Friday, 23 January 2015

தொடர்ச்சி , நூல் கருத்துரை - பாவ புண்ணிய க் கணக்குகள்.

தத்துவம் சார்ந்த கருத்துக்கள் .

 (15) அறிவு வளர்ச்சி என்பது வசதிகளைத் தரும். ஞான வளர்ச்சி என்பது ஈவிரக்கம், அன்பு ,
கருணை தரும். எனவே ஞான அடிப்படையில் புண்ணியம் தேட வேண்டும்.

(16) கூலி, வேலி  (நிலம் ), தாலி -எல்லை அறிந்து தெளிவு கொள்ள வேண்டும்.

(17) குழந்தை பிறந்தவுடன் பிரபஞ்ச ஆற்றல் உச்சிக் குழியில் நுழைந்து மூடிக் கொள்ளல்.
(முதல் வருட முடிவில் மொட்டை அடித்தல் , உச்சிக் குழி நன்கு ஆற்றல் பெற்று மூடவே.)

(18) ஞான விளக்கு -தீப விளக்கு ஒப்பீட்டு விளக்கம் , வாசி யோகம் சார்ந்தது.

(19) வேளாண்மை போற்று ; ஞான வேளாண்மையும் நடத்து.

(20) சாணியிலும்  (சாணிப் பிள்ளையார் ) பிரபஞ்ச சக்தி உண்டு.

(21) உடலும், ஆன்மாவும் , கார் , காரோட்டி  ஒப்பீடல் (தானியங்கி விமானம் மற்றும் விமான 
ஓட்டி என ஒப்பிட்டால் , உயிர் , ஆன்மா வேறுபாடு இன்னும் நன்கு புலனாகும்.)

(22) வரமா ? சாபமா ?- திடீர் இறப்பு அழைப்புகள் , பாவ புண்ணியத்தோடு சேர்த்துப் பேசப் 
படுகிறது . ( ஒப்பீடு : காந்தி , பூகம்பத்தால் இறந்தவர்களை ப்  பாவம் செய்தவர்கள் என்று 
எழுதியது பிறரால் கண்டிக்கப் பட்டது.பகுத்தறிவுப் பார்வை - விபத்துக்கள் நேர்ந்தவை ;
நோய்கள் ஈட்டியவை (மரபு, சூழல்தான் )-மேலும் எடுத்துக்காட்டு இலங்கை ப் படுகொலைகள்,
சுனாமி போன்றவை.)

(23) கனிப் பருவத்தில் மரணம் -முதுமை மரணம் -நன்று 

(24) இருட்டு வாழ்க்கை இல்லாத சாமியார்கள் குறைவு - நடப்பு.

(25) ஒரு துறவி மகானாகும் நிலை -கடினம் எனல்.
(இல்லறம்  பின் துறவறம் - தமிழர் நிலைப்பாடு )

(26) சமத்துவம் உணர்த்தும் மயானம், கடைசிக் கதவு.-விளக்கம் அருமை.
            இந்த 26 கட்டுரைகளும் , உள்ளடக்கம் மற்றும் விவரித்த வகையில் வாசகரை 
ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச  செல்கிறது . வாழ்வில் அறம் பேணும் புதிய மனிதராக வாசகர் மாறுவார்..தலைப்புக்கு ஏற்ற கருத்துக்களும் விளக்கமும் உடைய இப்புத்தகம் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும்.
------அன்புடன், ஆசான் . ஆ. மதி  யழகன்..

                            நூல் கருத்துரை 

நூல் : பாவ  புண்ணிய க் கணக்குகள் 
ஆசிரியர் : யாணன் 
வெளியீடு : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் 
        மூன்று பதிப்புகள் கண்ட  இந்த நூல் , பாவ புண்ணிய க்  கணக்குகள் , பலவிதமான 
வாழ்வியலுக்குத் தேவையான சிந்தனை முத்துக்களை உள்ளடக்கியது .

       வாழ்வியலுக்குத் தேவையான பொதுவான கருத்துக்கள் 

(1) பாசிடிவ் எனர்ஜி பரப்பப் பட வேண்டும் ,  என்ற கருத்து வரவேற்கப் பட வேண்டியதும் ,
வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியதும் ஆகும்.வெற்றி, வீட்டு வாசலுக்கு வர உதவும்.
செய்தித் தாள் இதழ்களில் வெளியாகும் ' கொலை , கொள்ளை ........' போன்றவை எச்சரிக்கை 
என்ற பெயரில் முழுமையாக வர்ணிக்கப் படுவது அளவு படுத்த வேண்டும் , எனக் குறிப்பிட்டு 
 இருக்கலாம். வீட்டுக்குள் இருக்கும் சண்டை விவரங்களை அடுத்தவர்க்கு கூறாதே என்பதற்கு,
புத்தர் கதையில் சொல்லும் பழமொழி ' உன் வீட்டு நெருப்பை அடுத்தவர்க்கு கொடுக்காதே '

(2) பாவம் சேர்க்காதே, புண்ணியங்கள் எண்ணிக்கை சேர்க்கவும். இதனால் குடும்பம், பிள்ளைகள் 
 விளங்குவர் . இக்கருத்தை ' வசையொடு வாழாதே ! இசை (புகழ் ) யோடு வாழ் ' எனும் 
திருவள்ளுவரின் வாக்காக எடுத்துக் கொள்ளலாம் .

(3) எல்லா முதியோர்களும் , பெற்றோர்களும் சமம் ஆனவர்கள் . வாழும் கடவுள் என ஆதரியுங்கள் .வயதுக்கு மரியாதை தரும் கருத்து சிறப்பு.

(4) பணத்துக்காக ஓடி , வாழ்வின் மகிழ்வுகளை  இழந்தவர்கள் ஏராளம் . இக்கருத்து வாழ்வின் 
மதிப்பைக் கூறுகிறது .

(5) பண்பால், செயலால் நல்லவர், கெட்டவர்  கதை 'நெகிழ்ச்சி ' விளக்கம். (ஓஷோவின் 
நல்லவர் , கெட்டவர் இருபிரிவினர் விளக்கம் - எவ்வளவுப் பெரியவர் ஆனாலும், தன்னலம் 
வரின் கெடுதல் நிகழ்வது இயல்பு. எனவே , தன்னலம் விட்டவர் நல்லார் ; விடார் கெட்டவர் .)

(6) அசைவம் சேர்ப்பதன் எல்லை விளக்குவது, உயிரின அழிப்பைத் தவிர்க்கச் சொல்வது,
ஆன்மா , உயிர் வேறுபாடு - நுணுக்கமான விளக்கம்.

(7) அநியாய வட்டி பாவத் தொழில்.

(8) எது நல்ல சாவு என்பது ஊர் பேச்சில் விளங்கும். சாபம் வாங்காதே ; நல்ல பெயர் எடு.

(9) இறந்த உடலுக்கும் (காசி நகரம் போல்  இல்லாமல் ) மதிப்பு தர வேண்டும்.

(10) இறந்த உடல் எரியூட்டலே சிறப்பெனக் காரணம் கூறல்.

அறிவியல் சார்ந்த கருத்துக்கள் 

(11) கண் திருஷ்டி , மாந்திரீகம் மன வலிவுடையோரை ஒன்றும் செய்யாது.

(12) இரவில் அறிவும் வேலை செய்யும்.- புத்தன் இரவில் புறப்படல் ,

(13) பழங்களை பறவைகளுக்காக  விட்ட மரங்கள் வேண்டும்.

(14) வலசை வரும் பறவைகளைக் காப்பற்றி , பல்லுயிர் ஓம்ப வேண்டும்.
தொடரும்.



Saturday, 3 January 2015

          ஆசிரியர் பற்றி 

திருவாரூர் இயற்றமிழ்ப் 
பயிற்றக ஆசான்  த. ச.
தமிழனார் ஊக்கம் தந்த 
தமிழ்ப் படைப்பாளி 
மற்றும் பேச்சாளர் . 
  அறிவியல், கணிதம் 
  பயிற்றும் ஆசிரியப் 
  பயிற்சி பெற்ற ஸ்டேட் 
வங்கிக் காசாளர் (ஓய்வு )
      விஞ்ஞானச் சுடரில் 
    ' அறுமுகி, ஆய்வும் 
      தீர்வும் ' என ஆய்வுக் 
     கட்டுரை வடித்தவர்.
     திருக்குறளுக்கு 
    ஒருவரிப் பொருள் 
    கூறும் 'குறள் சாறு '
    படைத்தவர்.

அன்புடன் , ஆ . மதி யழகன்.

புத்தகம் பற்றி 

இதுவரை நீங்கள் அறியாத மனம், உடல் குறித்த பேருண்மைகள் , தமிழால் 
தமிழில் , தமிழ் கூறும் நல்லுலகிற்குத்  தரப் படுகிறது.

Friday, 2 January 2015

இந்தப் புத்தகத்தில் ,

1. வாழ்க்கை நடைமுறை மற்றும் 
கோவில் நடைமுறையில் 
மறைந்திருக்கும் உண்மைகள்.
2. மந்திரச் சொற்கள் உங்கள் 
உடலைத் தூண்டும் விதம்,
மற்றும் உடலின் எந்த 
உறுப்புக்கு நலம் என்று.
3. ஐம்பூதத்தில் தமிழ் 
உயிர் ஆக ஒலியில் ,
மெய்  ஆக உடலில்,
உள்ள அற்புதமான 
மறைக்கப் பட்ட உண்மை.
4.அக்கு பங் சரில்  இது 
ஒரு புதிய தமிழ் அணுகுமுறை 
தமிழில் புள்ளிப் பெயர்கள்.
எ கா - Lu 11= நுரை கல் 
மேலும் 60 ஐம்பூதப் 
புள்ளிகளுக்கும் தமிழ்ப் 
பாடல் - மருத்துவப் 
 பயன்களுடன் .
அன்புடன், ஆ. மதி  யழகன்..

                         ஐம்பூத சுருக்க உறுதிமொழி 

நீர் :

சிறுநீரகம் உள்ள இடத்தில் கை வைத்து க் கூறுக.
'நீர் அருந்துவேன், பிரபஞ்சம் வழி காட்டும் .'

கல் :

கல்லீரல் உள்ள  இடத்தில் கை வைத்து க் கூறுக.
'ஓய்வு, உறக்கம் , உயிர் இரக்கம் கொள்வேன் '

தீ : 

மனதில் கை வைத்துக் கூறுக.
மனம் தூய்மை.
இதயத்தில் கை வைத்துக் கூறுக .
உடற் பயிற்சி .

மண் : 

மண்ணீரலில் கை வைத்துக் கூறுக.
'உணவில் இப்படி மட்டுமே, இவ்வகை மட்டுமே, உறுதியாக.'
மனதில் கை வைத்துக் கூறுக.
'நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு.'

நுரை :

நுரையீரலில் கை வைத்துக் கூறுக .
'யோகம் மட்டுமே உயிர் காக்கும் ' 'எல்லாம் இன்ப  மயம் '
 ----அமைப்பு  ஆ. மதி யழகன்..

                            ஐம்பூத   உறுதிமொழி 

நீர் :

 என் உடலில் ஆதி செல்களை மீளாக்கம் செய்கின்ற 50-க்கு 50 தாய் தந்தை ஆற்றல் உள்ள சிறுநீரகம் செயல்பட போதிய நீர் அருந்துவேன் எனவும், பிரபஞ்ச சக்தி என்னுள்ளே இருக்கிறது,
மற்றும் வழி காட்டுகிறது என நம்பிக்கை கொள்ளவும்  உறுதி கூறுகிறேன்.

கல் :

என் அடிமனமாக இருந்து 'நான் ' என விளைவிக்கும் கல்லீரல் , உடல் மனத் தோற்ற அழகை 
உருவாக்கும் விதத்தில்  போதுமான ஓய்வும் , உறக்கமும் தருவேன் என்றும், ஒவ்வொரு 
உயிர் இயக்கத்தின் மீதும் அருள் தன்மையோடு நடந்து கொள்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

தீ :

என் உடம்பின் ஒவ்வொரு மூட்டும் அசையுமாறு வாழும் விதம் , பணி முறை, விளையாட்டு, 
உடற்பயிற்சி கொள்வேன் என்றும் , மனம் எனும் வரவேற் பறை தூய்மையாக இருக்கவும் 
உறுதி செய்கிறேன்.

மண் :

என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆற்றல் தரும் அறுசுவை உணவை வாய் மூடி ,
நன்கு மென்று கூழாக்கி , உமிழ் நீரோடு கலந்து , உணவு ஈடுபாட்டோடு , முறையறிந்து 
உண்பேன் என்றும், நல்லெண்ண வளர்ச்சிக்கு மட்டுமே வழி காண்பேன் எனவும் உறுதி 
கூறுகிறேன்.

நுரை : 

என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் வளி தருகிற காற்றை யோக முறையில் 
அடக்கி ப்  பயன் கொள்வேன் என்றும், எல்லாம் இன்ப மயம் எனும் உணர்வைக் கொள்வேன் 
எனவும் உறுதி கூறுகிறேன்.
--------அமைப்பு ஆசான்  ஆ. மதி  யழகன்..

Thursday, 1 January 2015

ஐம்பூத அடிப்படையில், ஏழு ஓட்டங்கள் துணை கொண் டு அமைத்த இரு தியானப் பயிற்சிகள்.
 ஏழு ஓட்டங்களின் தன் வலுப் புள்ளிகள் கொண்டு முதல் தியானம். இது அக்கு பிரசர் அடிப்படை,
 மற்றும் தொடு சிகிட் சை உத்திகளோடு , உயிர் அதிர்வுகள் பயன் படுத்தப் படுகின்றன.

     'அ ' - கல் வலு  -Liv 1, 'ஆ ' - பித்தப்பை வலு GB 41,

     'இ ' - P 8, H 8 - மன வலு, இதய வலு ; 'ஈ '-Tw 6, S I 5 -

மூ வெப்பத் தீ , சிறுகுடல் தீ .

'உ ' - Sp 3 - மண் வலு., 'ஊ ' -St 36 - இரைப்பை வலு 

'எ ' - Lu 8 - நுரை வலு , 'ஏ ' - L I 1 - குடல் வலு ,

'ஐ ' - P 4 - மன வலு , 'ஒ ' - K 10 - நீர் வலு , 'ஓ ' - நீர்ப் பை வலு ,  '^ஒள ' - நாபி .

1. உயிர் மெய் தியானம் :
  'உயிர் ' எழுத்துக்கள் வலிமையாக அதிர்வுறும் ' மெய் ' இடங்களில்  ஆள்காட்டி விரல் 
 ( காற்றுப் பொட்டு ) கொண்டு அழுத்தி ,
     (1) மூச்சு இழுத்து -4 அளவு 
  (2) அடக்கி வைத்து - 2 அளவு 
  (3) பிறகு விரல் மேலாக்கி மூச்சு விடுதல் -5 அளவு - கூடுதல் நேரம் 
 (4) ஓய்வு - 2 அளவு செய்தல்.
 ஒவ்வொரு எழுத்துக்கும் ஒன்று அல்லது மூன்று முறை.
 அ  முதல் ^ஒள  வரை. இதுவே உயிர் மெய் தியானம்.
2.ரீங்கார தியானம்  அல்லது மூலாதார் தியானம் 
  அக்கு பங் சர்  ஓட்டத்தில் Du - Ren ஓட்டம் தொடங்கும் ஆசன வாய்ப் பகுதி 
Du 1, Ren 1 உட்பட்ட இடம் மூலாதர் .
தியானம் : (1) மூலாதார் இடம் நினைத்து, ஆற்றல் எழுவதாக எண்ணி ஒரு 'ம் ' ரீங்காரம்.
      (2) பிறகு முகத்தில் உள்ள உதடுகளை இணைத்து , தலை முழுக்க அதிருமாறு  ஒரு  'ம் '
 ரீங்காரம்.
 (3)  நெற்றி புருவ மையத்தில் மனம் குவித்து  ஒரு  'ம் ' ரீங்காரம்.
 நன்றி , பயிற்சி செய்து  பயன் பெறுங்கள். அன்புடன், ஆ. மதி யழகன்..
HAPPY NEW YEA R - 2015.