Tuesday, 21 November 2017

5 body acupuncture -One -Intro

           ஐந்து உடல் அக்குபங்சர் -ஆசான்.

             '0'-உடல்கள் முன்னுரை.

                    நாம் கண்ணால் பார்க்கிற உடலை தூல உடல்,பரு உடல், மற்றும் அன்னமயக் கோசம் என்றும் அழைக்கிறோம்.இங்கு கோசம் என்பது உரை ஆகும். இது

தொடர்பாக மேலும் தேடுகையில் தைத்திரிய உபநிடத்தில்

ஐந்து வகைக் கோசங்கள் குறிப்பிடப் பட்டிருந்தன.அவற்றை

 அக்குபங்சரோடு ஒப்பிட்டபோது ஐந்து கோசங்களும் அக்குபங்சரின் ஐந்து பூத எழுச்சிகளாக,ஆக்க சுற்றில் பொருந்துவதைக் கண்டேன்.அதன் விவரம்.

            (1) அன்னமயக் கோசம்- உணவில் வளர்ந்து அழிவது.

             (2) பிராணமயக் கோசம்- ஐந்து புலன்,உள்ளுறுப்பு 

இயக்கங்கள்.

               (3)மனோமயக் கோசம்-உணர்ச்சி,பல அடுக்கு, செயல்பாடுகள்.

               (4) விஞ்ஞானமயக் கோசம்-நன்று,தீது பகுத்து சுரப்பிகள் இயங்குதல்.

                (5)ஆனந்தமயக் கோசம்-எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அடுக்கு.மறைப்பானது,உணர்வது,அடைவது,இலட்சியம்.

                தைத்த்திரிய உபநிடதம் பிரம்மத்தைத் தேடுகிறது.

(1),(2),(3),(4)-ல் இல்லை.அதன் முடிவு: பிரம்மம் (படைப்பு சக்தி) ஆனந்தமயக் கோசத்திலேயே உள்ளது.

             'ஆனந்தம் பிரம்மனோ விய ஜானந்த்'

              "ஆனந்தமே பிரம்மம் என்று அறிக.

    இந்தக் கோசங்களைக் காணும்,காணா உடல்களாகக் கருதி

வரிசைப் படுத்தி தமிழ்ப் பெயருடன் கீழே.

 ----அட்டவணை-1--ஆசான் ஆ மதியழகன். 21/11/2017.


      

No comments:

Post a Comment