Friday, 25 November 2016

தமிழ் அக்கு பா.தி/ படைப்பு அளிப்பு

தமிழும் திருக்குறளும் ஆய்ந்த
த.ச.தமிழனார் அய்யா அவர்கட்கும்
தமிழும் திருக்குறளும் உணர்வால் தாங்கிய
தந்தையார் அரு.ஆறுமுகம் அவர்கட்கும்
தமிழ் பயிற்றுவித்த திருவாரூர்.வ.சோ.ஆண்கள்
உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்கள்
புலவர்கள் திரு இரத்தினசாமி,திரு ஞானச் செல்வன்,
திரு சண்முக வடிவேல்  அவர்களுக்கும்
தமிழ்த்தொண்டை தவறாது மாதந்தோறும் நிகழ்த்தும்
புலவர் எண்கண் மணி,திரு மோகன்தாசு அவர்களுக்கும்
தமிழ்ப் புத்தகங்கள் உலகெலாம் பரவப் பாடுபடும்
எழுத்தாளர்,பதிப்பாளர் யாணன் அவர்கட்கும்
-------அடி பணிந்து அளிப்பது.
        ஆசான் ஆ மதியழகன். சனவரி 2017.

Thursday, 24 November 2016

.தமிழ் அக்குபங்சர் பா.தி./பின் அட்டை.

              இந்த புத்தகத்தில்...
உடல்,மனம்,உயிர் காப்பாற்றும் அக்குபங்சர் மருத்துவமும்
திருக்குறளும் தலைப்புவாரி ஒப்பீடு செய்தல்
அக்குபங்சரின் ஐந்துபூதத் தத்துவம் தமிழரின் அறம்,பொருள்,இன்பம்,
காதல்,வீரம் இவற்றோடு இனிதே பொருந்துவதை அறியலாம்.
அக்குபங்சர் அறிந்தவர்கள் திருக்குறள் அறிந்து,இரண்டின் நுட்பத்தையும்
தெளியலாம்.திருக்குறள் படித்தவர்கள் அக்குபங்சர் மருத்துவ அடிப்படை
அறியலாம்.
எடுத்துக்காட்டு ஒப்பீடு:தெரிந்து வினையாடல்.
ஒரு செயலில் திறமை மட்டுமன்றி, ஈடுபட்டு செய்பவனையே,தலைவர்
தேர்ச்சி செய்ய வேண்டும்.அக்குப் பார்வை : சிறுநீரக வலிமை வேண்டுமெனில்
வழிகள் (1) சம்மணம் இடல், இயல்பான தன் வலிமை (K10,UB66) (2) கைப்பணி 
செய்ய தூண்டு வலிமை (Lu5) (3) சிறுநீரகக் கல்நீக்கி,மருந்துப் புள்ளி இயக்கல்
(K7) .கடைசிப் புள்ளி,திறன் புள்ளி ஆயினும் தேவை குறைவே.ஈடுபாட்டுடன்செய்ய,
சம்மணம் இடல் போதும்.
ஒப்பீட்டுடன்,ஒருவரிப் பொருள்தரும் குறள்சாறும் உள்ளது. 

ஆசான் ஆ மதியழகன் 

          இவரது (1) தமிழ் முறையில் அக்குபங்சர் (2) தமிழ்முறையில் மன அக்குபங்சர் 
எனும் நூல்கள் ஏற்கெனவே சந்தையில் பெரும் வெற்றியைச் சந்தித்து வருகின்றன.
இவர்,திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான்.த.ச.தமிழனார் ஊக்கம் தந்த படைப்பாளி
மற்றும் பேச்சாளர். அறிவியல்,கணிதம் பயிற்றும் ஆசிரியப் பயிற்சி பெற்ற ஸ்டேட் வங்கிக் 
காசாளர்.(ஓய்வு). விஞ்ஞானச் சுடரில் ' அறுமுகி [CUBE] ஆய்வும், தீர்வும் ' என ஆய்வுக் க.டுரை வடித்தவர். 'குறள் சாறு' படைத்தவர்.

Monday, 21 November 2016

தமிழ் அக்கு பா.தி. முகவுரை/ நன்றியுரை.

நன்றியுரை:

இந்நூல் சிறப்புற வெளிவரத் துணைபுரிந்து, ஆக்கமும்,ஊக்கமும் தந்து துணை நின்ற மனைவி
வளர்மதிக்கும் , வரைகலைப் படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளையநிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர உதவி புரிந்த மறைந்த திருவாரூர் .த.ச.தமிழனார் அய்யா அவர்கட்கும் ,நட்பில் உள்ள இயற்றமிழ்ப் பயிற்றகம்,தமிழ் இலக்கியக் கழகம், திருவாரூர் கலை இலக்கியக் கழகம் நண்பர்களுக்கும், அக்குபங்சர் நண்பர்களுக்கும், குடவாசல்,திருவாரூர்,தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி நண்பர்களுக்கும்,முந்தைய அக்குபங்சர் நூல்களுக்கு உளங்கனிந்த பாராட்டுக்களை அலைபேசியிலும், முகநூலிலும்,மின் அஞ்சலிலும், உங்கள் காணொலி (You tube) மூலமும் தெரிவித்து வரும் நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
             இந்நூல் கருக்கொள்ள உதவிய தமிழ்ப் பணியைத் தலைமேல் கொண்டுள்ள த.ச.குறளேந்திக்கும்,இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான் இளையநம்பிக்கும்,பிற பயிற்றக நண்பர்களுக்கும் எனது நன்றி.
           தமிழ்ப் புத்தக வெளியீட்டுக்காகவும்,கண்ணகி வழிபாடு பெருகவும், தன் வாழ்வையே அறப்பணியாகக் கொண்ட , நண்பர் யாணன் அவர்கட்கும், வெளியீட்டுக்கு உதவிய 'பிளாக் ஹோல்' நிறுவனத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்ததாகும்.
அன்புடன்,
ஆசான்  ஆ மதியழகன்.
----------------தமிழ் வாழ்க --------------

Saturday, 19 November 2016

தமிழ் அக்குப் பா.தி. முகவுரை மேல் தொடர்ச்சி.

உண்மை 7: இன்பத்துப் பால்.

             களவு,கற்பு எனும் இருநிலையிலும் உணர்வுகளை,ஆண்,பெண் மன வெளிப்பாடுகளை நாடக வடிவில் திருவள்ளுவர் கூற, அதை தமிழ்முறையில் மன அக்குபங்சர் வழி, மேலும் நுட்பமாக விளக்கி உள்ளோம்.
      இன்பத்தில் எதிர்பார்க்காதே! அது துன்பம்!
      இன்பத்தில் கொடுக்க முடியுமானால் அதுதான் இன்பம்!
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும்  வன்க ணவர்.-அறம்/ ஈகை/228.
       ஆக, ஈத்துவத்தல் ( கொடுத்து மகிழ்தல்) இன்பத்துப் பால் சுருக்கம்.
காண்க: அக்குச் சக்கரத்தில் 5-1 -நீலக்கோடு -வாதக்கோடு - இன்பக்கோடு.
அறம் அடைய, மேல் மனம்,  அடிமனம் உங்கள் கட்டுப்பாட்டில். பொருள் அடைய, பிரபஞ்ச மனம் என்ற வெளி சக்தி தேவை. இன்பம் அடைய, ஆழ்மனம் என்கின்ற உயிர்சக்தி தேவை.
இன்பம் அடைய இரு வழிகள் : 
      உயிர் முனை வழி: இன்பம் ஆழ்மனத்தில் இரூந்து தொடங்க இடம், காலம்,நம்பிக்கை போன்ற உயிர் தூண்டும் நிகழ்வுகள்  வேண்டும். தனி இடம்,மற்றும் மாலை, இரவு, விடியல் நேரங்கள் இவற்றோடு நம்பிக்கை முதன்மை யானது.இந்த முழுமையை இருமனம் ஒத்த களவு வாழ்க்கையும், கற்பு வாழ்க்கையும் மட்டுமே தர முடியும்.
          அடிமன முறை வழி: மனம் உணர்வால் அமிழும் இடம்.அறிவு குறைந்து மறைந்து விடும்.
கற்பனை உணர்வோடு இன்பம் தேடும் தன் மனம்,தன் உடல் சார்ந்த வாழ்வு. இருவர் மனநிலை ஒத்துழைக்க, இருவரும் ஆழ்மனம் தொட்டால்,உயிரியல் சுரப்புகள் எளிதாகும். சிற்றின்பமும் பேரின்பமாகும். தனி முயற்சியில் பிரபஞ்ச வழி(யோகா) ஆழ்மனம் தொட்டு நின்றால் சதா- சிவம்.அது பேரின்பம்.
  இன்பம் கெட வரும் காதல் நோய்கள் : கல்லீரல் நோய்கள் - உறக்கமின்மை.பின் இதய, மன நோய்கள்- உணவு செல்லாமை- உடல் இளைப்பு.பின் நுரையீரல் (இருமல்,சளி) .பின் சிறுநீரக நோய்களில் முடியும். 
காண்க: You tube : tamil muraiyil. acupuncture ALSO mana acupuncture. நோய்களைப் பற்றி முழுமையாக அறிய, அவ்விரு புத்தகங்களும் படிக்கவும்.
               இந்த புத்தகத்தில் அக்குபங்சர்,திருக்குறள் ஒப்பீடு முதல் பகுதியாகவும்,குறள்சாறு இரண்டாம் பகுதியாகவும் தரப் பட்டுள்ளது.
 அன்புடன், ஆசான்  ஆ மதியழகன். 19/11/2016.

Friday, 18 November 2016

தமிழ் அக்கு பார்வையில் திருக்குறள்/முகவுரை தொடர்ச்சி

உண்மை 5: அறத்துப்பால்

            தனிமனிதனின் அறமே  சமுதாய அறமாக மலர முடியும் என்பதால், தனிமனித அறமே முதன்மை. திருக்குறள் முழுமையுமே அது 'உங்களுக்கு' எனக் கூறப் படுவதாகும். இதை யாருக்கும் கட்டாயப் படுத்த முடியாது. இது தனிமனிதன் தன்னைத் தானே உரைத்துப் பார்க்க வேண்டிய கட்டளைக் கல்.
         ' மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
         ஆகுல நீர பிற.'     -அறம்/குறள் 34.
மனத்தூய்மை தான் அறம் என்பது அறத்துப் பால்  சுருக்கம். இதை இல்லறத்திலும் (முதல் வாழ்வு) , துறவறத்திலும் (இரண்டாம் வாழ்வு)  கடைப் பிடிக்க வேண்டும்.
            அறம் என்பதை மூன்று நிலைகளில் கடைப் பிடிக்க வேண்டும். அவை எண்ணம், சொல், செயல். (1) எண்ணம் : தூய்மையான எண்ணம் அடிமனம் இருத்தல் உண்மை.இது கல்லீரல் வெளிப்பாடாகிய. கண்கள் மூலம் நன்கு வெளிப்படும்.
               (2) சொல்: பிறருக்குத் தீங்குதராத சொல் மேல்மனம் கூறல், வாய்மை. இது நுண்மனமாகிய வாயின் மூலமும், மேல் மனமாகிய நாக்கின் மூலமும் தெளிவாக வெளிப்படும்
            (3)செயல்: பிறருக்கு இன்பம் தரும் செயல் உடல் வழி,பொருள்வழி, மன உணர்வு வழி, உயிர் ஈர்க்கும்படி வெளிப்படல் வேண்டும்.இது மெய்ம்மை.ஐம்புல வெளிப்பாடு.
காண்க : தமிழ் அக்கு சக்கரத்தில் 1-2-பச்சைக் கோடு-பித்தக் கோடு-அறக் கோடு.

நோய்கள்:கல்லீரல், தீ ஈரல் (இதயம்+ மனம்) தொடர்பான நோய்கள், அறம் தவறுவதால் உண்டாகும்.

உண்மை 6 : பொருட்பால்

            மனவிருப்பம் செயல்பட்டால்தான்  உணவு செரிமானத்திற்குரிய சுரப்பு நீர்கள் சுரந்து, உடற்கட்டான உறுப்புகள் வளர்வதற்கான நுண்சத்துக்கள், நீர்ம வடிவில் நுரையீரலுக்குப் போய்ச் சேரும்.பிறகு அது சிறுநீரகத்துக்குப் போய் நீர் வடிவில் சேர்ந்து பிரிக்கப் பட வேண்டும்.இடையில் வரும் தடைகள் எல்லாம் மண்ணீரல்,நுரையீரலுக்கான நோய்கள்.இவை வயிற்றின் பசியிலும்,மூச்செடுப்பதிலும் தெரியும்.
          பொருளுக்கான மனத் தூண்டல்: 'துணை' விருப்பம்  , 'தொழில்' விருப்பம் செயல்பட்டால்தான் தனிமனிதன் குடும்பமாகி,குடும்பங்கள் சமுதாயமாகி, சமுதாயம் தனக்கு வேண்டியவற்றை சாதிக்கக் கூடிய நல்லாட்சியும், நல்ல நாடும் அமையப் பெறும். 'பொருள்' எனும் செல்வம் கைவர வேண்டுமானால் ' ஊக்கம் ' என்பது  மனத்தின் உடைமை ஆக வேண்டும்.
           'உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
          நில்லாது  நீங்கி  விடும்.'   - பொருள்/குறள் 592
'மன ஊக்கம்' தான் பொருள் என்பது பொருட்பால் சுருக்கம்.பிற செல்வங்கள் பின்னே வரும்.
பொருள் தவறியோர் அறம் முரண் பட்டார் எனக் கூற முடியாது..அறம்  மாறுபட்டாரே! நல்லோரோ, தீயோரோ யாம் அறியோம்.
         காண்க:தமிழ் அக்குச் சக்கரத்தில் 3-4 - மஞ்சள் கோடு -கபக்கோடு - பொருள்கோடு.

 நோய்கள் : முதல் அடையாளம் மண்ணீரல் (கணையம்  உட்பட) , நுரையீரல் நோய்கள். அதன் பின் கல்லீரல், இதயம்,மனம் தொடர்பான நோய்கள்.அன்புடன், ஆசான் ஆ மதியழகன். 18/11/2016.

Wednesday, 16 November 2016

தமிழ் அக்குபங்சர் பார்வையில் திருக்குறள்/முகவுரை.

முகவுரை: திருக்குறளுக்கு சுருக்கமாகப் பொருள்கூறும் விதமாக ஒருவரிப் பொருள் உரையை
' குறள் சாறு ' என வடித்திருந்தேன்.இதை அப்படியே மக்களுக்குக் கொண்டு சென்றால், பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று என்ற விதத்திலேயே அமையும் என்பதால் புதுமை சேர்க்க எண்ணினேன்.
                   முதல்ப் புத்தகம் ' தமிழ் முறையில் அக்குபங்சர்' எழுதிய போது, மருத்துவம் என்பதோடு ' மருந்து ' என்ற திருக்குறள் அதிகாரம் மட்டுமே பொருந்தும் என நினைத்திருந்தேன்.
எனது இரண்டாவது புத்தகம் ' தமிழ் முறையில் மன அக்குபங்சர் ' எழுதிய போது மனம் என்பதைக் கொண்டு அறம்,பொருள்,இன்பம் எனும் முப்பாலை விளக்க முடியும் என உணர்ந்தேன். மன அக்குபங்சர் புத்தக வெளியீட்டு உரையை நிகழ்த்தியபோது,ஐம்பூதச் சக்கரத்தின் மூன்று முனைகள் அறம்,பொருள், இன்பம் போக, எச்சம் இரண்டு முனைகள் காதல்,
வீரம் எனப் புரிந்து கொண்டு வெளிப் படுத்தினேன்.See you tube: mana acupuncture.
                    ஆக (1) கல்லீரல் (ஆகாய பூதம்) -அடிமனம் நீட்சி மேல்மனம் வரை -அறக் கோடு-
ஆகையால் அடிமனம் என்பது அறம் முனை.
                            (2) தீ ஈரல் (இதயம்+மனம்)-மேல்மனம் நீட்சி நுண்மனம் வரை-விருப்பக் கோடு-
படைக்கும் சக்தி.ஆகையால் மேல்மனம் என்பது காதல் முனை.
                             (3) மண் ஈரல்(கணையம் உட்பட)-நுண்மன நீட்சி பிரபஞ்ச மனம் வரை -பொருள் விளையும் கோடு.ஆகையால் நுண்மனம் என்பது பொருள் முனை.
                              (4 ) நுரை ஈரல் (காற்று பூதம்) -பிரபஞ்சtt மனம் நீட்சி ஆழ்மனம் வரை -வீரம்,வீர விளையாட்டு, மூச்சுப் பயிற்சி களின் கோடு.ஆகையால் பிரபஞ்ச முனை என்பது வீரமுனை           (5) நீர் ஈரல் (சிறுநீரகம்)- ஆழ்மனம் நீட்சி அடிமனம் வரை- ஐம்புலன் இன்பங்களின் கோடு.ஆகையால் ஆழ்மன முனை என்பது இன்ப முனை.
                     இதற்குரிய அட்டைப் படம் பல உண்மைகளை நமக்கு  விளக்கும்.
        உண்மைகள் (1) அறமும், பொருளும் நீடித்து நிற்க வேண்டுமானால் வாழும் விருப்பக் கோடு எனும் காதல் முனை, அது துணை மீதாயினும் சரி,தொழில் மீதாயினும் சரி வாழையடி வாழையாக,தொடர்ச்சியாகத் துடிப்புடன் இருக்க வேண்டும்.
                             (2) பொருளும் இன்பமும் நீடித்து நிற்க வேண்டுமானால், இரண்டிற்கும் காப்பாகிய வீரம் விளையாட்டு வடிவிலேனும் இருந்தால்தான் நல்ல உடற்கட்டும், நீண்ட வாழ்நாளும் பொருள், இன்பத்தைத் துய்க்கக் கிடைக்கும்.
                    (3) அறம், பொருள்,இன்பத்தை அடைந்து,வீடு பேறு எனும் நிறைவை, ஒரு சுற்றாகிய முழுமையை, அடைய வேண்டுமானால் காதலும்,வீரமும் வாழ்வில் தேவை.அதனால்தான் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்கள் என்றனர்.
(இன்று பெரும்பாலான இளைஞர்கள் காதலையும், வீரத்தையும் சின்னத் திரை,பெரியத் திரையிலேயே காண்கிறார்கள்.)
             (4)இன்பத்தின் முழுமையில் பிற உயிரினங்கள்,மனிதன் வேறுபாடு : இன்பமும், அறமும்
அடிமனம் வழியாக நேரடியாக இணைவதைக் காணலாம். மரங்களும் , மிருகங்களும் மேல்மனம்,அடிமனத் தடையின்றி நேரடியாக ஆழ்மனத்தோடு இணைக்கப் படுகின்றன.இந்த உண்மையான பிரபஞ்சத் தியானத்தில் இன்பமும் வளர்ச்சியும் தங்குதடையின்றி அவற்றுக்கிடையே நடைபெறுகின்றன.மனிதர்களுக்கு கற்பிக்கப்படும் அறம், சிறு வயதில் இருந்து அடிமனத்தில் பதிவதால் இன்பத்தின் முழுமை, அறத்தைப் பொறுத்ததே!
----தொடரும்---ஆசான்  ஆ மதியழகன். 16/11/2016.

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL/ ÑEWS

தமிழ் அக்குபங்சரமதியழகன் தி பார்வையில் திருக்குறள் / செய்தி

 திருக்குறளின்  பிற அதிகாரங்களின் ஒப்பீடு 53 முதல் 133 வரை Kural saaru.com-ல் 
உள்ளது.
அக்குபங்சரில் மனம் பற்றி அ றிய உதவும் படம்.

அன்புடன் ஆ. மதியழகன்.16/11/2016.