Monday, 4 January 2016

Tamil muraiyil acupuncture -2/6.5 ketkum valu pic.

கேட்கும் வலுப் புள்ளிகள் - மருந்துப் புள்ளிகள்.

Liv 8- கல் மருந்து -குளிர்ச்சி 

GB 43-பித்தப்பை மருந்து  -பக்க வலிகள் 

H 9-இதய மருந்து -மாரடைப்பு தடுப்பு 
P 9-மன மருந்து -நினைவுத் திறன் 

Tw 3- மூ வெ மருந்து -கழுத்துப் பிடிப்பு நீக்கி 
 S I  3-சிறு குடல் மருந்து -தாய்ப் பால் சுரப்பு 

Sp 2- மண் மருந்து -சர்க்கரைப் புள்ளி 

St 41-இரைப்பை மருந்து -இ ஓ சீர் 

Lu 9- நுரை மருந்து -இ கு அடைப்பு நீக்கி 
நுரை ஊற்று 

LI 11- குடல் மருந்து -நோய் எ சக்தி 

K 7- நீர் மருந்து -சிறு நீரகக் கல் நீக்கி 

UB 67 -நீர்ப் பை மருந்து -கழிவு நீக்கி 
இவை மருந்துப் புள்ளிகள். விரைவாக வேலை செய்யும் . 
தொடரும். 



Tamil muraiyil acupuncture -2/6.5 thoondum valu pic.

தூண்டும் வலு - ஊட்டப் புள்ளிகள் வரிசை .

K 1-கல் ஊட்டம் 

UB 65-பித்தப்பை ஊட்டம் 

Liv 2- தீ (இதய + மன ) ஊட்டம் 

GB 38-மூ வெ + சி கு ஊட்டம் 

H 7, P 7- மண் ஊட்டம் 
Tw 10, S I 8- இரைப்பை ஊட்டம் 

Sp 5- நுரை ஊட்டம் 

St 45 - குடல் ஊட்டம் 

Lu 5 - நீர் ஊட்டம் 

LI 2 - நீர்ப்பை ஊட்டம் 
குறிப்பு : ஊட்டப்  புள்ளிகள் தாயிடம்  இருந்து வருகின்றன. 
தொடரும்.

Sunday, 3 January 2016

Tamil muraiyil acupuncture -2/6.4

6.4 எதிர்க் கட்டுப்பாடு சுற்று - கவரும் சுற்று -பின் வீச்சு 

தனிமங்கள் ஒன்று விட்டு த்  தாண்டுவது முன் வீச்சு , கட்டுப்பாடு சுற்று. இதுபோல் அவசர நிலையில், ஒன்று தாண்டி முன்னதாக சக்தி பெற்றால் , இது எதிர்க் கட்டுப்பாடு , பின் நோக்கிக் கட்டுப்பாடு  அல்லது பின் வீச்சு எனப்படும். இங்கு ஒரு பூதம்  தன் தாயின் தாயிடம் உதவி பெற்று  வலிமையாக இயங்குகிறது.
பட விளக்கம் :
படத்தில் காந்தம் லாட வடிவில் காட்டப் பட்டுள்ளது . லாடத்தின்  வளைவுப் பக்கம், பிடிக்கும் மூலகம் உள்ளது. துருவங்கள் முனையில் பிடிபட்ட மூலகம் உள்ளது.
 எ. கா. K 3 - குதிகால் வலி - கவரும் நிலை 
இது நோய் அல்ல. சிறுநீரகத்தின் குறைபாடு . உடலில் நீர்ச்சத்து சரிவர இயக்கம் இல்லாமல் , 
நீரகக் குறைபாடு உள்ளது. இங்கு சிறுநீரகம் தனக்கு முன் உள்ள நுரையிடம் ஆற்றல் பெறாது அதற்கு முன் உள்ள  மண்ணிடம் ஆற்றல் பெறுகிறது.
காரணங்கள் மூன்று :
(1) நடு பூதம் நுரை போதுமான வேலை செய்து காற்றின் வழி ஆற்றல் தரவில்லை . (யோகா தேவை ) (2) அதற்கு முன் உள்ள மண் பூதமோ உணவை வெளுத்துக் கட்டி சக்தி நிரம்பி உள்ளது. (பருமன் ஏறிக் கொண்டு இருக்கும் ) (3) மண்ணின் வலிமைக்கு நிகராக சிறுநீரகமாகிய தானும் வலிவு பெற்றால்தான் உடலைக் காப்பாற்ற முடியும். 
      எனவே பின்னே பொய் , திருடன் மூட்டையை தன் முதுகில் சுமந்து ஓடுவது போல , நீர் மண்ணைக் கவர்ந்து ஓட்டம் நிறைவு செய்கிறது. இதன் விளைவு (1) சிறுநீரக வேலை கெடுவதால் வலி இருக்கும். (2) மண் இழுக்கப் படுவதால் பசி இருக்காது. கண்ட நேர உணவு, ஆற்றல் செலவு குறைந்து உடலில் வரவாகி ப் பருமன் ஏறும். 
      கவரும் சுற்றால் வரக் கூடிய நோய்கள் மீட்சித் தன்மை உடையவை. பழக்க வழக்கங்களை நோயாளி உணர்ந்து சரி செய்தால்தான் விடுபட முடியும். 
கவரும் புள்ளிகள் பெயர்ப் பட்டியல் : 
------கவரும் புள்ளிகள் - நிறை புள்ளிகள் (complimentry points ) 
உயிர் வரிசை ---விளி ---குறியீடு ---3 d பெயர் ----பயன் வழிப் பெயர் 
அ        கல் நிறை ------Liv 4 -----கல் கவரும் நுரை ---கணுக்கால் வலி நீக்கி 
ஆ      பித்தப்பை நிறை -GB 44---பித்தப்பை கவரும் நுரை --கால் விரல் வலி 
இ       மன நிறை ------P 3---தீ (மனம் ) கவரும் நீர் -----நா வறட்சி 
இ      இதய நிறை ----H 3----தீ (இதயம் ) கவரும் நீர் --மாரடைப்பு தடுப்பு 
ஈ       மூ வெ நிறை --Tw 2---மூ வெ கவரும் நீர் ----மனச் சுமை குறைப்பு (மோதிரம் )
ஈ      சிறு கு நிறை ---S I 2 ----சிறு குடல் கவரும் நீர் ---கைவிரல் வலி , தோள்ப் பட்டை வலி 
உ        மண் நிறை ----Sp 1 ----மண் கவரும் கல் ----செரிமானத் தலைவலி 
ஊ     இரைப்பை நிறை --St 43--இரைப்பை கவரும் கல் ---சளி நீக்கம் 
எ      நுரை நிறை -----Lu 10 ---நுரை கவரும் தீ ----வறட்டு இருமல் 
ஏ     குடல் நிறை ------LI 5 ---குடல் கவரும் தீ -----மலச்சிக்கல் 
ஒ     நீர் நிறை --------K 3 ---நீர் கவரும் மண் -----குதிகால் வலி 
ஓ    நீர்ப்பை நிறை -----UB 40 --நீர்ப்பை கவரும் மண் --முதுகு வலி ப் புள்ளி 
நோய்ப் பட்டியல் 
 --மீட்சி நோய்கள் (1) பாத வலி, கணுக்கால் வலிகள், கணுக்கால் மூட்டு வலிகள் , கால் விரல் வலிகள் (2) முழங்கை வலி, தொண்டை, நாக்கு வறட்சி, இதயப் படபடப்பு , நெஞ்சு வலி, மாரடைப்பு நிலை  காய்ச்சல், காது  அடைப்பு , கை விரல் வலி, தோள்ப் பட்டை வலி  (3) செரிமானத் தலை வலி, சளி நீக்கம்  (4) வறட்டு இருமல், தொண்டை வறட்சி, கைக் கட்டை விரல் வீக்கம், விரல் வலி, கை மரப்பு , மலச்சிக்கல், தூசி அலர்ஜி, மணிக்கட்டு வலி (5)  குதிகால் வலி, கணுக்கால் வலி, பிறப்புறுப்பில் அலர்ஜி , மூட்டு வலி, மூட்டு வீக்கம், முதுகு வலி  
தொடரும் ஆ. மதி  யழகன்.  

Saturday, 2 January 2016

Tamil muraiyil acupuncture -2/6.3 contd

பெயர்ப் பட்டியல் :
---------கட்டும் புள்ளிகள் - குறை உள்ள புள்ளிகள் . --------
உயிர் வரிசை ---விளி ---குறியீடு ----3 d பெயர் ---பயன் வழிப் பெயர் 
அ      கல் குறை -----Liv 3 ---------கல் கட்டும் மண்  ----இரத்த அழுத்தப் புள்ளி 
ஆ     பித்தப்பை குறை --GB 34---பித்தப்பை கட்டும் மண் --தசைப் புள்ளி / வாய் கசப்பு 
இ      மனம் குறை ----P 5 -----மனம் கட்டும் நுரை -----கை வலி 
இ       இதயம் குறை --H 4 ----இதயம் கட்டும் நுரை  ----கை வலி 
ஈ       மூ வெப்ப குறை --Tw 1 --மூ வெப்பம் கட்டும் நுரை ----காய்ச்சல் 
ஈ       சிறு குடல் குறை --S I 1 --சிறு குடல் கட்டும் நுரை  ----காய்ச்சல் 
உ     மண் குறை ----Sp 9 ---மண் கட்டும் நீர் -----மூட்டு வலி 
ஊ    இரைப்பை குறை --St 44 --இரைப்பை கட்டும் நீர் - முன் பக்க வலி 
எ       நுரைக் குறை ----Lu 11 --நுரை கட்டும் கல் --தலை வலி 
ஏ      குடல் குறை ----LI 3 ---குடல் கட்டும் கல் ---விரல் வலி 
ஒ      நீர்க் குறை ----K 2 ---நீர் கட்டும் தீ ----அரிப்பு
ஓ      நீர்ப்பை குறை --UB 60 --நீர்ப்பை கட்டும் தீ --பாத வலி 
நோய்ப் பட்டியல் :
-------தீரா நோய்கள் - தொடர் கவனிப்பு நோய்கள் -------
(1) இரத்த அழுத்தம் , கண் கட்டி, தலை வலி, கண் நோய்கள்,
(2) கை வலி, கை வாதம், கை நரம்பு இயக்க பாதிப்பு, படபடப்பு , சுருக் வலி 
(3) கால் வீக்கம், முழங்கால் வலி, மூட்டு வலி,  மூட்டுத் தேய்மானம் 
(4) மயக்கம், அதிர்ச்சி, குழப்ப மன நிலை, தலை வலி 
(5)  தோல் அரிப்பு,  பாத வலி, மூச்சுத் திணறல். 
தொடரும்.
அன்புடன், ஆ. மதி யழகன்.  

Tamil muraiyil acupuncture -2/6.3

6.3 கட்டுப்பாடு சுற்று 

இந்த சுற்றை கட்டுப்பாடு நிலை எனலாம். இங்கு ஒரு பூதம் அடுத்த பூதம் விட்டுத் தாண்டி அவசரமாக , பரபரப்பாக அதற்கும் அடுத்ததை நாடுகிறது.
பரபரப்பு ஓட்டம்  இப்படி 1, 3, 5, 2, 4, 1, 3, 5, 2, 4, ...இந்த ஓட்டத்தை கை விரல் முனைகளில் கூறலாம். வர்ம முறைப்படி,
       (1) கட்டை விரல் - தீ பூதம் 
     (2) ஆள் காட்டி விரல் - நுரை பூதம் 
   (3) நடு விரல் - கல் பூதம் 
   (4) நான்காம் விரல் - மண் பூதம் 
   (5) சுண்டு விரல் - நீர் பூதம் 
இப்போது , இடது கை கட்டை விரலை இதயத்தில் வைக்க. ஆள் காட்டி விரல் நுரையில், நடு விரல் கல்லீரலில், நான்காம் விரல் மண்ணில் (வயிற்றுப் பகுதி ) , சுண்டு விரல் நீர் நோக்கிக் காட்டவும். You have matched .
கையை அப்படியே வைத்திருங்கள்.
முன் வீச்சு - விரைவு முன் கட்டுப்பாடு - பரபரப்பு தற்காப்பு நிலை. - கட்டல் 
கட்டை விரலில் இருந்து , 
(1) தீ நுரை கட்டும்  (கை வலி - P 5, H 4 )
(2) நுரை கல் கட்டும் ( மயக்கம் - Lu 11 ) 
(3) கல் மண் கட்டும் (இரத்த அழுத்தம் - Liv 3 ) 
(4) மண் நீர் கட்டும் ( மூட்டு வலி - Sp 9 ) 
(5) நீர் தீ கட்டும் ( அரிப்பு - K 2 ) 
கையை அப்படியே வைத்திருங்கள்.
பின் வீச்சு - விரைவு பின் கட்டுப்பாடு - கடின உழைப்பு தற்காப்பு நிலை - கவர்தல் 
நடு விரல் கல்லீரலில் இருந்து தொடங்குவோம்.
(1) கல் நுரை கவரும் ( கணுக்கால் வலி - கொலுசுப் புள்ளி - Liv 4 ) 
(2) நுரை தீ கவரும்  ( வறட்டு இருமல் - Lu 10 ) 
(3) தீ நீர் கவரும்  ( நா வறட்சி , மாரடைப்பு  தடுப்பு  P 3, H 3 ) 
(4) நீர் மண் கவரும் ( குதிகால் வலி  K 3 ) 
(5) மண் கல் கவரும்  ( செரிமானத் தலைவலி  Sp 1 ) 
பட விளக்கம் : கட்டும் சுற்று படத்தில் கயிறு கட்டி  இழுப்பது போல்  காட்டப் பட்டுள்ளது. இதில் முயற்சி எடுக்கும் மூலகம் தன் குறைநீக்க செயல்படுவதாகவே பொருள்.  கட்டப் படும் மூலகம் தன் முழு வீச்சில்  செயல் பட முடியாது. .கட்டுப்பாட்டில்  இருக்கும்; சமநிலை பேணும்.
 எ. கா. Liv 3 - கல் கட்டும் மண் - கல் குறை - இரத்த அழுத்த புள்ளி.
  தாண்டும் காரணங்கள் மூன்று. 
(1)  நடு பூதம் மனம் + இதயம் தேக்க நிலை 
(2) மூன்றாம் பூதம் மண் மெலிவாகக் கூடாது.
(3) தனக்கு குறை வராமல் காப்பற்றிக் கொள்ள  -தன்னில் பயன்படாது  
இருக்கும் மிகுதியை குறைத்துக் கொள்ள - வேகத்தில் இயங்க வேண்டிய கட்டாயம் . 
   இங்கு நோய் என்பது கல்லீரல் குறைபாடே. ஓய்வு, உறக்கம் இல்லாத நிலை.  மனதில் பரபரப்பு எண்ணங்கள் குவியலாக. எனவே இது போன்ற நோய்கள் முற்றிலும் குணமடைய உறுதி கூற முடியாது. தொடர் கவனிப்பு தேவை.  நோயாளி உணர்ந்து தகுந்தபடி செயல் பட்டால்   தீரா  நிலை மாறும்.
தொடரும்.

Friday, 1 January 2016

Tamil muraiyil acupuncture -2/ 6.2

6.2 எதிர் ஆக்க சுற்று 

ஆக்க சுற்று தவிர்த்த பிற மூன்றில் எதிர் ஆக்க சுற்று, கட்டும் சுற்று, கவரும் சுற்று , தனிமங்கள் 
தன் ஓட்டப் பாதையிலேயே பிறவற்றின் சக்தியைப் பெற்று விடுகின்றன. 
ஒப்பீடு : ஒரு நாட்டுக்குச் செல்லாமலேயே தன் நாட்டு தூதரகம் மூலம்  'பணி ' யை முடித்துக் கொள்வது. மேலும் ஒப்பீடு : தாயைத் தேடாமல் தன்னிலேயே தாய் காண்பது அமைதியே. 
சிவம் தன்னுள் சக்தி காண்பது அமைதியே. 
பட விளக்கம் : 
 எதிர் ஆக்க சுற்று என்பது கேட்கும் வலு. கேட்கும் வலுவில் கோடரி காட்டப் பட்டுள்ளது.
கேட்கும் வலுவில் கேட்பவரே பயன் பெறுகிறார்.
குறிப்பு : இங்கு தாயிடம் இருந்து மகனுக்கு வருகிறது, மகனிடம் அதிகம் உள்ளது தாய்க்கும் வரும். எனவே சமன் புள்ளி எனவும் விளக்கலாம். 
             இங்கு 'கேட்டல் ' என்பது சரியான இடத்தில் , சரியான காலத்தில், சரியான ஆளிடம் கேட்பதற்கு ஒப்பாகும். கேட்டல் என்பது ஒரு மந்திரம். இங்கு இது மருந்து. எனவே கேட்கும் வலுப் புள்ளிகளை மருந்துப் புள்ளிகள் என்போம்.
           மந்திரமும், மருந்தும் அதிகம் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் , தன்னுடைய நேர் ஓட்ட வேலையை விட்டு, தனிமம் (பூதம் ) எதிர்த் திசையில் பயணிக்க வேண்டி நேருகிறது. இனி மருந்துப் புள்ளிகள் காண்போம். 
     ----பெயர்ப் பட்டியல் - மருந்துப் புள்ளிகள் ------
உயிர் வரிசை ---விளி ----குறியீடு -----3 d பெயர் ----பயன் வழிப் பெயர் 
அ       கல் மருந்து ------------Liv 8 ----கல் கேட்கும் நீர் ---குளிர்ச்சி 
ஆ    பித்தப்பை மருந்து ------GB 43----பித்தப்பை கேட்கும் நீர் --பக்கவாட்டு வலி நீக்கி 
இ    மனம் , இதய மருந்து ----P 9, H 9  ---தீ கேட்கும் கல் ---நினைவுத் திறன்,  மாரடைப்பு 
ஈ     மூ வெ , சி கு மருந்து ----Tw 3,  S I 3 ---மூ வெ , சி கு கேட்கும் கல் -கழுத்துவலி, பால் 
உ    மண் மருந்து  ------------Sp 2 -----மண் கேட்கும் தீ ---சர்க்கரை நோய் 
ஊ    இரைப்பை மருந்து -----St 41-----இரைப்பை கேட்கும் தீ -- இரத்த ஓட்ட சீர் 
எ       நுரை மருந்து --------Lu 9 -----நுரை கேட்கும் மண் ---- இ. குழாய் அடைப்பு நீக்கி 
ஏ       குடல் மருந்து --------LI 11 -----குடல் கேட்கும் மண்  --- நோய் எதிர்ப்பு சக்தி 
ஒ     நீர் மருந்து  -----------K 7 ------நீர் கேட்கும் நுரை ----- சிறுநீரகக் கல் நீக்கி 
ஓ      நீர்ப்பை மருந்து -----UB 67 ---நீர்ப்பை கேட்கும் நுரை  --- கழிவு நீக்கி 
        கேட்கும் வலுவில் தடங்கல் சற்று அழுத்தமாகப் பதிந்து உள்ளது என்பதாகும்.  இவற்றை சிறு நோய்கள் எனலாம்.  இப்புள்ளிகள் தூண்ட ,
(1) அறிகுறிகள் மறையும், (2) ஓட்டப் பாதை சரியாகும். (3) கொடுக்கும்மூலகம், வாங்கும் மூலகம் இரண்டும் சரியாகும். (4) சொல்லாத நோய்களும் தீரும்.; வரும் நோய்களும் தடுக்கப் படும். (5) இந்தப் புள்ளிகள் ஐந்து விதமான மன நோய்களுக்கும் கூட பயன் தரும்.
     நோய்கள் தீரும் வரை மேலே உள்ளவை மட்டுமே கூடப் போதும். 
-------நோய்ப் பட்டியல் ----------
(1) எரிச்சல் (2) மஞ்சள் காமாலை (3) பக்க வாட்டு வலிகள் (4) தலை வலி, நினைவு சக்தி (5) வாதம் (6) கழுத்துப் பிடிப்பு, தாய்ப் பால் சுரப்பு (7) பசி தூண்டல் - சருக்கரை நோய் (8) இரத்தக் குழாய் சீர் (9) நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் (10) சிறுநீரகக் கல் (11) கழிவுகள்  தேக்கம்.   
 தொடரும்.

Tamil muraiyil acupuncture -2/6.0 cotd

                             5 தனிமங்கள் 4 சுற்றுக்கள் 

உயிர் சுற்று விளக்கம் :
5 பூதங்கள் என்பதையே 5 மூலகங்கள் அல்லது 5 தனிமங்கள் என்று கூறுவர் . இவை தன் வலு நிரம்பிய நிலையில் , எந்தப் புலன் வழி எண்ணம், செயல் தொடங்கினாலும் ,
 (1) ஆற்றல் கல்லீரலிடம்  இருந்துதான் வெளிப்பட வேண்டும். -- முதல் பூதம்.
 (2) அடுத்து இரத்த ஓட்டம்  தூண்டப்பட வேண்டும். -- தீ  இரண்டாவது பூதம். 
 (3) 'மண் '  பெற்ற உணவு 'ஆற்றல் ' துகள்களாக மாற்றப் பட வேண்டும். -- மூன்றாவது பூதம் 
 (4) 'நுரை '  ஆக்சிஜன்  என்ற எரிபொருள் எடுத்துத் தர வேண்டும். -- நான்காவது பூதம். 
(5) பணி  முடிந்தவுடன் எஞ்சிய நீர்த் தொகுதி, நீரகத்தால் பிரித்து , கல்லீரலில் சேமிக்கப் பட வேண்டும். ஐந்தாவது பூதம்  இதுவே. அந்தம்  மற்றும் தொடக்க நிலையால் ஆதியும்  கூட.    
ஐந்தாவது  நீர் பூதம். 
        ஓட்டம் :  1, 2, 3, 4, 5, 1, . . .
        அதாவது  கல், தீ, மண், நுரை, நீர், கல் , . ...
        அதாவது  அ , ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ , ...

6.1 ஆக்க சுற்று :

மேற்க் கண்ட இயல்பு ஓட்டத்தில் கல் , தீக்குத் தாய் ; தீ மண்ணுக்குத் தாய் .....
இந்தத் தூண்டலில் நிகழும் சுற்று , ஆக்கச் சுற்று. 5 தனிமங்களும்  ஆக்கச் சுற்றில் கூடுதல் ஆற்றலை அதனதன் தாயிடம் இருந்து பெறுகின்றன. 
 தூண்டல் புள்ளிகள் = தாயின் புள்ளிகள் = ஊட்டப் புள்ளிகள். 
பட விளக்கம் : ஆக்க சுற்றினை அம்பு பாய்வது போலக் காட்டியுள்ளேன். தொடங்கும் இடம் தாய். முடியும் இடம் சேய் . 
பெயர்ப் பட்டியல் : 
        -----தூண்டும் புள்ளிகள் ----
உயிர் வரிசை ---விளி ----குறியீடு -----3 d பெயர் ---பயன் வழிப் பெயர் 
அ             கல் ஊட்டம்      தாயாகும் K 1 ---நீர் வழங்கும் கல் - கீரை 
ஆ    பித்தப்பை ஊட்டம்       "     UB 65 ---- நீர்ப்பை  வழங்கும் பித்தப்பை --சுரை 
இ   இதயம் + மனம் ஊட்டம்    "   Liv 2 ...கல் வழங்கும் தீ ---மாதுளம் 
ஈ   மூ. வெ + சி . கு  ஊட்டம்  "     GB 38 -- பித்தப்பை வழங்கும் தீ  ---ஆரஞ்சு 
உ   மண்  ஊட்டம்                   "    P 7, H 7 ---தீ வழங்கும் மண் ----இஞ்சி 
ஊ  இரைப்பை  ஊட்டம்           "  Tw 10, S I 8 --மூ வெ / சி கு வழங்கும் மண் --சுக்கு 
எ    நுரை ஊட்டம்                "    Sp 5    ----மண் வழங்கும் நுரை  ----பூண்டு 
ஏ    குடல் ஊட்டம்              "    St 45 -----இரைப்பை வழங்கும் நுரை ----வெங்காயம் 
 ஒ  நீர் ஊட்டம்                  "   Lu 5 ----நுரை வழங்கும் நீர் ----------திராட்சை 
ஓ  நீர்ப்பை ஊட்டம்           "  LI 2 -----குடல் வழங்கும் நீர் ---------தர்பூசணி 
        தன் வலு குன்றிய நிலை காட்டும் நோய்கள் 
      ------நோய்ப் பட்டியல் ----------
(1) கோமா, நீர்க் கடுப்பு(2)சுருக் வலி (3) பக்க வாட்டு  வலி, பக்க வாதம், நரம்பு இயக்கம்   (4) முழங்கை வலி, விரல் வலி (5) செரிமானம் (6) முழங்கை வலி, தோள்ப் பட்டை வலி (7) அடைப்பு நீக்கம் (8)  கால் வலி. ... பொருத்திப் பார்க்கவும்.
தொடரும்.-