Monday, 30 November 2015

Tamil muraiyil acupuncture -2/3.1

3. மனம் வழி நோய் விளைச்சல்.

உயிர் ஆற்றல் :
 உயிருக்கான பிரபஞ்ச மனம் ஆகச் செயல்படும் நுரையின் ஆற்றலும் , உயிரின் ஆழ் மனமாகச் செயல் படும் தாய், தந்தை 50:50 ஆற்றல் பெற்ற சிறுநீரகமும் இணைந்து உயிர் ஆற்றலாகச் செயல்பட்டு ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிர் சாரத்தை வழங்குகின்றன.

3.1 நோயில் மனதின் பங்கு 

மனதின் காணும் பகுதி உடல். உடலின்  காணாத  பகுதி மனம். உயிரும் உடலும் மனத்தால் முழுமையாக இணைக்கப் பட்டு இருக்கின்றன. 
உயிர் --> மனம்  --> உடல். 
 இயங்கும் உயிர் ஆற்றல்தான் பசியுணர்வு, பாலுணர்வு, பாச உணர்வு ,  விருப்ப உணர்வு களைத் 
 தோற்றுவிக்கிறது. இவற்றின் கட்டுப்பாடு அற்ற வெளிப்பாடுகளை , கற்பிக்கப் பட்ட லாப உணர்ச்சி (தான் ) அடிமனமும் , நாகரீகம் பார்க்கும் மேல் மனமும் (சூழ்நிலை ) முரண்பட்டு தடை செய்யும் போது இடையூறுகள் உடலில் பதிவு செய்யப் படுகின்றன. 
      இவையே உடலில் விளையும் சிறு நோய்கள்.
எ . கா. இருமல், தும்மல், சளி, மயக்கம், வாந்தி, மலச் சிக்கல், தலை வலி. ....
 இந்த சிறு நோய்கள் உடலின் ஓட்டப் பாதையில் அடையாளங்கள் ஏற் படுத்துகின்றன . அவை 
ஓட்டப் பாதை  இயக்கத்தைத் தடை செய்வதின் அளவைப்  பொறுத்து , நோய்கள் பல பரிமாணங்களை வெளிப்  படுத்துகின்றன. விளைவு , ஐம்பூத நோய்கள்.
   அடுத்து நோய் தீர்வு முறைகள்.
அன்புடன், ஆ. மதி  யழகன்..    

Tamil muraiyil acupuncture -2/2.4

2.4 பிரபஞ்ச மனம் : மனிதன் , சித்தர் தத்துவம்.

 மனிதன் பிறக்கும் போது தலை உச்சி வழியாக உள் நுழையும் உயிர் காற்று, பிரபஞ்ச அறிவை உள் இறக்கி, ஐம்பூதச் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. உயிர் இயக்கம் முழுவதும், 
                    (1) பிரபஞ்ச மன இணைப்பில் (LUNGS )
                (2) ஆழ் மனத் தொடர்பில் (KIDNEY ) 
                (3) ஒரு குறிப்பிட்ட பெயரில் (LIVER ) 
 ஒரு மனிதனிடத்தில் வெளிப் படுகிறது.
 ஒரு மனிதனைப் புகழ்வது என்பது, பிரபஞ்ச முதன்மையைப் புகழ்வதே ஆகும். ஒரு மனிதனை இகழ்வது என்பது தவறு. அவனிடம் இன்னும் பிரபஞ்சம் வெளிப் படவில்லை என்பதே ஆகும். 
நோக்குக :
              (1)    பெரியோரைப் புகழ்தலும் இலமே 
                         சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே 
                                    ---கணியன் பூங்குன்றனார் 
           (2) எல்லாப் புகழும் இறைவனுக்கே 
                         ----நபி நாயகம்.
         (3) எல்லோருமே புத்தர்கள் . சிலர் இப்போது  புத்தர்கள் ; பிறர் வருங்காலப் புத்தர்கள் .
                  ----ஓஷோ . 
 சித்தர்கள் (ஞானிகள் ): 
             பிரபஞ்ச மனம் ஆகிய நுரையீரலில் காற்றைக் கட்டுப் படுத்தி, இயக்கி, ஆழ்மனம் நீர் ஈரல் 
 இணைத்து, அடிமனக் கல்லீரலைத் தூய்மை செய்து, மேல் மனம் (பெரி கார்டியம் ) தீயின் பகுதியில் அன்பில் நிறைகின்றார் ஞானிகள். அவர்கட்கு வயிற்று  உபாதை மண் ஆகிய நுண் மனத்தால் நிகழாது, உணவின் தீமையால் நிகழலாம். முக்காலம்  உணர்வதால் அவர்கள் விரும்பின் அதை அனுமதிக்கலாம் , அல்லது ஏற்கலாம். புத்தரின் கடைசி காலத்தில் தவறான உணவு விரும்பி ஏற்றார். 

2.5 மன ஈரல் வடிவம்.

  எண்        பூதம்               மன வகை             குறிப்பு 
  4.    நுரை ஈரல் --------பிரபஞ்ச மனம்  --- தியானத்தில்  ஆழ்மன நுழைவு 
  5.  நீர் ஈரல்  -----------ஆழ்மனம்  -------ஆழ் கடல் நிகர்.
 1.  கல்  ஈரல்  -----------அடிமனம்  ----------உறக்கத்தில் ஆழ் மன நுழைவு. 
  2. தீ ஈரல்  -------------மேல் மனம்  ----------நீங்கள் இப்போது  இங்கே. 
  3.  மண் ஈரல்  ----------நுண் மனம்  --------விளைச்சல் தெரியும் இடம் 
 4 -->5--> 1--> 2--> 3  வரை கட்டுப்பாடு சித்தரிடம் உண்டு.
1, 2, 3 மனிதனிடம் உண்டு. ஒரு நாடகப் பாத்திரம் போன்ற  வாழ்வு. 
கருத்துப் படம் :   மனதில் தலை உடைய நாகம், நுரை எனும் வால் அசைவால்  இயங்குகிறது.
 எல்லா நிறங்களையும் உள்ளே அடக்கியது வெள்ளை நிறம். எல்லா வற்றையும் தன் அகத்தே கொண்டது பிரபஞ்சம் ஆகிய நுரையீரல்.
உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு , உயிர் மர்மம் எல்லாம் நுரையீரல் கொண்டு உள்ளது.
 அடுத்து மனம் வழி நோய் விளைச்சல்.
அன்புடன், ஆ, மதி  யழகன். ...

Sunday, 29 November 2015

Tamil muraiyil acupuncture -2/2.3

2.3 மன இயக்கம் - நனவும், கனவும்.

மேல் மனம் , அடிமனம் :
    குடும்பம், சமுகம் இவை 'மேல் மனதை ' இப்படித்தான் எனத் தீர்மானிக் கின்றன . குழந்தைப் 
பருவத்தில் இருந்து பார்த்து, கேட்டு, நுகர்ந்த அனுபவங்கள் 'அடிமனத்தைத் ' தீர்மானிக் கின்றன.
அடி மனமே 'நான் ' எனும் பாத்திரத்தை ஏற்றுச் செயல் புரிகிறது.
    மேல் மனம், அடிமனம் இரண்டுமே கர்வம் அல்லது அகந்தையை உள்ளாகவும்,  அறம் , தர்மம் 
என மேலாகவும் கொண்டு உள்ளன.

கனவில் ஆழ்மனம் :

      அடிமனம் (கல்லீரல் ) பல அடுக்குகளை உடையது. கால வாரியாகப் பதிவுகள் / படிவுகள் உண்டு. மேல் மனம்  அடி மனத்தில்  படிந்தவாறு உள்ளது. அடி மனம் கனவு காணும் போது , 
ஆழ் மனத்தில் எண்ணங்கள் இறங்குகின்றன.
  நிலை 1: தேர்வுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு த் தவறாமல் சென்றவன், கனவில் தவற விடுவதாய்க்  கண்டு  பதறுகிறான். எனவே வெற்றிகள் கனவில் மாறாகத் தோல்வியில் 
முடிகின்றன. என்றோத் தோன்றிய 'அச்சம் ' என்ற உணர்வு ஆழ்  மனத்தில் ' முறிக்கப்பட்டு  ' 
 சம நிலை எய்துகிறது. கதை, திரைப் பட அச்சங்கள் நேரடி அனுபவம் போல ஏற்பட்டு கனவில்  இருந்து தீடீர் என்று விழிப்போம். ' பாம்பு ' என்ற சொல் மேல் மனதில் பதியும் என்று இரவில்  
 சிறுவர்கள் உச்சரிப்பது தடை செய்யப் பட்டு உள்ளது.
 நிலை 2: ' ஐஸ் கிரீம் ' உண்ண வேண்டும் எனும் நிறைவேறாத மேல் மன ஆசை, சில நாட்களிலேயே கனவில் உண்பது போல காட்சி உண்டாகிறது. ஆக என்றோ தோன்றிய நிறைவேறாத ஆசை அல்லது விருப்பம் திடீரெனக் கனவில் நிறைவேறுவதன் மூலம் ஆழ் மனம்  ' ஆசையை ' முறித்து உணர்வுச் சமநிலை எய்துகிறது.
 முடிவு : ஆழ்மனம், சுனாமி போல், பூகம்பம் போல் தன்னிடத்து சரி (+) , தவறு (-) என்பதை அண்ட விடுவதில்லை. அது தேவை நிறைவேறச் செயல் படுகிறது. சரி, தவறு பாகுபாடு இல்லை. 
 அக்கு பங் சர் பார்வை : மனிதனின் மனம் என்பது மேல் மனம் (பெரி கார்டியம் ) , அடிமனம் (கல்லீரல்) எனும் இரண்டு வட்டங்களுள் பகலில் சுற்றி வருகிறது. (பழைய கோபதாபங்கள் 
 திடீர் என வெளிப் படுவது இதனால்தான். ) இரவு, உறக்கத்தின் போது ஆழ் மனம் (சிறுநீரகம்) 
 அதை உள் வாங்கி (+), (-) இன்றி முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுகிறது. தீவிர உணர்வாகிய பயம் அல்லது ஆசையே நிறைவேறுகிறது,
பயன் படுத்தும் விதம் : பயம் அற்று , அகக் காட்ச்யாய்  விருப்பத்தை [ நல்ல முடிவுகள் உள்ளதுதான்  நிலைத்த புகழ் தரும். ]  எதுவானாலும் மேல் மனத்தில் விதைக்க, அறுவடை ஆவதாகக்  காணின் அது நனவில் கை கூடி வரும்.  இதை உறங்கு முன் செய்ய வேண்டும். 
          எ . கா . என் உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது எனக் கூறி P 9 மனம் கல் என்ற புள்ளியை (நடுவிரல்  முனை ) அழுத்தி மூச்சு எடுத்து விடுவதை, மூன்று முறை செய்ய வேண்டும். 
  நனவில் உள்ள  மேல்மனம், அடிமனம் இவையே உங்கள் குணம், உடல்நலன் இவற்றைத்  தீர்மானம் செய்கின்றன. 
  நல்ல உளநலம் --> நல்ல உடல்நலம் --> நல்ல உள நலம்.  
அன்புடன்,  ஆ. மதி  யழகன் .  

Tamil muraiyil acupuncture -2/2.2

2.2 ஐம் பொறி - எதிர் /நேர் உணர்வுகள்.

 எந்த ஒரு நோயின் தொடக்கமும் உணர்வின் ஆதிக்கத்தில் தோன்றுகிறது. ஐம் பொறி ஆகிய புலன் உணர்வுகளில் அடையாளம் காட்டுகின்றன. அவற்றை சிறு நோய் எனப் பொருட் படுத்தாமல் காரணம் கண்டு தெளிய வேண்டும். புலன்கள் தொடர்ந்து வலிமை குன்றும் போது  நோய்கள் பூதங்களின் வலிமை குறைத்து ஐம் பூத நோய்களாக மாறுகின்றன. பட்டியல் ----
பொறி--------பூதம் --------எதிர் உணர்வு -------நேர் உணர்வு --
கண் --------கல்லீரல் ------சினம் ---------இரக்கம் ---
நாக்கு ------தீ ஈரல் -பெரி கார்டியம் --பெருமை , பரபரப்பு - தெளி வு, அமைதி 
வாய்           மண்ணீரல்         கவலை          செழுமை 
மூக்கு         நுரையீரல்       துக்கம்       உயிர்ப்பு அல்லது பரிமாறல் 
காது       நீர் ஈரல்           அச்சம்          நம்பிக்கை 
    கண்ணில் எந்த கோளாறு வந்தாலும் சின உணர்வு  வெளிப் படாமல் உடலில் வெப்பமாக உள்ளது .இதற்கு தீர்வு கல்லீரல் ஓட்டத்தில் காண மன, உடல் தீர்வுகள் உடனே கிடைக்கும். கால் கட்டை விரல் புள்ளி Liv 1. மேலும் ஓய்வு , உறக்கம் சரி பார்க்க வேண்டும். 
 இதைக் கண்டும் காணாமலும் விடத் தலை வலி வரும். நடை  K 1 தூண்டுவதால் தீர்வு. (கல்லீரல் தாய் உதவி) . சின் முத்திரைப் பணிகள் Lu 11 செய்தாலும் தீரும். (கல்லீரல் தாயின் தாய் ) . இரண்டும் இல்லாதபோது கல்லீரல் அடிக்கடி அல்லது நிலையாக அதன் மூலப் புள்ளி ஆகிய Liv 3 - நுரை மண்ணில் போய் நிற்கும் . இதுவே இரத்த அழுத்த நோய் என ப் பெரு நோய் 
ஆகி விடுகிறது.
 மாறுபட்ட உணர்வு தீர்க்கப் பட நல்ல வாழும் முறை (LIFE STYLE ) வேண்டும். 
நல்ல வாழும் முறை இல்லாத போது சிறு நோய்க்குப் பின் பெரு நோய் உட்கார்ந்து , வாழ் நாள் வரை மருந்து.
   இது போல் பிற பொறிகளே முதல் அடையாளம் ஆகின்றன.
  ஆக, ஐந்து பொறிகளிலும், புலன் வாயிலாக உணர்தல் அதாவது எண்ணம் நேர்மறை (+) ஆக 
இருக்க வேண்டும். சொல்லும், செயல்களும் அது  போல் இருந்தால் நோய் இன்றி நீண்ட நாள் 
 வாழலாம். இதுவே நோயின்மைக்கு முதல் படி. 
    திருக்குறள் : பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
                           நெறிநின்றார் நீடுவாழ் வார்.
  பொருள் : ஐம் பொறிகளை அடக்கி ஆளவல்ல இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியாளர் நீண்ட நாள் வாழ்வார். ஆக, ஆமை போல் 'கெட்டது  ஒடுக்கி நல்லது ஊக்கி ' வாழ நோயில்லை.
குறிப்பு : நன்று (+), அன்று (-) இரண்டு நிலையில் நடுவு நிலைமையே சிறப்பு. தேர்ந்து  எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால் நேர்மறை (+)  எடுக்க.
அடுத்து மன இயக்கம் காண்போம்.
அன்புடன், ஆ. மதி  யழகன்....

Saturday, 28 November 2015

Tamil muraiyil acuouncture -2/2.1

2. மன ஈரல் தத்துவம்.

உரு , அரு உரு, அரு விளக்கம் :
  கல்லீரல், தீ ஈரல், மண்ணீரல், நுரையீரல், நீர் ஈரல் ஐவகை ஈரல்கள் ஐவகை  பூதங்கள் ஆக உள்ளன. இவற்றை கல், தீ, மண், நுரை, நீர் எனச் சுருக்கமாகக் கூறுகிறோம். இவற்றை பொருளாக ' இதோ ' என்று சுட்டவோ , பிரித்து எடுத்தோ, காட்டி விடலாம். ஏனெனில் இவை பருப்பொருள்கள் . ' உரு ' எனக் கூறலாம். மனமே நுண்பொருள் . 'அரு ' எனக் கூறலாம்.
             பெரி கார்டியம் மட்டுமே மேல் மனத்தின் ஒரு பகுதியாக உள்ள அருவத் தன்மையும் (ஏனெனில் பெரி கார்டியம் சுற்றி உள்ள மின் காந்த இடங்களும் சேர்ந்தவை ) பார்க்கத் தக்க 'ஈருறை நடுவில் திரவம் ' என உருவத் தன்மையும் கொண்டு "அரு உரு " வாக உள்ளது.
         இறைவன் : இறைவன், உருவானவனாகத் தோன்றுவான் ; அருவானவனாக இருப்பான் ; சிவலிங்கம் போல அரு உரு வாகவும் இருப்பான் என்பது வழக்கு.
          மனிதன் : ' மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ' மனிதனைப் பொறுத்தவரை 
 உரு வடிவுகள் : கல், தீ, மண், நுரை, நீர்.
 அரு உரு : பெரி கார்டியம் (மேல் மனம்) 
 அரு : எவை? முழு மனம் என்பது எது, எப்படி, எவை? 

2.1 மன ஈரல் ஐம் பிரிவு ஐம் பூதமே.

    முதல் புத்தகத்தில் ,
பெரி கார்டியம் - மேல் மனம் ( consc ious mind ) 
கல்லீரல் - அடி மனம் ( sub conscious mind )
நீர் ஈரல் - ஆழ் மனம் (super conscious mind )
முதல் கட்டுரையின்படி , 
மண்ணீரல் - நுண் மனம் (minute conscious mind ) 
நுரையீரல் - பிரபஞ்ச மனம் ( universal conscious  mind ) 
 ஆக, இந்த பஞ்ச பூதங்கள் அனைத்துமே மன ஈரல் அல்லது முழு மனம் என்பதை மனிதனுள் நிறுவுகின்றன. பொதுவாக மனம் என்பது மேல் மனம் (PRESENT ) மட்டுமே. அதுவே நிகழ் காலத்தில் சிந்தனை நிகழ்த்துவதால். இது ஒரு பனிப் பாறை , நீரில் மூழ்கிக் கிடக்கும் போது நமக்கு பனிப் பாறை அளவு என்பது கண்ணுக்குத் தெரிவதே ஆகும்.
 உண்மையில் மனம் மிக விரிவானது.
மனதை ஒரு பாம்பாகக் கருதினால் தலை , மேல் மனம் பெரி கார்டியம்.
கல், நீர், உடல்.
 உடல் வாலாக  நுரையீரல். சீறும் இடம் மண்.
அடுத்து மன உணர்வுகள் தாக்கம் காண்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்...

Friday, 27 November 2015

Tamil muraiyil acupuncture-2/1.5

1.5 நுண் மனம் (மண் தொகுதி )

வயிற்றின் செரிமானம் , மனதின் சோகம் , சினம், பெருமை, கவலை, வெறுப்பு, துக்கம், மகிழ்ச்சிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது . அதனால் மண்ணீரல் , கணைய சுரப்புகள் பாதிப்பு உறுகின்றன . எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் மண் பூதம் நுண் மனம். 
      மண் பூதம் , பெண்ணின் கருப்பை கட்டுமானங்களையும் , மாத விலக்கையும் நிருவாகம் செய்வதில் உள்ள பங்கினைக் கருதினால் இதைப் பெண் மனம் எனவும் சிறப்பாகக் கூறலாம். பெண்கள் வெட்கம் வரும்போது கால் கட்டை விரலைக் கொண்டு மணலில் கீறுவர் . அங்கு Sp 1
மண் தொடக்கப் புள்ளி உள்ளது. இதன் முடிவுப் புள்ளி Sp 21 விலாப் பகுதியில் உள்ளது, விலாப் பகுதியில் கிச்சு கிச்சு செய்யக் கூசும். மண்ணீரல் ஓட்டத்தில்  மனதின் உணர்வுகளும் பெண்ணின்  உணர்வுகளும் பிரதிபலிப்பதைக் காணுங்கள்.
    Sp 1 - அஜீரணத் தலை வலி ; Sp 2 - சர்க்கரை நோய் விளைவு ; Sp 3 - ஹீமோக்ளோபின் பாதிப்பு , இரத்த சோகை ; Sp 6 - மாத விடாய் பாதிப்பு ; Sp 9 - செரிமானக் கோளாறால் மூட்டு வலி ; மிகவும் முக்கியமான புள்ளி Sp 5 - அனைத்து அடைப்பும் நீக்கும் புள்ளி. மன அடைப்பு உடல் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும் இடம், Sp 5 - மண் நுரை (எதிர்ப் புள்ளி நுரை மண் Lu 9 இதுவும் வேலை செய்யா விட்டால் இரத்தக் குழாய் அடைப்புகள் . தூண்ட சரியாகும்.)
     மண்ணின் துணை உறுப்பு இரைப்பை . இதன் தொடக்கம் St 1 - கண் இரைப்பையின் மையப் பகுதியில் , கரு விழி நேர் கீழே ஆரம்பம், கண்ணீர்த் துளிகள் இறங்கும்  தொடக்கக் கோட்டுப் புள்ளி . அன்பு என்பது மனதின் மிக நுண்ணிய உணர்வு. இது பாதிக்கப் படும்போது கண்ணில் கண்ணீர் பெருகுகிறது. இதையே திருவள்ளுவரும் ,
 ' அன்பிற்கும்  உண்டோ  அடைக்கும் தாழ்    ஆர்வலர் 
   புன் கணீர்   பூசல் தரும்.' --71
 அன்பு போல் மற்றும் அவலம், மகிழ்ச்சி, போன்ற தீவிர உணர்வுகளின் போதும் கண்ணீர் வருவது நுண்ணிய உணர்வுகள் மனதை பாதிப்பதையே அதனால் வயிறு (stomach) கெடுவதையே  காட்டு கின்றன. 
   உலகில்  பிறந்து  வந்த போது வயிறு வெறும் பலூன்பை . எல்லா நோயும் இங்குதான் (வயிற்றில் ) தொடங்கு கிறது. மண் பூத இருப்பு மைய பூதம். [1-2-3-4-5] 
   மண் பூதம் நோய்க்கும் முதல், தீர்வுக்கும்  முதல்.
 நீர் பூதம் உயிர் இருக்கவும் முதல், போகவும் முதல்.
 கல்லீரல் பூதம் உடல் கட்டுமானம் ஏற்றவும் முதல், குறைக்கவும் முதல்.
 தீ பூதம் பராமரிப்புக்கும் முதல், சீரழியவும் முதல் 
 நுரை பூதம் உடல், மனம், உயிர் பராமரிப்புக்கும் முதல், சீரழியவும் முதல்...
ஆகப் பஞ்ச பூதங்களே மன நல பாதிப்பு அடைந்து உடலில் விளைவு காட்டுகின்றன. உடலில் விளைந்த பிறகு உணர்விலும் காட்டுகின்றன. ஆகப் பஞ்ச பூதப் புள்ளிகள் (அக்குப் புள்ளிகள் ) உடலையும் அசைக்கும்; மனதையும் அசைக்கும்.
மன ஓட்டம் பஞ்ச பூத ஓட்டமே!
அன்புடன் ஆ. மதி யழகன்.

Tamil muraiyil acuouncture-2/1.4

1.4 பிரபஞ்ச மனம் (நுரையீரல் )

நுரையீரல் நீரின் தாய் . விதைகளுக்கு வெளிச்சமும் காற்றும்  போல நுரையீரல் சிறுநீரகத்திற்கு வலுத் தருகிறது. ஆக மூச்சுப் பயிற்சி இருந்தால் சிறுநீரக வலிமை எளிது . முழங்கை மடக்கும் பனி புரிந்தாலும் Lu 5 -நுரை நீர் தூண்டப்பட்டு  சிறுநீரகம் வலுவாகும் . இதன் மாற்றுப் புள்ளி K 7 நீர் நுரை (நீர் ஓட்டத்தில் நுரை வலு கேட்டு வாங்கும் இடம் ) சிறுநீரகக் கல் கரைக்கும்.
    பிரபஞ்சத்தில் இயங்கும் ஒளித்துளி காற்று வடிவில் தலை உச்சிப் புள்ளி வழியே நுழைந்து நுரையீரல் பலூன்  பையில் நுழைகிறது . ஆயா முதுகில் தட்ட இயங்குகிறது. உடலில் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கிற காற்று பிரபஞ்ச சக்தியை உள் வாங்கித்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது . உடலில் மூக்குவழி காற்று இயக்கம் நடைபெற்றாலும் , உடலில் உள்ள ஒவ்வொரு நுண் துவாரம் வழியாகவும் சுவாசம் நடைபெறுகிறது . 
    பிரபஞ்ச ஆற்றல் முழுமையாக உள் வாங்க , பஞ்ச பூதங்கள் உள்ள மேல் உடல் (முண்டம்) அதாவது மார்பும் முதுகும் திறப்பாக இருப்பது நன்று. மன்னர்கள் அணிகலன் கூடிய வெற்று மார்பில் இருப்பர் . சில கோவில்களில் மேல் சட்டை கழற்றுவது மரபாக உள்ளது . ஆண்கள் பனியன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு , துண்டு போர்த்துவது வழக்கமாகக் கொள்ளலாம் . பெண்கள் முதுகு திறப்பாக ஜாக்கெட்டு அணிவது ஏற்கெனவே வழக்கில் உள்ளது . முதுகுப் புள்ளிகள் சுவாசிக்க உதவும். அங்கு நீர்ப் பை U B ஓட்டம் உள்ளதால் சிறுநீரக வலுவுக்கு உதவும். 
 மார்புப் பகுதியில் தொடங்கும் நுரையீரல் ஓட்டம் கை கட்டை விரல் வெளி நகக் கண் அருகே Lu 11 என முடிகிறது. நுரையீரல் துணை உறுப்பு பெருங் குடலின் ஓட்டம் இரண்டாம் விரல் ஆகிய ஆள் காட்டி விரல் வெளி நகக் கண் L I 1 அருகே தொடங்குகிறது . முடிவு மூக்கின் அடியில் உள்ள L I 20 என்ற புள்ளி ஆகும். ஆகக் கட்டை விரலும் , ஆள் காட்டி விரலும் சேரும் சின் முத்திரை நுரையீரல் சுற்றை முழுமை செய்து உடல் நலம் தருகிறது. மேலும் பிரபஞ்ச மனத்தை கட்டி இழுத்து ஆழ் மனமாகிய சிறுநீரகம் உடன் இணைக்கிறது . உறக்கம் இல்லாமலே ஆழ் மனம் புகுதல் ஆகும். அறிவும் , உணர்வும் இரு முனை இணைக்கும் விழிப்புணர்வு ஆகும்.
   மூக்கின் பணி களுள் ஒன்று , வாசனை பார்த்து உணவை வயிற்றினுள் செல்ல அனுமதி தருவது. இனி மண்ணீரல், கணையம், வயிறு இணைந்த மண் பூதம் நுண் மனம்  ஆக செயல் படுவது காண்போம் . 
 அன்புடன் ஆ . மதி யழகன் ...

Tamil muraiyil acupuncture-2/1.3

1.3 ஆழ் மனம் (சிறுநீரகம் )

      சிறுநீரகம் ஆழ் மனமாகச் செயல்பட்டு தாய் தந்தையின் 50:50 பண்புகளை விளைவிக்கிறது  எனக் கூறி இருந்தோம் . இதுவே காலங்களால் முந்திய ஆதி செல்லின் தொடர்ச்சி உறுப்பு எனவும் கூறி இருந்தோம். பல், எலும்பு , உடல் வளர்ச்சியோடு ஆழ் மன விருப்பங்களையும் நிகழ்த்துவதும் இதுவே . சிறுநீரக ஓட்டத்தின் தொடக்கப் புள்ளி K 1 . இது முன்னங்கால் மையத்தில் உள்ளது . இதற்கு சமமான கையில் உள்ள புள்ளி P 8 . இது மனதின் (மேல் மனம் ) வலுவான புள்ளி. ஆடு , மாடு , பொதுவாக மிருகங்கள் நான்கு கால்கள் ஊன்றி நடக்கும் போது மேல் மனம் , ஆழ் மனத்தோடு நேரடியாக இணைக்கப் படுகிறது. மரங்கள் நேரடியாக வேரோடு இணைக்கப் படுகின்றன . மரங்களும், மிருகங்களும் தாம் உண்மையில் பிரபஞ்சத் தியானத்தில் இருக்கின்றன என ஞானிகள் கூறுவர் . மனிதன் இரு கால்கள் ஊன்றி நிற்பதால் கண் வழிக் கல்லீரல் இயங்கி ஆழ் மனத்தோடு இணைகிறது . கல்லீரல் எழுப்பிய மேல் மனமோ பழைய அனுபவம் அல்லது எதிர் கால ஆசை அலைகளில் அசை போட்டு நிற்கிறது. மேல் மனம் வெறுமையில் இருந்தால்தான் அடிமனம் அறிந்து தெளிந்து ஆழ் மனம் புகல் முடியும் . பல அற்புதங்கள் நிகழ்த்த முடியும். இன்றேல் கனவு மட்டுமே நினைவுகள் இணைத்து காட்சிகள் எழுப்பும் . 
    அடுத்து சிறுநீரகத்தின் இறுதிப் புள்ளி K 27 காலர் எலும்பின் கீழ் முடிகிறது. இதன் அருகே , மார்புப் பகுதியின் முதல், இரண்டாவது விலா எலும்புகள் இடையேதான் நுரையீரல் தொடக்கப் புள்ளி Lu 1 அமைகிறது என்பதைக் கவனிக்கவும். ஆக நுரையீரல் எனும் பிரபஞ்ச மனம் அடுத்து இணைகிறது . மேலும் சிறுநீரகப் பை ஓட்டத் தொடக்கம் U B 1 கண்ணின் உட்புற இமை ஓரம் மூக்கு ஒட்டி அமைகிறது. சிறு நீரகச் செய்தி நுரையீரல்  எனும் பிரபஞ்ச மனதிற்கு செல்கிறது  . FORWARD CALL SENT . சிறுநீர்ப் பையின் இறுதிப் புள்ளி U B 67 . இது காலின் சுண்டு விரல் வெளி நகக் கண் அருகில் உள்ளது . காலின் சுண்டு விரல் என்பது சிறுநீரகத்தை சுண்டும் விரல் ஆகும் . மேலும் அது நீர்ப் பையின் நுரையீரல் புள்ளி ஆகும். SECOND  CONTACT  . அடுத்து பிரபஞ்ச மனம் . 
 அன்புடன் ஆ . மதி யழகன் ...

Thursday, 26 November 2015

Tamil muraiyil acuouncture-2 /1.1

1.1 மேல் மனம் (பெரி கார்டியம் )

      பொதுவாக எந்த ஓர் ஓட்டமும் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது ? தொடங்கும் இடத்தில் என்ன நடக்கிறது ? முடியும் இடத்தில் என்ன நடக்கிறது ? என்ற தொடர்ச்சி கவனிக்கப் படுவதில்லை . அதை கவனிப்போம் . முதல் புத்தகத்தில் (தமிழ் முறையில் அக்கு பங் சர் 1) பெரி கார்டியத்தை P மனம் என்றே குறிப்பிட்டு இருந்தோம் . இதன் தொடக்கப் புள்ளிP 1 . இது மார்க் காம்பின் ஒரு சுன்  வெளிப் பக்கம் தொடங்குகிறது . இரு மார்புக் காம்புகள் சமச் சீராக உள்ளன. இட மார்புக் காம்பு சுற்றி மனம் இட அமைப்பில் உள்ளது . சமச் சீரில் அடுத்த பக்கத்திலும் அதன் விளைவு இருக்கும் . மண்ணீரல் S P , கல்லீரல் LIV ஓட்டங்களும் சமச் சீரே .
          பெரி கார்டியத்தின் இறுதிப் புள்ளி P 9 (நினைவு சக்திப் புள்ளி ) இது நடு விரல் முனையில் முடிகிறது . பிறகு அதன் துணை உறுப்பு மூ வெப்ப மண்டலம் Tw 1 நான்காம் விரல் அல்லது மோதிர விரல் வெளிப்புற நக முனையில் தொடங்கி , கண் புருவக் கீழ் முனை Tw 23 -ல் முடிகிறது . ஆக மேல்மனம் (பெரி கார்டியம் ) கண்ணை இயக்கும் அடிமனமாகிய கல்லீரலைத் தூண்டுகிறது . 

1.2 அடி மனம் (கல்லீரல் )

கல்லீரல் (LIVER ) அடி மனமாக ச் செயல் படுகின்றது என்று முன்பே குறிப்பிட்டு இருந்தோம் . கல்லீரல் அதன் வெளி உறுப்பாகிய கண் கொண்டு பலவற்றை உள் வாங்கி மூளையில் ஒரு பதிவும் , கண் பாப்பா (IRIS ) வில் ஒரு பதிவும் கொண்டுள்ளது .
 கண் பாப்பாவின் மேல் அரை வட்டம் அகக் கண்ணாக , உள்ளச் செய்திகளின் பதிவேடாக உள்ளது . கண் பாப்பாவின் கீழ் அரை வட்டம் உடல்ச் செய்திகளின் பதிவேடாக உள்ளது . 
[ IRIDOLOGY SHOW THAT YOUR EYES CAN GIVE A GLIMPSE OF THE STATE OF YOUR OVERALL HEALTH-google] இதை ஆராய்ந்தால் உடல் , உள நலச் செய்திகள் தெளிவாகத் தெரியும் . இதற்கென ப் படக் கருவிகளும் , கணினி மென்பொருள்களும் உண்டு. தற்போதுள்ள 
SCAN , MCR பயன்பாடுகள் குறையும் என்று இக்கருவி அறிமுகப் படுத்தாமல் மறைக்கப் படுகிறது.
  ஆகக் கல்லீரல் உள்ளம் , உடலின் நலத்திற்குக் காரணமாகவும் , தொலை தூர இயக்கியாகவும் உள்ளது . இறப்பு கல்லீரலில் நிகழும் போது கண் பாப்பா நிலை குற்றி விடுகிறது . அடி மன இயக்கம் கல்லீரல் சார்ந்தது . கல்லீரல் முதல் புள்ளி LIV 1 கால் கட்டை விரல் வெளி நகத்தில் தொடங்கி  விலா எலும்புகள் ஆறு , ஏழு இடையே முடிகிறது.. துணை உறுப்பு பித்தப்பை ஓட்டம் 
G B 1கண்ணின் வெளிப் புற ஓரம் தொடங்கி , காலின் நான்காவது விரல் நக வெளி முனையில் முடிகிறது G B 44. கல்லீரல் நமக்கு மின்னூட்ட மின்கலம் (RECHARGABLE  BATTERY )
 இதற்கு வலு தரும் தாய் சிறுநீரகம் நிலையான மின்கலம் (PERMANENT BATTERY )
     சிறுநீரகம் -கல்லீரல் உறவு நடையின்போதும் (K 1) , சம்மணமிட்டு அமரும் போதும்  (Liv 8) , உறக்கத்தின் போதும்  (விழிப் பாப்பா அசைவு ) சக்தி வேண்டும் போதெல்லாம் (அட்ரீனலின் சுரப்பு ) நிகழ்கின்றன.
அடுத்து சிறுநீரகம் -ஆழ் மனம் காண்போம் .
அன்புடன்  ஆ. மதி  யழகன் ..

tamil muraiyil acupuncture-2

தமிழ் முறையில் அக்கு பங் சர் -2

ஐம் பூத நோய் விளக்கம் [மனப் புள்ளிகள் , நான்கு சுற்றுக்கள் ]

               1.மனதின் ஓட்டங்கள் .

உடல் நலம் கருதுகிற துறை 'HEALTH DEPARTMENT ' என அழைத்தாலும் , நலம் (HEALTH ), நல வாழ்வு (HEALTH LIFE ) என ப் பொதுச் சொல் பயன்பாட்டால் 'நலத் துறை ' எனக் குறிப்பிடுவதே  சரி . நலத்தை உடல்நலம் , மனநலம் என்று இரண்டு வகையாகப் பிரித்தாலும் , அவை ஒன்றுக் கொன்று இணைந்து செல்பவை . உயிரியக்கம்  என்பது ஒரு தொடர் வண்டி என்று எடுத்துக் கொண்டால் , அதன் இரண்டு தண்டவாளங்கள் உடலும் மனமும் .இது ஓர் ஒப்புமையே . நலம் பெற இரண்டும் கவனிக்கப் பட வேண்டியவை . 
        உடலின் ஐம்பூத ஓட்டங்களை , மின்காந்த ஓட்டங்கள் எனவும் கூறலாம் . இவை உடலின் மேற் பகுதியில் ஆராவை ஓட்டிச் செல்லுகின்றன . இவை உள்ளும் வெளியுமாக விளிம்பு ஒட்டிச் செல்வதனால் உடலின் ஓட்டங்களையே மனதின் ஓட்டங்களாக க் கருதலாம் . இது நலம்  வேண்டும்  பாதையில் முக்கிய முடிவு.

        பாடல் :

                    ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து 
                        உடலில் உள்ள பூதங்களும் ஐந்து 
                      ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து 
                         உள்மனதின் பூதங்களும் ஐந்து -------------4
                      
                       இதயத்தின் பெரி கார்டியம்  மேல்மனம் 
                            இதன்பின் கல்லீரல் அடிமனம் 
                       இதயத்தை அட்ரீனளினால் இயக்கம் 
                              இரண்டு  நீரகமும்  ஆழ்மனம் ------------8

                        ஆழ்மனம்  இயக்கும்  அற்புதத்தை 
                               அழகாய்ச் செய்வன நுரையீரல் 
                         இழுக்கும் மூச்சு ஒவ் வொன்றிலும் 
                             இருக்கும் பிரபஞ்ச மனம்தானே ------------12

                          உள்ளத்தில் அச்சமா சினமா 
                             ஒரு பெருமையா ஒரு கவலையா 
                            உள்ளம் முடக்கும் துக்கமா 
                                ஒடிவது மண் எனும்  நுண் மனமே !-----------16

                         பெண்ணுக்கு இருக்கும்  பேராற்றல் 
                                பிள்ளையாய் ஆக்கும் பெருந்திறன் 
                          மண்ணுக்குப் பின்னே இவள்தானே !
                               நுண் மனம் இவளுக்கு பெண்மனமே !-----------20

    அன்புடன்  ஆ. மதி யழகன் . தொடரும்.