Friday 8 December 2017

உயிர் அக்கு-மனம் 2.4 1/2

2.4 மன உடல் நோய்கள் விளக்கம்.
    இதய உறை என்னும் மனம்(Pericardium) இதயத்தை முட்டுவதால் உண்டாகும் நோய்கள்.
(1) தூக்கமின்மை:
                தூக்கம் என்பது கல்லீரல் தன் தூய்மை மற்றும் புத்துணர்ச்சிக் காலம்.பிற வெளி வேலையும் இருக்கக் கூடாது.உள்ளே தீவிர எண்ணமும் இருக்கக் கூடாது.அதற்குத் தான் சேகரித்த நினைவுகள்(அடிமனமாக),உடல் சக்தித் துணுக்குககள் திரட்டு (கிளைக்கோஜன்) இவற்றை முறைப்படி அடுக்கி வைக்க இரவு 11-3 p.m தேவை.இந்த நிலையில் உறவு -அதாவது உயிர் சக்தி பயணம் கல்லீரல், சிறுநீரகம் இடையே நடந்து கொண்டிருக்கும்.அக்கால் தீராத ஆசைகள் கனவில் தீர்ந்தது போல் தோற்றம் வந்து நீங்கும்.
பயங்கள் நடவாதது நடந்ததது போல்க் காட்டி முடித்து வைக்கப் படும்.ஆகக் கனவு பிரம்ம நிலைப் பாதை பயணம்.
மன சமாதானத்திற்கு அவசியம்.//
           தூக்கமின்மை என்பது கனவுக்குள் நுழைய முடியாமை.உங்களை ஒரு நினைவு (எ.கா. பெண்),அறிவு (வீடு வாங்க,கடன் தீர்க்க, தொழில் ஆர்வம்.  . .) தூங்க விடாது தடுத்துக் கொண்டிருக்கும்.[இதன் நீட்சி கவலை-மண் பூதம்= மண்ணீரல்+கணையம்+இரைப்பை பாதிப்பு.
இவற்றின் நோய்களுக்கு பெரிகார்டியம் ஓட்டத் தீர்வு தேவை.மேலும் துக்கம் ஆக மாறினால் நுரையீரல், பெருங்குடல் பாதிக்கும்.இதற்கும் பெரிகார்டியத் தீர்வு தேவை.]வெறும் தீவிர நினைவுகள் ,பெரிகார்டியம்-கல்லீரல் சக்தி ஓட்டம் மட்டுமே.உடல் பணி எடுக்கும் சக்தி போல் 4 பங்கு சக்தி எண்ணம் எடுக்கும்.4 மணி தோட்ட வேலையும், ஒரு மணி மூளை வேலையும் ஒன்றாக கல்லீரல் சக்தி எடுக்கும்.பெரிகார்டிய த்தேக்கமே தூக்கமின்மை.
      உறக்கப் புள்ளி P6 தூண்டலாம்.10 நிமிடத்தில் உடன் பயன்.(உறங்க உதவும் குறிப்புப் படம் காண்க)
(2) உள்ளங்கை வியர்வை-பதட்டம்-P8-அக்கு பிரசர்.
(3)அஜீரணம்-செரியாமை-P7-இன்சுலீன் புள்ளி.
(4)ஞாபக மறதி- நினைவுத் திறன் புள்ளி- P9.
(5)கற்பனை நோய்கள்-எண்ணம்,சொல்,செயல் வரிசையில் உடல் அறிகுறி காட்டுதல்.அக்குபங்சர் வரிசை கல்,தீ,மண்
LIVER-PERICARDIUM-SPLEEN AND GB,TW,ST.
எண்ண விளைவு-எ.கா:பாம்பு கடித்தது என்று அறிந்தாலே
பய சுரப்பிகள் உடலில் மாறுதல் நிகழ்த்தும்.
(6) காய்ச்சல்: நோய்களை வெல்ல,கிருமிகளை வெல்ல,தூய்மைப் படுத்த,அதிகக் கலோரிகள் எரிக்க,வேலையின் காரணமாய்,மன எண்ணம் அலைதல்,பயத்தில் வேகம் எடுத்தல்,நெருப்புத் தன்மை ஏற்றம்,காய்ச்சல் ஆகும்.
      மூவெப்ப மண்டலத்திற்கு  பரபரப்பு-Emergency outlet-TW-1-கட்டுப்பாடு சுற்று.+ நெருப்பு தீவிரம் குறைக்க-
 Emergency inlet தாயின் தாய் உதவி நீரகம்-  TW-2
(7) காது வலி: மூவெப்ப மண்டலம்,இறக்க சுற்றில் (கை உயர்த்திய நிலையிலேயே அக்குப் புள்ளிகள் கணக்கிடப்படும்.) காது சுற்றி காது  வடிவில் வளைகிறது.
புள்ளிகள் TW-16,17,18,19,20,21. இந்த தேக்கம் சரி செய்ய,
 தாய் கல்லீரல் உதவி TW3,தாயின் தாய் உதவி TW 2.
(8) முழங்கை வலி,முழங்கை மடக்கில் தொடர் அசைவு,வாதம்: இது மனதின் தீவிர நிலை,சினம்,இயலாமை உணர்வு
,பிறரால் பாதிக்கப் பட்ட நிலை,கையாலாகாத நிலை உணரும் போது,முழங்கை அசைவில் ஆட்டம் வரும்.
பொருள்கள் எடுப்பது தடுமாறும்.முற்றினால்,தொடர் வாத
ஆட்டம்.- பரபரப்பு நிலை-EMERGENCY IN LET P3,H3 வாத நிலையில் தானே இயங்கும்.தொடக்க நிலைக்கு இதே புள்ளிகள் மருந்து.வாத நிலையில் P9,P8,தேவைப்படின் H9,H8.கல்லீரல் இருப்பும் சரி செய்ய வேண்டும்.
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.4 1/2 08/12/2017.

Wednesday 6 December 2017

உயிர் அக்கு-5உடல்-மனம் 2.3

2.3 மன உடல் (மனோமயக் கோச) நோய்கள்.
         அட்டவணை பார்க்க.இதய உறையால் 10 நோய்களும்
இதயத்தினால் உண்டாகும் 10 நோய்களும்- குறைபாடான சக்தியால் -P-8,H-8 மனப் பானை,சக்திப் பானை ,செய்யும்
வேலைக்கு ஏற்ப நிரம்பாமல் உள்ளதே காரணம்.
          தாக்கம்: மனநிலை வலுவானதாக ஆக்க முடியவில்லை.அறிவு மேலாக,உணர்வு கீழாக இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் நிலை-மனநிலை பாதிப்பு.
   முன்பாதிப்பு=அடுத்த நிலை பாதிப்பு=சுரப்பி உடல் பாதிப்பு:
                 இது சுரப்பிகள் உடலைப் பாதித்து,சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம் போன்ற வெளிவேடங்களை அணிந்து,மண்
பூதத்தை நோய் இருப்பிடமாகக் காட்டும்.கல்லீரல் அதிர்ந்து
தாண்டி LIV-3-ல் உதவினால் (தாயின்தாய் ஊட்டல்) இரத்த அழுத்தம் என்போம்.
                     இரத்த அழுத்தம் கட்டுபடுத்தும் மாத்திரைகளால்,இதயத்தின் முழு இரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்காததால்,ஆங்காங்கே அரிப்பு,உடலில் கருப்பு (திட்டுக்கள்) மேலும் சிவப்புப் புள்ளிகள்.இரத்த சோகையில் முடியும்.அதுத் தனி நோயாகக் கருதி தனி சிகிச்சை நடக்கும்.
                    சமூகக் காரணிகளோடு,மனித மனம் பரபரப்பின்றி ஒத்து இயங்கினால் மட்டுமே 'மனநிலை"(=மன சக்தி நிலை) காப்பாற்ற முடியும். Ethics of the life-புத்தரின் நன்னடத்தை-திருக்குறள் வாழ்க்கை பின்
பற்ற வேண்டும்.அல்லது ஓஷோ சொன்னது போல துறவி
மனநிலை-அதாவது மனம் கவனிப்பவராக மாறி- விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.சமூகத்தில் இன்று வாழ,
முன்னேற அத்தனை போட்டா போட்டிகள்,பொறாமை,கர்வ மோதல்கள்,பணத் தேடல்கள்,பணியமர்த்தங்கள்,இரவு விழிப்புகள்.  . . .
           பின் பாதிப்பு=ஓட்டத்தின் பின்நிலை கல்லீரல்-பிரம்ம நிலை பாதிப்பு:
         உணர்வும்,அறிவும் சமநிலை கொள்ளாததால்,விழிப்புணர்வு இன்மையால் தீர்மானமின்மை,தீர்மானம் இப்படியும்,அப்படியும் அலைபாயுதல்,அல்லாடுதல்.அதனால்
தூக்கமின்மை.முடிவெடுக்காத,அல்லது அடங்கா ஆர்வப்
பரபரப்பு, தூக்கமின்மையில் நிறுத்தும்.கல்லீரல் அதன் பெரிய மின்கலம் ஆகிய தாய் சிறுநீரத்துடன் இணக்கம் குறையும்.கல்லீரல் வலு குறையும். சோர்வு.சிறுநீரக வலு,கல்லீரல்+பித்தப்பைக்கு கிடைக்காததால் உடலில் ஆங்காங்கே வலி.எல்லாமே தனித்தனி நோயாகத் தெரியும்.
இடுப்பு வலி,முதுகு வலி ( வலி என்பது மூட்டுக்கு மூட்டு பயன் படுத்திய துர் நீர் அகற்றும் நீரக முயற்சி.) இந்த இடங்கள் அடிக்கடி மாறும்.பிடித்து விட்டால் தேவலை என்று தோன்றும்.வலி நிவாரணிகள் மேசையை நிறைக்கும்.
விதவிதமான மருத்துவ மனைகள் ஏறி இறங்கி நோயை அறிய முயல்வார்கள்.
      மேலே சொல்லப்பட்ட 20 நோய்களுக்கும் காரணம்,"மன சக்தி நிலை"மேல்மனம் பெரிகார்டியம்.அக்குபங்சரின்படி இதயம் முதற் காரணி அல்ல.மன அழுத்தம், இரத்த அழுத்தம் இருவேறு அல்ல. இரண்டும் சேர்ந்து ஒன்றே குலம்,ஒருவனே காரணன்.
        இதயத்தை அடக்க, மன அடக்கமே சிறந்த வழி.சிந்தனையை மடை மாற்றும் உத்தி பயன் தரும்.பலர் இதை தாங்கள் அறியாமலே செய்வார்கள்.
     மனநிலைப் பாடல்:
               வார்செருப்பு சீர்சிலம்பு
                             வாய்த்திட்ட வாழ்க்கை
                      பேரீச்சை வெல்லமும்
                                   பீட்ரூட்டும் பெருமை.....8
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.3 //06/12/2017
                             

Monday 4 December 2017

மனம்-2.2/5உடல் /உயிர்அக்கு

  2.2 மனம்-2
அக்குப் பார்வை:
        முன்னோக்குப் புள்ளிகள்- FORWARD POINTS TWO.
புள்ளி 1: மாதுளம் புள்ளி LIV-2-கால் கட்டை விரல்,இண்டாவது விரல் இடையே உள்ள பள்ளம்.இங்கு,கல்லீரல்
தன் மகனுக்கு -தீ (மனம்+இதயம்)-SYMBOL LARGE HEART WITH A SMALL HEART- குறியீடு: பெரிய இதயம் அருகில் சிறிய இதயம் ஆற்றல் தருகிறது.//மனம் வழி இதய இயக்கம்.// தீ பூதத்தின் இரண்டு பானைகள்,மனப் பானை P-8 முதலில் பிறகு H-8 இதயப் பானை நிரம்பும்.பானை வடிவம் இதய -ஆட்டீன்- வடிவமாகக் காட்டப் பட்டுள்ளது.
    எ.கா உணவு: மாதுளம் பழம்.பழக்கம்: வார் செருப்பு நடை.
புள்ளி 2: ஆரஞ்சுப் புள்ளி GB-38.இடம்: வெளிப்புறக் கணுக்கால் மூட்டில் இருந்து 4 சுன் மேலே.
நடப்பது: பித்தப்பை தரும் ஆற்றலால்,மூவெப்ப மண்டலப் பானை TW-6,சிறுகுடல் பானைSI-5 நிரம்பும்.
 எ.கா உணவு: ஆரஞ்சு.//பழக்கம்: ஒரு காலால் மறு கால் புறம் தட்டுதல்.
            பின்னோக்குப்புள்ளிகள்-BACKWARDPOINTS TWO
மனதைப் பின்னிருந்து முன்னாக அதிர்ச்சி நிலையில்,வயதான நிலையில் தட்டி எழுப்பல்.
புள்ளி 1: நினைவுத் திறன் புள்ளி P-9.
          இடம்: கையின் நடுவிரல் முனை
          நடப்பது:கல்லீரல் தாயிடம் மனம் ஆற்றல் பெறுகிறது.
புள்ளி 2: இதயத்தின் மாரடைப்பு தடுக்கும் புள்ளி H-9
             இடம்:( இடக்கை வலு மிக்கது) கையின் சுண்டு விரல் நகங்கீழ் 0.1 சுன் இறக்கம்,நான்காம் விரல் நோக்கியவாறு.
                நடப்பது: கல்லீரல் தாயிடம் இதயம் ஆற்றல் பெறுகிறது.
  ஆகையால் மன,இதயப் பானைகளை(P-8,H-8) எதிர்த் திசையிலும் நிரப்பலாம்.
 எ.கா. உணவு:மனம்-தக்காளி;இதயம்-பீட்ரூட்
பழக்கம்-கை இறுக்கிப் பிடித்தல் சார்ந்த செயல்.
புள்ளி 3: கழுத்து வலிப் புள்ளி TW-3
            இடம்: மோதிர விரல், சுண்டு விரல் பக்கமாக, மோதிர விரலும்,நான்காம் விரல் கை எலும்பும் சேரும் மூட்டின் பின் புறம். நடப்பது: கல்லீரலின் பித்தப்பை ஆற்றல் பெற்று,போகும் பாதை எல்லாம் சரி செய்யும்.கழுத்தும் ஒன்று.
புள்ளி 4: தாய்ப்பால் சுரப்புப் புள்ளி SI-3
               இடம்: கை விரல்களை மடக்கும் பொழுது,இதய ரேகை மடிப்பின் மேடான பகுதியில்,தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.
                நடப்பது: பித்தப்பை ஆற்றல் பெற்று சிறுகுடல் செரிமானம் மிகும்.தாய்ப்பால்  அதிக சுரப்பு.போகும் பாதை,கழுத்து,தலை,காது நலம்.
         ஆகத் தாயிடம் கேட்பதால் பானை 4 இடங்களில் நிரம்புகிறது.எ.கா.உணவு-கீரை;பழக்கம்-கும்மி துவைத்தல்.
மேலும் உணவுகள்:
     மன உணவு: ரோஸ் வண்ண உணவுகள்- தோலோடு நிலக்கடலை,காரட்,முட்டை,காளான்,பீன்ஸ்,பருப்பு,சோயா,திராட்சை,செர்ரி,கீரை,வெண்ணெய்,இஞ்சி,வெங்காயம்,தக்காளி. //இதய உணவு: மேற்கண்டதும்+சிவப்பு உணவுகள்
-ஆப்பிள்,வெல்லம்,வெல்ல சருக்கரை,பேரீச்சை,
    கசப்பான-மாதுளம்பழக் குருத்து+சிவப்பு மணிகள்+மஞ்சள் படலம்,மண் பூதத்திற்காக.,கசப்பு பாகற்காய்,அகத்திக்கீரை,பச்சை சுண்டைக்காய் அல்லது சுண்டைக்காய் வற்றல்.
மேலும் பழக்கங்கள்,மனம்,இதயம் வலுப் பெற-
     LIV-2-வார் செருப்பு அழுத்தம்
     GB-38- சிலம்ப ஆட்டம்
   P-9,H-9,-கை இறுக்கம்,பல்லாங்குழி ஆட்டம்,தாய கட்டை. 
மனம்,இதயம் தூண்ட சிலம்பம் இருபாலருக்கும்.நாட்டியம்,முத்திரை அசைவுகளால் பெண்டிருக்கும் நலம் தரும்.
- ஆசான் ஆ மதியழகன். 04/12/2017 மனம் 2.22

Sunday 3 December 2017

உயிர் அக்கு-5 BODY ACU-மனம்-1

2.இரண்டாவது உடல்-மன உடல்-குண உடல்.
வேறு பெயர்: மனோமயக் கோசம்
 2.1 அக்குபங்சர் விளக்கம்: (சக்தி இடம் மாறி அடுத்த முனை சென்று நிலை கொள்வது.)
     உறுப்பு: கல்லீரல் முதல் பெரிகார்டியம்(+இதயம்) வரை
         LIVER TO PERICARDIUM (+ HEART)
          புள்ளி: LIV-2- மாதுளம் பழப் புள்ளி
       துணை உறுப்பு:பித்தப் பை முதல் மூவெப்ப மண்டலம்/
சிறுகுடல். GALL BLADDER TO TRIPLE WARMER/SMALL INTESTINE.
          புள்ளி: GB-38-ஆரஞ்சுப் புள்ளி.
         வண்ணம்: பச்சையில் இருந்து ரோஸ்/சிவப்பு
                              GREEN CHANGES TO ROSE/RED
மன நிறம்-ரோஸ்;இரத்த ஓட்ட மிகுதி-சிவப்பு ஆகும்.
           புலன்கள்: கண் பார்த்து நா சுரத்தல்.
             கல்லீரல்/கண் பார்த்து, தீ/நாக்கு நீர் விடுதல்
                குணஉடல் சக்தி ஏற்றம்/பிரம்ம உடல் (கல்)சக்தி குறைதல்.
                சுவை: புளிப்புச் சுவை மாறி கசப்புச் சுவை.
                                 அமிலம் மாறி காரம்
                    திசுக்கள்: தசைநார்கள்,இரத்தக் குழாய்களோடு இயைதல். குரல் பண்பு: கத்துதல் அடங்கி, சிரித்தல்
                    உணர்ச்சி: சினத் தன்மை இடம் மாறி பெருமையாக,மகிழ்ச்சியாக மாறும் (கல்லீரல் இழப்பில்-தான் இழப்பில் பெறுவன-சிற்றின்பம்,இடையின இன்பங்கள்-குடித்தல்,தீவிர ஈடுபாடுகள் அரசியல்,மதம்,. . .
இறுதியாக பேரின்பம் எனும் உள்நோக்கு பயணம்.)
இரக்கம் (நல்ல மரபாக இருந்தால், அன்பும்,நட்பும்,இரக்கமும் பிறவி நிலையிலேயே இருக்கும்) மாறி தெளிவு சேரும்.
        நீர் சுரப்பு: கண்ணுக்கு சொந்தமான கண்ணீர்,இன்பமோ,துன்பமோ,உழைப்பில் இறங்கி வியர்வைக்கு மாறும்.
     மணம்: ஊசிப் போனால் கல்லீரல் கெடும் என்று, சூடு மிகுந்து கருகும் வாசனையோடு மேலே மனதில் வேகம் காட்டும்.
       பருவம்: தை மாதம் (அ),மாசி (ஆ) மாறி மன,இதய மாதங்களில்(,ஐ-மனம்,ஔ-மூவெப்ப மண்டலம் முறையே- பங்குனி,சித்திரை பிறகு இ-இதயம்,ஈ-சிறுகுடல்,முறையே-வைகாசி,ஆனி என வாழ்வைத் தீர்மானிக்கும் மாதங்கள்.)நிலை கொள்ளும்.
     வானிலை:காற்றோட்டமாய் ஒரு மகிழ்ச்சி பார்த்த நிலை,வெப்பம் ஏறி செயல், செயல் எனத் துடிக்கும் நிலை
       செயல்: மயக்கம்/முயக்கம்/ உறக்கம் விரும்பும் கல்லீரல், மனப் பயணம்,உடற்பயிற்சி அசைவுகள் விரும்பும்.
        நடக்கும் நேரம்:கல்லீரல் நேரம் இரவு 11-விடிகாலை 3 மணி.இந்தப் புத்துணர்ச்சி பெறும் தன்மையே பகல் நேரம் (இதய நேரம்) 11-3 மாலை நேரத்தில் பிரதிபலிக்கும்.இடையில் நுரையீரல், மண் பூதம் வலுவேற்றி (ஆக்ஸிஜன்,இனிப்பு தந்து) சமாளிக்கலாம்.
     பிற ஒப்பீடு: கொடுப்பவர்-பெறுபவர்
                                   தாய்-மகன்
                                 பிரம்மநிலை-மனநிலை
மனோ வேகம் பகலில் அதிகம்.அறிவாக மேல் முனை.
படுக்கும்போது வேகம் குறைந்து உணர்வாக க்கீழ் முனை.
காலையில் இரவின் உணர்வு மேல் எழும்பும்.விரைந்து சூடேறும்.இந்த மன ஆட்டம் சுரப்பு உடலைப் பாதிக்கும்.
    - ஆசான் ஆ மதியழகன் மனம்-1 .03/12/2017.
               
       
         

Sunday 26 November 2017

பிரம்மம் 6 - வலு அட்டவணைகள்.

ஆசான்- 26/11/2017.

5BODY ACU-பிரம்மம் 6

பிரம்ம நிலை(பித்தநீர் இணைப்பு) பிரம்மம் 6
     ஒவ்வொரு இமைத்தலின்போதும்,சிந்தனையின் போதும்,அதிக உணவுக்காக சுரக்கப்படும் பித்த நீரும் இந்த ஒட்டத்தின் வழியே சென்றாக வேண்டும்.GB1-GB14-GB20-
GB34 ..38.40,41 .43,44.
        GB14-தேக்கம்-ஞாபக மறதி
         GB20-சிந்தனைத் தடங்கல்- தலைவலி
         GB 34-அதிகத் தேக்கம்-வாய்க் கசப்பு-அனைத்து
தசை இயக்கம்
         GB 38-அனைத்து தசைநார் இயக்கம்
          GB40-பித்தப்பையின் மன இயக்க பாதிப்பு.
          GB41-தன் வலு
எதிர் திசை இயக்கம்: எதிர்முனை GB44 -காலின் 4-ம் விரல் அழுந்த நடந்தாலும்,பஞ்சப் பூதப் புள்ளிகள் இயங்கிப் பயன்
தரும்.எந்தப்புள்ளியில் அக்கு ஊசியால் தூண்டினாலும்,இரு திசைப் புள்ளிகள் இயங்கும்.ஓட்டம் ஓடு திசை ஊசி முனை சாய்க்க வலு ஏறும்.(TONIFICATION).எதிர் திசை சாய்க்க வலு குறையும் (SEDATION).
          அக்குபங்சரில் பஞ்சபூதப் புள்ளிகளும்,பிற புள்ளிகளும்
 மாயம் நிகழ்த்துபவை.தொட்ட இடம் மட்டும் அல்லாது
தொடாத இடமெல்லாம் வேலை செய்யும்.
  அரிப்பு: பித்தப்பை அதிகப்படி மன இயக்கத்தால் GB 40,அதன் அடுத்த தீப் புள்ளிGB38 (சிறு குடல்,மூவெப்ப மண்டல அழுக்கு நீக்கி-சிலம்ப ஆட்டக்காரர் காலால் காலைத் தட்டும் புள்ளி) பாதிக்கப் படும். நெருப்பு மீற, நீர் அணைக்கும்.நெருப்பு தோற்க அரிப்பு.நீர் தோற்க கருப்பு.
இது வரும் ;போகும்,சிந்தனைக்குத் தக்கபடி.
            கல்லீரல் உயிர் அ உறுப்பு.பித்தப்பை உயிர் ஆ உறுப்பு.இதை வெட்டி எடுக்கக் கூடாது.கல்லீரலின் உதவியாளர்.
ஆசான்.26/11/2017-பிரம்மம் 6 இனி வலு ஏற்றும் அட்டவணைகள்.

Saturday 25 November 2017

5BODY ACU பிரம்மம் 5 படங்கள்

    உயிர் அக்குபங்சர் -நிலை விளக்கம்
பிரம்ம நிலை - பித்தநீர்ப் பை ஆற்றல் பரிமாற்ற பயணம்.

பிரம்ம நிலை- கல்லீரல் ஆற்றல் பரிமாற்ற பயணம்.

ஆசான் ஆ மதியழகன். 25/11/2017.