Sunday, 3 December 2017

உயிர் அக்கு-5 BODY ACU-மனம்-1

2.இரண்டாவது உடல்-மன உடல்-குண உடல்.
வேறு பெயர்: மனோமயக் கோசம்
 2.1 அக்குபங்சர் விளக்கம்: (சக்தி இடம் மாறி அடுத்த முனை சென்று நிலை கொள்வது.)
     உறுப்பு: கல்லீரல் முதல் பெரிகார்டியம்(+இதயம்) வரை
         LIVER TO PERICARDIUM (+ HEART)
          புள்ளி: LIV-2- மாதுளம் பழப் புள்ளி
       துணை உறுப்பு:பித்தப் பை முதல் மூவெப்ப மண்டலம்/
சிறுகுடல். GALL BLADDER TO TRIPLE WARMER/SMALL INTESTINE.
          புள்ளி: GB-38-ஆரஞ்சுப் புள்ளி.
         வண்ணம்: பச்சையில் இருந்து ரோஸ்/சிவப்பு
                              GREEN CHANGES TO ROSE/RED
மன நிறம்-ரோஸ்;இரத்த ஓட்ட மிகுதி-சிவப்பு ஆகும்.
           புலன்கள்: கண் பார்த்து நா சுரத்தல்.
             கல்லீரல்/கண் பார்த்து, தீ/நாக்கு நீர் விடுதல்
                குணஉடல் சக்தி ஏற்றம்/பிரம்ம உடல் (கல்)சக்தி குறைதல்.
                சுவை: புளிப்புச் சுவை மாறி கசப்புச் சுவை.
                                 அமிலம் மாறி காரம்
                    திசுக்கள்: தசைநார்கள்,இரத்தக் குழாய்களோடு இயைதல். குரல் பண்பு: கத்துதல் அடங்கி, சிரித்தல்
                    உணர்ச்சி: சினத் தன்மை இடம் மாறி பெருமையாக,மகிழ்ச்சியாக மாறும் (கல்லீரல் இழப்பில்-தான் இழப்பில் பெறுவன-சிற்றின்பம்,இடையின இன்பங்கள்-குடித்தல்,தீவிர ஈடுபாடுகள் அரசியல்,மதம்,. . .
இறுதியாக பேரின்பம் எனும் உள்நோக்கு பயணம்.)
இரக்கம் (நல்ல மரபாக இருந்தால், அன்பும்,நட்பும்,இரக்கமும் பிறவி நிலையிலேயே இருக்கும்) மாறி தெளிவு சேரும்.
        நீர் சுரப்பு: கண்ணுக்கு சொந்தமான கண்ணீர்,இன்பமோ,துன்பமோ,உழைப்பில் இறங்கி வியர்வைக்கு மாறும்.
     மணம்: ஊசிப் போனால் கல்லீரல் கெடும் என்று, சூடு மிகுந்து கருகும் வாசனையோடு மேலே மனதில் வேகம் காட்டும்.
       பருவம்: தை மாதம் (அ),மாசி (ஆ) மாறி மன,இதய மாதங்களில்(,ஐ-மனம்,ஔ-மூவெப்ப மண்டலம் முறையே- பங்குனி,சித்திரை பிறகு இ-இதயம்,ஈ-சிறுகுடல்,முறையே-வைகாசி,ஆனி என வாழ்வைத் தீர்மானிக்கும் மாதங்கள்.)நிலை கொள்ளும்.
     வானிலை:காற்றோட்டமாய் ஒரு மகிழ்ச்சி பார்த்த நிலை,வெப்பம் ஏறி செயல், செயல் எனத் துடிக்கும் நிலை
       செயல்: மயக்கம்/முயக்கம்/ உறக்கம் விரும்பும் கல்லீரல், மனப் பயணம்,உடற்பயிற்சி அசைவுகள் விரும்பும்.
        நடக்கும் நேரம்:கல்லீரல் நேரம் இரவு 11-விடிகாலை 3 மணி.இந்தப் புத்துணர்ச்சி பெறும் தன்மையே பகல் நேரம் (இதய நேரம்) 11-3 மாலை நேரத்தில் பிரதிபலிக்கும்.இடையில் நுரையீரல், மண் பூதம் வலுவேற்றி (ஆக்ஸிஜன்,இனிப்பு தந்து) சமாளிக்கலாம்.
     பிற ஒப்பீடு: கொடுப்பவர்-பெறுபவர்
                                   தாய்-மகன்
                                 பிரம்மநிலை-மனநிலை
மனோ வேகம் பகலில் அதிகம்.அறிவாக மேல் முனை.
படுக்கும்போது வேகம் குறைந்து உணர்வாக க்கீழ் முனை.
காலையில் இரவின் உணர்வு மேல் எழும்பும்.விரைந்து சூடேறும்.இந்த மன ஆட்டம் சுரப்பு உடலைப் பாதிக்கும்.
    - ஆசான் ஆ மதியழகன் மனம்-1 .03/12/2017.
               
       
         

No comments:

Post a Comment