Friday, 8 December 2017

உயிர் அக்கு-மனம் 2.4 1/2

2.4 மன உடல் நோய்கள் விளக்கம்.
    இதய உறை என்னும் மனம்(Pericardium) இதயத்தை முட்டுவதால் உண்டாகும் நோய்கள்.
(1) தூக்கமின்மை:
                தூக்கம் என்பது கல்லீரல் தன் தூய்மை மற்றும் புத்துணர்ச்சிக் காலம்.பிற வெளி வேலையும் இருக்கக் கூடாது.உள்ளே தீவிர எண்ணமும் இருக்கக் கூடாது.அதற்குத் தான் சேகரித்த நினைவுகள்(அடிமனமாக),உடல் சக்தித் துணுக்குககள் திரட்டு (கிளைக்கோஜன்) இவற்றை முறைப்படி அடுக்கி வைக்க இரவு 11-3 p.m தேவை.இந்த நிலையில் உறவு -அதாவது உயிர் சக்தி பயணம் கல்லீரல், சிறுநீரகம் இடையே நடந்து கொண்டிருக்கும்.அக்கால் தீராத ஆசைகள் கனவில் தீர்ந்தது போல் தோற்றம் வந்து நீங்கும்.
பயங்கள் நடவாதது நடந்ததது போல்க் காட்டி முடித்து வைக்கப் படும்.ஆகக் கனவு பிரம்ம நிலைப் பாதை பயணம்.
மன சமாதானத்திற்கு அவசியம்.//
           தூக்கமின்மை என்பது கனவுக்குள் நுழைய முடியாமை.உங்களை ஒரு நினைவு (எ.கா. பெண்),அறிவு (வீடு வாங்க,கடன் தீர்க்க, தொழில் ஆர்வம்.  . .) தூங்க விடாது தடுத்துக் கொண்டிருக்கும்.[இதன் நீட்சி கவலை-மண் பூதம்= மண்ணீரல்+கணையம்+இரைப்பை பாதிப்பு.
இவற்றின் நோய்களுக்கு பெரிகார்டியம் ஓட்டத் தீர்வு தேவை.மேலும் துக்கம் ஆக மாறினால் நுரையீரல், பெருங்குடல் பாதிக்கும்.இதற்கும் பெரிகார்டியத் தீர்வு தேவை.]வெறும் தீவிர நினைவுகள் ,பெரிகார்டியம்-கல்லீரல் சக்தி ஓட்டம் மட்டுமே.உடல் பணி எடுக்கும் சக்தி போல் 4 பங்கு சக்தி எண்ணம் எடுக்கும்.4 மணி தோட்ட வேலையும், ஒரு மணி மூளை வேலையும் ஒன்றாக கல்லீரல் சக்தி எடுக்கும்.பெரிகார்டிய த்தேக்கமே தூக்கமின்மை.
      உறக்கப் புள்ளி P6 தூண்டலாம்.10 நிமிடத்தில் உடன் பயன்.(உறங்க உதவும் குறிப்புப் படம் காண்க)
(2) உள்ளங்கை வியர்வை-பதட்டம்-P8-அக்கு பிரசர்.
(3)அஜீரணம்-செரியாமை-P7-இன்சுலீன் புள்ளி.
(4)ஞாபக மறதி- நினைவுத் திறன் புள்ளி- P9.
(5)கற்பனை நோய்கள்-எண்ணம்,சொல்,செயல் வரிசையில் உடல் அறிகுறி காட்டுதல்.அக்குபங்சர் வரிசை கல்,தீ,மண்
LIVER-PERICARDIUM-SPLEEN AND GB,TW,ST.
எண்ண விளைவு-எ.கா:பாம்பு கடித்தது என்று அறிந்தாலே
பய சுரப்பிகள் உடலில் மாறுதல் நிகழ்த்தும்.
(6) காய்ச்சல்: நோய்களை வெல்ல,கிருமிகளை வெல்ல,தூய்மைப் படுத்த,அதிகக் கலோரிகள் எரிக்க,வேலையின் காரணமாய்,மன எண்ணம் அலைதல்,பயத்தில் வேகம் எடுத்தல்,நெருப்புத் தன்மை ஏற்றம்,காய்ச்சல் ஆகும்.
      மூவெப்ப மண்டலத்திற்கு  பரபரப்பு-Emergency outlet-TW-1-கட்டுப்பாடு சுற்று.+ நெருப்பு தீவிரம் குறைக்க-
 Emergency inlet தாயின் தாய் உதவி நீரகம்-  TW-2
(7) காது வலி: மூவெப்ப மண்டலம்,இறக்க சுற்றில் (கை உயர்த்திய நிலையிலேயே அக்குப் புள்ளிகள் கணக்கிடப்படும்.) காது சுற்றி காது  வடிவில் வளைகிறது.
புள்ளிகள் TW-16,17,18,19,20,21. இந்த தேக்கம் சரி செய்ய,
 தாய் கல்லீரல் உதவி TW3,தாயின் தாய் உதவி TW 2.
(8) முழங்கை வலி,முழங்கை மடக்கில் தொடர் அசைவு,வாதம்: இது மனதின் தீவிர நிலை,சினம்,இயலாமை உணர்வு
,பிறரால் பாதிக்கப் பட்ட நிலை,கையாலாகாத நிலை உணரும் போது,முழங்கை அசைவில் ஆட்டம் வரும்.
பொருள்கள் எடுப்பது தடுமாறும்.முற்றினால்,தொடர் வாத
ஆட்டம்.- பரபரப்பு நிலை-EMERGENCY IN LET P3,H3 வாத நிலையில் தானே இயங்கும்.தொடக்க நிலைக்கு இதே புள்ளிகள் மருந்து.வாத நிலையில் P9,P8,தேவைப்படின் H9,H8.கல்லீரல் இருப்பும் சரி செய்ய வேண்டும்.
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.4 1/2 08/12/2017.

No comments:

Post a Comment