Wednesday, 22 November 2017

5 BODY ACU-INTRO3

 5 Body Acu-Intro -3
                     ஐந்து உடல் தோற்றம், நிலைப்பாடு.
       இந்த ஐந்து உடல்களும் இயல்பு சக்தி உடல்கள் [ NORMAL ENERGY BODIES ].கொடுப்பவர்,வாங்குபவர் அல்லது தாய்-மகன் உறவில் எழுகின்ற 'அலை' அல்லது அதிர்வின் தோற்றமே.
         (1) காரண உடல்/பிரம்ம உடல்/கரு உடல் கண்ணுக்குத்
தெரியாது.
         (2)குண உடல்/மன உடல்  கண்ணுக்குத் தெரியாது.
          (3)அஞ்சுக உடல்/சுரப்பி உடல் கண்ணுக்குத் தெரியாது.
           (4)தூல உடல்/பரு உடல் மட்டும் கண்ணுக்குத் தெரியும்.
           (5)சூக்கும உடல்/ஆரா கண்ணுக்குத் தெரியாது.ஆனால்
 உணர முடியும்.
"ஞானம்" இருந்தால் ஐந்தும் தெரியும். அக்குபங்சர் தெரிந்தால் புள்ளிகள் உடல் நிலையைப் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். எ.கா. K3 வலி-குதிகால் வலி- சிறுநீரகம்,வலிமை குன்றியதால்,ஊற்றுப் புள்ளி (SOURCE POINT) நாடி உள்ளது.
                ஐந்து உடல் நிலைப்பாடு.
       சிறுநீரகம் சரியாக இருந்தால்தான்,சிறுநீரக உறவில் உள்ள கல்லீரல் நன்றாக இருக்கும்.இது பிரம்ம நிலை.
        கனவில் இருப்பவனை "என்ன,பிரமையில் இருக்கிறாயா?" எனக் கேட்பது வழக்கம். கரு நிலை எனவும்
கூறலாம். (1) மரபுக் காரணங்களால் வரும் இயல்பான எண்ணங்கள் அருள் எண்ணம்/அரக்க எண்ணம்,பாலியல் ஈடுபாடு,மரபு செயல்கள் சிறுநீரகத்தில் இருந்து கிடைக்கும்.
                     (2) சூழ்நிலைக் காரணங்களினால் வரும், ஏற்படுத்தப் பட்ட 'நான்' எண்ணம்,குடும்பம்,வேலை,மொழி,இனம்,மதம்,அரசியல்,விருப்பு,வெறுப்பு,இவை கிடங்குபோல்
நிறைந்து இருக்கும்.ஆகாயம் அல்லவா!
            ஆனந்த மயக் கோசம்-பிரம்ம உடல்-பிரம்ம நிலைப்பாடு.ஒருவர் குணம் என்பது "எக்குடி பிறந்தார் என்பதும், எவ்வினம் சார்ந்தார் என்பதும்".சேர்ந்து தீர்மானிக்கும்.ஆக பிரம்ம உடல், குண உடலின் தாய்.
             எனவே,நோயாளியின் பின்னணி,பழக்க வழக்கங்கள்,மரபு உணவுகள்,இருப்பிடம்,வாழ்க்கை முறை எல்லாமும் "முதல்த் தீர்மானம்" செய்கின்றன.
-ஆசான். 22/11/2017.     

No comments:

Post a Comment