Saturday, 30 January 2016

Tamil muraiyil acupuncture-2/ manak kaappu

2.6 மனக் காப்பு 

மனமும் சூழலும் :
    சூழ்நிலைக் கேற்ப வும் மனப் பாம்பு ஆடும். கெட்ட சூழல் தவிர். அல்லது மனம் அற்று  இரு. 
மனப் பாம்பு உண்ணும் உணவோடு, அதில் ஏற்றப் பட்ட உணர்வையும் சேர்த்து உண்ணும். உணவில் நல்ல உணர்வு சேர் ; கொடு ; பெறு .
கொடுப்பவர் :
       ஒருவர் உணவு சமைக்கும் போதும் , உணவிடும்போதும் அவர்தம் உணர்வும் , கையாளுகை 
மற்றும் சூழல் நெருக்கத்தாலும் உணவில் இறங்கும் . மனிதனைச் சுற்றி (1) மன உணர்வுகள் ஓர் ஆராவாகவும் (2) அதைச் சுற்றி உயிர்த் தன்மை அதைவிடப் பெரிய ஆராவாகவும் இருந்து சுற்றி உள்ள பொருள்களையும் , மனிதர்களையும் பாதிக்கின்றன. தீயவர் சூழல் தீமை தரும் எண்ணம் ஏற்றும். நல்லவர் சூழல் நன்மை தரும் எண்ணம் ஏற்றும்.
      நன்மை தீமையும் ஆகலாம்; தீமை நன்மையையும் ஆகலாம் எனில் நடுவு நிலை கொள்ளவும் தெரிவது ஒரு சிறந்த காப்பாகும். 
பெறுபவர் :
       நேசம் மிகுந்தவர்கள் சிறந்த ஊடகமாக இருந்து கொடுக்கப் படும் உணர்வை உள்ளே வாங்குகின்றனர். எனவே அன்பின் உணர்வு, நல்ல எண்ணம், இவை உள்ளத்திலிருந்து வருவோரிடம் மட்டும் பழக வேண்டும்; உணவும் உண்ண வேண்டும். நாமும் அந்த அன்பு , நல்லெண்ணத்தையே உள்ளத்தில் இருந்து வெளிப் படுத்த வேண்டும். 
    இந்த கொடுக்கல் வாங்கலில் நமது உடல்நலம், மற்றும் சுற்றி உள்ளவர் உடல்நலமும் சேர்ந்து காப்பாற்றப் படும். மன நலம் மேல் அடுக்கு ; உடல் நலம் கீழ் அடுக்கு. (உயிர் நலம் உயர் அடுக்கு )
குறிப்பு : மனம் அற்ற நிலையில் , ஐம்பூதம் மட்டுமே இயங்கும் . அந்தப் படம் அடுத்து வரும்.
உள்ளும், வெளியும் ஐம்பூதம் ஒன்றானால் , ஒத்திசைவில் உரைக்கவும் முடியாத அற்புதங்கள் நிகழும். மவுனமாய் இரு ; மேலும் நிகழும்.-தத்துவங்களின் சாரம் இதுவே .
----அன்புடன், ஆ. மதி யழகன். 

Tamil muraiyil acupuncture -2/ manap paambu

Add caption
மனம் பாம்பாக ஐம்பூதத்தில் .

மனம் பாம்பாக மாறி ஐம்பூதம் பாதிக்கும் கருத்துப் படம்.

மனதில்  தலையுடைய நாகம் , நுரை எனும் வாலசைவில்  இயங்குகிறது. நுரை பூதம் - பிரப்ச்ஞ்ச  மனம்  ஆட்டுவிப்பது.
பட விளக்கம் மேலும் :
      தனது எண்ணத்தினாலேயே உணவு உண்ணாது, செரிக்கவும் செய்யாது கொட்டும். மண் பூதத் தாக்குதல்  முதலில் நிகழும்.  இது கவலை.  பிறகு  இது துக்கமாக மாறி,  மீண்டும், மீண்டும் மனதில் (பெரி கார்டியம் )  கொத்திக் கொண்டு  இருக்கும். கவலைக்குரிய குணம் உடைய பூதம்  மண் (3) ; துக்கதுக்குரிய குணம் உடைய பூதம்  மூச்சு எடுக்கும் நுரை பூதம். 
தொடரும் 

Wednesday, 27 January 2016

Tamil muraiyil acupuncture -2 / pin ulla attai.

இடம் 

இந்தப் புத்தகத்தில்  
        அனைத்து நோய்களையும்  ஐந்து பூதத் தலைப்புகளில் அடக்கி விடும் அறிவுக்கு உட்பட்ட விளக்கம் .
         மனத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து பூத மன நோய்களை விளக்கம் செய்தல் .
          ஒவ்வொரு பூத (மனம் +உடல் ) பாதிப்புகளுக்கு ஏற்ப (1) வலு ஏற்றும்  இடங்கள் (2) ஊட்டம் தர வேண்டிய இடங்கள் (3) மருந்தாகும்  இடங்கள் (4) குறையாகும் இடங்கள் (5) நிறையாகும் இடங்கள் . விரிவான பட விளக்கங்களுடன் . சுற்றுக்களின் முற்று ஆராய்ச்சி .
           தமிழ் அக்கு பங் சரில் , மேலும் ஒரு புதிய அணுகு முறை , ஆய்வு . தமிழில் 3 d  பெயர்கள் 
மற்றும் காரணப் பெயர்கள் . எ . கா. Lu 11 - நுரை கல் - நுரை கட்டும் கல் - நுரை குறை - 
(ஆக்சிஜன் குறைவினால் வரும் ) தலைவலிக்கான புள்ளி. இது போல் 60 புள்ளிகள் பெயர்கள்.
           ஐம்பூத நோய்கள் விரிவடையும் பட விளக்கம் , சிற்ப வடிவில் - தீர்வுப் புள்ளிகளோடு .

வலம் 

ஆசான் . ஆ. மதி யழகன் 
தமிழ் முறையில் அக்கு பங் சர் எனும் இவரின் முதல் நூல் , முதல் பதிப்பு விரைவில் விற்றுத் 
தீர்ந்தது . இந்தத் தலைப்பில் பேசிய வெளியீட்டு உரை யூ டியூபில் 6000 -க்கு மேல் பார்வையாளர்கள் தாண்டி , இன்றும் நாள்தோறும் 35 பேருக்கு மேல் பார்வையிடுகிறார்கள்.
      மேலும் இவர், திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான் த . ச. தமிழனார் ஊக்கம் தந்த தமிழ்ப் படைப்பாளி மற்றும் பேச்சாளர் . அறிவியல், கணிதம் பயிற்றும்  ஆசிரியப் பயிற்சி பெற்ற 
ஸ்டேட் வங்கிக் காசாளர் (ஓய்வு ) . விஞ்ஞானச் சுடரில் ' அறுமுகி  [Cube ] , ஆய்வும், தீர்வும் ' 
என ஆய்வுக் கட்டுரை வடித்தவர் . திருக்குறளுக்கு ஒருவரிப் பொருள் கூறும் 'குறள் சாறு ' 
படைத்தவர். 

அட்டை முன் 

இது வரை  நீங்கள் அறியாத  மனம், உடல் மேலும் உயிர் குறித்த பேருண்மைகள் , தமிழால் தமிழில் , தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரப்படுகிறது. 
-------அட்டை முடிவு --------

Friday, 22 January 2016

Tamil muraiyil acupuncture -2/ mukavurai melum

நன்றியுரை :

               இந்நூல் சிறப்புற வெளிவரத் துணை புரிந்து , ஆக்கமும், ஊக்கமும் தந்து துணை நின்ற 
 மனைவி வளர்மதிக்கும், வரைகலைப்  படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளைய நிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர உதவி புரிந்த , மறைந்த திருவாரூர் த. ச . தமிழனார் அய்யா அவர்கட்கும், முதல் நூல் வெளியீட்டு உரையை சிறப்பாக்கிய இயற்றமிழ்ப் பயிற்றக நண்பர்களுக்கும் , நட்பில் ஊக்குவித்த குடவாசல், திருவாரூர், தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி நண்பர்களுக்கும் ,  நட்பில் 
உள்ள அக்கு மருத்துவர்களுக்கும் , திருவாரூர் தமிழ் இலக்கியக் கழகம், திருவாரூர் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றின் தமிழ் நண்பர்களுக்கும் , உளங்கனிந்த பாராட்டுக்களை அலை பேசியிலும் , முக நூலிலும் , நேரிலும் தெரிவித்துக் கொண்டு இருக்கின்ற நல்ல உள்ளங்களுக்கும் , நெஞ்சார்ந்த நன்றி.
             தமிழ்ப் பணியைத் தலைமேல் கொண்டுள்ள த. ச.  குற ளேந்தி க்கும் , புலவர் எண்கண் மணி, புரவலர். திரு மோகன்தாசு . த. இ . கழகம். அவர்கட்கும், தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் காகவும் , கண்ணகி வழிபாடு பெருகவும்  தன் வாழ்வையே அறப்பணியா கக் கொண்ட நண்பர் யாணன் அவர்கட்கும், வெளியீட்டுக்கு உதவிய " பிளாக் ஹோல் " நிறுவனத்தாருக்கும்  என் 
உளமார்ந்த நன்றி உரித் ததாகும் .
          அன்புடன்,
ஆசான், ஆ. மதி யழகன் .
------------தமிழ் வாழ்க --------

Tamil muraiyl acupuncture -2/ mukavurai-contd

(4) ஒன்று விட்டுத் தாண்டும் கட்டுப்பாடு சுற்று :

பூதங்களின் பணி , முக்கியமாக 'மனிதன் ' எனப்படும் கல்லீரல் பணி - பரபரப்பு மிகுந்து வேகமாகச் செயல்படத் தூண்டும்போது 'உயிர் ' ஓட்டம் தன் வேகத்தை இரட்டிப்பு செய்து , பூதங்களில் ஒன்று விட்டுத் தாண்டும் நிலை உருவாகிறது.
       இயல்பு : கல், தீ, மண், நுரை, நீர்.
  கல் - தீ விட்டு மண் தொடல் -> இரத்த அழுத்தம் 
மண் - நுரை விட்டு நீர் தொடல் -> மூட்டு வலி 
நீர் - கல் விட்டு தீ தொடல் -> தோல் அரிப்பு ....
        இங்கு உயிர் சுழற்சி வேகம்  '2X ' ஆகும் . இருமதி வேகம் . 
இத்தகைய நோய்கள் மனிதனின் பரபரப்பு தீரும் வரை "தீரா " நோய்கள். மீண்டும் வரும். வர வாய்ப்பு உண்டு என்பதுவே விளங்கிக் கொள்ள வேண்டும். 
(5) எதிர்க் கட்டுப்பாடு சுற்று : 
பூதங்களின் பணி , முக்கியமாக 'மனிதன் ' எனப் படும் கல்லீரல் பணி - உடலில் காலின் அதிக 
வேலை ( நீண்ட தூர நடை, நீண்ட நேர நடனம் ) காரணமாக அல்லது கல்லீரல் (=மனித அடி மனம் ) பாதிப்பு அடைந்திருந்தாலோ , விரைந்த குணம் வேண்டி , அதி விரைவாக '3 X ' வேகம் செல்லுகிறது. ( இது '-2X ' எனவும் பொருந்தும் என்பதால்  எதிர்க் கட்டுப்பாடு சுற்று எனக் கூறுவர் ) மெய்யாக இது மும்மதி - மூன்று மதி வேக இயக்கம்.
எ. கா. அதி விரைவில் ஓடும் கார் சக்கரம் , எதிர்த் திசையில் சுழல்வதாகத் தெரியும்.
இங்கு பின்னே உள்ள பூதம் இழுக்கப் படுவதால் 'கவரும் ' சுற்று ஆகிறது.
      கல் -தீ விட்டு , மண் விட்டு, நுரை தொடல் - பாத வலி 
      நுரை -நீர் விட்டு , கல் விட்டு, தீ தொடல் -வறட்டு இருமல் 
      தீ - மண் விட்டு , நுரை விட்டு, நீர் தொடல் - மாரடைப்பு 
     நீர் -கல் விட்டு, தீ விட்டு, மண் தொடல் - குதி கால் வலி 
இங்கு உயிர் சுழற்சி வேகம் மூன்று மதி என்பதால் , அறிகுறிகளில் செய்யும் தீர்வு தற்காலிகமே .
அதன் காரணமான நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல் 'பூதம்' வலுவாகும்  வரை நோய்  தீராது . 
எ. கா. குதிகால் வலிக்கு மூலம் 'நீர் பூதம்' . குதிகால் வலி மட்டும்  தீர்த்தால் , நீர் பூதம் தன் வலுவின்மையை வேறு  இடங்களில், வேறு வழிகளில் காட்டும். (1) நீர்க் கட்டிகள் (2) இடுப்பு வலி (3) கழுத்து வலி (4) மூட்டு வலி (5) மூட்டுத் தேய்மானம் ......
             எனவே, நோயுற்ற - வலிவு குன்றிய பூதங்களை அடையாளம் காணவும் , தீர்வு  காண 
 உதவுவதுமே   இந்நூல் முயற்சி . புள்ளிகள், மற்றும் அடிப்படை விளக்கத்திற்கு முதல் புத்தகம் உதவும்.
எச்சரிக்கை : இந்நூல் படிப்பதற்கு முன்னதாக நீங்கள் ஓர் உறுதி கொள்ள வேண்டும். நான்,  நீங்கள் எனும் சொற்களைப் பாராட்ட மட்டுமே பயன் படுத்த வேண்டும்,(  அதில் நோய் தோற்று உள்ளது ) மனிதர் குறை கூறாது, பூதங்களின் குறை மட்டுமே கூற வேண்டும். 
தொடரும்.

Tamil muraiyil acupuncture-2/-mukavurai

ஐம்பூத நோய் விளக்கம் - நூல் ஆசிரியர் உரை 

என் ஆர்வம் :
        அக்கு பங் சர் மருத்துவம் கற்பித்தல் எனும்போது , புள்ளியின் இட விளக்கம் , அப்புள்ளியின் மருத்துவப் பயன்கள் கூறப் படுகின்றன. அடுத்து , கையில் நாடி பார்த்து, பூதங்களின் கூடுதல், குறைவு கண்டு ஏற்ற இறக்கங்களைச் சரி செய்வதற்கு நான்கு சுற்றுக்களை அறிமுகம் செய்வர்.
கூடவே, கை நாடி பார்க்க காலை ஏழுமணிப் பொழுதே  உகந்தது என்பர். எளிய வழி காண ஆர்வம் கொண்டேன். நான்கு சுற்றுக்களின்  புதிர் அவிழ்ப்பே  இந்நூல் . ஏன் எனக் காரணம் கேட்பின் , துடிக்கும் ஒவ்வொரு அக்கு பங் சர் புள்ளியும் ஒவ்வொரு நாடியே  எனும்  நுண் கருத்தே.  அந் நாடியே , சுற்றையும் , பல  பேருண்மை களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. 
கேட்போர் ஆர்வம் :
          என்னுடைய முதல் புத்தகம் , ' தமிழ் முறையில் அக்கு பங் சர் ' வெளியான பிறகு (முதல் வெளியீடு - 2015) நிறைய அலை பேசி அழைப்புகள் வந்து பாராட்டியுள்ளனர் . புத்தகத்தின்  வெளியீட்டுரை  you tube : Tamil  muraiyil acupuncture  வெளி வந்து உலகம் முழுவதும் பலரும் பாராட்டி , நூல் கேட்டு வாங்கி உள்ளனர்.
         மனம் என்ற கருத்து பலரால் மேலும் மேலும் கேட்கப் பட்டது ; வரவேற்கப் பட்டது . மனம் பற்றி மேலும் கூற முடிவு செய்தேன். அக்கு பங் சர் படிக்க பலர் ஆர்வம் கொண்டு வழி கேட்டு வந்த மின் - அஞ்சல்கள் பல. 
நூல்  அடிப்படை :
          முதல் புத்தகத்தில் உடல் அக்கு பங் சர் புள்ளிகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று 
எழுதிக் கொண்டு இருந்தேன்.  ஆனால் பெரி கார்டியம் எனும் ஓட்டத்தை 'மனம்' என்று கூறாமல் விளக்க முடியாததை உணர்ந்தேன். அதே போல் இந்த புத்தகத்தில் மனப் புள்ளிகள் , நான்கு சுற்றில்  ஐம்பூதப் புள்ளிகள் (உடல் + மனம் சார்ந்தவை ) எனக் கூறவே புகுந்தேன். 
         எல்லாம்  எழுதி முடித்து விட்டு , எந்த சொல்லை விரிவாக அடுத்த புத்தகத்தில் விளக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது கடைசி அத்தியாயத்தில் ' பூதங்களின் சதுக்கச் சிற்பம் ' 
என்பதில் அந்த சொல் விளக்கம் அவசியம் ஆகி விட்டது. 
          ---------அது   - " உயிர் "
(1) ஒவ்வொரு பூதமும் தன்  வலுவில் அமைதியாக இருக்கின்றன. இப்போது உயிர் சுற்றும் வேகம் '0' -சுழி .
(2) அடுத்து ஒரு பூதம் தன் வலு மிகுந்து  ஒரு செயல் புரிவதற்காக அடுத்தடுத்து தாவி , வேலைமுடிக்கிறது .  அது  அ , ஆ, ....ஒ , ஓ  என ஐம்பூதச் சுற்று . இதன் வேகம் 'X ' என்போம் . 
தூண்டும் வலுவில் உயிர் சுழற்சி  வேகம் '  X  '  X = மதி  என்க 
(3) அடுத்து ஒரு பூதம் தன் வலுக் குறைய ,  வேலை செய்ய வேண்டித் தாய் பூதத்திடம் ' கேட்டுப் ' பெறுகிறது . இங்கு உயிர் சுழற்சி வேகம் ' -X ' எதிர் மதி  என்க . 
( அதாவது  ஓடாத சக்கரத்தை சற்றே பின்னுக்கு இழுத்து விடுவது போல. உண்மையில் அக்கு பங் சரில் இதுதான் மருந்து எனக் கூறப் பட வேண்டும். கேட்கும் வலிமை மந்திரம் ஆகும். ) 
தொடரும். 

Saturday, 16 January 2016

Tamil muraiyil acupuncture-2/10.0

10.0 ஐம்பூதம் காப்பாற்ற பத்துக் கட் டளைகள் .

           ஒவ்வொரு பூதமும் மனமாக முதலில் உள்ளது. பிறகு உடலாகக் கண்ணுக்குத் தெரிகிறது.
மனச் செல்வம் என்பது காணாக் காசு ( unseen money = virtual money held )
உடல் செல்வம் என்பது கைக் காசு ( cash Deposit in hand ) 
இனி பட்டியல் :
       பூதம்               முதன்மை           காணாக் காசு             கைக் காசு 
-0- சிறுநீரகம்         உயிர் முதல்       நம்பிக்கை வலு          நீர்த் தன்மை வலு 
-1- கல்லீரல்         மனிதன் முதல்     இரக்க வலு              ஓய்வு, உறக்க வலு 
-2- தீ ஈரல்            மனம் முதல்         மனத் தூய்மை  வலு         உடற்பயிற்சி வலு 
-3- மண்ணீரல்      உடல் முதல்         நல்லெண்ண வளர்ச்சி வலு    அறுசுவை, ஏழ் வண்ண உணவு வலு 
-4- நுரை ஈரல்     நலம் முதல்           மகிழ்ச்சி உணர்வு வலு     யோகப் பயிற்சி வலு 
           ஒவ்வொன்றிலும் பத்து மதிப்பெண் வைத்துக் கொண்டால் , விலை மதிப்பற்ற மனிதரே,
நீங்கள் 100 - க்கு எவ்வளவு ? அதுவே நலத்தின் அளவு. 

பாடல் :             காணாக் காசு - ஐம்பூத மனச் செல்வம் 

                நல்லதோர்     நம்பிக்கை 
                       நலமாக்கும்    சிறுநீரகம் 
                 வல்லதோர்      இரக்கம் 
                       வளமாக்கும்      கல்லீரல் 
                 கொள்ளும்        மனத் தூய்மை 
                       கொண்டாடும்     தீ பூதம் 
                  அள்ளும்          நல்லெண்ணம் 
                        அழகாக்கும்      மண் பூதம் 
                  துள்ளும்        மகிழ்வுதான் 
                              தூக்கிவிடும்      நுரை பூதம்  ............40
               கைக் காசு - ஐம்பூத மனச் செல்வம் 
               நீர்த் தன்மை        உணவாலே 
                    நெடு வாழ்வாம்         நீர் பூதம் 
              சீர் ஓய்வு          செவ்வுறக்கம் 
                   செழிப்பாக்கும்        கல் பூதம் 
               நேர் அசைவு     நிலைப் பயிற்சி 
                       நிமிர்த்தும்           தீ பூதம் 
               தேர் சுவையும்       தெளி வண்ணமும் 
                     தெம்பாக்கும்           மண் பூதம் 
                வேர் கொள்ளும்        யோகம்தான் 
                      விரிவாக்கும்      நுரை பூதம் ..................50
                                                 ஆசான் . ஆ. மதி  யழகன். 
ஆய்வும், எழுத்தும் :
ஆசான் .ஆ. மதி யழகன் . 
அறி. இ . , கல். இ . , அக்கு பட்டயம் , 
உயர்நிலை  அக்கு மருத்துவம் . 
Researched  & written    by 
A . MATHIYALAGAN . B . Sc; B.Ed,
Dip.in acu., M. D. (acu)
E mail - 6mathi@gmail.com
You tube : Tamil muraiyil acupuncture
Face book: Mathiyalagan Arumugam
        -------THE END----------

Tamil muraiyil acupuncture -2/9.0

9.0 நல வாழ்வு பெற ஐம்பூத சிற்பங்கள் .

ஒவ்வொரு பூதத்தின் அனைத்து சுற்றுகளையும் கருத்தில் கொண்டு , அதன் மைய விரிவு அமைப்பை  இங்கு சதுர வடிவில் அமைத்து உள்ளேன். வட்ட வடிவிலும் அமைக்கலாம்.
சதுர வடிவில் படிகளோடு அமைத்தால்  முப்பரிமாண சிற்பம். இங்கு கட்டங்கள் வடிவில் தரப் பட்டுள்ளது . அடிப்படை  இங்கு தரப் பட்டுள்ளது. 
அமைப்பு : 
        ஒவ்வொரு பூதத்தின் மையத்தை உடல் மற்றும் மனம் ஆகவே எடுத்துக் கொள்ளுதல் 
(1) முதல் சதுரத்தில் நான்கு பகுதியாகா ப்  பிரித்துக் கொண்டு ,
          இடம் மேல் -> உடல் தேவை ; இடம் கீழ் -> மனம் தேவை 
          வலம் மேல்  -> உடல் குழப்பம் ; வலம் கீழ் -> மனக் குழப்பம்  குறித்தல் 
(2) எப்பொழுதும் இடம் + , அறிவின் ஆட்சி ; வலம் - , உணர்வின் ஆட்சி 
(3) அடுத்த சதுரத்தில் உயிர் வலு 
                             +            -
                     யின் புள்ளி        நோய்கள் 
                     யாங் புள்ளி         நோய்கள் 
(4) அடுத்த சதுரத்தில்  -3-வது - தூண்டும் வலு - பூதத்தின் ஊட்ட வலு 
(5) -4- வது சதுரத்தில் - கேட்கும் வலு - பூதத்தின் மருந்து வலு 
(6) -5 -வது சதுரத்தில் - கட்டுப்பாட்டு நிலை - குறை நிலை - தீரா வகை 
(7) -6 -வது  சதுரத்தில் - கவரும் நிலை - அதி வேக நிலை - நிறை நிலை - மீட்சி நிலை .
         இந்த வகையில் 5 பூத சிற்பங்கள் - படங்கள் காண்க. 
9.1- கல்லீரல் சதுக்கச் சிற்பம் 
9.2 - தீ ஈரல்  சதுக்கச் சிற்பம் 
9.3 - மண்ணீரல் சதுக்கச் சிற்பம் 
9.4 -நுரையீரல்  சதுக்கச் சிற்பம் 
9.5 - நீர் ஈரல்   சதுக்கச் சிற்பம் 
         புள்ளிகளைத் தொட்டுப் பார்த்தும் , வலியறிந்து தூண்டியும், நோயில் இருந்து மீளுங்கள் . 
நோய் மீண்டும் வராது இருக்க படி நிலை அறிந்து நடவடிக்கை எடுங்கள்.

எந்த ஒரு புள்ளிகளுக்கான நடைமுறை விளக்கங்களையும் அறிய முதல் புத்தகம் ' தமிழ் முறையில் அக்கு பங் சர் ' கண்டு பின்பற்றவும்.

இப்பொழுது, நீங்களும் ஒரு மருத்துவர்தானே ? 
தொடரும் .

Friday, 15 January 2016

Tamil muraiyil acupuncture -2/8.4

8.4 ஐம்பூதத்தில் ஆங்கில உயிர் எழத்துக்கள் . 

                எல்லா மொழிகளுக்கும் அகரம் முதல். தமிழில் இருந்தே அனைத்து மொழிகளும் உருவாகின. இங்கிருந்தே மானுடம் உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. இடத்துக்குத் தக்கபடிதேவைக்கும்  தக்கபடி மொழி மாற்றம் பெற்றது. 
                வெப்ப நாட்டில் வாழும் நமக்கு இறுதி பூதம் சிறு நீரகத்தில் முடியும். மருந்துகள் குளிர்ச்சியில் முடியும். 
                 கல், தீ, மண், நுரை, நீர் ...
      அதாவது , அ  , ஆ, இ,...ஓ முடிவு.
         இது ஆக்க சுற்று. மருந்துகள் குளிர்ச்சி தரும். 
                      குளிர் நாட்டில் வாழும் அயல் நாட்டார் , கவரும் சுற்றில் உயிர் சுற்றை அமைத்துக் கொண்டு உள்ளனர் . இது அதி விரைவானது.
                கல், நுரை, தீ, நீர், மண் ....
   அதாவது  A , E , I , O , U ..
எ. கா . அம்மா, எலிபென்ட் , ஐடியா (இன்சைட் ), ஒலிம்பிக், உலகம் 
 இங்கு உயிர் சுற்று கல்லில் தொடங்கி , மண்ணில் முடிகிறது. இளஞ் சூடான உணவு செரிப்பதற்கான வயிற்றின் மித வெப்பம். அதனால்தான் ' warm welcome ' என்கிறார்கள். 
மருத்துவ செய்தி : 
             மேல் நாட்டு  மருத்துவ ஆய்வுகள் குளிர் நாட்டவருக்கேப்  பொருந்துவன. எல்லா மருந்துகளும் வயிற்றில் ஒரு வெப்பத்தை ஏற்படுத்துகின்றன . அதிக   மருந்து  அல்சர் தரும். 
எனவே, அதிக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் , சாத்துக்குடி குளிர்ச்சிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துகள்   சிக்கல்    இல்லாதவை .
தொடரும்.

Tamil muraiyil acupuncture -2/8.3

8.3 சக்கரங்களில் ஐம்பூதம் 

உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதை அறிவீர்கள். அவற்றில் தலையில் உள்ள இரண்டு சக்கரங்கள் உயிருக்கு வழியும், ஒளியும் ஆனவை.
        தலை உச்சிப் புள்ளி மையம் உடைய வட்டம் - சகஸ்ரராம் - உயிர் வழி சக்கரம் 
        புருவ மத்தி - நெற்றிக் கண் -  ஆக்ஞை - உயிர் ஒளி சக்கரம் 
மீதி உள்ள ஐந்து சக்கரங்கள் ஐந்து பூதங்கள் பண்பு உடையவை . 
         தொண்டைப் பகுதியில் உள்ள விசுக்தி - உயிர்க் கல் சக்கரம் ( அடிமன இயலாமை,
தன்னம்பிக்கை குறைவு, தைராய்டு சிக்கல்கள் )
          மார்க் காம்புக் கோட்டு மையத்தில் உள்ள அனாகதம் - உயிர் நுரை சக்கரம் ( துக்க நோய்,
சூழல் பாதிப்பு )
          நாபியில் உள்ள மணிப் பூரகம் - உயிர்த் தீ சக்கரம் ( மேல் மனக் குறைபாடு வயிறைப் 
பாதிக்கும் . 
          மர்மக் குறி சற்று மேல் உள்ள புள்ளியிடம் -சுவாதிட்டானம் - உயிர் நீர் சக்கரம் ( பாலியக்கக் குறைபாடுகள் , ஆண்மைக் குறைவு ) 
         மர்மக் குறி சற்றுக் கீழ், ஆசன வாய் மேலாக உள்ள மூலாதார் - உயிர் மண் சக்கரம் 
( நுண் மனக் குறைபாடுகள் , பெண்மை சார்ந்த நோய்கள் , கருப்பை குறைபாடுகள் )
எதிர்க் கட்டுப்பாடு சுற்று :
    மேலிருந்து கீழாக சக்கரங்களின் பூதங்கள் ஆவன ,
      கல், நுரை, தீ, நீர், மண்  அதாவது 
      1, 4, 2, 5, 3, 1 ....எதிர்க் கட்டுப்பாடு சுற்று அல்லது கவரும் சுற்று 
  மீண்டும், மீண்டும் வரும் மீட்சி சுற்று.
கவரும் சுற்று இரண்டு, இரண்டாகத் தாண்டி மூன்றாவதில் உள்ள நான்காம் நிலையைத் 
தொடுகிறது எனவும் கூறலாம். கட்டுப்பாடு சுற்று ஒன்று விட்டுத் தாண்டுகிறது. விரைவு சுற்று என்கிறோம். எதிர்க் கட்டுப்பாடு சுற்றில் இரண்டு விட்டுத் தாண்டுவதால் அதி விரைவு அல்லது 
இருமை வேகச் சுற்று எனலாம்.
     மகிழுந்து விரைவாக ஓடும்போது , சக்கரம் பின்னோக்கி ஓடுவது போல் தோன்றுவதை ஒப்பிடலாம். 
  எனவே, கல், நுரை, தீ, நீர், மண்  என்ற அமைப்பில் REN ஓட்டத்தில் கல் நோக்கி இழுக்கப் படுவதால் , கழுத்தில் உள்ள உருத்திராட்சம், மணி  ( நீலம் ) , அனைத்து சக்கரங்களையும்  நன்கு  இயக்கும் . விரைவுச் சுற்று அல்லவா ? 
கழுத்து அணிகள் அனைத்தும் ஐம்பூத அணிகள். மாலையும் அதுவே.
தொடரும்.

Tamil muraiyil acupuncture -2/8.1

8.1 ஐந்து பூதத்தில் எது முதல் ?

உயிர் ஓட்டம் கல், தீ, மண், நுரை, நீர் என உயிரின் ஒலி அதிர்வுகளில் 12 உறுப்புகளின் வாயிலாக சுற்றிக் கொண்டு உள்ளது. எல்லா உறுப்புகளும் முதன்மை சிறப்பு உடையவை , எதற்கு எது முதல் என இனி பார்ப்போம்.
     -0- அல்லது -5-  நீர் பூதம் - kidney - உயிர் முதல் . 
    -1- கல் பூதம் (ஆகாயம் ) - Liver  - மனிதன் முதல் . 
   -2 - தீ பூதம் ( இதயம் + மனம் ) - மனம் முதல் ( மனமே  இதயத்தை தூண்டுகிறது ) P 
 -3- மண் பூதம் - Spleen - உடல் முதல் 
 -4 - நுரை பூதம் - காற்று - Lungs - நலம் முதல் ( First in health point of view )
பாடல் :
             உயிர் முதல்    ஒன்று  தேடினேன் 
                     உடலில் அது நீர் ஈரல் 
            உடலில் மனித  முதல் தேடினேன் 
                    ஓங்கி    நின்றது  கல்லீரல் 
             மன முதல் எதுவெனக் கேட்டேன் 
                     மருட்டி நின்றது தீ ஈரல் 
             உடல் முதல்  எதுவெனக் கேட்டேன் 
                      உண்ணக் கேட்டது மண் ஈரல் 
             நலம் முதல்    எதுவெனக் கேட்டேன் 
                      நன்றாய் விரிந்தது நுரை ஈரல்  .............30
8.2  சூழ்நிலையும்  ஐந்து பூதங்களும் 
     மனித உடலுக்கு நோய் என்பது முதலில் சூழலில் கருக் கொண்டு , பூதங்களில் அறிகுறிகள் காட்டி ஒரு பூதத்தை வலுவாகத் தாக்கும் போதுதான் அறிகிறோம். வேரைக் கண்டு  பிடித்து நீக்கினால்தான்  நோய் முற்றும் தீரும். சூழ்நிலைத் தாக்கம் காண்போம். 
    படிக வளர்ச்சி : சிறு வயதில் தாமிர சல்பேட்டு படிகத்தை கயிற்றில் கட்டி , தாமிர சல்பேட்டு  
கரைசல் உள்ள பாத்திரத்தில் வைத்தால் , சில நாட்களில் வளரும் எனப் படித்து வியந்து இருக்கிறோம் . படிகத்தின் மேல் நுண் துகள்கள் படிந்து பின்னிக் கொண்டு வளர்கின்றன.
          மனிதனும் அது போல்  சூழலில் வாங்குகிறான், வளர்கிறான். சூழலில்  இழக்கிறான் , அதனால் தேய்கிறான். வாங்குவது என்ன ? இழப்பது என்ன ?  தூண்டப் படும் காந்த சக்தி பொருத்து  ஈர்த்தல் மற்றும் இழத்தல் ஆகும். 
கல் பூத பாதிப்பு : உங்களைச் சுற்றி உள்ள மனிதர்களின் குணங்கள் , உங்கள் அடிமன எண்ணங்கள், வாழ்க்கை  இவற்றை பாதிக்கின்றன . கல்லில் விளைச்சல் (+ அல்லது -)
தீ பாதிப்பு : புத்தகம், நண்பர்கள், திரைக் காட்சி, ... தூண்டப் படும்  விருப்பங்கள் மனம் பாதிக்கின்றன.
மண் பாதிப்பு : மேல் கண்ட பாதிப்புகளோடு , உணவின் தரம், உண்ணும் முறை, உண்ணும் காலம் 
  போன்ற செயல்களும் 
நுரை பாதிப்பு : சுற்றி உள்ள காற்றும், மன  நிலையும் 
நீர் பாதிப்பு : மேல் கண்ட பாதிப்புகளோடு , வாழ்வு  அச்சம் , நம்பிக்கை அற்ற தன்மை, அதிகப் படியான  சிறுநீரகத்  தூண்டல்கள் .  
 தொடரும்.

Sunday, 10 January 2016

Tamil muraiyil acupuncture -2/8.0 contd

8.4 நுரை பாதுகாத்தல் 
சுற்று நிலை -------------நடை முறை  ------------------------தூண்டும் புள்ளிகள் .
படி -1- கவரும் சுற்று - உள்ளங்கை அழுந்தும் பணிகள் --நுரை நிறை Lu 10
படி -2- தன் வலு - கை காப்பு - கம்பு சுற்றல் போன்ற பணிகள் - Lu 8
படி -3 -தூண்டும் வலு - மிதி வண்டி மிதித்தல் - நுரை ஊட்டம் Sp 5
படி -4 -மருந்து பெற கேட்கும் வலு - கை காப்பு - விசிறிப் புள்ளி - Lu 9
 ---------------இன்றேல் -----------
படி -5 - கட்டும் சுற்று - மயக்கம், குழப்ப மன நிலை, தலை வலி 
தற்காலிகத் தீர்வு : கல் குறை Lu 11
நிரந்தரத் தீர்வு : மேற்படிகள் ( ஊற்று இங்கு விசிறிப் புள்ளி தான் )
8.5 சிறு நீரகம் பாதுகாத்தல் 
சுற்று நிலை ----------------நடைமுறை ---------------------தூண்டும் புள்ளிகள் 
படி -1 -கவரும் சுற்று - குதிகால் அழுந்த சம்மணம் -  நீர் நிறை K 3 ( குதிகால் வலி )
படி -2 - தன் வலு பெற - சம்மணம் -  உயிர் ஒ K 10, உயிர் ஓ UB 66
படி -3 - தூண்டும் வலு - கை மடங்கும் பணிகள் - நீர் ஊட்டம் Lu 5
படி -4 - மருந்து பெற கேட்கும் வலு - சம்மணம் -- நீர் மருந்து K 7
 -------------------இன்றேல் ---------------
படி -5 -கட்டும் சுற்று - தோல் அரிப்பு , பாத வலி - சிறு நீரக நோய்கள் 
தற்காலிகத் தீர்வு : நீர்க் குறை K 2
நிரந்தரத் தீர்வு : மேற்படிகள் (+ ஊற்றுப் புள்ளி  K 3 யும் சம்மணம் )
ஐம்பூதக் காப்பு : 
  சம்மணம் இட்டு அமர்க . நான்கு பூதங்கள் கல், தீ, மண், நீர் காக்கப் படும். கையில் விசிறி கொண்டு வீச நுரையும் காக்கப் படும். 
தொடரும் . 

Tamil muraiyil acupuncture -2/ 8.0

8.0 நடை முறையில் ஐம்பூதக் காப்பு 

சென்ற புத்தகத்தில்  புள்ளிவாரியாக நடைமுறை விளக்கம் பார்த்தோம். இங்கு பூதம்வாரியாகப் 
பார்ப்போம். 
8.1 - கல்லீரல் காப்பு 
சுற்று நிலை  -------------நடைமுறை   ---------------------------தூண்டப் படும் புள்ளி.
படி -1-கவரும் சுற்று -     காலில் பெண்கள் கொலுசு, ஆண்கள் காப்பு ----கல் நிறை Liv 4
படி -2 - தன் வலு  - கால் கட்டை விரல் அழுந்த நடை -           உயிர் அ  Liv 1
படி - 3 - ஊட்டம் பெற தூண்டல் சுற்று - கால் மையம் அழுந்த நடை - கல் ஊட்டம் K 1
படி  -4 - மருந்து பெற கேட்கும் சுற்று  - முழங்கால் மடக்கி சம்மணம் - கல் மருந்து Liv 8 
        ------------இன்றேல் -----------
படி -5 - கட்டும் சுற்று  ----பரபரப்பு ---கல் குறை Liv 3 ( இதுவே ஊற்றுப் புள்ளியும் கூட 
- ஊற்றுப் புள்ளி தானாகவே இயங்கும். )- இது இரத்த அழுத்த  நோய் ஆகும்.
தீர்வு : மேல் படிகளைப் பின்பற்றத் தானேப் படிப்படியாகத் தீரும். அல்லது சோதனை செய்து அவ்வப்போது அக்கு பங் சர் , அக்கு பிரசர் , தொடு சிகிச்சை .
8.2 - இதயம் + மனம் காப்பு 
சுற்று நிலை  ----------------- நடைமுறை  --------------------------தூண்டப் படும் புள்ளி . 
படி -1 -கவரும் சுற்று - முழங்கை மடிப்பு  வேலை-------மனம் நிறை P 3, இதயம் நிறை H 3 
படி -2 - தன் வலு  - Thumps up பணிகள் -     உயிர் இ - P 8, H 8 
படி - 3 - ஊட்டம் பெற தூண்டல் சுற்று - கால் கவுளி காலணி , சம்மணம் -தீ ஊட்டம் Liv 2
படி -4 - மருந்து பெற கேட்கும் சுற்று  - விரல் முனைகள் தூண்டல் - மனமருந்து P 9 , இதய மருந்து H 9                ---------இன்றேல் --------
படி -5 - கட்டும் சுற்று - மன, இதயப் பணி அதிகம் என கை வலி, காய்ச்சல் காட்டும் .
தற்காலிகத் தீர்வு : கை வலி  காய்ச்சல் - P 5, H 4, Tw 1
நிரந்தரத் தீர்வு : மேற்படிகள் + ஊற்றுப் புள்ளிகள் P 7, H 7
8.3 - மண்ணீரல் காப்பு ( கணையம், இரைப்பை உட்பட )
சுற்று நிலை  ----------------நடை முறை -------------------தூண்டப் படும் புள்ளிகள் 
படி -1 -கவரும் சுற்று - கால் கட்டை விரல் பதிய நடை  --மண் நிறை Sp 1
படி -2 - தன் வலு - சம்மணம்  -------மண் வலு - உயிர் உ  Sp 3, உயிர் ஊ , St 36 
படி  -3 - தூண்டல் சுற்று -------மணிக்கட்டு அசையும் பணிகள் ----மண் ஊட்டம் P 7, H 7
படி -4 - மருந்து பெற கேட்கும் சுற்று  ---கால் எக்குதல்  --மண் மருந்து Sp 2 (சர்க்கரை ),St  36 
    -----------இன்றேல் ----------------
படி -5 - கட்டும் சுற்றில் - கால் மூட்டு வலி 
தற்காலிகத் தீர்வு : Sp 9, St 44 ( மண் குறை,  இரைப்பை  குறை )  
நிரந்தரத் தீர்வு :  மேற்படிகள் 
 தொடரும்.

Saturday, 9 January 2016

Tamil muraiyil acupuncture -2/7.3 other mind points

7.3 பிற மனம் வெட்டும் புள்ளிகள் 

ஒவ்வொரு மூலகமும் தன் ஏறு ஓட்டத்தில் கல், தீ, மண், நுரை எனத் தாண்டி நீரை அடைகின்றன . அப்போது நுரைக்கும், நீருக்கும் இடையில் திரும்பவும் பெரி கார்டியம் எனும் மனத்தைச் சந்திக்கின்றன. கீழே காண்க :
ஓட்டம் ------கல் ----தீ -----மண் -----நுரை ------------------------நீர் 
கல்           Liv 1         Liv 2        Liv 3         Liv 4       Liv 5, Liv 6, Liv 7-----Liv 8
         (இங்கு Liv 5- ஈர் இணைப்பு -Luo connecting ; Liv 6- தீவிரம் தவிர்ப்பு -xicleft )
தீ            P 9           P 8          P 7     P 6            P 5          P 4 --------------------P 3
        (இங்கு P 6- மன உடல் அமைதி - உறக்கப் புள்ளி ; P 4 -மன சிறப்பு வலு )
தீ           H 9          H 8          H 7  H 6, H 5,        H 4 ---இல் -------------------H 3 
      (இங்கு H 6- ஈர் இணைப்பு - H 5 - தீவிரம் தவிர்ப்பு (திக்கு வாய்ப்புள்ளி ) 
மண்         Sp 1     Sp 2       Sp 3    Sp 4       Sp 5    Sp 6, Sp 7, Sp 8 -----------Sp 9 
      (இங்கு Sp 4- ஈர் இணைப்பு , Sp 6- பெண் மனம் - மூவிணைப்பு , Sp 8-தீவிரம் தவிர்ப்பு )
நுரை        Lu 11    Lu 10   Lu 9              Lu 8           Lu 7, Lu 6 ------------------Lu 5 
      (இங்கு Lu 7- ஈர்  இணைப்பு - குடி, போதை , வாதம் நீக்கம் , Lu 6 - தீவிரம் தவிர்ப்பு ) 
நீர்         K 1         K 2         K 3 K 4, K 5, K 6           K 7      K 8, K 9 --------------K 10 
     (இங்கு K 4- ஈர் இணைப்பு - மன உடல் அமைதித் தீர்வு , K 5- தீவிரம் தவிர்ப்பு ,
        K 9 - நீர் மனம் - மரபு நோய் நீக்கம் )
குறிப்பு : ஈர் இணைப்பு = யின் - யாங்  இணைப்புப் புள்ளி , xicleft = நோயின் தீவிரம் தவிர்ப்புப் புள்ளி . 
           ஒவ்வொரு மூலகமும் தன் இறங்கு ஓட்டத்தில் , நுரை, நீர், கல் என ஓடி தீக்கு முன் வருபவை ஊற்றுப் புள்ளிகள். தீக்கு  பின்  மண் நோக்கிச் செல்பவையும் மனப் புள்ளிகளே.
கீழே காண்க :
ஓட்டம் ----நுரை ----நீர் ----கல் ------------------தீ ------------------------மண் 
பி பை        GB 44       GB 43, GB 41      GB40 ---GB 38 --GB 37, GB 36 ------GB 34 
     (இங்கு GB 37- ஈர் இணைப்பு , GB  36 - தீவிரம் தவிர்ப்பு , GB 40- பி பை ஊற்று )
மூ வெ       Tw 1        Tw 2       Tw 3     Tw 4 -------Tw 6 ----Tw 7, Tw 8, Tw 9 - Tw 10 
   ( இங்கு Tw 7 - தீவிரம் தவிர்ப்பு -Tw 7, 8, 9, 10 - வாதம் தவிர்ப்பு , Tw 4- மூ வெ  ஊற்று )
சி கு            S I 1        S I 2       S I 3       S I 4               S I 5 --------S I 6, S I 7 ---------S I 8 
  (இங்கு  S I 6- தீவிரம் தவிர்ப்பு , S I 7 - ஈர் இணைப்பு , S I  4 - சி கு ஊற்று )
இரைப்பை  St 45   St 44     St 43      St 42, St 41          St 40                              St 36           St 34
   (St 42 -இரைப்பை ஊற்று , St 40 - இரைப்பை மனம் , St 34 - தீவிரம் தவிர்ப்பு )
குடல்         LI 1     LI 2           LI 3 ----- LI 4 ------         LI 5      LI 6       LI  7       ---------LI 11
 (இங்கு LI 4 - குடல் ஊற்று - குடல் மனம் , LI  6 - ஈர் இணைப்பு , LI  7 - தீவிரம் தவிர்ப்பு )
நீர்ப்பை       UB 67  UB 66       UB 65 ---UB 64 - UB 63, UB 62, UB 60 --------UB 58 ---UB 40
  (இங்கு UB 64- நீர்ப்பை ஊற்று , UB 63 - தீவிரம் தவிர்ப்பு  UB 62 - நீர்ப்பை மனம், UB 58 - ஈர் இணைப்பு 
தேவையான மனப் புள்ளிகள் கூறப் பட்டுள்ளன. ஊற்றுப் புள்ளிகளைத் தவறாது பயன் படுத்துங்கள். பிற உங்கள் விருப்பம்.
தொடரும். 

Thursday, 7 January 2016

Tamil muraiyil acupuncture -2/7.2 yang source pic.

யாங் ஊற்றுப் புள்ளிகள் : 
LI 4- குடல் ஊற்று 

Tw 4- மூ வெ  ஊற்று ; S I 4 - சி கு ஊற்று 

UB 40 - பித்தப்பை ஊற்று 

St 42 -இரைப்பை ஊற்று 

UB 64 -நீர்ப்பை ஊற்று 
தொடரும்.

Tamil muraiyil acupuncture-2/7.2 source-yang

யாங் ஓட்டத்தில் ஊற்றுப் புள்ளிகள் 

எந்த ஒரு மூலகமும் , யாங் எனும் இறங்கும் நிலை ஓட்டத்தில், நுரை, நீர், கல் எனத் தாண்டி 
தீ தொடும் முன்னர் மனம் 'ஐ ' வெட்டுகின்றன. கீழ்க் கண்ட  புள்ளிகளைக்  காண்க .
(1) குடல் ஓட்டம் : LI 1, LI 2, LI 3, LI 4,...
(2) மூ வெ ஓட்டம் : Tw 1, Tw 2, Tw 3, Tw 4,...
(3) சி குடல் ஓட்டம் : S I 1, S I 2, S I 3, S I 4,...
(4) பித்தப்பை ஓட்டம் : GB 44, GB 43, GB 41, GB 40,...
(5) இரைப்பை ஓட்டம் : St 45, St 44, St 43, St 42,...
(6) நீர்ப்பை ஓட்டம் : UB 67, UB 66, UB 65, UB 64,...
       இவற்றில் நான்காம் புள்ளிகள் மூலப் புள்ளிகள் (YUVAN SOURCE points ) , தமிழில் 
ஊற்றுப் புள்ளிகள்.  இவை நீண்ட நாள் நோய்களுக்கு பயன் தரும்.  
(1) குடல் ஊற்று - LI 4- படம்  காண்க 
        பயன்: உடலின்  அனைத்து வலிகள், முன் கழுத்து வலிகள், மலச் சிக்கல், வயிறு நோய்கள் .
(2) Tw 4 - மூ வெ ஊற்று : 
       பயன் : மணிக்கட்டு வலி, கழுத்து வலி, காது கேளாமை , தோள்ப் பட்டை வலி 
(3) S I 4 -சி கு ஊற்று : 
       பயன் : பெப்டிக் அல்சர், மணிக்கட்டு வலி, தலை வலி , மஞ்சள் காமாலை, கழுத்து இறுக்கம்.
(4) GB 40 - பித்தப் பை ஊற்று : 
     பயன் : வலி, கணுக்கால் வலி, கால் வலி, வாந்தி, பின்தலை வலி, கழுத்து வலி 
(5) St 42 -இரைப்பை ஊற்று :
       பயன் : பாத மேற்  புற வலி , பாத வீக்கம், கணுக்கால் மூட்டு வலி, கால் வாதம், கால் தசை பலவீனம் 
(6) UB 64 - நீர்ப்பை ஊற்று : 
      பயன் : தலைவலி, வலிப்பு, கீழ் முதுகு வலி, தலை கிறுகிறுப்பு , கால் வலி, கழுத்து பிடிப்பு ,
கழுத்து இறுக்கம், நீர் தொடர்பான நீண்ட நாள் நோய்கள் .
இனி படங்கள் 
தொடரும் 

Wednesday, 6 January 2016

Tamil muraiyil acupuncture-2/7.1 pic-source pts


கல் ஊற்று -Liv 3-கல் குறை 

 Sp 3 - மண் ஊற்று 
 நுரை ஊற்று -Lu 9-நுரை மருந்து 

 நீர் ஊற்று - K 3 - நீர் நிறை 
இதய ஊற்று, மன ஊற்று H 7, P 7 

தொடரும். 

Tamil muraiyil acupuncture-2/7.1

மன வெட்டுப் புள்ளிகள் - மூலப் புள்ளிகள் -ஊற்றுகள் 

பெரிகார்டியத்தின் அனைத்துப் புள்ளிகளும் மனப் புள்ளிகளே. இவற்றை தமிழ் முறையில் அக்கு பங்சர் முதல் புத்தகத்தில் பார்த்தோம். ஐந்து பூதங்களின் ஓட்டங்களும் மனதை வெட்டும் இடங்கள் சிறப்பான பயனைத் தருகின்றன. நுண் மனம் என்று அழைக்கப் படும் மண் புள்ளியில் அனைத்தும் வெட்டுப்பட்டது போல் , நலிவு அல்லது நோயில் தேக்கம் காட்டுகின்றன. அந்த இடத்தில்  அனைத்து மூலகங்களும் ஆற்றல் எடுத்துக் கொள்வதால், அந்தப் புள்ளிகளை மூலப் புள்ளிகள் (yuan source points ) என்கிறோம். தமிழில் ஊற்றுப் புள்ளிகள் என்போம். நீண்ட நாள் நோய்களுக்கு சிறப்பாக செயல் படும்.
     கீழ்க் கண்ட ஓட்டங்களின் முதல் மூன்று நிலைகள் காண்போம்.
(1) கல் ஓட்டம் - Liv 1, Liv 2, Liv 3 
(2) தீ ஓட்டம் - P 9, P 8, P 7
                         H 9, H 8, H 7
(3) மண் ஓட்டம் - Sp 1, Sp 2, Sp 3
(4) நுரை ஓட்டம் - Lu 11, Lu 10, Lu 9
(5) நீர் ஓட்டம் - K 1, K 2, K 3 
 இவற்றில் மூன்றாவது  உள்ளவை  ஊற்றுப் புள்ளிகள். மண் மூலகம் நுண் மனமாகச் செயல் படுவதால் நுணுக்கமான மன பாதிப்புகள், உணர்வுகள் வயிற்றில் மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. முதலில் மண்ணின் ஓட்டம் இங்கு தேக்கம் .விளைவு - ஹீமோ குளோபின்  அளவு குறைதல். Sp 3- மண் தன் வலு - மண் ஊற்று தூண்ட (தோண்ட ) சரியாகும். 
 மண் மூலகம் ஒரு பொக்கிச அறை - வேண்டும் அளவு ஆற்றல் எடுக்கலாம். அதிகப்படியான ஆற்றல் இருப்பை அளிக்கலாம். மண் மூலகம் ஒரு சமையல் அறை , பிற மூலகங்கள் வந்து பசி தீர்த்துக் கொள்ளலாம் . இனி சில விளக்கங்கள் :
Sp 3 - மண் வலு உ - மண் ஊற்று  - வலி இருந்தால் இரத்த சோகை - சரி 
மேலும் நுண் மன சோகை என்பது மறைந்து உள்ளது.
Liv 3 - கல் கட்டும் மண் - கல் குறை - வலி இருந்தால் இரத்த அழுத்தம் -சரி 
மேலும் கல்லீரல் சோகை என்பது மறைந்து உள்ளது . ஓய்வு, உறக்கம் தேவை. 
P 7, H 7- மனம் + இதயம் வழங்கும் மண் - மண்ணின் ஊட்டம் - மன, இதய ஊற்று -
படபடப்பு, செரிமானமின்மை என்கிறோம். 
மேலும் மனம், இதயம் சோகை, வலு தேவை என்பதும் மறைந்து உள்ளது.
Lu 9 - நுரை கேட்கும் மண் - நுரை மருந்து - நுரை ஊற்று - இரத்தக் குழாய் அடைப்பு - சரி 
மேலும் காற்று (ஆக்சிஜன் ) எடுப்பதில் சோகை என்பதும் மறைந்து உள்ளது.
K 3 - நீர் கவரும் மண் - நீர் நிறை (wants compliment ) - நீர் ஊற்று - குதிகால் வலி - சரி 
மேலும் சிறு நீரகம் சோகை என்றும் பொருள் . பல், எலும்புகள் மெலிவு . நீர் வலு தேவை . 
தொடரும். 

Tuesday, 5 January 2016

Tamil muraiyil acupuncture-2/6.5 kavarum nilai

கவரும் நிலைப் புள்ளிகள் - நிறைப் புள்ளிகள் 

Liv 4- கல் நிறை - கணுக்கால் வலி 

GB 44- பித்தப் பை நிறை -கால் விரல் வலி 

மையம் P 3-மனம் நிறை - நா வறட்சி 
H 3 -இதயம் நிறை - மாரடைப்பு தடுப்புப் புள்ளி 

Tw 2 -மூ வெ நிறை -மனச் சுமை தடுப்பு 
S I 2 - சிறுகுடல் நிறை - விரல், தோள் வலி 

Sp 1-மண் நிறை -செரிமானத் தலை வலி 


St 43- இரைப்பை நிறை -சளி நீக்கம் 
Lu 10 -நுரை நிறை -வறட்டு இருமல் 

LI 5-குடல் நிறை- மலச் சிக்கல் 

K 3-நீர் நிறை -குதிகால் வலி 

UB 40 -நீர்ப்பை நிறை -முது கு வலி 
இந்தப் புள்ளிகளைத் தொட்டும், சொல்லியும்  பழகவும் . 
தொடரும்.

Tamil muraiyil acupuncture-2/6.5 katuppattu pullikal

கட்டுப்பாட்டு நிலைப் புள்ளிகள் - படங்கள் 

Liv 3 - கல் குறை - இ அ புள்ளி 

GB 34- பித்தப் பை குறை -வாய்க் கசப்பு 

H 4-இதயம் குறை -கை வலி 
P 5- மனம் குறை -கை வலி 

Tw 1- மூ வெ  குறை - காய்ச்சல் 
S I 1- இடுப்பு வலி 

Sp 9- மண் குறை -கால் மூட்டு வலி 

St 44 - இரைப்பை குறை -முன் பக்க வலிகள் 

Lu 11 -நுரை குறை -தலை வலி 

LI 3 -குடல் குறை -விரல் வலி 

K 2- நீர் குறை - அரிப்பு 

UB 60 - நீர்ப்பை குறை -பாத  வலி 
தொடரும் 


Monday, 4 January 2016

Tamil muraiyil acupuncture -2/6.5 ketkum valu pic.

கேட்கும் வலுப் புள்ளிகள் - மருந்துப் புள்ளிகள்.

Liv 8- கல் மருந்து -குளிர்ச்சி 

GB 43-பித்தப்பை மருந்து  -பக்க வலிகள் 

H 9-இதய மருந்து -மாரடைப்பு தடுப்பு 
P 9-மன மருந்து -நினைவுத் திறன் 

Tw 3- மூ வெ மருந்து -கழுத்துப் பிடிப்பு நீக்கி 
 S I  3-சிறு குடல் மருந்து -தாய்ப் பால் சுரப்பு 

Sp 2- மண் மருந்து -சர்க்கரைப் புள்ளி 

St 41-இரைப்பை மருந்து -இ ஓ சீர் 

Lu 9- நுரை மருந்து -இ கு அடைப்பு நீக்கி 
நுரை ஊற்று 

LI 11- குடல் மருந்து -நோய் எ சக்தி 

K 7- நீர் மருந்து -சிறு நீரகக் கல் நீக்கி 

UB 67 -நீர்ப் பை மருந்து -கழிவு நீக்கி 
இவை மருந்துப் புள்ளிகள். விரைவாக வேலை செய்யும் . 
தொடரும். 



Tamil muraiyil acupuncture -2/6.5 thoondum valu pic.

தூண்டும் வலு - ஊட்டப் புள்ளிகள் வரிசை .

K 1-கல் ஊட்டம் 

UB 65-பித்தப்பை ஊட்டம் 

Liv 2- தீ (இதய + மன ) ஊட்டம் 

GB 38-மூ வெ + சி கு ஊட்டம் 

H 7, P 7- மண் ஊட்டம் 
Tw 10, S I 8- இரைப்பை ஊட்டம் 

Sp 5- நுரை ஊட்டம் 

St 45 - குடல் ஊட்டம் 

Lu 5 - நீர் ஊட்டம் 

LI 2 - நீர்ப்பை ஊட்டம் 
குறிப்பு : ஊட்டப்  புள்ளிகள் தாயிடம்  இருந்து வருகின்றன. 
தொடரும்.