Friday, 10 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 48-52

48. வலியறிதல் -அரசியல் 

        வலிமைக்கான கணக்கீடு செய்வதே வலி அறிதல். செய்யும் செயல் வலிமை முதலில். தான், தன் வலிமை கூட்டுக. கெடுக்கும் சூழல், கெடுப்பார் வலிமை எதிர்நிலை ஆக்கும். நிகர வலிமை க் கணக்கீடு  வேண்டும். 
அக்குப் பார்வை : நிகர வலிமைக் கணக்கு இங்கும் பூதங்களுக்குத் தேவை.
எ. கா. கல்லீரல் பூதம்.
கூட்டல் பகுதி : (1) தன் வலு Liv 1- ( கால் கட்டை விரலில் )
                            (2) தூண்டும் வலு  K 1 - (முன்னங்கால் மையம் )
                      (3) கேட்கும் வலு Liv 8 - ( சம்மணமிடலில் கால் முட்டி மடிப்பருகே )
முறையே ஒருமடங்கு, இருமடங்கு, நான்மடங்கு வலிமை .
கழித்தல் பகுதி : இரவு 11 மணி முதல் 3 மணி வரை ஓய்வு, உறக்கம் எடுக்காது கண் விழித்தல்.
அழியாத, மற்றும் மறையாத சினம், குடிப் பழக்கங்கள் . இரவு வேலை வாய்ப்பு ஒப்புதல்.
        நிகரக் கணக்கே கல்லீரல் மற்றும் அந்த மனிதனின் வலிமை. 
49. காலம் அறிதல் - அரசியல்.
     இரவு, பகல் எனக் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஓடும் பொழுதுக்குத் தக்கபடி வெற்றி, தோல்வி அமைக்கப் பட்டு உள்ளது. காலம் சீர்தூக்கி அறிதல், வினைபுரியும் தலைமைக்குத் தேவை. 
அக்குப் பார்வை : அக்குப் பங் சரிலும் பூதங்கள் இயங்கும் காலத்திற்கேற்ப செயல்பட பயன் அதிகம். எ. கா. உணவு உண்ணல் : காலை உணவு 8.00 A .M  (வயிறு இயக்கம் உச்சம் )
நண்பகல் உணவு 2.00 P . M  ( இதய இயக்கம் உச்சம் ) . இரவு உணவு 8.00 P . M . ( இதயத்தின் துணை மனம் உச்சம் ) .  இதுபோல் உடல்ப் பயிற்சி செய்ய, மருத்துவம் செய்ய எனக் கால அளவுகள் உண்டு. 
50. இடன் அறிதல் - அரசியல் 
     சேற்று நிலத்தில் யானையை நரி வெல்லும். கடலில் தேர் ஓடா. நிலத்தில் கப்பல் ஓடா. 
ஆக, வெற்றி சொந்த  இடத்தில் கிட்டும். எதிரி இடரும் இடத்திலும் கிட்டும். இவையே இட நுட்பங்கள்.
அக்குப் பார்வை : (1) சொந்த மண்ணில் விளைபவை உடலில் நன்கு  ஒட்டும் . கெடுதல் இரா. 
(2) நடனம் ஆடுபவர் தொடர்ந்து ஆட, வலி இடரும் இடம் கணுக்கால். அந்த இடத்தில் சலங்கை மணிகள் மோத வலி தடுக்கப் படும். 
51. தெரிந்து தெளிதல் - அரசியல் 
      ஒருவரை ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேர்ந்து எடுக்க  (1) நற்குணங்கள் தெரிய வேண்டும். (2) நல்ல குணம், கெட்ட குணம் இவற்றில் மிகுதிப் பண்பு தெளிய வேண்டும். (3) தெளிந்தபின் நம்பி செயல்பட வேண்டும்.
அக்குப் பார்வை : எ. கா. நோய் தெரிவு (1) சளி ஏற்பட்டு உள்ளது.
 (2) பண்பு நிலையில் மண்பூத நீர்ச்சத்து நுரையீரல்  சேர்வதில் கோளாறு. (3)  நோய் தீர்ப்பதில்  தெளிவு . முதல் ஊசி, நுரை மண் சத்து வாங்க Lu 9 . இரண்டாம் ஊசி நுரையில் நீர் தங்காது செலுத்த Lu 5. மூன்றாம் ஊசி பெருங்குடலில் மண் வலிமை பெற்று நீர் உறிஞ்ச LI 11.
 இவை போதும் என நம்பி செயல்படு. 
52. தெரிந்து வினையாடல் - அரசியல் 
     ஒரு செயலில் திறமை  மட்டுமின்றி, ஈடுபட்டு செய்பவனையே, தலைவன் தேர்ச்சி செய்ய வேண்டும். 
அக்குப் பார்வை : சிறுநீரக வலிமை வேண்டும் எனில், 
    (1) சம்மணம் இட மிக இயல்பாய் ( K 10, UB 66 )  தன் வலிமை கிட்டும்.
    (2) கை மடங்கி வேலை செய்ய தூண்டு வலிமை (Lu 5 ) கிட்டும்.
    (3) மருந்திப் புள்ளி K 7 ( கேட்கும் வலிமை ) திறன் புள்ளி ஆயினும் தேவை குறைவே.
 ஈடுபாட்டுடன் செய்ய ஒன்றே போதுமே.
 தொடரும்.

Wednesday, 8 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 43-47

43. அறிவுடைமை - அரசியல் 

கற்றது அல்லாமலும் , நடைமுறைக் கல்வி தாண்டியும், இயல்பான நுட்ப அறிவும், தேவையானது திரட்டி , திறமையுடன் செயல்பட முன்னேற்பாடுடன் இருத்தலும் அவசியம். இந்த அறிவுடைமை ( WISDOM ) தலைவனுக்குத் தேவை. 
அக்குப் பார்வை : கற்ற அறிவு, பெற்ற அறிவு அனைத்துமே கல்லீரல்  ஆகிய அடிமனம் வரை இருப்பது மேம்போக்கே. ஆழ்மனம் ஆகிய சிறுநீரகம், உயிர்களின் கடந்த கால வரலாறு உடையது. அதனுள்ளும் நுழைந்து (ஆழ்ந்த செயல் விருப்பத்தால்  முடியும் ) அகன்ற அறிவுடையராதல் வேண்டும். 
44. குற்றம் கடிதல் - அரசியல் 
       ஒரு தலைவனுக்குக் காப்பு, தன் மீது குற்றம் இலாது நடந்து கொள்வது. குற்றமே கூற்றம் ஆகலாம். குற்றம் படியாது கடிந்து காக்க வேண்டும். 
அக்குப் பார்வை : 
                  அச்சத்தால் அழியும் அரிய சிறுநீரகம் 
                  சினத்தால் அழியும் சீர்மிகு கல்லீரல் 
                   பெருமையால் அழியும் பீடுறு இதயம் 
                   கவலையால் அழியும் கவின்மிகு மண்ணீரல் 
                   துக்கத்தால் அழியும் தூய நுரையீரல் - என்று 
ஐம்பூதம் பற்றி கூறலாம் - ஆசான் ஆ மதி யழகன் .
இதுபோல் கூறலாம் " குற்றத்தால் அழிவான் கொள்கை மறவனும் "
45. பெரியாரைத் துணைக்கோடல் - அரசியல் 
       தம்மினும் பெரியார் தம்முடையராய்த் துணை கொள்வது தமக்கு பாதுகாப்பு என இயங்க வேண்டும் . இது தலைவனுக்குத் தலையாயத் தேவை. 
அக்குப் பார்வை :  தாய் சிறுநீரகம் உதவியின்றேல் மகன் கல்லீரல் சூடாகி மஞ்சள் காமாலை நோய் வரை செல்லும்.  தாய் கல்லீரல் குறைபாடு, மகன் இதயத்திற்கு இரத்த அழுத்த  நோய். 
இந்த நிலை தொடரும் ; முன்னேற்றம் இடறும் . சுழற்சி முறையில் தாயும் தேவை ; தாயின் தாயும் தேவை. எனவே அடுக்கில் பெரியார் ஆவாரின் துணை தேவை.
46. சிற்றினம் சேராமை - அரசியல் 
      சூழ்ந்த இனம் எதுவோ, அதன் பண்புகள் தலைமைக்கு  ஒட்டும் . சிற்றினம் எனின், சேர்மானம் தருவது சீரழிவு ஆகும். 
அக்குப் பார்வை : மனப் பாம்பின் தலை மேல்மனம். ( பெரி கார்டியம் ). மனப் பாம்பின் வால் பிரபஞ்ச மனம் நுரையீரல். வாலின் தூண்டலுக்கு ஏற்பதான்  தலையாடும்.  சேரினம் அறிந்து சேர். சிற்றினம் வேண்டாம். 
47. தெரிந்து செயல்வகை - அரசியல் 
         செயலின் தன்மை முழுக்க அறிந்த பிறகே , செயலில் இறங்க வேண்டும்.  செயல்தன்மை, உதவியாளர், கிட்டும் ஊதியம், உலகம் ஏற்கும் தன்மை அறிந்து செயல் தொடங்க வேண்டும். 
அக்குப் பார்வை : ஒவ்வொரு உணர்வும் உள்ளே வரும் முன் இதுவந்து உட்கார்ந்தால் எனக்கு - என் உடலுக்கு ஆவதென்ன ? என அறிந்து மனமுள்ளே, உணர்வு நிலைகளாகிய சினம், கவலை,, .. போன்றவற்றை விடாது ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
தொடரும்.

Sunday, 5 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 39-42

திருக்குறள் - பொருளியல் 

39. இறைமாட்சி - அரசியல் 
       அன்று : மக்களை ஆளும் தலைவன் அரசன்.
       இன்று : ஒவ்வொரு தலைமைப் பொறுப்பு உள்ளவரும் மன்னர்தான்.
குடும்பத் தலைவன் முதல் குழுவின் தலைவர்கள் வரை உள்ள அனைத்தோர்க்கும்  உரியவை இங்கு உள்ள ஆளுமைப் பண்புகள். அறம் , பொருள், இன்பக் கூற்றுக்கள் உங்களுக்கு (தனி மனிதனுக்கு ) க் கூறியவை. அடுத்தவரிடம் எதிர் பார்க்கவோ , குறை கூறவோ வேண்டாம்.  
அக்குப் பார்வை : அறத்தில் கூறப்பட்ட அனைத்து நற்குணங்களும் அரசனுக்கும் வேண்டும். 
ஐந்து பூதங்களுக்கும் ஐந்துவிதமான குணங்கள் உண்டு. கல்லீரல் குணம் அருள் (நேர்மறை ) . 
தீ ஈரல் தெளிவு, மண்ணீரல் நல்லெண்ணம் , நுரையீரல் பகிரும் மகிழ்வு உணர்ச்சி. நீர் ஈரல் நம்பிக்கை. இந்த ஐந்தும் தொகுப்பு பூதமாகிய பெரிகார்டியத்துக்கு உண்டு. மனம் வலிமையாக இருந்தால்தான் உணர்வுத் தொகுப்பில் நன்று வெளிப்படும். மன மாட்சி இறைமாட்சி ஆகும். 
40. கல்வி - அரசியல் 
      நடத்தை என்பது நன்றே ஆயினும், தீதே ஆயினும், முதலில் கற்றலில்தான்  நிகழ்கிறது. 
' ஒரு நாட்டின் தலை எழுத்தே வகுப்பறையில்தான் எழுதப் படுகிறது.' என்பது கோத்தாரி கமிஷன் அறிக்கை. எப்படி செயல் படுவது எனக் கற்பித்து, ஒரு மனிதனின் சிறந்த திறன்களை க் 
கல்லி  (பிடுங்கி ) எடுத்துப் பயன்படுத்த உதவுவதே கல்வி. தலைமை ஏற்போருக்கு கல்வி முதன்மை. 
அக்குப் பார்வை : கல் என்பது கல்விக்கும் வேர்ச்சொல் ,  கல்லீரலுக்கும் வேர்ச்சொல் . மண்ணில் இருந்து திரட்ட கல் உருவாகும். மண்ணீரலில்  இருந்து சக்தி பெற்று கல்லீரல் சக்தி பெறுகிறது. 
கல்லீரல் செய்வது உடல் சேமிப்பு மட்டும் அல்ல, மன சேமிப்பும் ஆகும். உங்கள் கால வளர்ச்சி, மனம் உடல் இணைந்தே கல்லீரல் வெளி உறுப்பு கண்ணில் பதிவாகிறது. இன்னொரு பதிவு மூளையில் நடக்கிறது. எண் , எழுத்து க்  கல்வி இரு கண்கள் என்ற ஒப்பிடு காண்க. ஒரு மனிதனின் தொடக்கமும் இங்குதான். ஒரு தலைவனின் தொடக்கமும் இங்குதான். கல்வி அடிப்படை. கல்லீரல் அடிமனம்.
41. கல்லாமை - அரசியல் 
        துறைதோறும் துறைதோறும் அறியக் கூடிய இயல்கள் விரிவடைந்து கொண்டிருக்கின்றன . சாகும்வரை தேவையானது கற்க வேண்டும். கல்லாதிருக்கும் தன்மைதான் கல்லாமை. இது காலத்தால் தகுதியின்மை ஆகி விடும். 
அக்குப் பார்வை : கல்லீரல் முதல் பூதம். இதில் முதல் குறை ஏற்பட்டால் கண்ணிலிருந்து குறைபாடு தோன்றும்.  இதனால் ஆளுமையாகிய கண்ணோட்டம், கண்டுணரும் நுட்பங்கள் கண் இழப்பால் கிட்டாது. கல்லாமையிலும் கிட்டாது. 
42. கேள்வி - அரசியல் 
      காதுகளால் கேளுங்கள். நீங்கள் பத்து மணி நேரம் படித்து அறிய வேண்டிய புத்தகத்தின் சாரத்தை அரைமணியில் ஏன் அரை நொடியில் கூற வல்லவர்கள்  இருக்கிறார்கள். இது  தலைமைத் திறனை மிகுதியாக்கும். தவற விடக் கூடாது. கேள்வி ஒரு செல்வம். 
அக்குப் பார்வை : கல்லீரல் பூதத்தின் தாய் சிறுநீரகம். அது நீர் பூதம். இதன் வெளியுறுப்பு காது . 
கண் இயக்கம் மனத்தால் ஏவி இயங்கும். ; ஏன் மூடும் வசதி உண்டு. காது  இயக்கம் உயிர்க் காவந்துக்கு இயங்குகிறது. நீங்கள் தடைதான் உண்டாக்கலா ம் .  இதன் அரி ய தேவையால் 
திறந்தே உள்ளது. கேள்வியால் தாய் போல் உதவி கிடைக்கும். 
தொடரும். 

Wednesday, 1 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL-35-38

35. துறவு - துறவறவியல் 

   '   நான் ' எனும் கர்வமும், 'எனது ' எனும் உடைமையும் துறக்க வேண்டும். அது புலனடக்கத்தால் நிகழ வேண்டும். அதுவே துறவு. 
அக்குப் பார்வை : தான் என விளையும் இடம் கல்லீரல் (ஆகாயம் ) எனும் முதல் பூதம் . அதுவே மனிதனின் முதல். கல்லீரலின் வெளிப்பாட்டுப் பதிவு , ஒன்று கண்மணிப் பாப்பாவிலும் , மற்றொன்று மூளை செல்களிலும் பதிவாகிறது. கல்லீரல் பூதமே அடிமனம் -ஆசாமி - நந்தி. 
இதன் தாய் சிறுநீரகம் , ஆழ் மனம் - சாமி - பதி . நந்தி நீங்க பதி தெரிவார். இதுவே பசுபதி தத்துவம். காணொளி காண்க: YOU Tube :  tamil muraiyil acupuncture . 
36. மெய்யுணர்தல் - துறவறவியல் 
      காணும் பொருள்கள் தம் அழகின் சிறப்பால் கவரும். இது மாயை. இயற்கையும் விளையாடும் . மனிதனும் தன் பங்குக்கு அழகு சேர்ப்பான். இதனால் விளைவது அதிக விருப்பு . ( காமம் ) . கிடைக்காவிடின் சினம் ( வெகுளி ) . நிகழ் காலம் எனும் இருப்பு மறைவதால் தடுமாற்றம் (மயக்கம் ) . பெரும் சுழல்கள் தாம் இந்தத் தோற்றங்கள் என உணர்தல் 'மெய் ' உணர்தல்.
அக்குப் பார்வை : கண்ணால் காணும் காட்சிகள் ஆண் மனதைக் கெடுக்கும். அடிமனம் கல்லீரல் .அதன் வெளி உறுப்பு கண். காதில் விழும் சொற்கள் பெண் மனதைக் கெடுக்கும். ஆழ்மனம் சிறுநீரகம் . அதன் வெளி உறுப்பு  காது . இவை இல்லறவியலார் முரண்பாட்டுத் துன்பங்கள்.
கண்ணால் காண்பதும் பொய் ; காதால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப்பதே மெய். இதுவே நடுவு நிலை மற்றும் துறவு நிலை. 
37. அவா அறுத்தல் - துறவறவியல் (இறுதித் தலைப்பு )
       அவா அல்லது ஆசை அல்லது விருப்பம் , ஒருவரை அடுத்த பிறப்புக்கு இட்டுச் செல்கிறது. பிறப்பு, இறப்பு , இன்ப துன்பம் எனும் சுழற்சி உருவாகிறது. அவாவை அறுத்தல் துறவை நிலைப் படுத்த உதவும். 
அக்குப் பார்வை : யின் யாங் குறியீடு காண்க. அவா பெரு வெளிச்சமாய் இருந்தால் , இருள் சிறிது இருக்கும் . பிறகு இருள் பெரிதாகும். வெளிச்சம் சிறிதாகும். மறு முயற்சி செய்தாலும் சுழற்சி நிற்காது. அவா, பேரவா எனத் தொடரும். அவாவைப் பற்றாதே . விலகு. துறவும் இலகு. 

38. ஊழ் - ஊழியல் 

     மனிதன் எல்லாப் பாகுபாடுகளையும் இரண்டாகப் பிரித்து, தனது இருப்பை விரும்பியதில் நிறுத்த முயன்றாலும்  விதி ( ஊழ் ) இடத்தாலும், காலத்தாலும் மாற்றிப் போடும். " ஊழ் காட்டாறு போல - மனித முயற்சி ஒரு துரும்பின் அசையும் முயற்சி." இது கணியன் பூங்குன்றனார்  உவமை. 
அக்குப் பார்வை :  உச்சந் தலைப்புள்ளி Du 20 வழியே பிறப்பின் போது நுழையும்  பிரபஞ்சம் மனிதனின் இயக்கத்திற்கு (உயிர்) காரணம் ஆகிறது. சிறுநீரகத்தை இயக்குவதும் இதுவே.  சிருண்றீரகம் permanant  Battery .  அதன் சக்தி வாங்கி இயங்கும் கல்லீரல் ஒரு Rechargable  Battery . கல்லீரல் நீங்கள் ; அதைத் தீர்மானிப்பது மரபாகிய சிறுநீரகம் - ஆதி செல் . அதன் இயக்கத்தைத் தீர்மானிப்பது - வெளிச்சுழலில் இயங்கும் நுரையீரல் - பிரபஞ்ச மனம். ஆக, மரபும், சூழலும் உங்கள் விதியைத் தீர்மானிக்கின்றன. மரபு, சூழல், நீங்கள் மூன்றும் அறிந்து உணரும் விழிப்புணர்வே 'அறம் ' எனும் பயணம் சிறக்க உதவும்.
----------அறம்  முற்றிற்று --- பொருள்  தொடரும் ---

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL -30-34

30. வாய்மை - துறவறவியல் 

        வாயால் பேசுவது தீங்கு இல்லாததாக வெளிவர வேண்டும். அதுவே வாய்மை. 'உண்மை ' உள்ளத்தில் உள்ளது. அதனினும் தீங்கு இல்லா உரையாகிய "வாய்மை " யே  போற்றப் படும்.
அக்குப் பார்வை : இயற்கை நிகழ்வுகள் அன்றி மனிதர் சார்ந்த உண்மைகளும் நிகழ்வே. அது இரு மனங்கள் மற்றும் இரு உயிர்களின் மோதலில் நிகழ்வது. இந்த"  உண்மை " மேலும்  பரப்பற்கு உரியது அன்று. தீங்கு தராத வாய்மை பேசினால், பிற உயிர், தன் உயிர், சமுகம் காப்பாற்றப் படும். உண்மை, வாய்மை, மெய்ம்மையில்  மெய்யான (உடல்) நடத்தைக்கு வாய் (மண்பூத நலன் ) மை யே முதன்மை. 
31. வெகுளாமை - துறவறவியல் 
       சினம் கொள்ளாது இருக்கும் பண்பு. பெரியோரிடத்தில் சினம் வந்தால் ஒரு கணம் கூட நிற்காது. சினமற்றத் தன்மையே துறவுக்குத் தேவை . 
அக்குப் பார்வை : ' நான் ' எனும் உணர்வு விளைவது, அடிமனமாகிய கல்லீரல் (ஆகாயம் ) பூதத்தில் தான். இந்த கர்வமே மேல்மனத்தில் ( இதயம் + மனம் ) இயங்கி வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கிறது. தான் என்பதைக் காப்பாற்ற , தனக்குப் பயன் வர சினம் கொண்டால் காப்பும் வராது. பயனும் தேடியது  வராது. இழிவு, அழிவு வரும். சினம் துறவிக்குக் கூடாது. சமுகம் காக்க வரும் சினம் விதி விலக்கு .
32. இன்னா செய்யாமை - துறவறவியல் 
       பிறருக்கு மனதாலும், உடலாலும் துன்பம் செய்யாது இருத்தல். 
அக்குப் பார்வை : பிறர் என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களே ஆவர். எந்த ஒரு துன்பம் பிற உயிருக்குச் செய்யினும் அது சுழற்சி முறையில் திரும்பி வரும். மனதின் பிறர் துன்பக் கற்பனை 
 முதலில் உங்களுக்குள் நிகழ்வதால் , நீங்கள் பிரபஞ்ச விதிப் படி தப்ப முடியாது. தலை வெட்டும் எந்திரம்  செய்தவன், அதனாலேயே செத்தான்  என்பது வரலாறு. 
33. கொல்லாமை - துறவறவியல்  
     பிற உயிர்களைக் கொல்லாதிருக்கும் மாண்பு. 
அக்குப் பார்வை : பேருயிரையே  ஆதி செல்லாக நம் உடம்பில் சிறுநீரகத்தில் 50:50 தாய் தந்தையர் மூலம் பெற்று வாழ்கிறோம். நம் இன்றைய வாழ்வு, பிரபஞ்சத்தில் பல கோடி ஆண்டுகளாய் புல்லாய், பூண்டாய் , புழுவாய் இருந்து இன்று அடைந்த வரம். எனவே உயிர் போற்றல் பேருயிர் போற்றும் உயர் பண்பு. 
34. நிலையாமை - துறவறவியல்  
      செல்வம் வந்தால் அது போகும். நாள் என்பது வந்தால் அதுவும் போகும். உடல், உயிர் என்பது வந்தால் அதுவும் போகும். இதுதான் நிலையாமை . துறவின் நோக்கம்  நிற்கும் தன்மை, செயல் அறிவது. 
அக்குப் பார்வை : யின் யாங் இரண்டு முரண்பாடுகளால் சமநிலைப் பட்ட து , அண்டமும், பிண்டமும். சமநிலை குலைந்தால் முதலில் நோய், பிறகு அழிவு. பின் அடுத்த பிரபஞ்சத் தோற்றம். ஆக்கத்திலிருந்து அழிவும், அழிவிலிருந்து ஆக்கமும் நிகழ்வது தொடர்ச்சி செயல். இயக்கம் ஒன்றில் மட்டும் நிலைக்காது. சம நோக்குத் துறவிக்குத் தேவை. சமநோக்கில் மையம் கிடைக்கும். அது நிலைப் பொருள். 
தொடரும்.