Tuesday, 30 September 2014

    நாடி நேரங்கள்  பாடல் , பொருள்.                             
 நுரையீரல்  நேரம் : விடி  காலை 3  மணி  முதல்  ஏழு வரை.
உங்கள்  வலக்கையை   வல  மேற்புற  நுரையீரலில்  வைக்கவும். 
நுரையீரல்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  உடற்பயிற்சிகள்  முழுப் பயன்.
மண்ணீரல்  நேரம் : காலை ஏழு  முதல்  பதினொன்று  வரை.   
 பின்  வலக் கையை  இடப்புற  இதயம் கீழே   உள்ள  மண்ணீரல்  மேல்  வைக்கவும் .
 மண்ணீரல்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  7 முதல் 9 வரை   உணவு  நன்கு  செரிமானம் .
 இதயம்  நேரம் :  மதியம்  11 முதல்  3 மணி  வரை .
 பின்  வலக்  கையை  இதயத்தின்  மேல்  வைக்கவும்.
 இதயம்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  கடினமான  வேலைகள்  எளிதாகும் .
 சிறுநீரகம்  நேரம் : மாலை  3 முதல்  7 வரை.
 பின் வலக் கையை  முதுகு நோக்கி காட்டவும். ( முதுகின் பின்புறம்  இரு புறங்கை களும் சரி.)
 சிறுநீரகம்  சிறப்பாக இயங்கும்  நேரத்தில் மாலை நேர விளையாட்டு , உடற்பயிற்சிகள் நன்று.
 மனம்  நேரம் : இரவு  ஏழு  மணி  முதல்  பதினொன்று  வரை .
 பின் வலக் கையை சிறுநீரகம் , மார்பு , பெரிகர்டியம் (மனம்) வழியாகக் கல்லீரல் தொடுக .
 மனம்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  அன்பு , நட்பு , படிப்பு ......... செய்க .
கல்லீரல்  நேரம் : இரவு  11 முதல்  3 மணி வரை .
பின் வலக் கையை  கல்லீரல்  மேல்  வைக்கவும் . இதுவே  24 மணி   நேர   நாடி  சுழற்சி .
 கல்லீரல்  சிறப்பாக  இயங்கும்  நேரத்தில்  உறக்கம்  தவறக்  கூடாது . உடல் நலம் கெடும் .
                     மெய்யாக  மேலும் இரண்டு , இரண்டு  என  மணிக்கணக்கு  உறுப்புகள்  துணை 
 உறுப்புகளோடு  பகிரப்  படுகிறது .உறுப்பு , துணை உறுப்பு  யின் , யாங்  எனப்  படுகிறது .
 துணை உறுப்பு  முடிவது  துணை உறுப்போடும் , உறுப்பு அடுத்த  உறுப்போடும்  கை  கோர்க்கிறது             அட்டவணை             
 நுரையீரல்  3 am -5 am                          பெருங்குடல் 5 am -7 am    
 இரைப்பை  7 am -9 am                    மண்ணீரல்    9 am -11 am 
 இதயம்     11 am - 1 p m              சிறுகுடல்         1 p m - 3 p m 
 சிறுநீர்ப் பை  3 p m -5 p m        சிறுநீரகம்           5 p m -7 p m 
 மனம் (பெரிகார்தியம் ) 7 p m -9 p m   மூவெப்ப மண்டலம்  9 p m -11 p m 
 பித்தப்பை  11 p m -1 a m        கல்லீரல்  1 a m -3 a m 
இதன்படி, காலை உணவு 8 மணி .நண்பகல்  உணவு 2 மணி. இரவு  8 மணி.
நன்றி. நாளை ஐம்பூத ஓட்டங்கள்  . ஆ . மதி யழகன் .

Monday, 29 September 2014

             உடலுறுப்பு களின்  நாடி  நேரங்கள்,  ஓட்டங்கள்.  பாடல்.   
     விடிகாலை    மூன்றில்     விரிவாகும்     நுரையீரல் .
      வேகம்            எடுக்குமே     வெளிக்காற்றை   ஏழுவரை .
      விடிகாலைத்   தாண்டி     விழிக்கும்   மண்ணீரல் ,
       அடுத்து      எடுக்கும்        நான்கு மணி    அதற்கு .............84
       இதயம்      முழுவீச்சில்    இயங்கும்    பதினொன்றில் .
        எடுத்த      எச்செயலும்     எளிதாகும்   மூன்றுவரை.
        இதயம்     முடித்தபின்     உதயம்      சிறுநீரகம்.
        எல்லா      செல்கள் நீரும்     ஏழுவரை     தூயதாக்கும் .....88 
        மாலை     ஏழில்           மாந்தமனம்    முன்னேறும்.
        மயக்கம்    இன்றி         நான்குமணி    செயல்படும்.
        காலைமுதல்   இரவுவரை   கணக்கெடுக்கும்   கல்லீரல் ,
        ஓய்வு, உறக்கம்   பெறவே   ஒதுக்கும்நேரம்   ஒருநான்கு....92
                      நாடி ஓட்டங்கள் நான்கு வகை  எனும் பாடல்.     
        ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து         
        என்று  சக்தி  ஓட இயல்பாகும்  ஆக்கம்.       
         நன்று   செயும்  இதுமாற   நாடுவது   சிறுநோய்கள் .
        ஒன்று  விட்டுத்  தாவவே  உட்காரும்   பெருநோய்கள்.........96
        தாவலும்   தடுமாறி    தாவலெதிர்     ஓடினால் ,
         தீவாய்    மாறுவீர்      தீவிர     நோயால்.          
         ஆதலால்   உண்பீர்    அதற்கது     உணவுகளை.
          ஆவலால்   செய்வீர்   அதற்கது   பயிற்சிகளை...................100
                        பாடல் பொருள்  அடுத்த நாள்.               
                                அன்புடன்,  ஆ.  மதி யழகன் .

Sunday, 28 September 2014

குரல் பண்பு , மற்றும்  ஈர வெளிப்பாடு  பாடல்  பொருள்  தொடர்ச்சி.      
          வரிகள்  69 முதல் 80 வரை.        
                குரல் பண்பு :1.  கத்திப்  பேசினால் கல்லீரல்  கோளாறு. 2.  அதிகம்   சிரித்தால்,  இதயம் 
  கோளாறு.3. பாட்டு  பாடுவதும்  கேட்பதும் அதிகமானால் , செரிமானக்  கோளாறு. அது 
  மண்ணீரல். 4. அழுகை  அடிக்கடி  வெடித்தல் , நுரையீரல்  கோளாறு. சிரிப்பும்,  அழுகையும் 
  சேர்ந்து  வந்தால்  இதயம், நுரையீரல்  கோளாறு. (2, 4 ) 5. முனகல்  தவிர்த்து  வேறில்லை  எனில், சிறுநீரகம்  கோளாறு. சிறு நீரகம்  தாங்க  முடியாத  வேலைப்  பளு .  நோய் தெரிந்தால் 
  தீர்வும்  எளிதுதானே.
               ஈர வெளிப் பாடு : 1. கல்லீரல் தான்  இவ்வுயிர். ஆத்மா  எனலாம்.  அது கண்ணில்  தெரியும்.  இறந்தால்  கண்  நிலை குத்தும். அசையாது. கண்ணீர், கல்லீரல் வெளிப் பாடு ; வேலைப் பளு . சினமும், பிற குணங்களும் , உடல் பாதிப்புகள் கூடக்  கண்ணில்  தெரியும்.
2. தீ ஈரல் வேலைப் பளு , வேர்வையால் தெரியும். இதயம், உடல் வேர்வை ; மனம் , உள்ளங் 
 கையில். 3. மண்ணீரல் தன்  விருப்ப மிகுதியை ( உணவு, பாலியல் விருப்பம் ) உமிழ் நீரில் 
  காட்டும் . 4. நுரையீரல்  தனது வேலைப்  பளுவை  தும்மல், சளி , கோழை யால்  காட்டும் .
 5. சிறுநீரக  வேலைப் பளு சிறுநீர் அளவில் தெரியும். சிறுநீரகமே , பரிணாமக் கோட்பாட்டின் 
 அடிப்படையில்  தொடரும்  உயிர்களின், உருவம் பண்புகள்  வெளிப்பாட்டிற்கான பேருயிர் 
 உறுப்பு. அதன் வெளிப்பாடு  விந்தும், மாதப்  போக்கும்  கூட. தடைகள் முதலில் சிறுநீரகத்தையும்  பின்  உடல் நிலையையும்  பாதிக்கும். தனி மனித , குடும்ப, சமுக, பொருளாதார, அரசியல் காரணங்கள் துணை நிற்க வேண்டும். சிறுநீரகம் செயல் படுவதில் சிரமம்  ஏற்பட்டால் , அது உள்ள இடத்தில  வலி. அது முதுகு வலி.
        ( முதுகுவலி  போக உடல் நீட்சிப் பயிற்சிகள் 1.  காலையில்  எழுமுன்  படுக்கையில் 
 மல்லாந்த  நிலையில் ஒரு கால் L   போல்  உயர்த்தி , இறக்கி பின் மறுகால் பின்  இருகால் 
 5 முறை. 2. மல்லாந்த நிலையில்  ஒருகால் மடக்கி நெஞ்சு தொட்டு , தலை முன்  எழ வேண்டும். பின் மறுகால் பின்  இருகால் 5 முறை 3. மல்லாந்த நிலையில் கைகள் படுக்கையில் 
ஊன்றி  உள்ளங்கால் களும் ஊன்றி  உடல் உயர்த்த வேண்டும் 5 முறை. 
                                  4. இப்போது குப்புறப் படுத்து  முதுகுக்கு மேல் ஒரு கால் நீட்டியவாறு உயர்த்த  வேண்டும். பின் மறுகால்  பின்  இருகால்  5  முறை.
    5. குப்புறப்  படுத்த  நிலையில், தாவங்கட்டை இரு  கை தாங்கிய  நிலையில்  கால்கள் 
மாறி மாறி    முதுகின்   கீழ்ப்  பகுதியை த்  தட்ட  வேண்டும்.  10  முறை.
   6. சிறு குழந்தை தவழ்ந்த நிலையில் தலை, மார்பு தூக்குவது போல் 5  முறை  செய்க.)
   நல்ல பயன் கிடைக்கும் . அன்புடன்,  ஆ.  மதி  யழகன் 

Saturday, 27 September 2014

உடலில் வாழும் திசுக்கள்  பாடல் .61 முதல் 68 வரி வரைப் பொருள் .
          1. ஒன்று என்பது ஐம் பூதத்தில்  கல்லீரலைக்   குறிக்கும். கல்லீரலின்  வளமோ, நலமோ  
தசை நாரில் தெரியும். மனிதனின்  வலிமைக் குறைவு  என்பது  கல்லீரல் நலம் கெடுதலே. அங்குதான்  ஆற்றல்  சேமிப்பே . அதன் வரவும் செலவும்  போக  மீதம் வேண்டும்  சேமிப்பிற்கு.
ஓய்வு, உறக்கம்  தேவை கண்டிப்பாக  இரவு 11 மணி  முதல் விடியல்  3  மணி வரை .
             தசை நார்  செயல் பட்டால்தான் அசைய முடியும்.  பல  நாள்  வினை  ஒருநாளில்  தெரியும்.  சோர்வுக்கு  ஓய்வையும்  தூக்கம்  வரலையும்  தள்ளிப் போடாதீர்கள்.  சிக்கல்களை 
உடனுக்குடன்  தீருங்கள்  அல்லது  முற்றிலும் விலகி  இருங்கள்.
        2. இரண்டாவது  தீ  ஈரல் .இதில்  பெரி கார்டியம்  எனும்  மனமே  இதயத்தின்  ஆற்றல்  வாய்ந்தது. மன அழுத்தம்  இதயத்தின்  மீது  விரைவாகப்  பாய , நிகழ்வை  இரத்த  அழுத்தம் 
என்கிறோம். அதனை  மாத்திரையால்  அடக்குகிறோம்.  வேலை ப்  பளுவால்  இரத்தக்  குழாய்கள்   சத்தின்றி  சுருங்கும்.  அல்லது மாரடைப்பில்   முடியும்.  மனம்  வீறு   கொண்டதை  
அறியாததால்   இதய நோய்கள்  ,  இரத்தக் குழாய்  நோய்கள்  வருகின்றன.  மனம்   முதல்  காரணம் .  அக்கு பங்க சரில் , மன அமைதிக்கு P 6  என்ற புள்ளி உண்டு. தூக்கமின்மையும் 
உடனே  தீரும்.  மனதால் வரும் நோய்களுக்கு எளிய  தீர்வுகள்  உண்டு.
        இரத்த அழுத்தம்  தூண்டும்  உப்பும்,  கொழுப்பும்  இரண்டாவது  காரணம்.
      3. மூன்றாவது  மண்ணீரல் . மண்ணீரல் சுரப்பு நீர்கள் சுரக்க வேண்டும். கணையமும்  அதன் 
 சுரப்பு நீர்  இன்சுலினும்  மண்  பூதமாகவேக் கருதப்  படுகிறது. செரிமானம்  இல்லாவிடில்  தசை 
 சுருங்கி  ஆள்  இளைத்து ப்  போவான் . மனம்  தாய்  ஆவதால் , மன உணர்வும்  பிறகு  உணவும் 
  கவனிக்கப் பட வேண்டும்.
    4. நுரையீரல்  நான்காவது.  காற்று  சக்தி  (ஆக்சிஜன் ) போதாமையால்  தோலில்  வேர்க்குரு, பரு, தேமல், சொரியாசிஸ், கருப்பு நிறம்  படரல், வெண்மைத்  திட்டு  எனப் பல நோய் களும் 
 முடி  உதிரல், நரை  உண்டதால்  போன்றவையும்  நிகழும். சத்துணவோடு  நல்ல  காற்றுச் 
 சூழலும் , மூச்சுப் பயிற்சியும்  வேண்டும். வெண்மை நிறப் பொருட்கள்  பூண்டு, வெங்காயம் ,
  தேங்காய்  போன்றவை அளவறிந்து  சேர்க்கவும்.
  5. சிறுநீரகம்  ஐந்தாவது . சிறுநீரகம்  கெடுவது  முதலில்  இடுப்புவலி, மூட்டுவலி,...பின்  எலும்புத்  தேய்மானத்தில்  தெரியும். முதலில்  பற்கள்  கடிக்க முடியாமல்  திணறும். பல் நோய் 
வந்தவுடன்  விழித்துக்  கொண்டு  இரும்பு  சத்து  அளவு  குறையாமல் பார்த்தால் , முதலில் 
 செரிமானம் , பின்  நுரையீரல்  வளம்  கிடைக்கும். Lu  5  எனும் புள்ளியில்  சிறுநீரகத்தின்  தாய் 
 உள்ளது. இதில்  அக்கு பிரசரும்  செய்யலாம்.
        ஐம் பூதங்களின்  ஓட்டம் , 1, 2, 3, 4, 5, 1, 2, 3,..... கொடுப்பது   தாய் , பெறுவது சேய் . அது 
அடுத்  ததின்  தாய்.  குணமும், நோயும்  இந்த  ஓட்டத்தில்   தான்.
       இந்த  ஓட்டத்தில்  வரிசையாக  ஐந்து ஊக்கப் புள்ளிகள் K  1 , Liv  2,P 7, H  7, ..Sp  5, Lu  5
      பொருள்  தொடரும். நன்றி.  அன்புடன், ஆ. மதி யழகன் 

Friday, 26 September 2014

உடலின்  ஐம் பூதங்கள் - திசுக்கள் -குரல் பண்பு - வெளிப்பாடு.
                            வாழும்    திசுப்  பாடல்.                                   
  கல்லீரல்    நலம்வாழ    வாழும்திசு    தசை நாண்                 
  தீ ஈரல்       நலம்வாழ    வாழும்திசு     இரத்தக் குழாய் .
  மண்ணீரல்  நலம்வாழ   வாழும்திசு     தசைகள்.         
  நுரையீரல்   நலம்வாழ   வாழும்திசு    தோல், முடி .........64
  சிறுநீரகம்    நலம்வாழ    வாழும்திசு     எலும்புகள் .
   ஒருபொருள்  நலம்கெட  திசுநலம்       கெடுமே.
  திசுநலம்      சீர்கெட         மறுபொருள்   கெடுமே.
  மறுபொருள்  சீர்கெட       தொடர்பொருள்  கெடுமே............68
                          குரல் பண்புப்  பாடல்                                
  கல்லீரல்       கத்தலாலும்   தீ ஈரல்        சிரிப்பதாலும் ,
   மண்ணீரல்   பாடுவதாலும்   நுரையீரல்  அழுவதாலும் 
   நீர் ஈரல்       முனகலாலும்   நோய் நிலை     காட்டுமே.
   நோய் நிலை   அறிந்திட்டால் , நோய் தீர்வு    எளிதாமே.....72
                       ஈர வெளிப் பாட்டின்  பாடல்.                        
   கல்லீரல்     துடிக்குது       கண்ணீரே       வெளிப்பாடு   
   தீ ஈரல்        துடிக்குது       வேர்வையே     வெளிப்பாடு 
   மண்ணீரல்  துடிக்குது       உமிழ்நீரே        வெளிப்பாடு   
  நுரையீரல்   துடிக்குது       தும்மல், சளி    கோழைஎல்லாம் ...76
  சிறுநீரகம்     துடிக்குது       சிறுநீர்            மட்டுமா ?
  சிறுநீரகம்     துடிப்பது         விந்து, மாதப்    போக்கும்.
  சிறுநீரகம்     வேலைப்பளு    முதுகுவலி     வெளிப்பாடு.
  சிறுநீரகம்    பேருயிர்          கல்லீரல்            இவ்வுயிர் ............80
           படித்தமைக்கு    நன்றி.   பாடல்    பொருள்   அடுத்த    நாள் ,
                   அன்புடன்,  ஆ .மதி யழகன் .

Thursday, 25 September 2014

உடலின் ஐம் பூத உறுப்புகள் காட்டும் சுவை மற்றும் குணம் பாடல் பொருள் .
      41 வரி முதல் 60 வரி வரை.
   புளிப்பு : பச்சை நிறம் காட்டும்  கல்லீரல்   சுவை  புளிப்பு.
  புளியோதரை   உண்பதால்   கல்லீரல்   வளமாகும் . கல்லீரல்   ஊக்க   நோய்களின்   போது (புளிப்பு )  தவிர்ப்பது  நன்று.
   கசப்பு : சிவப்பு   நிறம்   காட்டும்   இதயம் (தீ ஈரல் )  சுவை   கசப்பு.
 இதயத்தின்   துணை   உறுப்பு   சிறுகுடல்   இதய   பாதிப்பினால்  புண்ணாகும்.  இந்நிலையில் 
 கசப்பு சுவை  உள்ள பாகற்காய்  சுண்டக்காய்  அகத்திகீரை  உண்ண  நலமாகும். குடல் புழுக்கள் 
 அழியும். கசப்பு சிறுகுடலை  வலுவாக்குகிறது .
இனிப்பும், துவர்ப்பும்.: இனிப்பினால் உமிழ் நீர் ஊரும் ; மண்ணீரலும்  தூண்டப்  படும். உணவின் 
இறுதியில்  துவர்ப்பு சுவை பாக்காலும் மண்ணீரல் செரிமானம் வேகமாகும்.
காரம் : கார  உணவுகள்  நுரையீரலைத்  தூண்டி  அதிக பிராண வாயுவை ப்  பெறும் .
 உப்பு : உப்பு  சிறுநீரகத்தை த்  தூண்டும். நஞ்சை  முறிக்க  அதிக உப்பு தருவது  அதற்கே.
 இனிப்பு +உப்பு  கலவை  சோர்வு  நோயாளியை த் தெம்பாக்கும் . எலுமிச்சை  சாறோடும் 
கொடுக்கலாம் . உப்புசுவை  அரசத் தன்மை உடையது . எல்லாவற்றோடும் சேரும். ஒரு சுவை விருப்பம் அல்லது வெறுப்பு அந்த உறுப்பின் நோய் காட்டும்.
சுவை தேடுவோர் : மசக்கைப் பெண்கள் மாங்காய் கேட்பது கல்லீரல் மிகு வேலையால் .பாம்பு 
தீண்டையில் இதயம் தூண்ட கசப்பு வேர் தருவர். துள்ளி விளையாடும் பிள்ளைகள்  இனிப்பு 
கேட்பது மேலும் வாலாட்ட. வேலை  மிகுதியில் ஊழியர் கேட்பது காரப்பொருள்கள் .
கல்லீரல் /எரிச்சல் : ஓய்வு , உறக்கம் (கல்லீரல் வளம் ) மிகுதி , குறைவால் எரிச்சல் , சினம் .
இதயம் /சிரிப்பு : இதயக் கோளாறு என்பதை சிரித்த முகம் கூறும். பேச்சு எல்லாம் பெருமையும் மகிழ்ச்சி யும்  இருக்கும். காவி விருப்பம் கட்டாயம் இருக்கும்.
மண்ணீரல் / கவலை , சிந்தனை : செரிமானம் தேடுவோரிடம்  கவலை, சிந்தனை.
நுரையீரல் /துக்கம் : நுரையீரல்  தன்  அளவு  குறையும்  துக்கம், துயரம்  மண்ட . துணை இழந்தார்  மார்புக் கூடு அளவு  குறையும் . நுரையீரல்  வளம்  பெற  மூச்சுபயிற்சி (பிராண யாமம்)  முதன்மை.
சிறுநீரகம் / பயம் : சிறுநீரகம்  கெடுவது  பயத்தால் . பய மிகுதியில்  சிறு நீர் கழிப்பர்.
மாற்று குணங்கள் : சிறுநீரகம் / பயம் , நம்பிக்கையால் தீரும். கல்லீரல் / சினம்  கருணையால்  
தீரும். இதயம் / சிரிப்பு  தெளிவால் தீரும். மண்ணீரல் / கவலை, சிந்தனை  செழுமைப்  படுத்தலால  தீரும்..  நுரையீரல் / துக்கம்  உறவு, நண்பர்களிடம்  பகிர்வதால்  உயிர்ப்பு. வெள்ளை  நிறத்தில்  எல்லா  நிறங்களும்  அடங்குவதால்  மூச்சு  உயிருக்கு  சமம்.
படித்தமைக்கு  நன்றி. அன்புடன், ஆ. மதி யழகன்.

Wednesday, 24 September 2014

உடலின் ஐம் பூத உறுப்புகள் காட்டும் சுவை மற்றும் குணம் -பாடல் .
       கல்லீரல்     பச்சை    புளிப்புதான்    இச்சை ,
        தீ ஈரல்    சிவப்பு    கேட்பது       கசப்பு ,
        மண்ணீரல்   மஞ்சள்   இனிப்பும்,   துவர்ப்பும் ,
         நுரையீரல்    வெள்ளை   தேடுமே .    காரம் ,...........44
         சிறுநீரகம்    ஊக்கும்    செவ்விய    உப்பு.
          அறுசுவை   தனிலே   அரசாளும்   சிறப்பு .
          ஒருசுவை    தனிலே    மிகுதியும்   விருப்பம் ,
           உரக்கக்       கூறும்       ஓர் உறுப்பு   மயக்கம் .....48
          புளிப்பு          கேட்பார்     பூவையர்     மசக்கையில் ,
          கசப்பு         கேட்பார்      கடிநாகம்     தீண்டையில் ,
          இனிப்பு      கேட்பார்     இளமையில்   பிள்ளைகள் ,
          கார்ப்பு       கேட்பார்      கடமைமிகு    வேலையில் ...52
          எரிச்சலும்   சினமும்    ஏற்படும்      கல்லீரலால் ,
         மகிழ்ச்சி யும்   பெருமையும்   மலரும்    இதயத்தால் ,
         கவலையும்   சிந்தனையும்   காண்பிக்கும்   மண்ணீரல் ,
        துக்கமும்    துயரமும்   தொடுவது    நுரையீரல் ......56
        அச்சத்தால்   அழியும்   அரிய    சிறுநீரகம் ,
        அதைத் தீர்க்கும்  நம்பிக்கை , அருங் கல்லீரல்  கருணையால் ,
        உச்ச இதயம்   தெளிவால் ; உயர் மண்ணீரல்  செழுமையால் ,
       உணர்வாகும்  நுரையீரல்   உயிர்ப்பாகும்  பரி மாற லால் .....60
        படித்தமைக்கு நன்றி .அடுத்த நாள் பொருள் .அன்புடன்,
      ஆ .மதி யழ கன் .

Tuesday, 23 September 2014

உடலின் ஐம் பூதங்களின்  துணை உறுப்புகள், வண்ணங்கள் .பாடல்  பொருள் .
     20  முதல் 24  வரை : கல்லீரல்  துணை உறுப்பு  பித்த நீர்ப்பை (Liver , Gall Bladder ) இதுபோல்  தீ ஈரல் -சிறு குடல்   (Heart , Small  Industine ), மண்ணீரல், இரைப்பை  (Spleen , Stomach ), நுரையீரல் -பெருங்குடல் (Lungs , Large Intestine ), நீர் ஈரல்  அதாவது  சிறுநீரகம் -சிறு நீர்ப் பை (Kidney , Urinal  Bladder ).
   24வரி பின் 28 வரை :தீ ஈரல்  இரண்டாகப்  பிரியும். தீ ஈரல் , தீ ஈரல் உறை  அதாவது  இதயம் , இதய உறை .இதய உறை  துணை உறுப்பு மூவெப்ப மண்டலம் ( மார்பில் சுவாச மண்டலம், ஜீரன மண்டலம், கழிவு மண்டலம்3'nன்  இடையே  உள்ள  இரண்டு தடுப்பு  - உதர விதானம்  எனலாம் )(பெரி கார்டியம் , மூவேப்ப மண்டலம் ) (Peri guardiyam , Tripple warmer ). இதய உறை  மனம் என்பர்  சீனர் .மூளை என்பர் கொரி யர் .
  28 வரி பின் 32 வரை :வானவில் நிறம் ஏழு .அது போல் உறுப்புகளின் நிறம் ஏழு என்பது கிரிலியன் ஒளிப் படம். (உடலில் இருந்து  வெளிப் படும் வண்ணங்கள் )
         உடலின் பின்புறம் வலக் கை வையுங்கள் .இங்கு சிறுநீரகம் .இதன் வண்ணம் கருப்பு  .காண்பது  அதோடு  VI B (வயொலேட் , இண்டிகோ , ப்ளூ  அதாவது நீல வண்ணங்கள் )
        வலக் கையை  கல்லீரல் மேல் வைக்கவும்.
                                  G (கிரீன் அதாவது பச்சை )
           வலக் கையை  மண்ணீரல் மேல் வைக்கவும் .
                         Y ( எல்லோ அதாவது மஞ்சள் )
                வலக் கையை இதய உறை மேல் வைக்கவும் .
                O (ஆரஞ்ச் அதாவது ஆரஞ்சு வண்ணம் )
          வலக் கையை  இதயத்தின்  மேல்  வைக்கவும் 
         R (ரெட் அதாவது சிவப்பு )
      பிறகு நெஞ்சின் மையத்தில் =(சமம் ) எனப் போட்டு 
    வலக் கையை  வலப்  பெரு நுரையீரல் மேல் வைக்கவும் .
      WHITE (ஒயிட் அதாவது வெள்ளை என முடிக்கவும் .நிறங்கள் மறவாது.
   (Memory drum  created  byMATHIYALAGAN. )
ஆரஞ்சு வண்ணத்தை இளஞ்சிவப்பு (ROSE ) எனலாம் .சிவப்புக்கும் வெள்ளைக்கும்  இடையில் 
உள்ளது .இதயம், நுரையீரல் இடையே  மனம்  அல்லவா ? ரோசாப் பூக்கள் காதலில் தரப்  படுவது பொருத்தம்  தானே ! 
          மிக இயற்கை யான உண்மை எதுவென்றால் அந்த அந்த வண்ணங்களில் 
உள்ள உணவுப் பொருட்கள் அந்த அந்த உறுப்புக்கு வலு , வளம் சேserkkum.eஎடுத்துக் காட்டு பீட்ருட், செம்மாதுளை இதயம்; வாழை, பப்பாளி மஞ்சள், மண்ணீரல்.பிறவும் அதுபோல.
நன்றி .அன்புடன், ஆ .மதி யழகன் .

Monday, 22 September 2014

உடலி ன் ஐம் பூதங்களின் துணை உறுப்புகளும் , வண்ணங்களும் , பாடல் 
     கல்லீரல் , பித்தப்பை ,  தீ ஈரல் , சிறுகுடல் 
      மண்ணீரல் , வயிறு, மாநுரைக்கு ப்  பெருங்குடல் 
     எல்லாமும்  இணையாகும் ; இரண்டாவது துணையாகும் 
        சொல்லாத சிறுநீரகம் துணையாவது சிறுநீர்ப்பை .....24
      இதயம் என்பது நெருப்பின்  பகுதி ,
       இதய உறை என்பது இதயத்தின் பகுதி ,
        இதய உறை என்றாலும் இதயத்தின் முன்னோடி ,
        இதற்கு த் துணையாவது மூ வெப்ப மண்டலம் .........28
       ஏழு வண்ணம் இருப்பது வானவில் கூறும் 
       ஏழு வண்ணம்  உடலில் என கிரிலியன் படம் கூறும் 
       கடவுளின் வண்ணம் கருப்பு,நீலம் என்பார் 
       அட இங்கு வயலெட் , ஊதா ,நீலம் சிறுநீரகம் .............32
        கல்லீரல்   பச்சை   உயிர்த்துளிர்   நிறம் ,
        தீ  ஈரல்   சிவப்பு     உயிர்மலர்     நிறம்,
       மண்ணீரல்  மஞ்சள் உயிர்வேர்   நிறம் ,
      மாநுரை    வெண்மை உயிர்காக்கும் நிறம்...................36
     இதய உறை  காட்டும் எழில் வண்ணம்  ஆரஞ்சு ,
    இதயம், நுரைக்கு இடையே  உள்ளதால் இளஞ்சிவப்பும்.
     இதய உறை  மனமாகும் ; இளஞ்சிவப்பு ரோஸ் ஆகும்.
     இதயங்கள் இணைவதற்கு ரோசாப்பூ துணையாகும் .....40
          பாடலின் பொருள் அடுத்த நாளில்.
          படித்தமைக்கு  நன்றி .அன்புடன் ஆ .மதி யழகன்.

Sunday, 21 September 2014

உடலின் ஐம் பூதங்களும் அதன் உறுப்புகளும் பாடல் - பொருள்.
     வலப் பக்கம் உள்ள நுரையீரல் கீழ் உள்ளங்கை வைக்கவும் . இது  1 ஆகாயம் (space )
    பின் வல உள்ளங்கையை குறுக்காக நகர்த்தி இட மேல் பகுதியில்  வைக் க  2 தீ ( Fire )
    பின் வல உள்ளங்கையை கீழாக நகர்த்தி  இடக் கீழ் பகுதியில்  வைக்க 3 (Earth )
     பின் வல  உள்ளங்கையை  குறுக்காக நகர்த்தி வல மேல் பகுதியில் வைக்க 4 (Air )
     பின் வல  உள்ளங்கையை முதுகு நோக்கி காட்டவும்  5 (நீர்), பின்கை கட்டுவதும் காட்டும்.
            முதல் நான்கு வரி பொருள் : உலகிலும் உடம்பிலும்  ஐம் பூதங்கள் உண்டு .
  நான்கு முதல் எட்டு வரி வரைப் பொருள் :ஆகாயம் (space ), தீ (Fire ), மண் (Earth ), காற்று 
(Air ), நீர் (Water ) ஐம் பூதங்கள் .சீனர்கள் ஆகாயத்தை மரம் ( Metal ) என்பர் .காற்றை  உலோகம் (Metal ) என்பர்.
   எட்டின் பின் பன்னிரண்டு வரி வரைப் பொருள்: புவியைச் சுற்றி உள்ளது ஆகாயம். உங்களைச் சுற்றி உள்ளதை உணர்வது உடல் ஆகாயம் ஆன கல்லீரல் .கல்லீரல் பாதிப்பு கண்களில் தெரியும் . (மஞ்சள் காமலை , கள்ளச் சாராய பாதிப்புகள் ).கண்களே  அதன் வெளி உறுப்பு .Liver outside organ is  eyes .தீ ஈரல் இதயத்தை (Heart ) மற்ற ஈரல்கள் (மண்ணீரல், கல்லீரல், நுரையீரல் ) போல் பெயர்  இட்டு  அழைக்க  தீ ஈரல் (மதி யழகன் சொல்லாட்சி ) என்போம் . நான் என சொல்லும் நாக்கு  இதன் வெளி உறுப்பு .
  பனிரண்டின் பின் பதினாறு வரி வரைப் பொருள் : மண் ஆக உள்ளது மண்ணீரல் (spleen )
ம என சொல்லும் உதடு வெளி  உறுப்பு . காற்று  நீர்  கலந்தால்  நுரை . காற்றாக நுரையீரல்  (Lungs ) உள்ளது . நெற்றி கீழ் உள்ள மூக்கே வெளி உறுப்பு .
   பதினாறின் பின்  இருபது வரி வரைப் பொருள் : 23  குரோம சோம்களில்  பாதிப் பாதி , தாய் தந்தை உடையது . அதில் உள்ள ஜீன்களும் அவ்வாறே . அவற்றின் சக்தி சிறுநீரகத்தில்  உள்ளது .சிறுநீரகமே ஆதிசெல் ஆக அமர்ந்து பழைய வடிவங்களை மீள் ஆக்கம் செய்கின்றன .
தாய் , தந்தை தந்த 120 ஆண்டுகள் வேலை செய்யவல்ல நீண்ட கால மின்கலம் (Long 
Life Battery ) கல்லீரல் (Liver ) என்பது மின்னூட்ட மின்கலம் ( Rechargable Battery ).சிறுநீரகத்தின் வெளி உறுப்பு அவ்வடிவக் காதுகள் .
                படித்தமைக்கு நன்றி .அன்புடன், ஆ .மதி யழகன் .

Saturday, 20 September 2014

உடலின் ஐம் பூதங்களும்  வெளி உறுப்புகளும் .(இருபது வரிப் பாடல் )
        ஒன்று , இரண்டு , மூன்று, நான்கு, ஐந்து 
         உலகில் உள்ள  பூதங்களும்  ஐந்து 
          ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து 
          உடம்பில் உள்ள  பூதங்களும் ஐந்து ..............4
         ஆகாயம் , தீ,  மண், காற்று, நீரு 
          ஐந்தும் , ஐம்  பூதங்கள் ப்  பேரு 
          ஆகாயம்  மரம்  என்பார்  சீனர் 
           அழகான  காற்றை  உலோகம்  என்பார்.........8
           கல்லீரல் என்பதுவே  ஆகாயம் 
            கண்களே அதன்  வெளிப்பாகம் 
            தீ ஈரல்  இதயம்தான்  நெருப்பு 
            தான்  சொல்லும்  நாக்குதான் உறுப்பு ..........12
            மண்ணீரல் என்பதுவே மண்பகுதி 
          ம  சொல்லும்  உதடே வெளிப் பகுதி 
           நுரையீரல்  என்பது காற்று , நீர் கலப்பு 
           நுதல் கீழ்  மூக்கே அதன் வெளி உறுப்பு ........16
           பலகாலம் தொடரும் ஜீன் தொகுதி 
           பக்குவமாய் பெற்றோ ரின் பாதிப் பாதி 
          ஆதிசெல் மீளாக்கும் நீர் ஈரல் சிறுநீரகமே 
          அதற்கு வெளி உறுப்பு அவ்வடிவக் காதுகளே ....20
                    பாடலைப், பல முறை  சொல்லிப் பார்க்கவும் .
          இதன் விரிவான பொருள் அடுத்த நாளில் .
             படித்தமைக்கு  நன்றி .அன்புடன்  ஆ.மதி யழகன் .

Friday, 19 September 2014

வா ழ் க் கை நடை முறைகளில் அக்கு பங் சர் புள்ளிகள் 5.
18.பெண்கள் குறுக்கு மாராப்பு அணிதல்:பெண்கள் உடை அணியும் முறையில் சேலை, தாவணி 
மார்புக்கு குறுக்கே செல்வதைக் காணலாம் .மன்னர்கள், துறவிகள் உடையும் குறுக்கே செலவதைக் காணலாம் .மேலும் பூணூல் அணிவதும் குறுக்கு நிலையில்தான் .குறுக்குத் துணி அல்லது நூல் செல்லும்போது பின் இடுப்பைத் தொடுகிறது (K சிறுநீரகம் ) பிறகு முன் இடுப்பின் வலப்பக்கம் தொடுகிறது (Liv கல்லீரல் ) பிறகு மார்பின் இடப்பக்கம் மேல் தொடுகிறது (H இதயம்) இந்த கல்லீரல் , இதயம் குறுக்கு இணைப்பே ஆற்றல் ஓட்டத்தில் முதன்மை ஆனது .இதன் பெருக்கல் வடிவ மறு கோடு மண்ணீரல் நுரையீரல் (பெரும் பகுதி ) இணைப்புக் கோடாகும் .பூணூல் எனின் முதுகின் பின் பகுதி நுரையீரலும் தொடும் .எனவே அந்த அந்த உறுப்புகளின் நோய் எதிர்ப்பு தன்மை தூண்டப்படும் .மேலும் உடல் இயக்கத்திற்கு உடை இறுக்கமும் உதவுகிறது .
19. குறத்தி குறுந்தடி தொட்டு சோதிடம் கூறல் : குறுந்தடி தொடும் இடம் P 8 நடு விரல் மடக்க அது உள்ளங்கை தொடும் இடம் (இதுபோல் சுண்டுவிரல் மடக்கி உள்ளங்கை தொடும் இடம் H 8)H 8P 8இணைக்கும் ரேகை இதய ரேகை .நம் முன்னோர்கள் வைத்த பெயர் .அக்கு ப ங் ச ர் என்பது ஊசி குத்துதல் , அக்கு பிரசர் என்பது கை கட்டை விரலால் 21 முறை கடிகார சுற்று அழுத்தியவாறு செய்து பிறகு 60 முறை அமுக்கி விடுதல் ஆகும் .குறத்தி பாட்டு பாடியவாறு உலோகப் பூண் போட்ட தடியால் தட்ட தட்ட உங்கள் மன அழுத்தம் குறையும் .P 8 என்பது பெரி கார்டியம் எனும் மனம் இதயத்தை த் தூண்டும் வலிமையான புள்ளியாகும் .குறத்தி அறியாள் .இப்போது நீங்கள் அறிவீர் !
20. செரிமானம் தரும் கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல் :ஆகஸ்டு 2010 -ல் கும்பகோணத்தில் அக்கு ப ங் ச ர் படித்தபோது ஆள்காட்டி விரல், கட்டை விரல் சேர்த்தால் நுரையீரல் ஓட்டம் முழுமை அடையும் என்றார்கள் .Sp என்கிற மண்ணீரல் இடுப்பின் இருபக்கமும் முடியும் .S t  என்பது இரைப்பை .இதன் முதல் புள்ளி கண் மை இடும் இட நடுப்புள்ளி .இது கன்னத்தின் வழியாக நேரே இறங்கும் . இவற்றை இணைக்க முழங்கை மடிப்பு இடுப்பு தொட , உள்ளங்கை நடு விரல் கன்னம் தொட வைத்தேன் .இருகைகளாலும் செய்தேன் .கை மாற்ற கன்னத்தில் போட்டுக் கொள்வது  போல்  இருந்தது . காரம்  செரிமானம்  இன்றி  உணவுக் குழல்  வழி  எகிறும் போது  இதைச் செய்ய வயிறு அடங்கும். செரிமானப் பயனும் உண்டு . சித்தர்கள்  வகுத்த செந்நெறி  அல்லவா ? மணிக்கட்டு  ரேகையின் நடுப்பகுதி யில் P 7  உள்ளது .உள்ளங்கை   ஓரத்தில் உள்ள  P 7 ல் அக்கு பிரசர் செய்தாலும்  செரிமானம் கிடைக்கும் .
சிறு  பிழைகள்  இருந்தால் பொறுத்து க்  கொள்ளவும் 
படித்தமைக்கு  நன்றி .அன்புடன்  ஆ மதியழகன் .

Thursday, 18 September 2014

வா ழக் கை நடை முறைகளில் அக்கு பங் சர் புள்ளிகள் .பகுதி 4
116.நெருப்பு தொட்டு வனங்கல் : கட்டை விரல் ஆள் காட்டி விரல்கள் இணைவதால் Lu , Li  
நுரையீரல் , பெருங்குடல் -காற்று  நாடி இணைகிறது ; நடு விரல் மோதிர விரல்கள் இணைவதால் P , Tw -பெரிகர்டியம் எனும் மன நாடி இணைகிறது ; சுண்டுவிரல் இரண்டு நாடிகள் H , Si இதயம் , சிறுகுடல் உடையது .
இப்போது  இந்த தண்மை  ஐந்து விரல் இணைப்பில் கிடைக்கிறது .
வெறுங் கால்களை கல் போன்ற நிலப் பரப்பில் ஊன்றுவதால் நிலத்திலிருந்து  Sp , Liv , K (யின் சக்திகள் ) பெறுவதும் , St , Gb , UB (யாங் சக்திகள் ) இறங்குவதும் எளிமை ஆகிறது .
இப்போது சூடான நெருப்பு த் தட்டின் வெப்பத்தை இரு கைகளில் பெற்று , முகத்தில் கண் மூடிய நிலையில் UB ,St , GB (தொடக்க புள்ளிகள் )-கண் மை இடும் இடங்கள் அழுத்தப் படுகின்றன .ஆக கால் மூன்று நாடி , கை மூன்று நாடி ஆறு நாடி இணைப்பு கிடைக்கிறது .
குளித்து , மனம் லயித்து வாய் மூடி ச் செல்கையில் ஏழாவது இணைப்பும் Du , Ren -கிடைக்கிறது . (கோவிலில் தீர்த்தம் வாங்கி விழுங்கும் போதும் வாய் ஒட்டும் ).
ஏழு நாடிகள் இணையும் தீப வணக்கத்தை காலை, மாலை செய்யத் தயாரா ?
17.நடையும் , கல்லீரல் வலுவும் :இரண்டு கைகளிலும் சம அளவு எடை தூக்கி சிறிது நேரம் நடத்தல் -முன்னங்கால் மையத்தில் உள்ள K 1 (சிறுநீரக , கல்லீரல் இணைப்புப் புள்ளி ) அழுத்தம் பெறுகிறது .தலைச் சுமை , முதுகுச் சுமை தாங்கி நடந்தாலும் K 1 தூண்டப்படும் .
கல்லீரல் என்பது நம் உடலில் மின்னூட்ட மின்கலம் -Rechargable Battery .இது வலப்புறம் நுரையீரல் கீழே உள்ளது . இரவு 11 மணி முதல் விடியல் காலை 3 மணி  முதல் நாள் சக்தி வரவு செலவு முடித்து தன்னூட்டம்  பெறும் .இது கல்லீரல் நாடி நேரம் .இந்த ஊட்டப்  பயன் 
நமக்கு ஊன்றும் நடையில் கிடைக்கிறது .முன்னங்கால் ஊன்றி நடக்கும் ஜிம்னாஸ்டிக் நடையிலும் பயன் கிடைக்கும் .108 முறை ஜபமாலை உருட்டும்போதும் கல்லீரல் வலுப் பெறுதல் நடைபெறும் .இங்கு Lu 11 நுரையீரல் நாடி கல்லீரலை இணைக்கிறது .
எனவே இரவில் 11 முதல் 3 வரை உறக்கம் மிகத் தேவை .கண் விழிக்க வேண்டாம் .நடை  மிகத் தேவை .குடி , சினம் கல்லீரல் சிதைக்கும் .ஜப மாலை உங்கள் விருப்பம் .
படித்தமைக்கு நன்றி .அன்புடன் , ஆ .மதி ய ழ கன் .

Wednesday, 17 September 2014

வா ழ் க் கை நடை முறை களில்  அக்கு பங் சர்  புள்ளிகள் , பகுதி 3
வ கி டு  எடுத்தல் :ஆண் கள் இடப் பக்கம் வாகு அல்லது வகிடு எடுத்தல் GB எனும் பித்த நீர்ப் பை 
ஓட்டத் தை தூண்டி சரி செய்யும் .சிந்திக்கும் ஆண் களுக்கு செம்மை தரும் .பெண்கள் நடு வகிடு 
எடுக்க DU என்கிற தான் (கர்வ ) நாடி , மனச் சமநிலை , உடல் நலப் புள்ளி DU 20  என்பவை  தூண் டப்பட்டு பெண்மை சிறக்கிறது .
பணம் கொடுத்தல் : பணம் கொடுக்கும் போது வலக் கையால் கொடுப்பர் .அப்போது இடக்கையால் வலக்கை மணிக்கட்டு அருகே ஆடாமல் பிடிப்பர் .இங்கு மனதை சமநிலை ப் படுத்தும் P 6P 5P 4 புள்ளிகள்  உள்ளன .இருவருக்கும்  பயன் கிடைக்கிறது .சாந்த நிலை !
உள்ளங்கை இறுக்கம் : பொருட்களை கைகளால் அள்ளி வைத்திருந்து பிறகு போடுதல் (மலர் வாழ்த்து ) பிறகு அளித்தல் (தானம் ) பிறகு அர்பணித்தல் (யாகம் ) இவற்றில் நம் நல்லெண்ணங்கள் , நல்லுணர்வுகள் உருவம் எடுத்து செயல் புரிய செல்கின்றன .எவ்வாறு எனில் மன அதிர்வுகள் பெரி கார்டியம்  P (மன நாடி ) மூலம் அது பொருட்கள் , பூக்கள்  மூலம் 
வெளியேறுகின்றன . மன அமைதி வேண்டலுக்கு சிறந்த வழி ! மேலும் சோழி உருட்டல் , உணர்வுக் கடிதம் எழுதி க் கொடுத்தல் அல்லது கிழித்தல் .பயன் அமைதி !
14 மூச்சு இழுத்து விடல் :ஆழ மூச்சிழுத்து (4அளவு ) சிறிது அடக்கி (2அளவு) அதைவிட நீளமாக விட்டு (5அளவு) ஓய்வு (2அளவு  ) மந்திரங்களை இதுபோல் உச்சரித்தால்  பயன் மிக .
ஓம் -நமசிவாய -, ஓம் -சரவணபவ -, ஓம் நமோ நாராயணா .பிற கீர்த்தனைகள் , பாடல்கள் , குழலோசை , நாதசுரம் , பிற இசைவடிவங்கள் .நுரையீரல் தூண்டல்கள் ! ஓலி கேட்பவருக்கு சிறுநீரகத் தூண்டல்கள் .அடடா !
15.oஒலிகள் , மந்திரம் , பயன்பாடு :
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டுதல் -பயன் -நோய் எதிர்ப்பு சக்தி (வர்ம சாத்திரம் ) எடுத்து காட்டு -ய் , ர் , ல் , ஷ் , ஸ் , ழ் , ஸ்ரீ , பிற இதுபோல் .
இரண்டு உதடுகள் ஒட்டல் :எ .கா .ம் , மா , ப் ,...பயன் கர்வ நாடி DU இனவிருத்தி நாடி REN இணைதல் -சர்வநாடி சமநிலை இயக்கம் (நாடி சாத்திரம் அக்கு ப ங் ச ர் படி ) எடுத்துக் காட்டு :ம்மா ! ப்பா ! ராம் ! மரா ! நாராயணா ! நமசிவாய ! ஸ்ரீராமர் ! முருகா !நல்ல தமிழ்ப் பெயர் களும்தான் .எ .கா .முத்து , பூமாலை , மதி , நிலா , பரிதி , வட சொல்லில் சுமித்ரா , பவித்ரா , கமலா ..பிற .உங்கள் பெயர்களையும் பிரித்துப் பாருங்கள் .எ .கா .ராம் =ர் +ஆ +ம் =நாக்கு ஒட்டல் +காற்று வெளியேற்றல் +உதடு ஒட்டல் =நோய் எதிர்ப்பு +நோய் நீக்கம் +நாடி சமன் .
பெயரே மந்திரம் .நன்கு உச்சரியுங்கள் .
படித்தமைக்கு நன்றி .அன்புடன் , ஆ .மதி யழகன் .

Tuesday, 16 September 2014

        வாழ்க்கை  நடைமுறைகளில்  அக்கு ப ங் ச ர்  புள்ளிகள் பகுதி 2
             6.மலை ஏறும்போது கால் கை யின் யாங் பகுதிகள் வலிவாகத் தூண்டப்படும் .
         7.நடப்பது போல் தவழ்வதும் ஒரு பயிற்சி .முட்டி நெகிழும் தன்மையால் வலுவாகும் .Sp9St 35.
         8.உள்ளங்காலில் முன்னங்காலில் மையத்தில் உள்ளது K 1.இ தை த் தூண்டி (கை கட்டை 
விரலால் 21 முறை கடிகார சுற்றில் சுழற்றி 60 முறை விட்டு விட்டு அழுத்துதல் ) மயக்கத்தில்  
உள்ளவரை எழுப்பலாம் 
         ஒரு நாடி இருந்தால் மற்ற நாடிகள்  எழுப்பலாம் .மூச்சு இருந்தால் நுரையீரல் Lu  நாடி 
 உள்ளது .இப்போது அவரின் நான்கு விரல்களை ஒரு பிடி பிடியுங்கள், அதற்கு மேல் உள்ளங்கையை  ஒரு பிடி , மணிக்கட்டு ரேகையோடு ஒரு பிடி , உள் முழங்கை மடிப்போடு ஒரு 
பிடி .பிற நான்கு நாடிகள் உயிர் பெறும் .Lu 11, Lu 10, Lu 9, Lu 8, Lu 5
       9.விடியற் காலையில் கை மரத்து ப் போனால் இதயம் பெரிகார்டியம்   இயங்கவில்லை .அதைத் தூண்ட Lu 10 இரண்டு அல்லது மூன்று முறை அமுக்க உடன் சரியாகும் .வலக்கையில் Lu 10 அறிய , அதன் மேல் இடக்கையின் ஆள்காட்டி விரல் , நடு விரல் கவிழ்த்து 
மணிக்கட்டு ஒட்டி இணையாக வைக்க நடு விரல் முனை தொடும் இடம் Lu 10.
    10.ம ணி உருட்டல் , கோலம் போடுதல் , பள்ளாங் குழி விளையாடல் ...இவற்றில் 
ஆள் காட்டி விரல் , கட்டை விரல்  நுரையீரலைத் தூண்டுகின்றன .பிற விரல் முனைகள் இதயத்தை தூண்டுகின்றன .விரல் முனைகளில் பல தூண்டும் மர்மங்கள் அடங்கியுள்ளன .
உட்கார்ந்த நிலையில் உடல் பயிற்சி .எழுதும் பயிற்சியில் உலோகப் பேனா நன்று .
     படித்தமைக்கு நன்றி .

Monday, 15 September 2014

வா ழ் க் கை ந டை முறைகளில் அக்கு ப்ங்க்சர்  புள்ளிகள் 
           1.மூ க் கில்  உ ஷ் என விரல் வைத்து எச்சரித்து  அமைதிப் படுத்தலில் -பயன் -சிறிய  ரத்த  கசிவுகள்  அடங்குகின்றன .இரத்த க் குழாய்கள்  அமைதி அடைகின்றன  (அக்கு புள்ளிகள் Du 26, Ren 24
        2.படுக்கும் நிலையில் அட்டாணிக்கால் போடுவதால் -பயன் -பைல்ஸ்  (மூலம் ) தடுக்கப் படுகிறது UB 57
      3.தண்ணீரை கையில்  எடு த்து முகம்  கழுவுவதால் உள் ளுருப்புகள் சிறுநீரகம், மண்ணீரல், கல்லீரல் K 27, Sp 21, Liv 14 இவைகளும் கண்ணிமையில்  உள்ள UB 1, St 1, GB 1 இவற்றை த் தூண்டி முழுமை அடைகின்றன .
     4.காதலர்கள் கண்ணிமையில் முத்தமிடலால் , புத்துணர்ச்சி  கிடைப்பதன்  காரணமும் இதுவே .
     5.நீச்சல் இடும்போது உடல், கை , கால்கள்  யின்  பகுதியும் எதிர்  நீச்சலில் குனிந்து நீந்த  முதுகு , கை , கால்கள் யாங் பகுதியும்  முழுமை ஆகி  புத்துணர்ச்சி  தரும் .
    படித்தமைக்கு  நன்றி