், இதய உறை என இரண்டாக வருவதில், இதய உறை ' மனம் ' என்றபோது மலைத்தேன் . தமிழர்களிடம் இதயம் என்ற சொல்லாடல்  எண்ணங்களோடு தொடர்பு படுத்தி  பல காலமாகவே வழங்குகிறது.
     மேலும் தொடர்ச்சி.

No comments:

Post a Comment