Friday, 24 November 2017

5 BODY ACU-பிரம்மம் 3

பிரம்மம்-3
  பின்னோக்குப் புள்ளிகள்-BACKWARD POINTS TWO
       புள்ளி1: குளிர்ச்சிப் புள்ளி #LIV-8 (படம்)
 இடம்:முழங்கால் மடிப்பு முனையில் மேல் அரை சுன்னில்.
-கல்லீரல் குளிர்ச்சி பெறும் இடம்.கல்லீரல் தனக்கான ஆற்றலை தாய் சிறுநீரகத்திடம் கேட்டு வாங்கும் இடம்.
K-1 கொடுத்தாலும், LIV-8 கேட்டு வாங்கினாலும்,LIV-1. பானை நிறையும்.உடல் சூடு குறையும்.மஞ்சள் காமாலை வரை தடுக்கப் படும்.இது தூண்ட சம்மணம் போதும்.
     புள்ளி2:பக்க வாட்டு வலிப் புள்ளி GB-43-காலின் நான்காம் மற்றும் ஐந்தாம் விரல் இடுக்கு.//இதுவும் GB-41 எனும் பித்தப்பை நீர் தன்வலு நிரப்பும்.
UB65 கொடுத்தாலும் GB-43 கேட்டு வாங்கினாலும் GB-41 பானை நிறையும்.இதற்கும் சம்மணம் போதும்.
      முன்னோக்கு,பின்னோக்கு நான்கு புள்ளிகளும் "பெரிய நீர் திறப்புக் குழாய்கள்" போல செயற்படும்.-BIG TAPS.
      பிரம்ம உடல் சரியாக இருந்தால் 'பச்சை மண்" போல
உடல்நல அடித்தளம் இருக்கும்.
 பிரம்மமுனை -கல்லீரல் முனைப்பு-வலு உணவுகள்
            K-1--கீரை; UB 65- சுரைக்காய்.
            LIV 8, GB 43-புளிப்பு/குளிர்ச்சி உணவுகள்: மோர்,வெள்ளரி,நெல்லிக்காய், எலுமிச்சை,நார்த்தம் பழம்,மாங்காய்
பிரம்ம முனை பழக்கங்கள்:
              K1-நடை; UB 65- சம்மணம்.
              LIV 8-சம்மணம்; GB 43-பாதத்தின் 4-ம்,5-ம் விரல் இடுக்கு அழுந்துமாறு காலணி அல்லது சம்மணம்.
- ஆசான் ஆ மதியழகன். பிரம்மம் 3. 24/11/2017.

Thursday, 23 November 2017

5 BODY ACU-பிரம்மம் 2

பிரம்ம உடல்- பிற ஒப்பீடு
  # கொடுப்பவர் --- வாங்குபவர்
    இறைவன் --- மனிதன்; மன்னன்/அரசு---மக்கள்;
பரமாத்மா-ஜீவாத்மா;கடவுள்---நீ;பதி---பசு;தாய்---மகன்;
PERMANENT BATTERY ---RECHARGEABLE BATTERY ;
கடல்---கடல் துளி; ஆதி சக்தி 100%---மூலதனம் 5%
     ஒலி அதிர்வு ஒ,ஓ---பிறப்பு ஒலிகள் அ,ஆ
 மெய்,முதுகு முழுவதும்---மெய் ,முன் மார்பு வலப்பக்கம்
மெல்லினம்"ஙஞணநமன"---வல்லினம் "கசடதபற"
 சிறுநீரகம்+நுரை கூட்டு---கல்லீரல்+நுரை கூட்டு
குளிர்ச்சி ---பிங்கலை சுவாசம் ,வலம் வெப்பம்.
 முன்னோக்கு புள்ளிகள் இரண்டு-FORWARD POINTS TWO.
 புள்ளி-1: கீரைப் புள்ளி K1-முன்னங்கால் மையம் என்பது
தோராயம்.படம் காண்க.கல்லீரலுக்கு ஆற்றல் சேரும்.கல்லீரல் தன் வலுப் பானை LIV1  உயிர் "அ" இதனால் முழுதும் நிரம்பும்.உணவு+பழக்கம்=உடல் நலம்.//உணவு,நீரும்,நீர்ச்சத்து உள்ள பொருள்களும் ஆற்றல் (சக்தி) தரும்.
நடைஎன்பது ஒரே நேரத்தில் தூண்டு வலு K1,தன் வலு LIV1
இரண்டும் தூண்டி பிரம்ம வலு சேர்க்கும்.(படம்-வரம் இரண்டுதான்).
புள்ளி 2:சுரைப் புள்ளி UB 65-கால் சுண்டு விரல் பாதத்தோடு இணையும் புள்ளிக்கு கீழ் உள்ள புள்ளி..சம்மணம் இட தரை தொடும். படம்.பித்தப்பைக்கு ஆற்றல் சேரும்.பித்தப்பை தன்வலுப் பானைGB 41-உயிர் "ஆ" இதனால் முழுதும் நிரம்பும்.நீர்க் குத்து,நீர்க் கடுப்பு குணமாகும்.பொதுவாக,கழிவுகள் வெளியேற பித்தநீர்சுரப்பு கிடைக்கும். உணவு+பழக்கம்=உடல் நலம்//உணவு,சுரைக்காய்.பழக்கம்,சம்மணம்.-ஆசான் -பிரம்மம்2///.23/11/2017

Muthal udal-பிரம்மம்-1

1.முதல் உடல்-பிரம்ம உடல்-படைப்பு உடல்.
       வேறு பெயர்கள்:ஆனந்தமயக் கோசம்-காரண உடல்.
     இது ஒரு புள்ளி அல்ல.ஒரு கோடு மேலும் ஒரு கோட்டின்
ஒரு முனையின் கூர்மை-எ.கா. அம்பும் முனையும்.அல்லது வேலும் முனையும்.
 1.1அக்குபங்சர்  உறவு விளக்கம்:
         உறுப்பு: சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை.
            KIDNEY TO LIVER
         துணை உறுப்பு:சிறுநீர்ப்பை முதல் பித்தநீர்ப்பை வரை
             URINAL BLADDER TO GALL BLADDER
           வண்ணம்: கருப்பு,வயலெட்,இன்டிகோ,நீலத்தில் இருந்து பச்சை.BLACK,VIOLET,INDIGO,BLUE TO GREEN.
          புலன்கள்: காதொலி கேட்டு கண் திரும்பல்
              காது/ஓசை---கண்/ஒளி
               ஒலிஅதிர்வுகள்---ஒளிக் காட்சிகள்
                        கதிர்வீச்சு---படங்கள்
           சுவை: உப்புச் சுவை---புளிப்புச் சுவை
                     உப்புக்கள்---அமினோ அமிலங்கள்
         திசுக்கள்: எலும்புகள் இயைபு ஆவது தசைநார்களோடு.
         குரல் பண்பு: முனகல்---கத்தல் ஆக மாறும்.
         உணர்ச்சி: நம்பிக்கை --- அருள் ஆக மாறும்(பக்தர்)
                               அச்சம் --- சினம் ஆக மாறும்.(நோயாளி)
சினம் தூண்டுபவ்ர்,அச்சம் தூண்டுபவர் நோயாளி ஆக்கிகள்.
சினம் ஏற்றாலும், அச்சம் உற்றாலும் தொடக்க நோயாளி!
       நீர்சுரப்பு: சிறுநீர்/விந்து/மாதப் போக்கு---ஆனந்தக்
                          கண்ணீர் அல்லது துக்கக் கண்ணீர்.
    மணம்: கெட்டுப் போன வாசனை---ஊசிப்போன வாசனை
                  ஒன்றின் இறப்பு ---மற்றொன்றின் பிறப்பு.
பருவம்: குளிர் காலம்(கார்த்திகை,மார்கழி)---இளவேனில்
(தை,மாசி) காலம்.//மார்கழி மாறி தை வரும்
வானிலை: குளிர் மாறி --- காற்றோட்டம் ஆகும்.
செயல்: ஓய்வு மாறி உறக்கம் ஆகும்//உள்ளியக்கம் சரியாதல் மாறி சேகரித்து அடுக்கல்-சக்தி சேமிப்பு.
நேர வரிசை:மதியம் 3-7 சிறுநீரகம் (ஆழ்மனம்-மரபு)
மாலை 7-11 (மேல் மனம்- சூழ்நிலை செய்திகள்) இறங்கும் இடம் கல்லீரல்.இதன் கையாளும் நேரம் இரவு 11 முதல் 1 மணி பித்தநீர்ப் பை.இரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலே.இந்த 4 மணி நேர உறக்கம் நோய் முதல் தடுப்பு.
பிரம்ம உடல் பேணல்.சிறுநீரகத்திற்கு "மாலை முழுதும் விளையாட்டு"-ஒரே ஒரு நடை100 அடிகள்.மனதிற்கு " கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" உரையாகவும் இருக்கலாம். நல்ல எண்ணம் நிரம்பியதாக.உங்கள் விதி=சிறுநீரகம்4மணி+மேல் மனம் 4 மணி+அடிமன உறக்க நிலை 4 மணி.இதை மருத்துவர் தர முடியாது.சரி செய்ய உதவ முடியும்.நீங்களே தொடர வேண்டும்.
ஆசான்-23/11/2017 -பிரம்மம்-1
             
        

Wednesday, 22 November 2017

5 Body acu-Intro 4

ஐந்துத் தீர்மான வரிசை.
        கல்லீரல் முதல்த் தீர்மானம் ஆகிறது. இதே போல்,
(2) கொடுப்பவர் கல்லீரல்; பெறுபவர் பெரிகார்டியம்.
 இது #மனநிலை- "இரண்டாம் தீர்மானம்"
    [ இதயம் கேட்டு செய்பவர். Dr Alsears says. "Both mental pressure and blood pressure are same.But they sale two differant tablets.]
(3) கொடுப்பவர் பெரிகார்டியம்;பெறுபவர்  மண்பூதம்.
   இது #சுரப்பி நிலை-"மூன்றாம் தீர்மானம்"
 (4) கொடுப்பவர் மண்பூதம்.பெறுபவர் நுரையீரல்.
 இது #பரு உடல்நிலை-" நான்காம் தீர்மானம்"
 (5) கொடுப்பவர் நுரையீரல். பெறுபவர் சிறுநீரகம்.
 இது #சூக்கும உடல்நிலை/ஆரா -"ஐந்தாம் தீர்மானம்"
                  சுழற்சி முறையால் "ஐந்தாம் தீர்மானம்" ஆதித் தீர்மானம்" ஆகும். ஆக "மூச்சினுள் இருக்கிறது சூட்சுமம்"
இதுதான் உடல் நல வரிசை.
       #உடல்நலம் கெடுவது ஓர் உறுப்பில் அல்ல.அது அறிகுறி.// நோய் விளக்கம்: உயிர் சக்தி (Qi-Vital Oxygen)
ஐந்து உடல்நிலைகளில் (பூதங்களில்) பனிரெண்டு உறுப்புகளாக விரிவடைந்து இயங்குகிறது. இதில் ஏற்படும்
தடங்கலே நோய்."
       ##ஆக ஒரே ஒரு நோய்தான். "சக்தித் தடங்கல் "
ஐந்து உடல்களை வரிசையாக விரிவாக இனிக் காண்போம்.
---ஆசான் 22/11/2017. 

5 BODY ACU-INTRO3

 5 Body Acu-Intro -3
                     ஐந்து உடல் தோற்றம், நிலைப்பாடு.
       இந்த ஐந்து உடல்களும் இயல்பு சக்தி உடல்கள் [ NORMAL ENERGY BODIES ].கொடுப்பவர்,வாங்குபவர் அல்லது தாய்-மகன் உறவில் எழுகின்ற 'அலை' அல்லது அதிர்வின் தோற்றமே.
         (1) காரண உடல்/பிரம்ம உடல்/கரு உடல் கண்ணுக்குத்
தெரியாது.
         (2)குண உடல்/மன உடல்  கண்ணுக்குத் தெரியாது.
          (3)அஞ்சுக உடல்/சுரப்பி உடல் கண்ணுக்குத் தெரியாது.
           (4)தூல உடல்/பரு உடல் மட்டும் கண்ணுக்குத் தெரியும்.
           (5)சூக்கும உடல்/ஆரா கண்ணுக்குத் தெரியாது.ஆனால்
 உணர முடியும்.
"ஞானம்" இருந்தால் ஐந்தும் தெரியும். அக்குபங்சர் தெரிந்தால் புள்ளிகள் உடல் நிலையைப் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். எ.கா. K3 வலி-குதிகால் வலி- சிறுநீரகம்,வலிமை குன்றியதால்,ஊற்றுப் புள்ளி (SOURCE POINT) நாடி உள்ளது.
                ஐந்து உடல் நிலைப்பாடு.
       சிறுநீரகம் சரியாக இருந்தால்தான்,சிறுநீரக உறவில் உள்ள கல்லீரல் நன்றாக இருக்கும்.இது பிரம்ம நிலை.
        கனவில் இருப்பவனை "என்ன,பிரமையில் இருக்கிறாயா?" எனக் கேட்பது வழக்கம். கரு நிலை எனவும்
கூறலாம். (1) மரபுக் காரணங்களால் வரும் இயல்பான எண்ணங்கள் அருள் எண்ணம்/அரக்க எண்ணம்,பாலியல் ஈடுபாடு,மரபு செயல்கள் சிறுநீரகத்தில் இருந்து கிடைக்கும்.
                     (2) சூழ்நிலைக் காரணங்களினால் வரும், ஏற்படுத்தப் பட்ட 'நான்' எண்ணம்,குடும்பம்,வேலை,மொழி,இனம்,மதம்,அரசியல்,விருப்பு,வெறுப்பு,இவை கிடங்குபோல்
நிறைந்து இருக்கும்.ஆகாயம் அல்லவா!
            ஆனந்த மயக் கோசம்-பிரம்ம உடல்-பிரம்ம நிலைப்பாடு.ஒருவர் குணம் என்பது "எக்குடி பிறந்தார் என்பதும், எவ்வினம் சார்ந்தார் என்பதும்".சேர்ந்து தீர்மானிக்கும்.ஆக பிரம்ம உடல், குண உடலின் தாய்.
             எனவே,நோயாளியின் பின்னணி,பழக்க வழக்கங்கள்,மரபு உணவுகள்,இருப்பிடம்,வாழ்க்கை முறை எல்லாமும் "முதல்த் தீர்மானம்" செய்கின்றன.
-ஆசான். 22/11/2017.     

Tuesday, 21 November 2017

5 body acu/Table-1-Intro 2

அட்டவணை -1

ஆசான் ஆ மதியழகன்.

5 body acupuncture -One -Intro

           ஐந்து உடல் அக்குபங்சர் -ஆசான்.

             '0'-உடல்கள் முன்னுரை.

                    நாம் கண்ணால் பார்க்கிற உடலை தூல உடல்,பரு உடல், மற்றும் அன்னமயக் கோசம் என்றும் அழைக்கிறோம்.இங்கு கோசம் என்பது உரை ஆகும். இது

தொடர்பாக மேலும் தேடுகையில் தைத்திரிய உபநிடத்தில்

ஐந்து வகைக் கோசங்கள் குறிப்பிடப் பட்டிருந்தன.அவற்றை

 அக்குபங்சரோடு ஒப்பிட்டபோது ஐந்து கோசங்களும் அக்குபங்சரின் ஐந்து பூத எழுச்சிகளாக,ஆக்க சுற்றில் பொருந்துவதைக் கண்டேன்.அதன் விவரம்.

            (1) அன்னமயக் கோசம்- உணவில் வளர்ந்து அழிவது.

             (2) பிராணமயக் கோசம்- ஐந்து புலன்,உள்ளுறுப்பு 

இயக்கங்கள்.

               (3)மனோமயக் கோசம்-உணர்ச்சி,பல அடுக்கு, செயல்பாடுகள்.

               (4) விஞ்ஞானமயக் கோசம்-நன்று,தீது பகுத்து சுரப்பிகள் இயங்குதல்.

                (5)ஆனந்தமயக் கோசம்-எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அடுக்கு.மறைப்பானது,உணர்வது,அடைவது,இலட்சியம்.

                தைத்த்திரிய உபநிடதம் பிரம்மத்தைத் தேடுகிறது.

(1),(2),(3),(4)-ல் இல்லை.அதன் முடிவு: பிரம்மம் (படைப்பு சக்தி) ஆனந்தமயக் கோசத்திலேயே உள்ளது.

             'ஆனந்தம் பிரம்மனோ விய ஜானந்த்'

              "ஆனந்தமே பிரம்மம் என்று அறிக.

    இந்தக் கோசங்களைக் காணும்,காணா உடல்களாகக் கருதி

வரிசைப் படுத்தி தமிழ்ப் பெயருடன் கீழே.

 ----அட்டவணை-1--ஆசான் ஆ மதியழகன். 21/11/2017.