Wednesday, 30 March 2016
ALIPPU-VARIKAL
அன்னைத் தமிழாக என் நெஞ்சில் வாழ்கின்ற
த . ச. தமிழனார் அய்யா அவர்கட்கும்
என் உடலிலேயும் , உயிரிலேயும் வாழ்கின்ற
என் தந்தையார் அரு. ஆறுமுகம் அவர்கட்கும்
என் தாயார் ஆ. மங்களம் அவர்கட்கும்
அடிபணிந்து அளிப்பது .
நான்கு சுற்றுக்களும் நன்கு புரியும்.
manam seyyum udal aatchi-2
மன விளக்கம் - கபம் - பொருள் கோடு
நுண் மனம் (Sp -மண் ), பிரபஞ்ச மனம் (Lu - நுரை ) சேர்ந்த மனக் கோட்டின் இந்த பகுதி பொருள் கோடு . இதைக் கபம் எனவும் கூறலாம். இந்தப் பகுதி இயங்கு தசையால் இயக்கம் பெறுகிறது, கண்டிப்பாக மன ஆட்சி உண்டு. இந்நிகழ்ச்சிகள் தன்னிச்சையாக நடைபெறுவது போலத் தோன்றினாலும், உங்களைச் சுற்றி உள்ள நபர்கள், செயல்பாடுகள் எனப் பலவிதத்தில் 'அறியாத' பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நுண் மனக் கோட்டின் நிறம் மஞ்சள்.
மண் முனை :
சுவை யறிந்து மென்று உண்டால்தான் , பல்லில் உள்ள நரம்புகள், நா நரம்புகள் மூலம் இரைப்பை அறிந்து இன்சுலின் சுரக்கும். இதற்குரியது, மன மண் புள்ளி P 7. இதை செரிமானப் புள்ளி, இன்சுலின் புள்ளி , இஞ்சிப் புள்ளி எனலாம். இன்சுலினை, செரிமானத்தை மன அளவில் கேட்டு வாங்கும் புள்ளி மண் மனம் Sp 6 ஆகும். நுண் மனத்தன்மையும் , பெண்ணுக்குரிய தன்மையும் நிறைந்த புள்ளி.
பிரபஞ்ச முனை :
கணுக்கால் அருகில் உள்ள கால் புள்ளி மண் நுரை Sp 5 ஆகும். இது மிதிவண்டி ஓட்டுவதால் இயங்கும். செரிமான நுணுக்க நீர்ச்சத்து நுரையீரல் வந்து சேரும். நோய்களே இல்லை . இதன் எதிர்ப் புள்ளி நுரை மண் Lu 9. இது கை விசிறி வீசுவதாலும், கைப் பணிகளாலும் பயன் கிடைக்கும். இந்த ஒரு முனையில் அண்டமானது பிண்டத்தை சந்திக்கிறது. இது அனைத்து இரத்தக் குழாய் அடைப்புகளையும் நீக்கும்.
மன விளக்கம் -வாதம் -இன்பக் கோடு
ஆழ் மனம் (K -நீர் ), அடிமனம் (Liv -கல் ) சேர்ந்த இணைப்புக் கோடுதான் இன்பக் கோடு . 5-> 1 . இன்பக் கோட்டின் நிறம் நீலம் . ஆழ்ந்த அமைதி பொறுத்தே இன்பமும் மிகும். மனம் பரபரப்பு அடங்கி , பொ ழுதுமடங்கிய நிலையில் நீலக் கோடு விழிக்கும்.
கர்வ முனை :
'தான்' எனும் கர்வ முனையாகிய கல்லீரல் பூதம் நழுவும்போது அடைவது சிற்றின்பம்.
ஆதி அந்த முனை :
நுரையீரலில் மூச்செடுத்து, மனம் படிப்படியாய் நீக்கி, ஆழ்மனம் K தொட்டு வளம் பெற்று தான் எனும் 'Liv ' சிந்தனை விடுத்து வெறுமை உணர்தல் பேரின்பம். இது எதிர்ப் பக்கத் தொடுகை.
எந்த ஒரு இன்பத்திற்கும் வழியின்றி, நுரை துக்கத்தால் நிரம்பி வழியும்போது , நுரை ஆற்றல் குறைவதால் , சிறிநீரகம் வலுக் குன்றி சிற்றின்பமும் கூடத் தடையாகிறது. இரவுத்தூக்கம் கெடுகிறது. என்பதும் சேர்ந்தால், தசைநார் இயக்கம் கல்லீரல் வலுக் குன்றி வாதம் வர வழிச் செய்கிறது.இந்த நிலைமை, சிறுநீரகம், கல்லீரல் வலு ஏற்றுவதால் தீரும்.
---------
manam seyyum udal aatchi.- katturai
மனம் செய்யும் உடல் ஆட்சி.
மனதின் செல்வாக்கு :
'மனிதன் ' என்பதன் பொருளே , மனத்தை உடையவன் என்பதாகும். நம் ஒவ்வொரு தெரிந்த செயலிலும் , தெரியாத நிலையில் செய்யும் செயலிலும்கூட , மனம் பங்கு கொள்கிறது.
(1) 'திரும்பு' என்று பிறர் சொன்னது கேட்டாலும், அல்லது தானே விரும்பினாலும் தலையை நாம் திருப்புகிறோம். இது நடப்பது இயக்கு தசையால், உடலின் மீது விளைச்சல்.
(2) அதிருமாறு அல்லது திடீரெனக் கவரும் வகையில் , ஒலி ஓரிடத்தில் கேட்டால் தலை தானே திரும்பும். இது நடப்பது இயங்கு தசையால் உடலின் மீது விளைச்சல்.
மன விளக்கம் -பித்தம் -அறக்கோடு
அடிமனம் (Liv -கல் பூதம் ) , மேல் மனம் (P - பெரி கார்டியம் ) சேர்ந்த மனம் விழிப்புணர்வு உடைய மனம் . இதன் திடமான அமைப்பு இயக்கு தசைகளை , விருப்பப்படி அசைக்கிறது.
கட்டளை இன்னும் கீழேயிருந்து வந்தால், இயங்கு தசையும் அசையும்.
இங்கு 1-> 2 பச்சை நிறத்தில் கல்லீரல் கோடாகக் காட்டப் பட்டுள்ளது. இது இப்பிறவியில் பதிந்த விருப்பு (+), (-) எனும் இரட்டையால் இயக்கப்படும் அறக் கோடு ஆகும்.
இதன் அதிகப் படியான சிந்தனைகள் உடலில் உண்டாக்கும் விளைவுகள் :
(1) பித்தப்பை சுரப்பை அதிகமாக்கும். (பித்தப்பை எடுத்தல் பரிந்துரை செய்யப் படும் .)
(2) உறக்கத்தை சிந்தனையால் கெடுத்து கல்லீரல் புதுப்பிப்பு தடையாக்கும். (ஆள் மெலிதல் )
(3) சிந்தனை அதிகரிப்பால் , சுமை அதிகமாகி மறதி வரும். ( P 9 - பிட்யூட்டரி சுரப்பி பாதித்தல் )
(4) மன வலுக் கெடுதல் (P 8 - தைராய்டு சுரப்பி பாதிப்பு )
(5) மனதின் உண்ணும் ஆர்வம் குறைந்து செரிமானம் பாதிக்கும் . (P7- இன்சுலின் சுரப்பு பாதிப்பு
).தீ மண் - P 7, H 7 கெட்டதால் , மண் தீ Sp 2 வலி தொடர்ந்து இருப்பதால் , சர்க்கரை நோய் ப் பரிந்துரை கிடைக்கும்.
(6) உடல் மன சமானம் கெட்டு உறக்கம் கெடும். (P 6-உறக்கப் புள்ளி )
(7) மனம் சுருங்க, நுரையீரல் காற்றெடுத்தல் கெட்டு கை வலி வரும் (P 5- நுரைப் புள்ளி )
(8) மனதின் தன் சமானம் கெட்டு வலி P 4 நிற்கும் .
(9) மன வெப்பம் கூடிய நிலையில் நா வறட்சி (P 3- தீ கவரும் நீர் )
ஆகவே மனம் தொட்ட இடங்கள் அனைத்து பூதங்களும் ஆகும்.
எனவே, பூதங்கள் வழி நோய்த் தீர்வு என்று வரும்போது, ஊசி இடலில் முதல் ஊசி P - ல் இருக்க வேண்டும்.
மன விளக்கம் - கபம் - பொருள் கோடு - காண்போம் .
Tuesday, 22 March 2016
Manap-paambu (dif pic)+aimpootha ottapadam.
பச்சைக்கோடு -அடிமன , மேல் மன இணைப்பு (உங்கள் +,- விழிப்பு மனம் )
சிவப்புக்கோடு 'மேல்மன , நுண் மன இணைப்பு (உங்கள் வாழும் உணர்வு = காதல்)
மஞ்சள்கோடு -நுண் மன, பிரபஞ்ச மன இணைப்பு ( உங்கள் உடல் தோற்றம்.)
வெள்ளைக்கோடு -பிரபஞ்ச மன, ஆழ்மன இணைப்பு (உங்கள் காற்றேடுக்கும் நெஞ்சு வலிமை= வீரம்.
நீலக்கோடு- ஆழ்மன , அடிமன இணைப்பு (இறைவன் ஆட்சி = இன்ப மனம்)
மேலும்,
பச்சைக்கோடு =அறம்
சிவப்புக்கோடு = காதல்
மஞ்சள் கோடு = பொருள்
வெள்ளைக்கோடு = வீரம்
நீலக்கோடு = இன்பம்
-ஆசான். ஆ. மதி யழகன்.22/03/2016.
Subscribe to:
Posts (Atom)