2.2 மனம்-2
அக்குப் பார்வை:
முன்னோக்குப் புள்ளிகள்- FORWARD POINTS TWO.
புள்ளி 1: மாதுளம் புள்ளி LIV-2-கால் கட்டை விரல்,இண்டாவது விரல் இடையே உள்ள பள்ளம்.இங்கு,கல்லீரல்
தன் மகனுக்கு -தீ (மனம்+இதயம்)-SYMBOL LARGE HEART WITH A SMALL HEART- குறியீடு: பெரிய இதயம் அருகில் சிறிய இதயம் ஆற்றல் தருகிறது.//மனம் வழி இதய இயக்கம்.// தீ பூதத்தின் இரண்டு பானைகள்,மனப் பானை P-8 முதலில் பிறகு H-8 இதயப் பானை நிரம்பும்.பானை வடிவம் இதய -ஆட்டீன்- வடிவமாகக் காட்டப் பட்டுள்ளது.
எ.கா உணவு: மாதுளம் பழம்.பழக்கம்: வார் செருப்பு நடை.
புள்ளி 2: ஆரஞ்சுப் புள்ளி GB-38.இடம்: வெளிப்புறக் கணுக்கால் மூட்டில் இருந்து 4 சுன் மேலே.
நடப்பது: பித்தப்பை தரும் ஆற்றலால்,மூவெப்ப மண்டலப் பானை TW-6,சிறுகுடல் பானைSI-5 நிரம்பும்.
எ.கா உணவு: ஆரஞ்சு.//பழக்கம்: ஒரு காலால் மறு கால் புறம் தட்டுதல்.
பின்னோக்குப்புள்ளிகள்-BACKWARDPOINTS TWO
மனதைப் பின்னிருந்து முன்னாக அதிர்ச்சி நிலையில்,வயதான நிலையில் தட்டி எழுப்பல்.
புள்ளி 1: நினைவுத் திறன் புள்ளி P-9.
இடம்: கையின் நடுவிரல் முனை
நடப்பது:கல்லீரல் தாயிடம் மனம் ஆற்றல் பெறுகிறது.
புள்ளி 2: இதயத்தின் மாரடைப்பு தடுக்கும் புள்ளி H-9
இடம்:( இடக்கை வலு மிக்கது) கையின் சுண்டு விரல் நகங்கீழ் 0.1 சுன் இறக்கம்,நான்காம் விரல் நோக்கியவாறு.
நடப்பது: கல்லீரல் தாயிடம் இதயம் ஆற்றல் பெறுகிறது.
ஆகையால் மன,இதயப் பானைகளை(P-8,H-8) எதிர்த் திசையிலும் நிரப்பலாம்.
எ.கா. உணவு:மனம்-தக்காளி;இதயம்-பீட்ரூட்
பழக்கம்-கை இறுக்கிப் பிடித்தல் சார்ந்த செயல்.
புள்ளி 3: கழுத்து வலிப் புள்ளி TW-3
இடம்: மோதிர விரல், சுண்டு விரல் பக்கமாக, மோதிர விரலும்,நான்காம் விரல் கை எலும்பும் சேரும் மூட்டின் பின் புறம். நடப்பது: கல்லீரலின் பித்தப்பை ஆற்றல் பெற்று,போகும் பாதை எல்லாம் சரி செய்யும்.கழுத்தும் ஒன்று.
புள்ளி 4: தாய்ப்பால் சுரப்புப் புள்ளி SI-3
இடம்: கை விரல்களை மடக்கும் பொழுது,இதய ரேகை மடிப்பின் மேடான பகுதியில்,தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.
நடப்பது: பித்தப்பை ஆற்றல் பெற்று சிறுகுடல் செரிமானம் மிகும்.தாய்ப்பால் அதிக சுரப்பு.போகும் பாதை,கழுத்து,தலை,காது நலம்.
ஆகத் தாயிடம் கேட்பதால் பானை 4 இடங்களில் நிரம்புகிறது.எ.கா.உணவு-கீரை;பழக்கம்-கும்மி துவைத்தல்.
மேலும் உணவுகள்:
மன உணவு: ரோஸ் வண்ண உணவுகள்- தோலோடு நிலக்கடலை,காரட்,முட்டை,காளான்,பீன்ஸ்,பருப்பு,சோயா,திராட்சை,செர்ரி,கீரை,வெண்ணெய்,இஞ்சி,வெங்காயம்,தக்காளி. //இதய உணவு: மேற்கண்டதும்+சிவப்பு உணவுகள்
-ஆப்பிள்,வெல்லம்,வெல்ல சருக்கரை,பேரீச்சை,
கசப்பான-மாதுளம்பழக் குருத்து+சிவப்பு மணிகள்+மஞ்சள் படலம்,மண் பூதத்திற்காக.,கசப்பு பாகற்காய்,அகத்திக்கீரை,பச்சை சுண்டைக்காய் அல்லது சுண்டைக்காய் வற்றல்.
மேலும் பழக்கங்கள்,மனம்,இதயம் வலுப் பெற-
LIV-2-வார் செருப்பு அழுத்தம்
GB-38- சிலம்ப ஆட்டம்
P-9,H-9,-கை இறுக்கம்,பல்லாங்குழி ஆட்டம்,தாய கட்டை.
மனம்,இதயம் தூண்ட சிலம்பம் இருபாலருக்கும்.நாட்டியம்,முத்திரை அசைவுகளால் பெண்டிருக்கும் நலம் தரும்.
- ஆசான் ஆ மதியழகன். 04/12/2017 மனம் 2.22
No comments:
Post a Comment