100 ஆண்டுகள் வாழ... கட்டுரை தொடர்ச்சி -2
(6)மண் பூதம்-மனம் வழி மண்ணீரல்,கணைய சுரப்பிகள்-நல்லெண்ண வளர்ச்சி.
மண்பூதம் நன்கு செயல்பட ஆற்றல் மனம்,இதயம் என்ற தீ பூதமே தந்து உதவ வேண்டும்.
மனம் கவலை என்ற எண்ணத்தில் மூழ்கிவிட்டால்,அதாவது மாற்றமுடியாத 'பெயிலாகி விட்டேன்' கணவர் இறந்து விட்டார்.என்ன செய்வேன்?' இப்படி களை போன்ற எண்ணத்தில் மாட்டிக் கொண்டால் தற்கொலை வரை இழுத்துச் சென்று விடும். அல்லது வயிற்றுக்கு வைத்தியம் என்று வருடக் கணக்கில் பயனின்றி நீளும்.
எனவே நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு.
(7)காற்று பூதம்-நுரையீரல் உடல் வழி-யோகா எனும் மூச்சுப்பயிற்சி.
மூச்சுதான் உடலை ஓம்புகிறது.காற்று போக்குவரத்தை நுரையீரல் ஒழுங்குபடுத்தி அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்வது யோகா முறைகளே ஆகும்.எனவே அரைமணியாவது யோகா அவசியம்.
(8) காற்று பூதம்-நுரையீரல் மனம் வழி-உணர்வு பகிரல்.
துக்கம்நெஞ்சை அடைக்கும் என்பார்கள். நுரையீரல் கோளாறு வருவதற்கு காரணம் தூசும் பிறவும் மட்டும் அல்ல.மனதின் நீக்க முடியாத துக்க நிலைகளும் கூட.துக்கத்தைப் பேசித்தான் தீர்க்க வேண்டும்.தீர்வுக்கு வழி பிறக்கும்.உணர்வு பகிரல் அவசியம்.
(9)நீர்பூதம்-சிறுநீரகம்-உடல்வழி-நீரும்,நீர் உள்ள உணவுப் பொருள்கள்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்றிலிருந்து ஐந்து டம்ளர் வரை நீர் குடிக்க வேண்டும்.உணவுக்கு முன் அரைமணி,உணவுக்கு பின் அரைமணி நீர் அருந்தாமை,வயிற்று அமிலம் செயல்பட வழிவிடும்.நாள்தோறும் ஏழு டம்ளர் நீர்அருந்துவதும் தேவை.நீர் உள்ள உஉணவுப் பொருள்கள் வெள்ளரி,தர்பூசணி,சுரைக்காய் போன்ற நீரும் நீர் உள்ள உணவுப் பொருள்கள் தேவை.
(10)நீர்பூதம்-சிறுநீரகம்-மனம் வழி- நம்பிக்கை.
சிறுநீரகம் தாய்தந்தை வழி 50:50 ஆற்றல் பெற்று மரபு நிலையைப் பேணுவது மற்றும் பிரபஞ்ச சிந்தனைகள் பதிந்து உள்ள இடம்.ஆழ்மனம் இதுவாகும்.அச்ச உணர்வினாலும்,சிறுநீரகத்தை அவசியமின்றி மருந்துகள்,எண்ணங்களால் தூண்டினாலும் வாழ்நாள் சுழற்சி குறையும்.
இரசாயன மருந்துகளையும்,தேவையற்ற கிளர்ச்சியுறு எண்ணங்களையும் நீக்கி,வாழ்வு விருப்பமும்,உள்ளிருக்கும் பேராற்றல் காப்பாற்றும் என்ற நம்பிக்கை யும் அவசியம்.
இந்த பத்து கட்டளைகள் ஒன்றும் குறைவுபடாமல் மனம் ஒப்பி நிறைவேற்றினால்தான் நூறாண்டு வாழ்வு எளிதாகும்.
[நூலாசிரியர் பற்றி:'தமிழ்முறையில் அக்குபங்சர்'எனும் நூலை எழுதி அதன் முதற்பதிப்பு முற்றும் விற்பனை ஆகி உள்ளது.புத்தகத்தின் வெளியீட்டுரை யூ டியுபில் நாள்தோறும் 35 பேர் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். தற்போது அதன் எண்ணிக்கை 3600 நெருக்கம்.]