Friday, 5 December 2014

  கட்டுரை - உடல்நலம் காக்க அறிய வேண்டிய உண்மைகள் . 
           [1]  கல்லீரல் எனும் இவ்வுயிர் அமைதல்   
              கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி - என்பது வழக்கு.
இது உடல் தோன்றும் நிலையிலும் உண்மை. கல்லீரல்  தான்  மண்ணீரல் தோன்றி இயங்கும் 
 முன் அமைக்கப் படுகிறது.
              குழந்தை வயிற்றில் உள்ளபோது, தாயின் உதிரம் நாபிக்கொடி வழியே உள்ளே வந்து 
 சிறுநீரகம் வழியே சுத்திகரிக்கப்பட்டு உடற் கட்டுமானம் நடைபெறும்.
              ஐந்தாவது மாதத்தில் 'கல் ' எனும் கல்லீரல் (உண்டியல் = சேமிப்பு = கல்லா ) உருவாகும். அப்போதுதான்  தாய்க்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
              சிசுவுக்கு சிறுநீரகம், கல்லீரல் , தீ ஈரல் (இதயம் + மனம் எனும் பெரி கார்டியம் ) உள்ளது.
 'மண் ' எனும் மண்ணீரல் , 'நுரை ' எனும் நுரையீரலும்  வெறும் பலூன் போன்ற பைகள்.
  நுரையீரல் தூண்டல் :
               ஆயா இவ்வுலகத்திற்கு வந்த புது உயிரைக் (குழந்தையை ) முதுகில் தட்ட , நுரையீரல் 
 தூண்டப் பட்டு , அழுகை இடும்.
 மண்ணீரல்  தூண்டல் : 
            தாயின் பால் வயிற்றில் இறங்கும்போது மண்ணீரல் வேலை செய்யும்.
   ஆக, மண்ணும், நுரையும் மண்ணில் வாழ, முன்னம் வந்த கல்லீரல் எனும் சேமிப்பு உண்டியல் 
 வளமாய் இருக்க வேண்டும்.
          சிறுநீரகம் - தொந்தரவு  இல்லை என்றால் 120 ஆண்டுகளுக்கு மேல் வரும். இது நிலையான  மின்கலம் (Permanent  battery  ) 
       கல்லீரல் - என்பது மின்னூட்ட மின்கலம் (Rechargable  Battery ) 
    இதயம் - நீடித்து உழைக்கும் .- மனம் வழித் தொல்லைகள் இன்றேல் , இடம் மாற்றி, உடல் 
 மாற்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம்.
   மண்ணீரல் - பராமரிப்பு  சத்துணவு 
  நுரையீரல்  - பராமரிப்பு  மூச்சு பயிற்சி.
  மண்ணும், நுரையுமே  நோயை முதலில் வெளிக் காட்டும்.
 [2] மன விளக்கம் :  பெரி கார்டியம் = மேல் மனம் 
                                 கல்லீரல் = அடிமனம் 
                               சிறுநீரகம் = ஆழ் மனம் 
  'மனம்' என்பது புத்தகங்களில் விளக்கப் படுவது இல்லை . மனம் என்பது கல்லீரல் முதல் 
 பெரி கார்டியம் வரை  இடைப் பட்ட பகுதி.- conscious mind 
 கல்லீரல் -  sub conscious mind , சிறுநீரகம் - super conscious mind 
     பூமி விளிம்பு தெரியும் ; பூமி சுற்றி உள்ள காற்று மண்டலம் தெரியாது.
    சூரிய விளிம்பு தெரியும் ; சூரியனை சுற்றி உள்ள அனல் பகுதி அத்தனையும் தெரியாது.
     அது போல - பெரி கார்டியம் சுற்றி உள்ள கதிர் வீச்சும் ( உடலுக்கு வெளியேயும் உணரலாம்)
  மனமே ! மனமே !- அக்கு பங்சர்  பாட வழி பெறப் பட்ட கருத்து - ஆசிரியர்  ஆ. மதி  யழகன்..
    தொடரும்.

No comments:

Post a Comment